Tuesday, 4 October 2011

கலைஞரின் வசனத்தில் உண்மையிலேயே ஹிட் அடித்த படங்கள்



தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சமீபத்தில் உளியின் ஓசை,பாசக்கிளிகள்,இளைஞன்,பெண்சிங்கம் என்று வசனமாக எழுதினார் இந்த படங்களுக்கு
அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டது இந்த படங்கள் அதிக நாட்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது
உண்மையில் இந்தபடங்கள் தியேட்டரை விட்டே ஒரு வாரத்தில் ஓடியது உண்மை காலமாற்றத்தால் கலைஞரின் வசனங்கள் யாருக்கும் பிடிக்காமல் போயிருக்கலாம் ஆனால்
ஒருகாலத்தில் கலைஞரின் வசனத்திற்காகவே நன்றாக ஓடிய படங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.

பராசக்தி



நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல்படமான இத்திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார் கலைஞர் இத்திரைப்படத்திற்க்கு வசனம் எழுதினார் அதிலும் க்ளைமாக்ஸ்
வசனம் அனல் பறக்கும் விதத்தில் இருந்தது.கலைஞரின் வசனமும் சிவாஜி அதை பேசிய‌
விதமும் நன்றாக படத்தை வெற்றிபெறச்செய்தது.

மந்திரிகுமாரி


இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து இருந்தார் வாராய் நீ வாராய் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
இது இந்தபடமும் கலைஞரின் வசனத்திற்காக நன்றாக ஓடிய படமாகும்.



மனோகரா
கண்ணே மனோகரா பொறுத்ததுபோதும் பொங்கியெழு என்ற வசனத்தை கண்ணாம்பாள் பேசும்போது சிவாஜி கணேசன் தூணை உடைத்துக்கொண்டு வருவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் படம் பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க செய்யும் காட்சியாக‌
இது அமைந்தது.






பாலைவன ரோஜாக்கள்
 பேனாமுனையால் அரசியல்வாதிகளிடம் மோதும் நிருபராக சத்யராஜ் நடித்து இருப்பார்
பிரபுவும் இணைந்து நடித்து இருப்பார் மணிவண்ணன் இயக்கி இருப்பார் கலைஞரின் வசனம்
சிறப்பாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று



பாசப்பறவைகள்‍


கலைஞரின் வசனத்தில் பராசக்தி படத்திற்க்கு பிறகு மிகச்சிறப்பானதொரு வெற்றிப்படமாக‌
அமைந்தது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்ட படமாக விளங்கியது
இசைஞானியின் இசையும் சிவக்குமார்,ராதிகா,மோகனின் நடிப்பும்கலைஞரின் வசனமும் பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான கொச்சின் ஹனிபா என்று அழைக்கப்படும் வி.எம்.சி ஹனிபாவால் இயக்கி
மிகப்பெரும் வெற்றிகண்ட படம்.



பாடாத தேனிக்கள்
 பாசப்பறவைகள் வெற்றிக்கு பிறகு அதே இசை இயக்கம் வசன ம் என அதே கூட்டணியில்
உருவான திரைப்படம் இது நன்றாக சென்று கொண்டு இருக்கும் குடும்ப வாழ்க்கையில்
திடீர் என ஏற்படும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட படம் இது.


இது எங்கள் நீதி ,நீதிக்குதண்டனை,புதிய பராசக்தி போன்ற படங்களும் ஓரளவிற்க்கு கலைஞரின்
வசனத்தில் வெற்றி அடைந்த படங்களாகும்.

No comments:

Post a Comment