Sunday 4 September 2011

ரங்கராஜ் என்ற சத்யராஜ்

ரங்கராஜ் என்ற சத்யராஜ்


கோவையில் படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ். படிக்கும் காலத்திலேயே அனைத்து
எம்.ஜி.ஆர் படங்களையும் பார்த்துவிடுவார்.பிறகு சினிமாவில் சேருவதற்காக குட்டிக்கரணம் எல்லாம்
அடித்துக்காட்டி அசத்தியுள்ளார்.இவர் அறிமுகமான  சட்டம் என் கையில் என்ற படத்தில் இதில்
அடியாட்களில் ஒருவராக வருவார்.தொடர்ந்து அடியாட்களில் ஒருவராக நடித்துகொண்டு இருந்த சத்யராஜை
நாயகனாக அறிமுகப்படுத்தியவர் கார்த்திக்ரகுநாத் என்ற இயக்குனர்.இவர் சாவி என்ற படத்தில் ஆன்ட்டி ஹீரோ

வாக,சத்யராஜை அறிமுகப்படுத்தினார்.இவரின் வில்லத்தனம் சினிமா உலகில் மிக பிரபலம் அதிலும்
நூறாவதுநாள்,24மணிநேரம்,காக்கிசட்டை,விக்ரம்,என்று இவரின் வில்லத்தனம் அருமையாக இருக்கும்
இவரின் தகடுதகடு,என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே,போன்ற வசனமும் இன்றும் மறக்க முடியாதவை
விக்ரம் படத்தில் ஒரு மதகுருவிடம் சொக்கலால் பீடி குடிச்சுக்கிட்டு இருந்த நீ இங்க மதகுருவா என்று பேசுவார்
இந்த மாதிரி கோயமுத்தூர் குசும்பு என்று ஒன்று சொல்வார்கள் அதை சத்யராஜிடம் நிறைய பார்க்கலாம்


வில்லனாகவும் வில்லத்தனமான நாயகனகவும் நடித்து கொண்டு இருந்த சத்யராஜை இயக்குனர் இமயம்
பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் திரைப்படம் சிறந்த நாயகனாக ஆக்கியது. இது ஒரு காதல் கதை
ஆகும்.இந்த படத்தின் வெற்றி இவரை முழு நேர கதாநாயகனாக்கியது.கார்த்திக்ரகுநாத் இயக்கத்தில் இவர்
நடித்த மக்கள் என் பக்கம் படமும் வெற்றி பெற்றது.தொடர்ந்து பூவிழி வாசலிலே ,என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஜல்லிக்கட்டு,பாலைவன ரோஜாக்கள் போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்றன,பாரதிராஜா இயக்கத்தில் இவர்
நடித்த வேதம்புதிது படத்தை பார்த்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ,பாரதிராஜாவையும்,சத்யராஜையும்
கட்டிதழுவி வாழ்த்தினார். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான படமாக இது இருந்தது சிறிது இடைவேளைக்கு பிறகு அமைதிப்படை படம் பெறும் வெற்றிபெற்றது,இதில் இவரின் அமாவாசையாக இருந்து நாகராஜ சோழனாக மாறும் கதாபாத்திரத்தை யாரும்
மறக்கமுடியாது இன்றுவரை பெரியார்,ஒன்பது ரூபாய் நோட்டு என இவரின்
வித்தியாசமான வேடங்கள் தொடர்கிறது.

No comments:

Post a Comment