Wednesday, 24 August 2011

பா வரிசை இயக்குனர்கள்

பா வரிசை இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பா வரிசை இயக்குனர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு இவர்கள் இயக்கிய படங்கள்
அனைத்திற்க்கும் தனி வரலாறு உண்டு.அப்படிப்பட்ட பா வரிசை இயக்குனர்களை பற்றி பார்ப்போம்

பாலச்சந்தர்

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால்
சினிமாவில் இணைந்தார் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை சொல்லும்
நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி ,எதிர்நீச்சல் போன்ற படங்கள் போல் தற்போது யாராலும்
எடுக்க முடியாது ஜெமினியை வைத்து இவர் இயக்கிய புன்னகை படத்தில் இடம் பெற்ற காதோடுதான்
நான் பாடுவேன் பாடலையும் படத்தையும் மறக்க முடியாது.அரங்கேற்றம்,அவள் ஒர் தொடர்கதை
சொல்லத்தான் நினைக்கிறேன்,சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்திய அபூர்வ ராகங்கள்,மன்மதலீலை
படங்களை பற்றி எல்லாம் ஒரு கட்டுரையில் எழுதி விட முடியாது .இவர் இயக்கிய தில்லுமுல்லு
சிறந்த நகைச்சுவை படம் ஆகும்.
இவர் இயக்கிய சிந்து பைரவி சிறந்த கர்னாடக இசை சம்பந்தமான படமாகவும் படத்தில் சித்ரா சிறந்த‌
பின்னணி பாடகிக்கான தேசிய விருது வாங்கிய படமாக அமைந்தது மேலும் உன்னால் முடியும்
தம்பி, வானமே எல்லை, போன்ற படங்கள்சிறந்த சமூக சீர்திருத்த படமாகவும் அமைந்தது. புதுபுது
அர்த்தங்கள், டூயட் என வெற்றி அடைந்த படங்கள் நிறைய இருந்தாலும் இவர் இயக்கிய தண்ணீர்
தண்ணீர் படம் தண்ணீர் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்திய அருமையான படம் ஆகும் இதில்
சரிதா நடித்திருப்பார் மேலும் இவர் சரிதாவை வைத்து இயக்கிய அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை
போன்ற படங்களும் சிறந்த படங்கள் ஆகும். நடிகர் விவேக்கை அறிமுகபடுத்திய மனதில் உறுதி வேண்டும்
போன்ற படமும் அதில் பெண்களுக்காக போராடும் சுகாசினியின் நடிப்பும் மறக்க கூடிய ஒன்றா. தமிழ் சினிமா
இருக்கும் வரை பாலச்சந்தர் பெயர் இருக்கும் .பாரதிராஜா
 தேனியில் சுகாதார ஆய்வாளராக் வேலைபார்த்த பாரதிராஜா .சினிமாவில் சேர்ந்து புட்டண்ணா போன்றவர்களிடம்
உதவி இயக்குனராக பணியாற்றினார்.16 வயதினிலே படத்தில் அறிமுகமாகி செட்டுக்குள்ளே முடங்கி கிடந்த தமிழ்
சினிமாவை கிராமப்பகுதிகளுக்குள் கொண்டு வந்தவர்.கல்லுக்குள் ஈரம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும்
நடித்துள்ளார்.இவர் இயக்கிய சிகப்பு ரோஜாக்கள்,ஒரு கைதியின் டைரி, கேப்டன் மகள்,ரஜினியை வைத்து இயக்கிய‌
கொடிபறக்குதுபோன்றவை இவரது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட படங்கள் ஆகும்.
முதல் மரியாதை,கிழக்கு சீமையிலே,புதுநெல்லு புதுநாத்து,நாடோடிதென்றல், தமிழ்செல்வன்,கடலோர‌
கவிதைகள்,அலைகள் ஓய்வதில்லை,பசும்பொன் ,பொம்மலாட்டம் என எல்லாமே அருமையான படங்கள்
ஆகும் கருத்தம்மா போன்ற படங்கள் சிசுக்கொலை சம்பந்தமான சிறந்த படமாக விளங்கியது.பாக்யராஜ்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி முன்னணி இயக்குனராக வந்தவர்.இவர் இயக்கிய முந்தானை
முடிச்சு படம் மூலம் முருங்கைகாயின் புகழை உலகுக்கு உணர்த்தியவர்.இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர்
என்று அமிதாப்பச்சனால் பாராட்டுபெற்றவர்,தாவணிகனவுகள்,முந்தானைமுடிச்சு,சின்ன வீடு போன்ற படங்கள்
இவரது சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய படங்கள் ஆகும்.நல்ல நடிப்புதிறமையும்,நகைச்சுவை
உணர்வும் இவரது படத்தில் தூக்கலாக இருக்கும்.

பாலுமகேந்திரா

இவர் இயக்குனர் மகேந்திரனின் படங்களுக்கு ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கமலை
வைத்து இவர் இயக்கிய மூன்றாம் பிறை படம் தேசிய விருது பெற்றது.தொடர்ந்து இவர் இயக்கிய அழியாத‌
கோலங்கள்,நீங்கள் கேட்டவை போன்ற படங்கள் சிறந்த படமாக விளங்கியது.தாயின் மீது பாசம் வைத்த‌
ஒரு சைக்கோ வாலிபன் பற்றி மூடுபனி என்றபடம் இயக்கி இருப்பார் இது இசை அமைப்பாளர் இளையராஜாவின்
100வது படமாகும்.மேலும் இவ்ர் இயக்கிய வீடு திரைப்படம் ஒரு வீடு கட்டுவதற்க்கு பாமரன் எவ்வளவு கஷ்டப்ப‌
டுகிறான்,என்பதை விளக்கிய படமாகும்.இவர் இயக்கிய மாறுபட்ட திரைப்படம்தான் உன் கண்ணில் நீர் வழிந்தால்
ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார்.மேலும் இவர் இயக்கிய வண்ண வண்ண பூக்கள்,
கமலை வைத்து இயக்கிய சதிலீலாவதி ராமன் அப்துல்லா போன்ற படங்கள் சிறந்த நகைச்சுவை படங்கள்
ஆகும் இவரின் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது இளையராஜாவின் இசை என்றால் அது மிகையாகாது


பாசில்
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மிகச்சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் பூவே பூச்சூடவா
என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நாகரீகமான குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும்படியான்
மிருதுவான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கிய பூவிழி வாசலிலே படத்தில் சிறு குழந்தையை
நடிக்க வைத்த விதத்திற்க்கு எத்தனை விருது வேண்டுமானாலும் கொடுக்கலாம் புத்திர சோகத்தை
விளக்கிய சிறந்த படமாக என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்கள் விளங்கின.

குடும்ப உறவுகள் பற்றி இவர் இயக்கிய வருசம்16 படமும் அதில் வரும் பாடல்களும் என் ஆல் டைம்
பேவரிட்.மேலும் கற்பூரமுல்லை, அரங்கேற்றவேளை,விஜயை வைத்து இயக்கிய காதலுக்கு மரியாதை
சிறந்த திரைப்படமாக 200 நாட்களுக்கும் மேல் ஒடிய படம் பாலுமகேந்திரா போல் இளையராஜாவை
ஒருபடத்திற்க்கும் மாற்றாதவர்.

பாண்டியராஜன்


தமிழில் மிக குறுகிய வயதில் இயக்குனரானவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்21வயதில் இயக்குனராக
கன்னிராசி என்ற படத்தை இயக்கியவர்.இவர் அடுத்து இயக்கிய ஆண்பாவம் படம்தான் இவரை வெளி
உலகுக்கு தெரியவைத்தபடங்கள்.சமீபத்தில் ஆண்பாவம் படத்தின் வெள்ளி விழா நடந்தது .குறும்புதனமான‌
படங்களை இயக்கியவர்.கோபாலா கோபாலா படம்தான் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய‌
வெற்றிபடம் திருட்டு முழி இவரின் ஸ்பெஷல்.இவர் பாக்யராஜிடம் டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற‌
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவரும் ஒரு சிறந்த பா வரிசை இயக்குனர்தான்

2 comments:

  1. பார்த்திபனை சேர்த்திருக்கலாமே அபிராம்...

    ReplyDelete
  2. தல அருமையான தொகுப்பு..கூடவே பால்கியையும் சேர்த்துடுங்க ;-)

    ReplyDelete