மைக் மோகன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் அறிமுகமானது நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படம்
மூலம். இதை இயக்கியது இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.தொடர்ந்து சில படங்களில் நடித்த மோகனுக்கு
இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கத்தில் வந்த பயணங்கள் முடிவதில்லை என்ற படம் பெரும் புகழை
பெற்றுத்தந்தது இவர் மணிரத்னத்தின் இதயகோயில் ,மெளனராகம் படங்கள் வெள்ளிவிழா கண்டன. இயக்குனர்
கே.ரங்கராஜ் இயக்கிய பாடுநிலாவே,உதயகீதம் போன்ற படங்களும் இயக்குனர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில்
வந்த நான்பாடும் பாடல்,மெல்லதிறந்தது கதவு,,குங்குமச்சிமிழ், போன்ற படங்களின் வெற்றி மற்ற நடிகர்களை கொஞ்சம்
அசைத்து பார்த்தன.மணிவண்ணணின் இளமைகாலங்கள்,கோபுரங்கள் சாய்வதில்லை,நூறாவது நாள்,
வி.எம்.சி ஹனிபா இயக்கத்தில் வந்த பாசப்பறவைகள்,ஜி.எம்.குமாரின்(அதுதான் நம்ம அவன் இவன் ஹைனஸ்) இயக்கத்தில் வந்த உருவம் போன்ற படங்கள் இவரின் குறிப்பிடதக்க படங்கள் ஆகும் தொடர்ந்து தென்றலே என்னை தொடு,கிருஷ்ணன்
வந்தான்,விதிபடத்தின் வெற்றி இவரை தரம்உயர்த்தின.மோகன் இப்படியே தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துகொண்டிருந்தால் நான் பெங்களுருக்கு பஸ் ஏற வேண்டியதான் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே விளையாட்டாக கூறியிருந்தாக நான் படித்திருக்கிறேன் தற்போது மார்க்கெட்
இழந்த நிலையில் சொந்த தொழிலை கவனித்து வருகிறார் இவரின் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் வெற்றிக்கும்
காரணம் ராகதேவன் இளையராஜாதான்.
ராமராஜன்
ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த ராமராஜன் மருதாணி,மண்ணுக்கேத்தபொண்ணு,போன்ற படங்களையும்
இயக்கியுள்ளார்.கங்கை அமரன் இயக்கத்தில் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றி இவரை நல்ல
நடிகராக உயர்த்தியது தொடர்ந்து என்னை விட்டு போகாதே,ரயிலுக்கு நேரமாச்சு,ராசாவே உன்னைநம்பி,
என்னெபெத்தராசா,பொங்கிவரும் காவேரி,ஊரு விட்டு ஊரு வந்து,எங்க ஊரு காவல்காரன், போன்ற படங்களஇவரை தரம் உயர்த்தின.கரகாட்டகாரன் படத்தின் வெற்றி யாரும் காணாத வெற்றி ஆகும்இவரின் அதிக படங்களைஇயக்கியவர்கள்
கங்கைஅமரனும்,டிகே.போஸ் போன்றவர்கள். இவரின் படத்திற்க்கும் கைகொடுத்தவர் அண்ணன் இளையராஜாதான்
No comments:
Post a Comment