பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து நிழல்கள் படத்தின் மூலம் கதைவசனகர்த்தாவாக உயர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக
உயர்ந்தவர் மோகனையும்,சத்யராஜையும் வைத்து அதிக ஹிட் படங்களை தந்தவர் இவரது
முதல் படமே மோகனுடன் தான்.தொடர்ந்து அம்பிகை நேரில் வந்தாள்,இளமைகாலங்கள்
நூறாவது நாள் போன்ற இவரின் ஆரம்ப கால படங்கள் வித்தியாசமான கதையம்சமுள்ள
அருமையான படங்கள்.இவரின் நூறாவதுநாள்,24மணிநேரம்,படங்களை அடித்துக்கொள்ள
எந்த திகில் படமும் கிடையாது இவரின் விடிஞ்சா கல்யாணம் திகில்படம்தான் இருந்தாலும்
சுமார் ரகம் இளையராஜாவின் இசையில் காலம் இளவேனிற்காலம் என்ற பாடல் மட்டும்
இன்னும் என் காதில் ஒலித்துகொண்டுள்ளது.இவரின் படங்கள் அனைத்தும் நகைச்சுவை,
சமூகபிரச்சினை,திகில்,என்று போய்க்கொண்டு இருந்த வேளையில் இவர் இயக்கிய சின்னதம்பி
பெரியதம்பி,ராசாமகன்,இளமைகாலங்கள் போன்ற படங்கள் காதலை சொன்னபடங்கள் ஆகும்
சமூக பிரச்சினைக்காக இவர் இயக்கிய கலைஞர் அவர்கள் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்
படம் சிறந்த படமாக இருந்தது.மேலும் இவரின் அமைதிப்படை படத்தை அடித்துகொள்ள
படமே இல்லை. அமாவாசை சத்யராஜை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.
இவரின் திகில் படங்கள் மேலே சொன்ன படங்களாக இருந்தாலும் மூன்றாவது கண் என்ற படத்தை
இயக்கியிருப்பார் நிழல்கள் ரவி சீரியல் கில்லராக நடித்து இருப்பார் மறைந்த நடிகை மோனிசா
கதாநாயகியாக நடித்து இருப்பார்.சரத்குமார் தான் கதாநாயகன் படம் அவ்வளவு பிரமாதமாக
வந்து இருக்கும் ஆனால் படம் ஓடவில்லை அது ஏன் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை
நடிகர் திலகத்துடனும் சத்யராஜுடனும் இவர் இணைந்த ஜல்லிக்கட்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட்
படமாக அமைந்தது.காலப்போக்கில் இவர் படம் எடுப்பதை நிறுத்திகொண்டார் நடிப்பு தொழிலை முழுதாக செய்கிறார் மணிவண்ணன் சார் உங்களிடம் இருந்து இன்னும் படங்களை
எதிர்பார்க்கிறேன்.
No comments:
Post a Comment