யார்
கலைப்புலி ஜி.சேகரன்,கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் கண்ணன் அவர்கள் இயக்கத்தில்
வெளிவந்தபடம் முதல் சீனில் இருந்தே பரபரப்பு பற்றிக்கொள்ளும் படத்தில்.எல்லா கிரகங்களும்
ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது பிறக்கும் ஒருவன் அழிக்க முடியாத தீய சக்தியாக உருவெடுக்கிறான்.அவனை அழிப்பதே கதை அர்ஜூன்,நளினி,போன்றோர் நடித்து இருந்த இந்த
படம் திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்ற படம்
கழுகு
நரபலி கொடுப்பது,போலிச்சாமியார் என
எஸ்.பி முத்துராமன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் திகிலுடன் பரபரப்பாக இயக்கி இருப்பார்
ரஜினிகாந்த்,ரதி,வித்தியாசமாக வரும் அந்த பஸ்,ஹிப்னாடிஸ மனிதன்,இரும்புமனிதனுடன் சண்டை ,படத்தில் முதலில் வரும் அனிமேஷன் டைட்டில்.எல்லாமே வித்தியாசமாக இருக்கும்
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்க்கு பலம் குறிப்பாக நரபலி கொடுக்கும்போது
காட்டுவாசிகளின் பின்னணி இசை அபாரம்.
ஆயிரம் ஜென்மங்கள்
துரை அவர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்,விஜயக்குமார் ஆகியோர் நடித்த படம் சந்திரமுகி படத்திற்க்கு முன்பே ரஜினி அவர்கள் டாக்டராக நடித்த படம் நண்பரின் மனைவியிடம் புகுந்த
ஆவியை வெளியேற்றுவதுதான் கதை குறிப்பாக ஆவிக்குரிய பாடலாக வாணிஜெயராம்
பாடும் வெண்மேகமே பாடல் மிக இனிமை+திகில்.
உருவம்
மிக மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மோகனை கொடூர மனிதனாக்கியது இந்த திரைப்படம்.அகோரமான மோகனை பார்க்கவே பயமாக இருக்கும் நடிகை பல்லவி
தயாரிப்பில்,ஜி.எம் குமார் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்தது.பில்லி,சூனியம்
செய்வினை,போன்றவற்றால் பாதிக்கபடும் மனிதனை பற்றிய கதை இது.
No comments:
Post a Comment