நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் இவர்.ஆரம்பத்தில் ஜேப்பியார் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் இவரும் இவர் மனைவி உஷாவும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளனர் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.ஒரு தலை ராகம் என்ற
படத்தை இயக்கினார்.இந்தப்படம் யாரும் எதிர்பாராத வகையில் 100நாட்களுக்கு மேல் ஓடியது
பாடல்களுக்கு இசையமைத்ததும் இவர்தான் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின
தொடர்ந்து இவர் இயக்கியஉயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம்,என் தங்கை கல்யாணி,மைதிலி ,என்னை காதலி,
உறவைக் காத்த கிளி,ஒரு வசந்த கீதம்,சாந்தி எனது சாந்தி,சம்சாரசங்கீதம்,ஒரு தாயின் சபதம்,
என்று இவரின் வெற்றிப்படங்கள் நீளும்.உறவைக்காத்தகிளி படத்தில் ஆறு மாத குழந்தையாக
சிலம்பரசனை அறிமுகப்படித்தினார். நடிகை அமலாவை மைதிலி ,என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.இவர் படங்களுக்கு இசை இயக்கம்.பாடல்கள்,தயாரிப்பு.என அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறந்து அஷ்டாவதானி ராஜேந்தர் என திரையுலகினரால்
அழைக்கப்பட்டார்.அப்போது புகழின் உச்சத்தில் இருந்த இளையராஜாவின் பாடல்களை எக்கோ என்ற ஆடியோ நிறுவனம் வெளியிட்டது.இளையராஜாவின் பாடல்களை தவிர்த்து மற்ற இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்டது என்றால் அது இவர் இசையமைக்கும் படங்களின்
பாடல்களைத்தான்.கதாநாயகியிடம் டூயட் பாடும் ராஜேந்தர் கதாநாயகியை தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்றே பாடுவார்[அதற்க்கு எதிர் இவர் மகன் சிம்பு] கடைசிக்காட்சியில் இவர் காதல் நிறைவேறாமல் அதிகபட்ச படங்களில் மரணமடைந்துவிடுவார்.இவர் படங்களுக்கு மட்டுமல்லாது விஜயகாந்த் நடித்த கூலிக்காரன்,சுரேஷ் நடித்த பூக்களை பறிக்காதீர்கள் படங்களுக்கும் இசையமைத்து அந்த பாடல்களையும் வெற்றிபெறசெய்தவர். நியூமராலஜியில்
அதிக ஆர்வம் கொண்ட ராஜேந்தர் தன் படத்தின் வெற்றி சென்டிமென்டாக ஒருதலைராகம் தவிர்த்து எல்லாப்படங்களுக்கும் ஒன்பது எழுத்தில் படத்தின் தலைப்பை வைத்தார்.ராஜேந்தர்
என்ற பெயரை விஜய.டி.ராஜேந்தர் என்றும் தனது மகன் சிலம்பரசனின் பெயரை சிம்பு என்றும்
அதுவும் பிடிக்காமல் இப்போது எஸ்.டி.ஆர் என்றும் மாற்றி வைத்துவிட்டார்.இவர் அடுக்கு மொழியில் பேசினால் அனல் தெறிக்கும்.இப்போது புதிய துறையாக பாடுவதற்க்கும் வந்து விட்டார்.
No comments:
Post a Comment