Monday 22 August 2011

தமிழின் சிறந்த திகில் திரைப்படங்கள் பாகம் இரண்டு

தமிழ் சினிமாக்களில் நான் பார்த்து வியந்த மற்றொரு படம் பாடும் பறவைகள் என்ற படம் பிரபல தெலுங்கு
இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கிய திரைப்படம் திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்ற படம் படத்தின்
பின்னணி இசையில் இளையராஜா மிரட்டி இருப்பார்.குறிப்பாக கார்த்திக்கும் பானுப்பிரியாவும் பிணங்களை
கிணற்றுக்குள் இருந்து இழுக்கும் காட்சி நம்மை பதட்டப்படுத்திவிடும்.புலியை அடிப்படையாக கொண்ட‌
கதை இது குறிப்பாக முதல் காட்சியிலேயே வண்டிக்காரன் புலியை பற்றி சொல்லும் காட்சியே படம் பார்ப்பவர்களை
ஈர்க்கும் பிரமாதமான திகில் படம் இது

நாளைய மனிதன்
இது வேலுபிரபாகரன் அவர்கள் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படம் சாவே இல்லாத மனிதன் பற்றிய‌
கதை இது இறந்து போன ஒரு மனிதன் அவனை பிழைக்க வைத்தால் என்னாகும் என்பதே கதை இறந்து போன
மனிதனை பிழைக்கவைக்கும் கதாபாத்திரத்தில் ஜெய்சங்கரும் இறந்து போன மனிதனாக அஜய்ரத்னமும்
கலக்கி இருப்பார்கள்.

அதிசயமனிதன்

நாளைய மனிதனின் தொடர்ச்சியாக வந்த படம்தான் அதிசய மனிதன் இதுவும் அதே போல ஒரு திகில் படம்தான்
அதில் நடித்த அஜய்ரத்னமே எரிந்த மனிதனாக நடித்து இருப்பார். இந்த படத்தின் தொடர்ச்சியாக எழும்பு மனிதன்
என்ற படம் வரும் என்று 90லியே வேலுபிரபாகரன் அறிவித்து இருப்பார்.என்னாச்சு சார் எழும்புமனிதன்.?

நீயா
பாம்புகள் பலி வாங்குமா என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு துரை அவர்களின் இயக்கத்தில் வந்த‌
இந்த படம் கமலஹாசன் நடிப்பில் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது ஸ்ரீபிரியா பாம்பாக‌
வந்து ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று ஆடிப்பாடுவார் பலிவாங்கும் இச்சாதாரி நாகம் பற்றிய‌
கதை இது துரை அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது இந்த திரைப்படம்

No comments:

Post a Comment