Monday 24 October 2011

தமிழுக்கு வந்த மலையாள இயக்குனர்கள்



பொதுவாக மலையாள திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல  கதையம்சமுள்ள படங்களாகத்தான் இருக்கும்.மலையாளிகள் பெரும்பாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களை
அதிகம் விரும்புவர் கேரளாவில் தற்போதுதான் பில்டப் கொடுக்கும் ஆக் ஷன் படங்கள் அதிகம்
வர ஆரம்பித்திருக்கிறது.நல்ல கதைக்களம் கொண்ட படங்கள் தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தில்தான் அதிகம் அவர்கள் படங்களில் மச்சம் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில்
க்ளைமாக்ஸ் பாடலில் ஆடுவது,பெற்றவர்களை கொன்றவர்களை பழிவாங்குவது, ஹீரோ பில்டப் கொடுப்பது போன்றவை மிகவும் குறைவுதான் ஆனால் சமீபத்தில் ஏசியாநெட்டில் ஒரு
மலையாளப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு சிறுவனை ஒரு ரவுடி போட்டு அடித்து துவைக்கிறார் அடிப்பவர் தமிழ் படங்களில் ரவுடியாக நடிப்பவர்தான்.அந்த சிறுவன் மோகன்லாலை சத்தமாக கூப்பிடுகிறான் அதைகேட்டு மோகன்லாலை பில்டப் கொடுத்து
கால்,கை என்று தனித்தனியாக காண்பித்து முகத்தை காண்பிக்கிறார்கள் காலத்தின் கோலம்
தென்னிந்திய ஹீரோக்கள் முக்கியமாக தமிழ் ,தெலுங்கு ஹீரோக்கள் ஆரம்பித்து வைத்தது அவர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது சரி விஷயத்திற்க்கு வருகிறேன் தமிழுக்கு வந்தமலையாள இயக்குனர்கள் தாய்மொழி வேறானாலும் தமிழுக்கு ஏற்றபடி நல்ல கதையம்சமுள்ள ஜீவனுள்ள படங்களை கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் யார் யார் எந்த படங்களை இயக்கினார்கள் என்பது பற்றி பார்க்கவே இந்த பதிவு


 பரதன்
மலையாளத்தில் சிறந்த இயக்குனராக இருந்தாலும் தமிழில் தேவர்மகன்,என்ற சூப்பர்ஹிட் படம்
கொடுத்தவர்.அதன்பிறகு இயக்கிய ஆவாரம்பூ படமும் பாடல்களால் வெற்றிபெற்றது.இவர் ஒரு
சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.வி சசி


தமிழில் ஜெய்சங்கரை வைத்து ஒரேவானம் ஒரே பூமி ,ரஜினி கமலை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும் ,காளி,குரு ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் பிரபல மலையாள நடிகை சீமா இவரது மனைவியாவார் இவர் இயக்கிய காளி ,குரு, ஆகிய படங்கள் மிகப்பெரும்
பெயரை இவருக்கு பெற்றுதந்தது.இவர் சிவக்குமார் அமலா நடிப்பில் இல்லம் என்றொரு இனிமையான படத்தை இயக்கினார் கலகலப்பான படமாக இது இருந்தது. சிவக்குமார் காமெடியில் பட்டையை கிளப்பிய படம் இது.

ஃபாஸில்


தமிழில் அதிக வெற்றிப்படங்களை கொடுத்த மிகத்திறமையான இயக்குனர் பூவே பூச்சுடவா
படத்தில் அறிமுகமாகி பூவிழிவாசலிலே,வருஷம்16,என்பொம்முக்குட்டி அம்மாவுக்கு,கற்பூரமுல்லை,காதலுக்குமரியாதை,அரங்கேற்றவேளை,கிளிப்பேச்சு கேட்கவா
ஹரிகிருஷ்ணன்ஸ்,கண்ணுக்குள் நிலவு,ஒருநாள் ஒரு கனவு,என இதில் கடைசி இரண்டு படத்தை தவிர அனைத்துப்படங்களும் சூப்பர்ஹிட் படங்கள் ஆகும் தமிழில் மிகச்சிறந்த இயக்குனராக இருந்த இவரின் படங்களில் ரஜினி,கமல் இருவரும் நடிக்காதது கொஞ்சம் ஏமாற்றமே.இவரின் எல்லா படங்களுக்கும் இசை இசைஞானி இளையராஜாதான்,இவரின் படங்களில் வருஷம்16,பூவிழிவாசலிலே எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படங்கள்.

கே.மது


மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து ஒரு மெகாஹிட் படம் கொடுத்தவர் மெளனம் சம்மதம்
என்றொரு படம் கொடுத்துள்ளார்.படத்தில் கோர்ட் சீன்கள் பரபரப்பாக இருக்கும் இசைஞானியின் இசையில் கல்யாண் தேனிலா,ராஜாவந்தாராம் போன்ற பாடல்கள் காதில்
ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.


பாலச்சந்திரமேனன்


மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனரான இவர் நடிகர்திலகம் சிவாஜி,பத்மினி,பாண்டியராஜன் நடிப்பில்தாய்க்கு ஒரு தாலாட்டு என்றொரு வெற்றிகரமான படத்தை கொடுத்தவர் .ஆராரிரோ
பாடியதாரோ ,இளமைக்காலம் எங்கே,காதலா காதலா,போன்ற பாடல்கள் மிக இனிக்கும் பாடல்களாக இப்படத்தில் இடம்பெற்றன.இவரும் மிகச்சிறந்த இயக்குனர்.

பிரியதர்ஷன்


தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் இவர் தமிழில் கோபுரவாசலிலே படத்தின் மூலம்
அறிமுகமானார் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கிய சிறைச்சாலை படம் சுதந்திர‌
போராட்ட காலத்தில் அந்த மான் ஜெயிலில் நம்மவர்கள் பட்ட கொடுமையான சித்ரவதையை
மிக அழுத்தமாக விளக்கியது பிரபு,மோகன்லால் நடிப்பில் உருவான படம் இது.தொடர்ந்து பெண்மையின் சிறப்புக்காக சினேகிதியே படத்தை எடுத்தார்.லேசா லேசா படத்திற்க்கு பிறகு
இவரை காணவில்லை.

வினயன்


விக்ரமிற்க்கு பெயர் சொன்ன காசி படத்தை இயக்கியவர் கண்பார்வையற்றவர் படும் கஷ்டங்களை அழகாக விளக்கிய படம் இது.தொடர்ந்து என் மன வானில் போன்ற படங்களை
கொடுத்தவர்.

ஜோஷி


தமிழில் ஏர்போர்ட் என்ற படத்தை கொடுத்தவர் பாடல்களே இந்த படத்தில் இல்லாதது இப்படத்தின் சிறப்பம்சம் சத்யராஜ், கெளதமி நடிப்பில் நல்ல கதையம்சமுள்ள படம் இது.


சித்திக்

ஃபாஸிலிடம் கதை இலாகாவிலும் உதவி இயக்குனராகவும் அதிக படங்களில் பணிபுரிந்தவர்
இவரும் இவர் நண்பர் லாலும் சேர்ந்து ஃபாஸிலின் கதை இலாகாவில் இருந்து படங்களை
மெருகேற்றியவர்கள்.லால் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வெற்றிகரமாக வலம் வருகிறார்.ஆனால் இவரோ ஃப்ரண்ட்ஸ் படத்தில் ஆரம்பித்து எங்கள்
அண்ணா,காவலன் வரை வெற்றிபடங்கள் கொடுத்தவர் இவரின் காவலன் படம் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஜய்க்கு ஆறுதலை கொடுத்த படம்.

கமல்

நம்ம கமல் இல்லை. இவரும் மலையாள இயக்குனர்தான் பிரசாந்த்,ஷாலினியை வைத்து
பிரியாத வரம் வேண்டும் படத்தை கொடுத்தவர் படம் சரியாகபோகாவிட்டாலும் சிறந்த கதையம்சமுள்ள காதல் படம் என்பதை மறுப்பதற்க்கு இயலாது.

ஷ‌ஃபி


மலையாள இயக்குனரான இவர் விக்ரமை வைத்து இயக்கிய மஜா சிறந்த ஜனரஞ்சகமான‌
வெற்றிப்படமாகும்.

லோகிதாதாஸ்


மலையாளத்தில் மிகப்பெரும் இயக்குனரான இவர் தமிழில் பிரசன்னா மீரா ஜாஸ்மினின்
நடிப்பில் கஸ்தூரிமான் படத்தை இயக்கினார் சமீபத்தில் இவர் மரணமடைந்தார்.

ஷாஜிகைலாஷ்


தமிழில் மலையாள இயக்குனர்கள் செய்யாத ஆக்சன் அதிரடி படங்களை இயக்கியவர்
வாஞ்சிநாதன்,ஆஞ்சனேயா இரண்டு படங்களில் வாஞ்சிநாதன் வெற்றிப்படமாகும்.



2 comments:

  1. நண்பரே தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    மலையாள இயக்குனர்களின் தகவல் அருமை

    ReplyDelete