Friday, 9 September 2011

தமிழ் சினிமாவும் தெய்வீகபாடகர்களும்



கே.பி சுந்தராம்பாள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்து சினிமாவில் நுழைந்து வாசன் அவர்கள் தயாரித்த
அவ்வையார் படத்தின் மூலம் புகழை தொட்டவர் இவர் பூம்புகார்,துணைவன்,திருவிளையாடல்
என்று நிறைய படங்களில் நடித்துள்ளார் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் அதிக படங்களில்
பாடியும் உள்ளார் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படத்தில் இவர் பாடும் தகதகதகவென‌
ஆடவா என்ற பாடல்,மேலும் திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பழம் நீயப்பா போன்ற‌
பாடல்கள் தெய்வீகபுகழ்பெற்றவை.அந்தகாலத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்
மிகபுகழ்பெற்ற நடிகை. இசைக்கலைஞர் கிட்டப்பாவின் மனைவி இவர் என்பது குறிப்பிடதக்கது



பெங்களூர் ஏ.ஆர் ரமணி அம்மாள்


இவர் நிறைய பிள்ளையாரை பற்றி குறிப்பாக சிறுவயதில் நாம் கேட்ட பிள்ளையார்
பிள்ளையார் பாடல்,பொம்மபொம்மதா என்ற பாடல் இவர் பாடிய பாடலே ,ஆடு மயிலே
போன்ற பாடல்கள் இவரின் தனிப்பாடல்கள் ஆகும் தமிழ் சினிமாக்களில் குறிப்பாக‌
தெய்வம் என்ற படத்தில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல்கள்
இக்கால யுவன்களும் யுவதிகளும் கூட ரசித்து கேட்கும் பாடல்.(நான் சொல்லியது ரீமிக்ஸ்
பாடலை ஒரிஜினல் பாடலை அல்ல) தெய்வ அருள் நிரம்பிய பாடகர் இவர்.

சீர்காழி கோவிந்தராஜன்


நல்ல கணீர் குரலுக்கு சொந்தக்காரர் திருமலை தென் குமரி என்ற படத்தில் இவர் பாடிய‌
குருவாயூரப்பா,மதுரை அரசாளும் மீனாட்சி,திருச்செந்துரின் கடலோரத்தில் ,திருப்பதிமலை
வாழும்,கந்தர் அலங்காரம் படத்தில் இவரும் டி.எம்.எஸ் சும் இணைந்து பாடிய சந்தனம் மணக்குது போன்ற பாடல்கள் எல்லாம் என்றேன்றும் கேட்பதற்க்கு இனிய பாடல்கள்
இவை.அகத்தியர் படத்தில் இடம்பெற்ற நடந்தாய் வாழி காவேரி,வா ராஜா வா வில்
இடம்பெற்ற கடவுள் படைத்த உலகை எல்லாம் பாடல்கள் அருமையான பாடல்கள்
பின்னணி பாடகர்களில் இவர் ஒரு தெய்வப்பிறவி.

சூலமங்களம் சகோதரிகள்[ராஜலட்சுமி,ஜெயலட்சுமி]

துதிப்போர்க்கு வல்வினையோம் என்று ஒலிக்கும் கந்த சஷ்டி கவச பாடல்களுக்கு சொந்தக்காரகள் சகோதரிகளாக இவர்கள் செய்த கச்சேரிகள் ஏராளம் அந்த காலத்தில்
இவர்கள் செய்யும் கச்சேரிகளை பார்க்க கேட்க‌ அவ்வளவு கூட்டம் வருமாம்[என்ன செய்ய‌
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பாடகர்களை  பார்ப்பது அரிதாகி விட்டது] சினிமாக்களில்
சேர்ந்தும் தனித்தனியாகவும் பாடியுள்ளனர் தெய்வம் படத்தில் திருச்செந்துரில் போர் புரிந்து
போன்ற பாடல்கள் எல்லாம் என்றும் இனிப்பவை


டி.எம்.எஸ்

இவரின் பாடல்கள் பற்றி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை
அருணகிரினாதர் படத்தில் அருணகிரிநாதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார்.முத்தைதிரு
பத்தி திரு நகை ,சந்தனம் மணக்குது அம்பிகையே ஈஸ்வரியே போன்ற பாடல்கள் எல்லாம்
இவரும் ஒரு தெய்வ பலம் பொருந்திய பாடகர் என்பதை உணர்த்தும்.

பித்துக்குளி முருகதாஸ்


முருகனை பற்றியும் கிருஷ்ணனை பற்றியும் அதிக ஆல்பங்கள் பாடியிருந்தாலும் தெய்வம்
படத்தில் நேரில் தோன்றி நடித்து பாடிய நாடறியும் முருகனை பாடல்தான் இவரை நினைவு
படுத்தும் பாடல் ஆகும்.கருப்பு கூலிங்கிளாஸ்,பாடல்களில் ஒரே வரியே திரும்ப வருமாறு
பாடுவது இவரின் அக்மார்க் அடையாளங்கள்

மதுரை சோமு


இவர் நிறைய இசைக்கச்சேரி செய்து இருந்தாலும் தெய்வம் படத்தில் இவர் பாடிய கோடி மலைகளில் கொடுக்கும் மலை எனத்தொடங்கும் மருதமலை மாமணியே பாடல் இவர்
சிறப்பை உணர்த்தும்


இளையராஜா
இவர் பாடல்களை பாடினால் தன்னை மறந்து விடுவார் தீவிர கொல்லூர் மூகாம்பிகை பக்தர்
ரமண மகரிசி ,காமட்சி அம்மன்,திருவாசகம் போன்ற பாடல்கள் பாடி இருந்தாலும் தாய் மூகாம்பிகை படத்தில் பாடிய ஜனனி ஜனனி பாடல் மிகவும் உருகி பாடி இருப்பார் மேலும்
நல்ல வெள்ளிக்கிழமையிலே,அம்மன் புகழ் பாட எனக்கு என்ற பாடல்கள் எல்லாம் தெவிட்டாத தேன் இன்பம்

No comments:

Post a Comment