உரிமை கீதம் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்படத்தின் சுமாரான
வெற்றிக்குபிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் மனோஜ்கியான் இசையில் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் நான் என்றும் ரசிக்கும் பாடல் .80,90களில் புகழ்பெற்று
இருந்த உச்ச நடிகர்கள் அனைவரையும் இயக்கிய பெருமை இவருக்கு உண்டு இந்தப்பெருமை
இவரைத்தவிர எந்த இயக்குனருக்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.உரிமைகீதம் படத்திற்க்கு பிறகு இவர் சத்யராஜை வைத்து புதியவானம் படத்தை இயக்கினார் இதில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் நடித்தார் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து கிழக்கு வாசல் படத்தை இயக்கினார் அதன் வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை வைத்து இயக்கிய சின்னக்கவுண்டர் வரலாறுகாணாத வெற்றிபெற்றது.அதன் வெற்றி ரஜினிகாந்தின் பார்வையை
இவர் பக்கம் திருப்பியது இவருக்காக ஜில்லா கலெக்டர் என்ற கதையை உருவாக்கினார் ரஜினி
கலெக்டராக நடித்து இருக்க வேண்டிய படம் சில காரணங்களால் படத்தை எடுக்க முடியவில்லை
ரஜினியிடம் ஜில்லா கலெக்டருக்காக வாங்கிய கால்ஷீட்டில் எடுத்தபடம்தான் எஜமான் ஏவிம்
தயாரித்து இவர் இயக்கினார்.மீண்டும் கார்த்திக்குடன் பொன்னுமணி ,நந்தவனதேரு ,படங்களை
எடுத்தார்.கார்த்திக்குடன் அதிகபடங்களில் இவர் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.பிரபுவின் நூறாவது படமான ராஜகுமாரன் இவரின் படம்தான்.சிவக்குமார்.பிரபுவை வைத்து உறுதிமொழிபடத்தையும்கமலஹாசனை
வைத்து சிங்காரவேலன் படத்தையும் இயக்கினார் இதுவும் வெற்றிப்படம்தான்.அர்ஜூனை வைத்து
சுபாஷ் என்ற படத்தை இயக்கினார் நடிகை சில்க்ஸ்மிதா நடித்த கடைசிப்படம் இது அதன்பிறகு
இவர் எடுத்த படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை நடிகர் விக்ராந்தை கற்ககசடற படத்தின் மூலம் இவர்தான் அறிமுகப்படுத்தினார் ரஜினி,கமல்,விஜயகாந்த்,பிரபு,கார்த்திக்,சத்யராஜ் என அனைவருடனும் படம் செய்த ஒரே இயக்குனர் இவர் .
innum virivana vilukungal thevai
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி என்னால் முடிந்த அளவு தகவல்களை வெளியிட முயற்சி செய்கிறேன் பதிவிடுவதற்காக நான் உட்கார்ந்த
ReplyDeleteஉடன் ஏதாவது இயக்குனரையோ யாரோ ஒரு சினிமா கலைஞரையோ நினைத்தேன் என்றால்
அவரைப்பற்றி உடனே எழுதிவிடுவேன் இதற்காக எந்த ஒரு இணையதளத்தையோ புத்தகத்தையோ பார்ப்பதில்லை சிறுவயதில் இருந்து சினிமா அதிகம் பார்ப்பதாலும் சினிமா
சம்பந்தமான் செய்திகள் புத்தகங்கள் ஒன்றுவிடாமல் வாசித்துவருவதாலும் சிறு வயதில்
இருந்து எல்லா படத்தின் டைட்டிலையும் தவறாமல் பார்த்துவிடுவேன் அப்போதுதான் படத்தின்
இயக்கம்,ஓளிப்பதிவு,இசை என அனைத்து துறைகலைஞர்களையும் தெரிந்துகொள்ளமுடியும்
அதனால்தான் இவைகள் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டதாலும் எனக்கும் என்
மனதுக்கும் தெரிந்த தகவல்களை மட்டும் எழுதுகிறேன் .சரியான நேரம் இல்லாதாதாலும்
விரிவாக எழுதமுடியவில்லை என்னைப்போன்ற புதிதாக பதிவிடுபவர்களுக்கு உங்களின்
கருத்துக்கள் அவசியம் தேவை தொடர்ந்து தங்கள் கமெண்ட்ஸ் தேவை உங்கள் பெயரைப்பார்த்தவுடன் கூடஇயக்குனர் பிரியதர்ஷனின் ஞாபகம் வந்து விட்டதால் கூடிய சீக்கிரம் இந்த பெயரில் பதிவை எதிர்பார்க்கலாம்.
அபிராம்