Monday, 29 August 2011

தமிழ் சினிமாவும் உண்மை சம்பவங்களும்

தமிழ் சினிமாவும் உண்மை சம்பவங்களும்

பொய்யை விட எப்பொழுதும் உண்மைக்கு மதிப்பு அதிகம் பெரும்பாலும் சினிமாவில்
கற்பனை கதைகளே அதிகம்.உண்மை சம்பவங்களை வைத்து வெற்றி பெற்ற படங்கள்
குறைவு.சில படங்களில் உண்மைகதைகளை மிகைப்படுத்தி இருப்பார்கள் அப்படி உண்மை சம்பவங்களை பற்றி எடுத்த படங்களை பற்றி இந்த பதிவில்
பார்ப்போம்.



மலையூர்மம்பட்டியான்

தியாகராஜன் நடித்து பெறும் வெற்றிபெற்ற படம் 60களில் சேலம்,மற்றும் தர்மபுரி மாவட்டத்தை
கலக்கிய குற்றவாளீயின் கதை இது மறைந்த இயக்குனர் ராஜசேகரின் கைவண்ணத்தில் உருவான திரைப்படம் இது இளையராஜா இசையில் காட்டுவழி போற புள்ள கவலைப்படாத‌
என்ற பாடலே கதையில் மம்பட்டியான் கதையை சொல்லி விடும் பெறும் வெற்றி பெற்ற படம்
இது மம்பட்டியான் காதலியாக சரிதா நடித்து இருப்பார்.சில காட்சிகள் நான் மேலே சொன்னது
போல மிகைப்படித்தி எடுத்திருப்பார்கள்.

கரிமேடு கருவாயன்







இதுவும் மதுரையில் வாழ்ந்த ஒரு குற்றவாளியை பற்றிய கதைதான் இதிலும் இளையராஜா
தன் அறிமுக பாடலால் கதையை சொல்லி விடுவார் இராம.நாராயணன் இயக்கி இருப்பார்
இதில் விஜயகாந்த் கருவாயனாக நடித்து கலக்கி இருப்பார்.ஜோடியாக நளினி நடித்து இருப்பார்



கேப்டன் பிரபாகரன்

ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார் கதை கற்பனை கதைதான்
என்றாலும் அதில் வரும் வீரபத்ரன் பாத்திரம் நம்ம வீரப்பனை நினைவுப்படுத்தியது.உண்மை
விஜயகாந்தின்100வது படமான இது மிக பெரிய‌ வெற்றியை பெற்றது.



குற்றபத்திரிக்கை

ஏறத்தாழ நான் 7ம் வகுப்பு படிக்கும்போது வெளியான படம் இது அதாவது 1992ம் ஆண்டு
சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் சென்சார் போர்டின் எதிர்ப்பால்
முடங்கி போனது நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2008ம் ஆண்டுதான் வெளியானது
அப்போது கதாநாயகனாக நடித்த ராம்கி,ரகுமான் போன்றவர்கள் நடிப்பு படம் அதிக தாமதமாக‌
வெளியானதால் இவர்களின் பாத்திரங்கள் எடுபடாமல் போனது படத்தின் கதை முன்னாள்
பிரதமர் மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டதை சொல்ல வந்ததால் தான் இத்தனை தடங்கள்.

மற்ற படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment