Saturday 15 October 2011

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்

ஒரு சிலர் சினிமாவை விட்டு சென்று நன்றாக தொழில் செய்துபிழைக்கின்றனர் உதாரணமாக‌
மண்ணாங்கட்டி என்ற ஒரு நடிகர் பாக்யராஜ் படங்களில் ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இவர் தற்போது திருப்பூரில் மிகப்பெரிய ஜோதிடராக‌
உள்ளார் ஒரு வெப்சைட் ஒன்றையும் நடத்துகிறார் பரிஹாரம் ஹோமம் என்று இவர் வாழ்க்கை செல்கிறது. விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் பிளஸ்2 பெயிலாகி
அடிவாங்குவாரே நடிகர் காஜா ஷெரிப் இவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் இவர் ஒரு கலைக்குழு
ஒன்று வைத்து நடத்துகிறார் ஒரு ப்ளாஸ்டிக் நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார் இது போலசினிமாவில் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிய சில சினிமா கலைஞர்கள் திடீரென காணாமல் போய் விடுகிறார்கள் சிலர் கல்யாணம் செய்து செட்டிலாகி விடுகிறார்கள் சிலர்
தொழில்களில் கவனம் செலுத்தி சினிமா உலகை மறந்து விடுகின்றனர்.அப்படி காணாமல் போன‌
சில கலைஞர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
எங்கள் ஊரில் உள்ளஒரு  பெட்டிக்கடையில் நடிகர் காஜாஷெரிப் பால் பாக்கெட் வாங்கி சென்றபோது இந்த சிந்தனை எனக்குள் இந்த எங்கே எங்கே என்ற கேள்வி வந்தது .சும்மா படித்து விட்டு மறந்து விடுங்கள் சும்மா ஜாலிக்காக போட்ட பதிவு இது.

ரஜினிகாந்த் நடித்த சிவா,கார்த்திக் நடித்த நட்பு,விஜயகாந்த் நடித்த உழைத்து வாழ வேண்டும் உட்பட முன்னணி நடிகர்களை வைத்து ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அமீர்ஜான் என்பவர் எங்கே இருக்கிறார்?

கமல் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தநடிகை மாதவி எங்கே
 இருக்கிறார்?


பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு,மற்றும் விசுவின் அனைத்துப்படங்கள்,மாப்பிள்ளை,தர்மதுரை உட்பட பல படங்களில் நடித்த நடிகர் திலீப் எங்கே
இருக்கிறார் இவரை கூகிலில் தேடினால் மலையாள நடிகர் திலீப்தான் சிக்குகிறார் அந்த அளவிற்க்கு இவரை தமிழ்நாட்டுக்காரர்கள் மறந்து விட்டார்கள் இவர் எங்கே இருக்கிறார்?

மோகன் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த முன்னாள் கதாநாயகி jeyasree எங்கே இருக்கிறார்


மோகனின் முன்னணி படங்களான பாடு நிலாவே,உன்னைநான்சந்தித்தேன்,விஜயகாந்தின் நினைவே ஒரு சங்கீதம்,தர்மம் வெல்லும்,ராமராஜனின் கிராமத்து மின்னல்,முரளியின் கீதாஞ்சலி,இன்னும் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் கே.ரங்கராஜ் எங்கே?
கடைசியாக சரத்குமாரை வைத்து எல்லைச்சாமி என்ற படத்தை எடுத்தார் இவர் எங்கே?

காதல் ஓவியம் என்ற படத்தில் நடித்து விட்டு சென்ற நடிகர் கண்ணன் எங்கே?

இளையராஜாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் தேவராஜ் மோகன் என்ற இரட்டை இயக்குனர்களின் தற்போதைய நிலை என்ன?

முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன் என்ற பாடலுக்கு ஆடிய‌
முன்னாள் நடிகை ரஞ்சனி எங்கே?

அதே பாடலிலும் மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் நடித்த நடிகர் தீபன் எங்கே?

செந்தூரப்பூவே உட்பட பல படங்களில் நடித்த நடிகர் ராம்கி எங்கே?

சத்யராஜின் சாவி,மக்கள் என் பக்கம் உட்படசூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக்ரகுநாத் எங்கே?

மீண்டும் கோகிலா ,ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களில் நடித்த நடிகை தீபா எங்கே?

கார்த்திக்கை வைத்து உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்,சத்யராஜின் தாய்மாமன் உட்பட
பல படங்களை இயக்கிய இயக்குனர் குருதனபால் எங்கே?



பாலபாரதி
அமராவதி,தலைவாசல் என பல சூப்பர் ஹிட் மியூசிக்கல் படங்களுக்கு இசையமைத்தவர் இவரின் தற்போதைய நிலை என்ன?

ஜனகராஜ்
ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் தற்போது எங்கே இருக்கிறார்

சிவச்சந்திரன்
அவள் அப்படித்தான் உட்பட பல படத்தில் நடித்தவரும் நடிகை லட்சுமியின் கணவருமான இவர்
எங்கே இருக்கிறார்?

ரவீந்தர்

ஒரு காலத்தில் கமல் ரஜினி படங்களில் சிறு வில்லனாக வந்து மிரட்டும் இவர் எங்கே 5வருடங்களுக்கு முன்பு வந்த 6.2 படத்தில் இவரை பார்த்த ஞாபகம்

சி.வி ராஜேந்திரன்

பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்தியவர் சிவாஜி குடும்பத்தின் ஆஸ்தான இயக்குனர்
இவர் எங்கே?

சுரேஷ் பீட்டர்ஸ்
தென்காசிப்பட்டணம்,கூலி போன்ற படங்களுக்கு இசையமைத்த இவர் எங்கே?

சுபாஷ்
சத்ரியன்,ப்ரம்மா போன்ற படங்களை இயக்கியவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்க்கு இரண்டு படங்கள் கொடுப்பார் இவர் எங்கே

நடிகை ரூபிணி
ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் எங்கே


இயக்குனர் ஆர்.சி சக்தி
தர்மயுத்தம் போன்ற படங்களை இயக்கியவரும் கமலின் நெருங்கிய நண்பருமான இவர் எங்கே?

டி.எஸ் ராகவேந்தர்
வைதேகி காத்திருந்தால் படத்தில் ரேவதியின் தந்தையாக வருவாரே அவர்தான் இவர் சிறந்த‌
பாடகரும் கூட சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா
பாடலை பாடி இருக்கிறார்   இவர் எங்கே?

இவர்களுக்கு உள்ள வேலைப்பளு குடும்பச்சூழ்நிலை போன்றவற்றால் சினிமாவில் பங்கேற்காமல் இருக்கலாம் ஆனால் பொது நிகழ்ச்சிகள்,திருமணம், போன்ற
எதிலுமே இவர்களை பார்க்கமுடிவதில்லையே அதுதான் ஆச்சரியம்!



No comments:

Post a Comment