Thursday 13 October 2011

விசுவின் வித்தியாசமான படங்கள்



அடிதடி படங்களாக அதிகம் வந்து கொண்டிருந்த எண்பதுகளில் தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் மக்களை கட்டிப்போட்டவர் இயக்குனர் விசு அவர்கள்.தனது படங்களான‌
வேடிக்கை என் வாடிக்கை ,சகலகலா சம்மந்தி,வரவு நல்ல உறவு,திருமதி ஒரு வெகுமதி என நல்ல‌
படங்கள் பல இயக்கி இருந்தாலும் நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் கதை வசனம் மட்டும் எழுதி இருந்தாலும்  விசுவின் வித்தியாசமானசில திரைப்படங்களை மட்டும் பற்றி பார்ப்போம்.


மணல்கயிறு
பொதுவாக விசுவின் படங்களில் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு நல்ல‌
நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்.இதுவே இவரின் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது மணல் கயிறு படத்திலும் கதாநாயகன் எட்டு வித‌
கட்டளைகள் போட்டு கதாநாயகனான எஸ்.வி சேகர் பெண் தேடுவார் திருமண தரகரான விசு
எஸ்.வி சேகரை ஏமாற்றி எட்டுவித கட்டளைகளுக்கு எதிர்மறையாக உள்ள பெண்ணை
கல்யாணம் செய்து வைத்து விடுவார் அத்ற்க்கு பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்களை
சொல்லித்தான் தெரிய வேண்டுமா அருமையான சிந்திக்கவும் சிரிக்கவும் ஏற்றபடம் இது.


சம்சாரம் அது மின்சாரம்


பெற்ற குழந்தைகளால் இன்னலுக்கு ஆளாகும் தகப்பனை பற்றிய படம் விசு,ரகுவரன்,இளவரசி,லட்சுமி,காஜாஷெரிப்,சந்திரசேகர் ஆகியோர் நடித்து மத்திய அரசின்
தங்கத்தாமரை விருது வென்ற படம் இது. இந்த படத்துக்காக போடப்பட்ட மினிமம் பட்ஜெட்
வீடு இன்றும் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ளது.ஏவிஎம்மின் புகழை தூக்கி நிறுத்திய படம்

பெண்மணி அவள் கண்மணி


நான் சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன் அங்கு விஸ்வநாதபுரம் என்ற பகுதிக்கு சென்று இருந்தேன் அங்கு என் உறவுக்காரர் ஒருவரின் முகவரியை பலரிடம் விசாரித்தேன் ஒருவருக்கும் தெரியவில்லை கடைசியில் ஒரு நபரிடம் கேட்டேன் அந்த நபர் பார்ப்பதற்க்கு
டிப்டாப்பாக  இருந்தார் நன்கு படித்தவராக இருப்பார் என நினைக்கிறேன் .ஒரே வார்த்தையில்
முகத்திலடித்தார் போல தெரியவில்லை என்று பதில் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றுவிட்டார் கடைசியில் என் உறவுக்காரரே பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்து சென்றார்
இதில் வேடிக்கை என்னவென்றால் நான் முகவரி கேட்ட டிப்டாப்பான நபரின் அடுத்த வீடுதான்
என் உறவினர் வீடு நகரங்கள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறது ஆபிஸ்,வீடு டி.வி
என்று இருக்கின்றனர் இதனால்தான் பக்கத்து வீட்டில் கொலை நடந்தால் கூட தெரியமாட்டேன்
என்கிறது.ஆனால் இருபது வருடங்களுக்கு முன் என் தாத்தா பாட்டி வீட்டிற்க்கு பள்ளி விடுமுறைக்காக சென்று இருந்தபோது தேவகோட்டை அருணா திரையரங்கில் பார்த்த இந்த‌
படம் உன் வீட்டை மட்டும் பார்க்காதே அக்கம் பக்கம் வீட்டிலும்[பிரச்னைக்குறிய விஷயம்மட்டும்] என்ன நடக்கிறது எனப்பார்
என்ற உயரிய பண்பை எனக்கு சொல்லிதந்தது.அதில் வாழ்ந்த விசுவின் கதாபாத்திரம் பக்கத்து
வீடுகளில் என்ன பிரச்சினை நடந்தாலும் நமக்கென்ன என்று இராமல் அதை தீர்த்து வைக்க முயற்சி செய்வார் இந்த படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் என்பது
குறிப்பிடதக்கது.விசுவின் படங்களில் மிக மிக பிடித்த படம்
விசுவின் திரைக்கதை வசனத்தில் தியாகராஜன் இயக்கிய படம் இது .


சிதம்பர ரகசியம்
ஒரு அப்பாவி இளைஞன் தன் முறைப்பெண்ணை திருமணம்செய்ய வேலை தேடி செல்லும்போது ஒரே இரவில் கடத்தல்,கொள்ளை,கொலை ஆகியவற்றில் மாட்டிக்கொள்கிறான்
அவனை சி ஐ டியாக வரும் விசுவும் அருண்பாண்டியனும் காப்பாற்றுவது கதை நல்ல நகைச்சுவையும் தற்ப்போது வெற்றி சென்டிமென்டாக காரைக்குடியில் படம் எடுத்து வரும் கோடம்பாக்கத்தினருக்கு முன்னோடியாக நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் காரைக்குடி,தேவகோட்டை என 20 வருடங்களுக்கு முன்பே படம் இயக்கியவர் விசு நல்ல‌
நகரத்தார் குடும்பத்தின் அருமையாக சொல்லப்பட்ட படம் இது

No comments:

Post a Comment