Friday 9 September 2011

தமிழ் சினிமாவில் இசை படும்பாடு



ஒரு காலத்தில் மவுனபடமாக வந்த சினிமா பின்பு பேசும்படமாக வந்தது.பேசும் படம் என்றுதான் பெயர்
இருக்கும் 48 பாடல்கள் நிறைந்த உன்னத காவியம் ஹரிதாஸ் பிராட்வே திரையரங்கில் மூன்று தீபாவளிகளை
கண்டது.பாடல்களுக்காகவே படம் ஒடியது அந்தக்காலத்தில் தான்.பின்பு வந்த ராமநாதன் அய்யர்,கே.வி மகாதேவன்
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் சிறந்த ட்யூன்களை அமைத்து சிறந்த பாடகர்களை வைத்து நல்ல‌
காதல் பாடல்களையும்,தத்துவபாடல்களையும் கொடுத்தனர் இன்றளவும் கேட்க திகட்டாத மெட்டுக்கள் அவை

பின்பு இளையராஜா காலம் வந்தது இந்த பண்னைபுரத்து இசை மேதை போடாத மெட்டுக்களே இல்லை
அனைத்து ராகங்களையும் கரைத்துகுடித்து கடினமான ராகங்களுக்கு கூட மிக அனயாசமாக மெட்டு போட்ட‌
விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.தியாகராஜ பாகவதர் காலத்துக்கு பிறகு பாடல்களுக்காகவே
ஒடிய படங்கள் இவரது இசையமைப்பில் உருவான படங்கள்தான்.இவரது சமகாலத்திய இசையமைப்பாளர்களான‌
இரட்டையர்கள் மனோஜ் கியான்,சங்கர் கணேஷ்,வி.எஸ் நரசிம்மன்,தேவேந்திரன்,எஸ்.ஏ ராஜ்குமார் போன்றோர்
கூட ஆரோக்கியமான போட்டியமைத்து நல்ல இசையை கொடுத்தனர் குறிப்பாக தேவேந்திரன் இசையமைத்த‌
பாடலான கண்ணுக்குள் நூறு நிலவா ,வி.எஸ் நரசிம்மன் இசையமைத்த அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான‌
ஆவாரம்பூ பாடல் இன்னும் டி.வி.டி கடைகளில் இளையராஜா ஹிட்ஸில் தான் வந்து கொண்டு இருக்கிறது.
நன்றாக இசையமைத்தும் சரியான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.



ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் வரும் பாடல்கள் எல்லாம்[ஒன்றிரண்டு பாடல்களை தவிர] எந்த பாடல்களும்
காதுகொடுத்துகேட்க்கும் படியாக இல்லை கேட்கவே நாரஹாசமாக இருக்கிறது. நானும் வயதானவன் கிடையாது
எனக்கும் 31 வயதாகிறது எனக்கு சமீபத்திய பாடல்களில் விருப்பமே இல்லை.ஆனால் என் வயதை ஒத்த நண்பர்கள்
சிலர் நாக்கமுக்காடைப் பாடல்களைதான் விரும்புகின்றனர்.நல்ல பாடல்கள் சிலவற்றை எடுத்துசொன்னால் என்னை ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல்பார்க்கின்றனர்.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி அவர்கள் தான் வாங்கிய விருதை
இளையராஜாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.விஜய் ஆன்டனியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்
இளையராஜா போல் ஒரு பாடலாவது இசையமைக்க முயற்சி எடுத்ததுண்டா? கேட்டால் அனைத்து இசையமைப்பளருமே எல்லோரும் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்
2000ம் ஆண்டு வரை நன்றாக போய்க்கொண்டு இருந்த நல்லிசையை உஸ்ஸமலரஸே என்றும் நாக்கமுக்கா
என்றும் மெட்டு போட்டு கெடுத்தவர்கள்  நீங்கள்தான்.மேடையில் மட்டும் ஏன் முழங்குகிறீர்கள்.இதில் கொடுமை என்னவென்றால் கேட்க சகிக்காத பாடல்களை கூட‌
நன்றாக சாஸ்திரிய சங்கீதம் பயின்ற நல்ல இசைவளமையுள்ள பாடகர்கள் கூட தொ[ல்]லைக்காட்சி நிகழ்ச்சிகளில்
நடுவராக பங்கேற்றுபங்குகொள்ளும் நபர்களை பார்த்து அவர்கள் பாடும் பாடலில் ஜதி சரியில்லை சுதி சரியில்லை என்று கூறுவது
நகைச்சுவையை தான் தருகிறது. பாடலே சரியில்லை என்று ஒரே வார்த்தையில்  கூறிவிட்டு செல்லவேண்டியதுதானே
பாடும் நபர்களை குறை சொல்லவில்லை அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களைதான் குறை சொல்கிறேன்
நான்கு வயதே ஆன குழந்தை கூட ஏய் மாமா வரியா என்று பாடுவதும் என் உச்சிமண்டையில் சுர்ருங்குது என்று
பாடுவதும் அதை பார்த்து அனைவரும் ரசிப்பதும் காணச்சகிக்காதவை.குறிப்பாக பெற்றோர்கள் மகனோ மகளோ
பாடுவதை பார்த்து மெய்மறக்கின்றனர் தமிழ் சினிமாக்களில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்க விரசமான‌
கேடுகெட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து பாடச்சொல்லும் பெற்றோர்களை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது
தன் மகன் பாடினால் மட்டும் போதுமா நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடச்சொல்வதும் பெற்றோரின் கடமை
அல்லவா?



அடுத்ததாக ரீமிக்ஸ் பாடல்களுக்கு வருகிறேன் .மடை திறந்து பாடும் நதி அலைநான் பாடலை எத்தனை முறை
கேட்டாலும் திகட்டாத பாடல் .அந்த பாடலை நான் சமீபத்தில் யோகி பி என்ற பாடகர்கள் அதை கூறு போட்டு
கொண்டாடியிருப்பார்கள் இது பரவாயில்லை எங்கேயும் எப்போதும் என்ற நினைத்தாலே இனிக்கும் பாடலை
அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது அந்த பாடலை பொல்லாதவன் படத்தில் போட்டு கெடுத்து குட்டி
சுவராக்கியிருப்பார்கள்.இதே போல தர்மதுரை படத்தில் மாசி மாசம் ஆளான பாடல் அருமையான மெல்லிசை
பாடல் ஜேசுதாஸ் உருகி பாடி இருப்பார் அந்த பாடலை கெடுத்து பாண்டி படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்
ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு முதன் முதலில்  வித்திட்டவர் திரு இளையராஜாவின் புதல்வர் யுவன்சங்கர்ராஜாதான்.
எங்கேயும் எப்போதும் பாடல் என்ன படம் என்று 10வயது சிறுவனிடம் கேட்டால் பொல்லாதவன் என்று உடனே கூறுகிறான்.அப்படியானால் பாடலுக்கு கஷ்டப்பட்டு இசையமைத்த எம்.எஸ்.வி ஏமாளியா? தயவு செய்து
இசையமைப்பாளர்களே வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்யாதீர்கள் .புலவர் புலமைப்பித்தன்ஒரு பேட்டியில் கூறியது
போல ரீமிக்ஸ் பாடல் என்பது தலை வாழை இலை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாறிக்கொண்டு
இருக்கும்போது ஏதாவது ஒரு நாய் வந்து அசிங்கம் செய்துவிட்டு போவது போல கேவலமானது என்று சற்று
காட்டமாகவே கூறி இருந்தார். என்ன எழுதி என்ன செய்ய .காலம் கலிகாலம் என்பது போல என்ன வேண்டுமானாலும்
எழுதுவார்கள்  பாடல் எழுத பல இரவுகள் மூளையை கசக்கி சிந்தனையை தூண்டும் அளவிற்க்கு பாடல்
எழுதவும் இசையமக்கவும் நல்ல பாடல்களை கேட்பதற்கும் ஆட்கள் குறைந்து விட்டார்கள் வார்த்தைகளே வாயில்
வராத தாம் தூம் இசையை மட்டுமே இப்போதய தலைமுறை விரும்பும் துயரமான நிலைக்கு வந்துவிட்டோம்.

1 comment:

  1. உலகமயமாக்கலின் விளைவுகள் இசையமைப்பாளர்களையும் தாக்கியிருக்கிறது.பாவம் ரசிகர்கள்.வேறு என்ன சொல்ல?இப்படிக்கு ஆன்மீகக்கடல் டாட் காம்

    ReplyDelete