Thursday, 15 September 2011

நினைவுகளை நினைவுபடுத்திய படங்கள்



நினைவுகளை நினைவுபடுத்திய படங்கள்

நினைவுகளுக்கு எப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு நம் பள்ளியில் படித்த நாள்கள்
பழகிய நாள்கள் அவ்வளவு மறந்து விட முடியாதவை நினைவுகளை மையப்படுத்தி நிறைய‌
திரைப்படங்கள் வந்து இருந்தாலும் நம் மனதில் நிற்பவை குறிப்பிட்ட படங்களே அத்திரைப்படங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.

ரத்ததிலகம்

கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தாதா மிராசி அவர்கள் இயக்கி இருப்பார் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜிகணேசன் அவர்கள் நாட்டுக்காக போராடும் ஒரு வீரனின் காதலையும் சொன்ன படம் 1963ல் வெளிவந்த இந்த‌
படத்தில் பசுமை நிறைந்த நினைவுகளே என்ற பாடல் ஒன்றே இப்பதிவின் தலைப்பை
நினைவுபடுத்திவிடும்.


பறவைகள் பலவிதம்

ராம்கி,நிரோஷா,ஆகியோர் நடித்த படம் கல்லுரியில் படித்த தோழர்கள்,தோழிகள்,அனைவரும்
கல்லூரியை விட்டு பிரியும்போது சிலவருடங்கள் கழித்து சந்தித்து கொள்ள வேண்டும் என்று
விரும்புகின்றனர் மீண்டும் அனைவரும் சந்தித்து கொள்ளும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் திசைமாறி போயிருக்கிறது.தோழர்களின் பழைய நினைவுகள் சொல்லும்
இப்படத்தை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர்1988ல் வந்த திரைப்படம் இது.


அழகி

தங்கர்பச்சான் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வந்த திரைப்படம் இது கடலூரின் வனப்பையும் அழகையும் படம்பிடித்த திரைப்படம் தான் காதலித்த ஒரு அழகான வசதியான பெண் பிற்காலத்தில் எவ்வாறு கஷ்டப்படுகிறாள் என்பதையும் பள்ளி கல்லுரி காலத்து நினைவுகளை
கதாநாயகன் பார்த்திபனை வைத்தே சொல்லி இருப்பது அருமையிலும் அருமை இசைஞானி
இளையராஜாவின் இசை படத்திற்க்கு பலம் குறிப்பாக காலடி தடம் தெரியும் கடற்கரை மண்ணில் ஆரம்பிக்கும் படத்தின் டைட்டில் இசையே படத்தின் கதையை சொல்லிவிடும்
மிக அருமையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று நந்திதாதாஸ்,தேவயானி ஆகியோரின்
நடிப்பும் அருமை.

ஆட்டோக்ராஃப்

சேரனின் படமான இதில் தன்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்களை தனது திருமண அழைப்பிதழ் கொடுத்து நேரில் அழைப்பதற்காக செல்லும் கதாபாத்திரத்தில் சேரன்.
தான் கேரளாவில் படித்த கல்லூரிகாதல் கிராமத்து பள்ளி தோழி காதல் நகரத்து பெண்ணுடனான‌
நட்பு ஆகியவற்றை சொன்ன படம்  சேரன்,கோபிகா,மல்லிகா
சினேகா,கனிகா, ஆகியோர் நடித்து.மிகப்பெரிய வெற்றிபெற்றபடம்.பழைய பள்ளி கல்லூரி
நினைவுகளை அருமையாக சொன்ன படம்.

No comments:

Post a Comment