Thursday, 8 September 2011

நான் பார்த்து ரசித்த படங்கள் 1


கரையெல்லாம் செண்பகப்பூ


தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த புத்தகபுழுக்கள் எல்லாம் சுஜாதாவின் கதையை வாசிக்காமல்
இருக்கமுடியாது எழுத்துலகில் இவரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.இவரின் கதைகளில்
வரும் கணேஷ் வசந்த் இருவரும் நம் உடன் பிறவா சகோதரர்கள் போல மனதுக்குள்ளே நிற்பர
இவர் எழுதிய நிறைய கதைகள் திரைப்படமாகவும் ,சீரியல்களாகவும் வந்து உள்ளனர்(இவரின்
சீரியல்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பான என் இனிய இயந்திரா,கொலையுதிர்காலம் போன்றவற்றின் தீவிர ரசிகன் நான்)


கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படம் 80களில் திரைக்கு வந்தது இது சுஜாதாவின் கதைதான்
என்னையும் அறியாமல் அந்த படத்தை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்றே தெரியாது
இது ஆனந்த விகடனில் தொடராக வந்து பெறும் வரவேற்பை பெற்றதால் திரைப்படமாக வந்தது
சுஜாதா இந்த கதையை சிற்பமாக செதுக்கி இருந்தாலும்,ஜி.என் ரங்கராஜன் இந்த கதையை
மெருகு ஏற்றியிருப்பார்.படத்தில் வரும் மியுசிக் டீச்சராக வரும் பிரதாப்போத்தன்,ஏட்டாக‌
வரும் தங்கவேலு,வேலைக்காரராக‌ வரும் பாண்டு என அனைவரும் தம் பாத்திரத்தை
சிறப்பாக செய்து இருப்பர்.குறிப்பாக கிராமத்து பாடல் பாடும் கிழவியாக வரும் மனோரமா
பாடல் பாடிவிட்டு அசந்தால் பொருளை திருடிசெல்லும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து
இருப்பார் எனக்கு தெரிந்து மனோரமாவின் திரை வரலாற்றில் எத்தனையோ கதாபாத்திரத்தில்
நடித்து இருந்தாலும் மனோரமா என்று சொன்னவுடன் எனது நினைவுக்கு வருவது இந்த கதாபாத்திரம்தான்.படத்தின் மற்றொரு கதாபாத்திரமான ஸ்ரீபிரியா அப்பாவி கிராமத்து
பெண்ணாக கலக்கி இருப்பார்.தான் கோவிலில் வேண்டிகொண்டதால் தான் சுமலதா
இறந்தார் என்று நம்பும் காட்சியில் நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்
படத்தில் பயாஸ்கோப் என்று சாதாரண கதாபாத்திரத்தை க்ளைமாக்ஸில் முக்கிய கதாபாத்திரமாக மாற்றி இருப்பார் எழுத்தாளர் சுஜாதா.மாடர்ன் பெண்ணாக
சுமலதா நடித்து இருப்பார்,அந்த மர்ம பங்களாவும் அந்த மர்ம பங்களாவை சுற்றி வரும்
இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங்கும் அருமையாக வந்து இருக்கும் படத்திற்க்கு முக்கிய‌
பலமே இளையராஜாவின் இசைதான் என்றால் அது மிகையாகாது.பாடல்களும் மிக அருமை
எக்காலத்தவரும் ரசித்துப்பார்க்கும் அருமையான படம் இது.

No comments:

Post a Comment