திகில் படம் எடுப்பது மிக கஷ்டமான விஷயம் ஒருவரை பயம் கொள்ள வைப்பது என்பது மிகவும் கடினமான
காரியம் தமிழின் சிறந்த திகில் திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
யார் நீ
தமிழில் கருப்பு வெள்ளை காலத்திலேயே வந்த சிறந்த திகில் திரைப்படம் பேய் பிசாசு என்று இல்லாமலே
படத்தில் சாதாரண விஷயத்தை வைத்து மிரட்டியிருப்பார்கள் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த
இந்த திரைப்படத்தில் வரும் நானே வருவேன் என்ற பாடல் இன்றும் மிரளவைக்கும் பாடல்.
அதே கண்கள்
சாதாரண ஒரு கொலைகாரனை பற்றி கூறும் மிகசிறந்த திரைப்படம் படத்தின் பின்னனி இசையும் கொலைகாரன்
யார் என்ற எதிர்பார்ப்பும் இறுதியில் கொலைகாரனை வரிசையாக நிற்கவைத்து ரவிச்சந்திரன் கண்டுபிடிப்பதும்
திகிலூட்டும் தருணங்கள் ஏ.வி.எம் மின் தயாரிப்பில் ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் ,காஞ்சனா
நடிப்பில் டி.ஆர் பாப்பா இசையில் வெற்றிபெற்ற திரைப்படம் இது.
சிகப்பு ரோஜாக்கள்
சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் பெண்களை வெறுத்து அவர்களை கொலை செய்யும்
பாத்திரத்தில் கமலஹாசன் மிக சிறப்பாக நடித்து பெறும் வரவேற்பை பெற்ற படம் இது.பாரதிராஜா இயக்கத்தில்
பட்டி தொட்டி எல்லாம் மிக சிறப்பாக ஓடிய படம் இது குறிப்பாக கதாநாயகி sridevikku விஷயம் தெரியவரும்போது
பூமியில் இருந்து ஒரு கை வெளியே தெரியும்படி செய்து இருப்பார் இயக்குனர் அப்போது இளையராஜாவின் இசை
யில்,ஒளிக்கும் பின்னணி இசை மிரள வைக்கும்.
நூறாவது நாள்
மிகப்பெரிய கொலைக்குற்றவாளியான ஆட்டோ சங்கர் இத்திரைப்படத்தை பார்த்துதான் கொலை செய்து
சுவற்றில் புதைத்தாக சொல்வதுண்டு அந்த அளவிற்க்கு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது கனவு
பலிக்குமா என்பதை இப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் .கனவில் தனக்கு நடப்பவை
எல்லாம் நிஜமாகும் பாத்திரத்தில் நளினி சிறப்பான நடிப்பை வெளிப்படித்தி இருப்பார் மோகனின்
அமைதியான வில்லத்தனமும்.சத்யராஜின் மொட்டை கெட் அப்பும் விஜயகாந்தின் நடிப்பும் படத்திற்கு பலம். இளையராஜா
தான் படத்தின் உண்மையான நாயகன் பின்னணி இசையில் மிரட்டி இருப்பார்.1984ம் ஆண்டு மணிவண்ணன்
இயக்கத்தில் வெளிவந்த படம் இது.
No comments:
Post a Comment