Thursday 20 October 2011

மனதை கரைய வைத்த திரைப்படங்கள் பாகம்1



தமிழ்சினிமாவில் எத்தனையோ மனதை கரைய வைத்த படங்கள் வந்துள்ளன அதில் நான் ரசித்த பலதரப்பட்ட படங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றுதான் இதை நான்
எழுதுகிறேன். நான் ரசித்தபடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக‌
எழுதுகிறேன்

தண்ணீர் தண்ணீர்


தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தண்ணீர்பஞ்சம் அதிகம் உண்டு மழை நன்றாக பெய்யும் சிரபுஞ்சி கூட இதற்க்கு விதிவிலக்கல்ல தண்ணீர் பிரச்னையை மையமாக ஒரு சில‌
படங்களே தமிழில் வந்துள்ளன சிலவருடங்களுக்கு முன்பு கூட கே.வி ஆனந்த் இயக்கிய கனாக்கண்டேன் என்ற திரைப்படத்தில் தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இயக்கினார்
இந்தப்படம் சரியாக போகவில்லை கே.வி ஆனந்த் இயக்கிய அயன்,கோ,படங்கள் பக்கா கமர்ஷியல் படங்கள் என்பதால் நன்றாக ஓடியது .நல்ல விஷயத்தை கூறிய படங்களை தற்போது
இருக்கும் இளைஞர் சமுதாயம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பது வேதனைக்குறிய விஷயம்.சரி விஷயத்திற்க்கு வருகிறேன் தண்ணீர் பிரச்னையை கே.வி ஆனந்த்திற்க்கு முன்பே
கையாண்டவர் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கோமல்சுவாமிநாதன் அவர்கள் கதை வசனத்தில் பாலச்சந்தர் இயக்கியிருப்பார் தண்ணீர் பிரச்னையை இந்த அளவிற்க்கு அழுத்தமாக‌
வேறுபடத்தில் சொல்லியிருப்பார்களா என்றால் சந்தேகத்திற்குறியதுதான்.சரிதா,ராதாரவி போன்றோர் நடித்துஇருப்பார்கள் மழைஇல்லாமல் தண்ணீருக்கு பல மைல்தூரம் நடக்கும் கிராமத்துபெண்களின் அவலத்தையும்,மேகம் கறுக்கும்போது அந்த கிராமவாசிகள் படும் சந்தோஷத்தையும் பாலச்சந்தர் அவர்கள் அருமையாக இயக்கியிருப்பார்.இந்த படத்தை இதுவரை பார்க்காதவர்கள் அடுத்தடுத்த வீடியோக்களில் இந்தபடத்தை பார்க்கலாம்.




வீடு


சொக்கலிங்கபாகவதர் அவர்கள் நடித்து இளையராஜா இசையமைத்து பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் மனிதனாக‌ பிறந்தவனுக்கு தேவையான விஷயம் இந்த வீடு
சொந்தவீடு இருந்தால் அவன் அடையும் மகிழ்ச்சி வார்த்தையிலடங்காதது.ஆனால் அந்த‌
வீட்டை அவன் கட்ட எடுக்கும் முயற்சிகள் அங்கு இங்கு கடன் வாங்கி வீட்டை கட்டி முடிப்பதற்க்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.வீடு கட்டி குடியேறியபின்பும் வாங்கிய கடனை கட்டி அந்த வீட்டில் அவன் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.இந்தபடத்திலும் கதாநாயகன் சொக்கலிங்கபாகவதர் வீடு கட்டுவதற்க்கு
படும் கஷ்டங்களை பாலுமகேந்திரா அவர்கள் இயக்கியிருப்பார் கதாநாயகன்சொக்கலிங்கபாகவதர் படும் வேதனைகளை இளையராஜாவின் இசையால் காட்சிகளை தூக்கி நிறுத்தியிருப்பார்.கடைசியில் கட்டியவீட்டை பார்ப்பதற்காக வரும்போது

இறந்து விடும்காட்சி கல் நெஞ்சையும் கறையவைக்கும் காட்சி சொக்கலிங்கபாகவதர்,இளையராஜா,பாலுமகேந்திரா ஆகிய மூவருமே போட்டிபோட்டு
உழைத்து இந்தபடத்தை ஜீவனுள்ள படமாக உருவாக்கியிருப்பார்கள்



No comments:

Post a Comment