தலைப்பை பார்த்தவுடன் குழப்பமாக இருந்ததா நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான
எஸ்.ஏ சந்திரசேகரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் இவர் இயக்கிய திரைப்படங்கள் சில குடும்பதிரைப்படங்கள் குறிப்பாக நதியா, ரகுமான் நடித்த நிலவே மலரே,விஜயகாந்த் நடித்த
வசந்தராகம் ஆகியவை குடும்பதிரைப்படங்கள் ஆகும் நடிகர் ரகுமானை இவர்தான் நிலவே மலரே படம் மூலம் அறிமுகப்படுத்தினார்,இவர் நண்பர்கள்,ரசிகன், தேவா,பெரியண்ணா என்று காதல் படங்களை எடுத்தவர் இவர் படங்களில் எல்லாம் நீதிமன்றக்காட்சி கட்டாயம் இடம்பெறும்
அது காதல் படமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக நீதிமன்றக்காட்சி இடம்பெறும்.கோர்ட் சீன்களுக்கென்றே பிரத்யேகமாக எடுக்கப்பட்டஇவரின் சிலபடங்கள் பெரும் வெற்றிபெற்றன.
விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை,நீதியின் மறுபக்கம் ஆகிய படங்களில் நீதிமன்றக்காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் வக்கீலின் வாதங்கள் தூள் பறக்கும்
சில காட்சிகள் சீட்டின் நுனிக்கே வரவழைக்கும்.ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் இவரின் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படங்களிலே அதிக நாட்கள் ஓடிய படம் இந்த
படத்தில் பாக்யராஜும் சேர்ந்துகொண்டு நீதிமன்றக்காட்சிகளில் பட்டையை கிளப்புவார்.
கலைஞர் வசனத்தில் நீதிக்கு தண்டனை படத்தை எடுத்தார் அதிலும் நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்திலும் நீதிமன்றக்காட்சிகள் அதிகம்.இது எங்கள் நீதி என்ற படத்தில் இவரது மகன் விஜய் 16வயது சிறுவனாக பள்ளி மாணவனாக நடித்து இருப்பார் இதிலும் நீதிமன்றக்காட்சிகள் அதிகம்.ராம்கி கதாநாயகனாக நடித்த படம் இது. இவர் மகனை அறிமுகப்படுத்திய நாளைய தீர்ப்பு, இவர் இயக்கிய சுக்ரன்,ராஜதுரை,ராஜநடை,சட்டம் ஒரு விளையாட்டு இவர் இயக்காமல் கதை வசனம் மட்டும் எழுதிய தமிழன் ஆகிய எல்லா படத்திலுமே நீதிமன்றக்காட்சிகள் அனல் பறக்கும் வசனங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும்
தமிழ் சினிமாவில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகம் இவரின் படங்களாகத்தான் இருக்கும் கடைசி வரை சட்டத்தை கைவிடாத ஒரே தமிழ் இயக்குனர் இவர்தான்.இவர் கடைசியாக இயக்கிய சட்டப்படிகுற்றம் இதுவும் நீதிமன்றக்காட்சி நிறைந்த படம்தான்

No comments:
Post a Comment