எஸ்.பி பாலசுப்பிரமணியம்
பலஆயிரம் பாடல்களுக்கு மேல் தமிழ் தெலுங்கில் பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்க்கு இசை மீது
ஏற்பட்ட ஆர்வத்தால் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார் இவர்
பாடினால் எப்படி பாடல் வெற்றி அடைந்ததோ அதேபோல இசையமைத்தாலும் பாடல் வெற்றி அடைந்தது
இவர் இசையமத்து வெற்றியடைந்த குறிப்பிட்ட படங்கள்.துடிக்கும்கரங்கள்,சிகரம் ஆகியவை ஆகும்
குறிப்பாக துடிக்கும் கரங்களில் இடம் பெற்ற மேகம் முந்தானை,பெண்புத்தி முன் புத்தி.போன்ற பாடல்களும்
சிகரம் படத்தில் இடம்பெற்ற அகரம் இப்பொ,இதோ இதோ என் பல்லவி பாடல்களும் வெற்றி அடைந்தன
கங்கை அமரன்
வாழ்வே மாயம் போன்ற புகழ்பெற்ற படங்களில் எல்லாம் இசையமைத்த இவர் திடீரென இயக்குனர் அவதாரம்
எடுத்து அதிலும் மெகா வெற்றிபெற்றார் இவர் இயக்கத்தில் ராமராஜனை வைத்து அதிக
படங்கள் இயக்கியவர் எங்க ஊரு பாட்டுக்காரன் ,கரகாட்டக்காரன் படங்களின் வெற்றி இவர் துறையை
மாற்றியது
எடிட்டர் லெனின்
அதிக படத்திற்க்கு குறிப்பாக 80,90களில் வந்த நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு எடிட்டிங் செய்து இருந்தாலும்
இயக்கத்தின் மீது இருந்த தாக்கத்தால் இவர் இயக்கிய படம் கார்த்திக்கை வைத்து இயக்கிய சொல்லதுடிக்குது
மனசு திரைப்படம் ஆகும் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றபோதும் பாடல்கள் இளையராஜாவின் இசையில்
மிகப்பெரிய வெற்றியைபெற்றது
கே.வி ஆனந்த்
அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருந்தாலும் அந்த துறையை விட்டு இயக்குனர் துறைக்கு
வந்தபிறகே வெற்றிஅடைந்தார் இவர் இயக்கிய கனாகண்டேன்,அயன்,கோ.என்று அனைத்துபடங்களுமே
மிகப்பெரிய வெற்றி அடைந்தன
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன் இன்னும் சிலதுறை தாவிய கலைஞர்களை பற்றி மற்றுமொரு
பதிவில் காண்போம்.
No comments:
Post a Comment