பாரதி வாசு
பாரதி வாசு என்றால் யார் என்று அனேகம் பேருக்கு தெரியாது.பி.வாசுவும்,சந்தானபாரதியும்தான் இவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து இரட்டை இயக்குனர்களாக படங்களை இயக்கினர்.இவர்கள் இயக்கியதில்
குறிப்பிடத்தக்க படங்கள் என்றால், பன்னீர் புஷ்பங்கள் ,மெல்லபேசுங்கள் போன்ற படத்தை இருவரும்
இணைந்து இயக்கினர்.இதில் பன்னீர் புஷ்பங்கள் படமும் பாடல்களும் வெற்றி அடைந்தன.குறிப்பாக
மலேசியா வாசுதேவன் குரலில் கோடை கால காற்றே மற்ற பாடல்களான ஆனந்த ராகம்,மற்றும்பூந்தளிர் ஆட
பாடல்கள் மறக்கமுடியாத பாடல்கள் ஆகும் .தொடர்ந்து மெல்ல பேசுங்கள் என்ற படத்தை இயக்கினர்.இதில்
பானுப்பிரியா.டி.வி நடிகர் வசந்த் ஆகியோர் நடித்து இருந்தனர் படத்தின் கதை நன்றாக இருந்தும் மக்களிடம்
சரியாக சென்று படம் எடுபடவில்லை.படத்தின் பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை குறிப்பாக தீபன்
சக்ரவர்த்தி குரலில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் நல்ல பாடலாக அனைவரும் முணுமுணுக்கும்
பாடலாக அமைந்தது
பார்த்திபன்
ஆரம்பத்தில் தாவணிக்கனவுகள் போன்ற படங்களில் பாக்யராஜ் போன்றோரிடம் உதவி இயக்குனராக
பணியாற்றி புதியபாதை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் இவர் இயக்கிய புதிய
பாதை படம் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆண்பாவம் படத்திற்க்கு பிறகு சீதாவிற்க்கு திருப்புமுனை கொடுத்த
படம் எல்லா படத்திலும் வித்தியாசம் காட்ட நினைப்பவர்.சிறந்த முறையில் கவிதைகள் எழுதுபவர்
இவர் இயக்கிய பொண்டாட்டி தேவை,.குடைக்குள்மழை,உள்ளே வெளியே,போன்ற படங்கள் சிறந்த
திரைப்படங்கள் ஆகும்
No comments:
Post a Comment