பாலச்சந்தர் இயக்கிய மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்ததால் இப்பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு உயர்ந்தமனிதன்,எதிர்நீச்சல்,பாமாவிஜயம் போன்ற வெற்றிபடங்களில்
நடித்து புகழ்பெற்றார்.குணச்சித்திர மற்றும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கும் திறமையுடையவர்.ரஜினி கமலில் ஆரம்ம்பித்து இன்றையஇளையதலைமுறை நடிகர்கள் வரை நடித்தவர்.சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகவும் விளங்கினார்
அர்ஜூன் நடித்த கற்பகம் வந்தாச்சு என்ற படத்தை இயக்கினார் இந்த படம் சரியாக போகவில்லை.ஆனால் கமலை வைத்து இவர் இயக்கிய அந்த ஒரு நிமிடம் மிகப்பெறும்
வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் மோதிரத்தில்
விஷஊசி வைத்துக்கொள்ளும் குரூரமான கதாபாத்திரத்தில் நடித்தார் அடுத்து இவர் இயக்கி
மியூசிக்கல் ஹிட் ஆன படம் சிவக்குமார்.ஜெய்சங்கர் நடித்த இசைஞானியின் இசையில்இன்று நீ நாளை நான் என்கிற
திரைப்படம்.மிக மென்மையான கதையம்சம் கொண்ட படமாக இது வந்தது தூக்கு தண்டனை
கைதியாக சிவக்குமார் நடித்து இருப்பார்.தாழம்பூவே கண்ணுறங்கு ,பொன்வானம் பன்னீர் தூவுது
இந்நேரம் போன்ற பாடல்களை இன்றளவும் யாராலும் மறந்திருக்கமுடியாது.
சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக வலம் வந்த இவரை காலன் நம்மிடம் இருந்து
பறித்தாலும் காவியமாக நம் நெஞ்சில் வாழ்ந்து வருகிறார்
No comments:
Post a Comment