Sunday 16 October 2011

சினிமா துறையினரின் அபத்தங்கள்

தமிழ் நாட்டுகிராமங்கள் சிறு நகரங்களில் உள்ள‌ தாய்மார்கள் முன்பெல்லாம்விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சென்று இரண்டு
படங்கள் பார்த்துவிட்டு வருவர் முன்பு தாய்மார்களை குறிவைத்து முன்பு நிறைய படங்கள்
வந்தது கரகாட்டக்காரன்,முந்தானைமுடிச்சு,பூவேபூச்சுடவா போன்ற படங்களின் வெற்றிக்கு
தாய்மார்கள்தான் முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம்.ஆனால் தற்போது வரும் படங்கள்இளைஞர்களை மட்டுமே குறிவைத்து வருவது வருத்தத்திற்குறியது ஏதொ அங்கொன்றும்
இங்கொன்றுமாய் நாடோடிகள்,அங்காடிதெரு,என,எல்லாதரப்பும் பார்க்கும் படங்களும் ஒன்றிரண்டு வரத்தான் செய்கின்றன நல்ல குடும்பகதைகள் நகைச்சுவை படங்கள்
சம்பத்தப்பட்ட படங்கள் இனி வருமா என்றால் கேள்விக்குறியதுதான்?தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு வேலை என்னவென்றால் ஒன்றுக்கும் ஆகாத பாடலுக்கு ஹிந்தி நடிகையை
காத்திருந்து கூட்டிக்கொண்டு வந்து ஆடவைப்பர் ஒருபாடலுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுப்பர்
ஒருபாடலுக்கு ஒரு கோடி கொடுப்பதெல்லாம் கொஞ்சம் டூமச்சாகதான் தெரிகிறது .நாட்டில்
இல்லாத ஏழைகள் எவ்வளவோ இருக்கின்றனர் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி
செய்யலாமே? பொசுக்பொசுக்னு பாரினுக்கு பாட்டு எடுக்கபோய் விடுகின்றனர் தமிழ் நாட்டில் இந்தியாவில் எங்குமே லொக்கேஷன்கள் இல்லையா தமிழ் சினிமாவின் கேமராக்களில் சிக்காத‌
எத்தனையோ இடம் இன்றும் உண்டு. காட்சியமைப்புக்கு தேவைஎன்றால் அயல்நாடுகள் செல்லலாம் தவறே இல்லை. இதைவிட கொடுமை என்னவென்றால் ஒருகாலத்தில் பாகவதரும்
கே.விமகாதேவன்,எம்.எஸ்.வி,இளையராஜா போன்றோர் கட்டிக்காத்த இசைஉலகத்தில் நல்ல பாடல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை வந்து விட்டது.ஒன்றுக்கும் ஆகாத‌
பாடலை இசையமைத்து  லண்டனில் பாடல் வெளியீட்டுவிழா நடத்துகின்றனர்
 தமிழ்நாட்டில் இசையமைத்துவிட்டு எதற்க்கய்யா ஃபாரினில் பாடலை வெளியிடுகிறீர்கள்
இயல்பானவர் எளிமையானவர் எனப்பெயரெடுத்த ரஜினிகாந்தை கூட இது போன்ற ஆடம்பரங்களில் சிக்க வைத்துவிட்டனர் இது வருத்ததிற்குறிய‌
விஷயம்.
தமிழ் நாட்டில் நடிகைகளே இல்லையா?எதற்க்கு அதிக பணம் கொடுத்து மும்பையில் இருந்து நடிகைகளை கொண்டு வருகிறீர்கள்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்த நடிகைகள் கொடுக்கும் பேட்டி கூட காண சகிக்காது தலைமுடியைதான் ஆயிரம் முறை கோதி விடுவார்கள். பேட்டியில் ஒன்றுமே இருக்காது.வீண் ஆடம்பரங்கள் எதற்க்கு என சினிமாக்காரர்களிடம் கேட்டால் கதைக்கு தேவைப்படுகிறது எனக்கூறுகின்றனர்
செலவே இல்லாத இயல்பான படங்கள் ஜெயித்ததில்லையா குறைந்த செலவில் எடுத்து நல்ல‌
கதையம்சம் கொண்ட காதல் போன்ற வெற்றிபடங்கள் ஆடம்பர இயக்குனர் எனப்பெயரெடுத்த‌
சங்கரின் படம்தானே.
சமீபத்தில் தூத்துக்குடியில் வாழும் ஒரு மனிதரை பற்றிய செய்தி ஒரு வாரப்பத்திரிக்கையில்
வந்து இருந்தது அந்த மனிதர் ஒருமுறை சாலையில் செல்லும்போது ஒரு மனநோயாளி
சாலையில் உள்ள சாக்கடையில் உள்ள சாக்கடையை அள்ளிதின்று கொண்டு இருந்திருக்கிறார் அதை பார்த்த மாத்திரத்தில் அந்த நபருக்கு உணவு வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி இது போன்ற சாலையில் திரியும்
ஆதரவற்றவர்களுக்குதேடிசென்று உணவு கொடுத்துவருகிறார் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதும் இவரல்லவோ மனிதர்.மனித வாழ்க்கையில் இன்று புகழின் உச்சியில் இருப்பவர்கள்
யாருக்கும் வாழ்வு இப்படித்தான் அமையும் என்று கூற முடியாது ஒரு காலத்தில் கோடிகளில்
புரண்ட சினிமா கலைஞர்களில் இன்று தெருக்கோடிகளிலில் இருக்கின்றனர். பழம்பெறும் நடிகை
காஞ்சனா இவர் இப்பொழுது பரம ஏழை.கர்நாடாகவில் எங்கோ ஒரு மூலையில் வசிக்கிறார்



இவர் ஒரு ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் அழகான முன்னணி
கதாநாயகி இன்றோ சரியான ஆதரவு இல்லாமல் பக்கத்து கோவிலில் தரும் சாப்பாட்டை வாங்கி
சாப்பிட்டுவருகிறார்.சின்னதம்பி,கட்டபொம்மன் போன்ற படங்களில் வில்லனாக நடித்த நடிகர்
உதயப்பிரகாஷ் தான் சம்பாதித்த பணத்தை தீயவழிகளில் அழித்து மனநலம் பாதிக்கப்பட்டு

நடிகர் சங்க வாசலிலே இறந்துகிடந்தார்.பணத்திலேயே குளித்த தியாகராஜபாகவதரின் மனைவி
கூட கடைசிக்காலத்தில் கஷ்டப்பட்டுத்தான் மறைந்தார்.இதை எதற்க்கு சொல்கிறேன் என்றால்
எந்த வாழ்க்கையையும் ஆண்டவன் ஒரே மாதிரியாக வைத்திருப்பான் என்று சொல்ல முடியாது
சினிமா இயக்குனர்களே ,நடிகர்களே,கோடிகளை கொட்டி படம் எடுக்கும் படாதிபதிகளே அயல்நாடுகளில் படம்.பாடல் வெளியீடு என்று வீண் செலவு செய்யாதீர்கள் நாலூ பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமாவில் மட்டும் காட்சி வைக்காதீர்கள்.அதை நிஜமாக்க முயலுங்கள்
மல்லிகா ஷெராவத்தை கூட்டி வந்து ஒஸ்தி படத்தில் ஆடவைத்து இருக்கிறிர்களெ அந்த பாடலுக்கு நம்மூரில் நடிகைகளே கிடைக்கவில்லையா?
அந்த நடிகை ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு ஒரு வெயிட்டான பணத்தை வாங்கிசென்றிருப்பார்
தேவையில்லாத இந்த பந்தா எதற்க்கு? நடிகைக்கு கொடுத்த பணத்தை ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து நாலு
ஏழைகள் ,படிக்க இயலாத குழந்தைகள் ஆகியோருக்கு உதவி செய்தீர்கள் என்றால் நாலு பேர்
மட்டுமல்ல நாலு தலைமுறையே வாழ்த்தும்.இதில் விதி விலக்காக சூர்யா போன்ற நடிகர்கள்
அகரம் பவுண்டேசன் போன்ற அமைப்புகளை நிறுவி நல்ல விஷயங்கள் செய்வதை நாம்
பாராட்டித்தான் ஆக வேண்டும்.எதற்காவது நிவாரணம் என்றால் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வரும் ஒரு பகுதியைத்தான் நிவாரணம் கொடுக்க வேண்டுமா?சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தலைக்கு 10000 ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பெரிய நிவாரணத்தொகை சேர்ந்துவிடுமே அந்த நல்ல மனது ஏன் உங்களுக்கு வரமாட்டேன்
என்கிறது..சினிமாக்காரர்களே [ஆணவத்தில்]ஆடம்பரத்தில்ஆடாதீர்கள்
  நல்ல மனதுடன் நாலுபேருக்கு உதவி செய்யுங்கள் இறைவன் உங்களை நாலு படங்களை கொடுத்து நல்ல நிலையில் வைப்பான் ..எதையோ எழுதப்போய் எதற்க்கோ வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் சரி நாளைக்கி சந்திப்போம்
                         நன்றி

No comments:

Post a Comment