இந்த பெயரை கேட்கும்போதே இன்ப தேன் வந்து பாயும் காதினில்.இசைஞானி இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசிப்பவராக பணியில் இருந்தவர் தனது
இனிய குரலால் சூரசம்ஹாரம் படத்தில் நான் என்பது நீயல்லவோ என்ற பாடலின்
மூலம் பாடகராக அறிமுகமானார் இவரின் குரலை கேட்டால் இவரை படைத்த கலைத்தாயான
சரஸ்வதிதேவிக்கே சற்று பொறாமை வரும்.அந்த அளவிற்க்கு இனிமை இவரின் குரல்
புன்னைவன பூங்குயிலே,எதிர்காற்று படத்தில் இடம் பெற்ற ராஜா இல்லா ராணி,எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை,போன்ற பாடல்கள்வழக்கமாக இசைஞானிதான் தாய் சென்டிமென்ட் பாடலை
பாடுவார் அதற்க்கு மாறாக இவர் பாடிய ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம் பெற்ற
அம்மன் கோவில் எல்லாமே பாடல் மிக மிக அருமையான பாடல்.தாயன்பு இல்லாதவர்களை
கூட இந்த பாடல் திருந்தவைத்துவிடும் அதிகம் ஊடகங்களில் தோன்றாத சிறந்த பாடகர் இவர்
இவரின் பாடல் பணி இன்னும் சிறக்கட்டும்
நானும் நீண்டநாட்களாகவே அவருடைய குரலையும், குழலையும் அடையாளம் கண்டு ரசித்து வருகிறேன்.
ReplyDelete"வராதுவந்த நாயகன் (ஏதோ ஒரு பார்த்திபன் படம்)"
"வெள்ளி கொலுசுமணி -பொங்கிவரும் காவேரி"
"ஆச மச்சான் வாங்கிவந்த மல்லிகப்பூ -கும்மிப்பாட்டு"
இன்னும் இது போல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இருக்கும் எத்தனையோ பல முன்னநிப்பாடகர்களை விட இவர் சிறந்தவர் என்பது என்னைப்போல் பலரின் கணிப்பு.
இசைஞானி யின் பாடல்களுக்கு மெருகூட்டும் புல்லாங்குழல் இசையை கேட்கும் போதெல்லாம் அருண்மொழி அவர்கள் நினைவு வருவது தவிர்க்க முடியாதது.
இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ எனவும் சிறிது வருத்தம் தான்.
ஆனால் ரசிகர்கள் நெஞ்சில் இவரின் பாடல்கள், குழலிசையின் மூலம் நீங்காமல் குடியிருப்பார்.
YOUR COMMENTS 100% TRUE SIR
ReplyDelete