Monday 22 August 2011

தமிழ் சினிமாவை கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பற்றி ஒரு பார்வை

பேபி டெய்சிராணி

யார் பையன் என்ற படம் பார்க்காதவர்கள் தயவு செய்து ஒருமுறை பாருங்கள் ஜெமினி கணேசனும் கலைவாணர்
என்.எஸ்.கேயும் இணைந்து நடித்த படம் இது படத்தில் பேபி டெய்சிராணியின் நடிப்பை சொல்ல வார்த்தையே
இல்லை.என் பெயர் பூரி என்று டெய்சி ராணி சொல்லும் போது படம் பார்ப்பவர்களுக்கு பயங்கர சிரிப்பை
வரவைக்கும்.படத்தில் கலைவாணர் ,ஜெமினி,டெய்சிராணி,மதுரம், என்று போட்டி போட்டு சிரிப்பை
வரவழைப்பார்கள்.இவர் நடித்த மற்றொரு படம் கைதிகண்ணாயிரம் இதிலும் இவரின் நடிப்பு அருமையாக‌
இருக்கும் கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் என்ற பாடல் மிக சிறப்பான பாடலாக இப்படத்தில் இடம்
பெற்றது

கமலஹாச
தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கமலஹாசன் ஏ.வி மெய்யப்ப‌
செட்டியார் அவர்கள் அப்போது புகழின் உச்சியில் இருந்த பேபி டெய்சிராணியை இந்த படத்துக்காக புக் பண்ணி
வைத்திருந்தார்.கமலஹாசனை திடீரென்று பார்த்ததும் .கமலின் துறு துறு தன்மை பிடித்து போக வாய்ப்பு
இவருக்கு வந்து விட்டது கமலின் நடிப்பை அந்த படத்தில் பார்க்கும்போது சிறு வயதிலேயே இவ்வளவு
அபாரமான நடிப்பா எல்லோரையும் வியக்க வைப்பார் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை
சிறு வயதிலேயே வாங்கியவர்.

குட்டி பத்மினி
குட்டி பத்மினி இவர் நடித்த குழந்தையும் தெய்வமும் படம் புகழ்பெற்ற திரைப்படம் ஆகும் கணவன் மனைவி
பிரச்சினையில் பாதிக்கப்படும் குழந்தையாக நடித்து இருப்பார்.கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
என்ற பாடல் இவரை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.

காஜா ஷெரிப்

தமிழ் சினிமாவின் அதிகபடங்களில் சிறுவயது கதாநாயகனாக நடித்தவர்.உதிரிபூக்கள்,கரையெல்லாம்
செண்பகப்பூ,அந்த ஏழு நாட்கள்,நான் சிகப்பு மனிதன், சம்சாரம் அது மின்சாரம் என்று நிறைய படங்களில்
நடித்தவர்.அந்த ஏழு நாட்கள்,படத்தில் ஆசானே ஆசானே என்று பாக்யராஜ் கூடவே வருவதும் சம்சாரம்
அது மின்சாரம் படத்தில் 12ம் வகுப்பு பெயிலாவதும் இவரது நடிப்பில் சிறப்பான காட்சிகள்.


ரோஜா ரமணி
பிரபல தெலுங்கு நடிகையான இவர் சிறுவயதில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தமிழில் நடித்த படம்
பக்த பிரகலாதா இவர் இவர் பிரபல நடிகரும் அஞ்சலி உள்ளிட்ட படங்களில் குழந்தையாக நடித்த தருணின்
அம்மா ஆவார்
மாஸ்டர் டிங்கு

இவர் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர் நடித்த வைதேகி காத்திருந்தாள்
படத்தில் போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும் என்று வசனம் பேசுவாரே அவர்தான் டிங்கு. தொடர்ந்து மெளன
கீதங்கள்,வருஷம்16 ,ஜப்பானில் கல்யாணராமன்,என்று அதிக படங்களில் நடித்தவர்
மாஸ்டர் பிரபாகர்
தமிழில் ஏ.பி நாகராஜன் அவர்கள் இயக்கிய வா ராஜா வா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நிறைய கருப்பு
வெள்ளை படங்களில் நடித்துள்ளார்
சிம்பு
தற்போது நிறைய படங்களில் நடித்தாலும் சிறுவயதிலேயே நடனம் நடிப்பு என்று அனைத்திலும் தன் திறமையை
வெளிப்படுத்தியவர் இவரின் தந்தை அஷ்டாவாதனி டி.ராஜேந்தர் அவர்கள் இவருக்கு பக்கபலமாக இருந்தவர்
உறவை காத்த கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்பு தொடர்ந்து என் தங்கை கல்யாணி,சம்சார சங்கீதம்
எங்க வீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்
பேபி ஷாலினி
தல அஜீத்தின் மனைவியான இவர் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த பந்தம் படம் இவருக்கு புகழை
பெற்றுதந்தது.மனோபாலாவின் இயக்கத்தில் வந்த பிள்ளை நிலா மற்றும் ஓசை போன்ற படங்கள் இவருக்கு
பெரும் புகழை பெற்றுதந்தன‌
பேபி ஷாமிலி
அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் தொடர்ந்து துர்கா தைப்பூசம் போன்ற படங்களில் நாய், குரங்கு
போன்றவற்றுடன் நடித்து குழந்தை நட்சத்திரங்களிலே அதிக புகழ்பெற்றவர்
மாஸ்டர் கணேஷ்
சிறுவயதிலேயே ஒருதாயின் சபதம் பாலச்சந்தரின் புதுபுது அர்த்தங்கள் என்று சில படங்களில் நடித்து
புகழ்பெற்றவர் நல்ல திறமையான நகைச்சுவை நடிகராக தற்போது விளங்குகிறார்
பேபி சுஜிதா
குழந்தை நட்சத்திரத்திலேயே சிறுவயதில் அபார திறமையை வெளிப்படுத்தியவர் வாய் பேச முடியாத காது
கேட்க முடியாத குழந்தையாக இவர் நடித்த பூவிழி வாசலிலே படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து
விட முடியாது தொடர்ந்து காதல் பரிசு போன்ற படங்களில் நடித்தார்.இவர் அறிமுகமான படம் முந்தானை
முடிச்சு ஆகும்.படத்தில் குழந்தையை போட்டு ஊர்வசி தாண்டுவாரே அந்த குழந்தை இவர்தான் ஒருவயது
குழந்தையாக அறிமுகமானார்
பேபி சாராசமீபத்தில் வந்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்தவர் இவரை பற்றி சொல்வதை விட படம் பார்த்தாலேதெரியும் இவரது நடிப்புதிறமை.விஜய் அபாரமாக இயக்கி இருப்பார்

No comments:

Post a Comment