Wednesday, 30 November 2011

அயல்நாட்டில் எடுக்கப்பட்ட வெற்றிப்படங்கள்
தற்போது உள்ள சினிமாவில் கதாநாயகன் கதாநாயகிக்கு காதல் டூயட் ஆரம்பிப்பதே வெளிநாட்டில்தான் ஒன்றுக்கும் உதவாத பாடலுக்கு பலகோடி செலவழித்து பாடல்
ஷூட் செய்வார்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கதாநாயகனும் டைரக்டரும் கொடுக்கும்
பேட்டி ஆக்சுவலி அந்த பாடலுக்கு என்று ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் பேட்டியை
தாங்கமுடியாது.படம் வந்தால் படத்தில் ஒன்றும் இருக்காதுஇதையும் தாண்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சிறப்பான படங்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

நாடுகள் வாரியாக படங்கள்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படியொரு தொடர்பு அதிகபட்ச படங்கள் சிங்கப்பூரை
சுற்றி எடுத்த படங்களாகவே உள்ளன‌

முதலில் எம்.ஜி.ஆர் சிங்கப்பூரை சுற்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தார் படம்
மிகப்பெரியவெற்றி அடைந்தது இதில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு விஞ்ஞானியாக நடித்து
பெரும்புகழ்பெற்றது சிங்கப்பூர் மட்டுமல்லாது ஹாங்காங்,மலேசியா சைனா போன்ற நாடுகளில்
எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தபடம் இது.இதுவரை இதன் டி,வி ரைட்ஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது

அடுத்தாக முருகனின் பெருமைகளை கூறும் வருவான் வடிவேலன் படம் இங்கு எடுக்கப்பட்டது
இந்த படமும் மகத்தான வெற்றிபெற்ற பக்தி படமாகும்.


ரஜினி கமலும் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் பாலச்சந்தரின் கைவரிசையில்
எம்.எஸ்.வி இசையில் இங்கு எடுக்கப்பட்ட படமாகும் 15 பாடல்களுக்கும் மேல் உள்ள இந்த படத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் சிங்கப்பூரை நன்றாக சுற்றி காண்பித்து
இருப்பார்கள்

ப்ரியா

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்த படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி
நடித்து பட்டையை கிளப்பிய படம் இது.அக்கறை சீமை அழகினிலே பாடல் மூலம் சிங்கப்பூரை
நன்கு சுற்றிகாண்பித்து இருப்பார்கள்


பூமழை பொழியுது

ரஜினியும் கமலும் சிங்கப்பூர் சென்றால் நானும் செல்வேனென்று விஜயகாந்தும் சென்ற இடம் [சாரி]
படம் பூமழை பொழியுது அழகப்பன் இயக்கத்தில் சுரேஷ் ,நதியா ,விஜயகாந்த் நடிப்பில் இது
ஒரு காதல் படம்.

தமிழ் நாட்டில் வந்த சிங்கப்பூர் பேயாக கெளதமி,அவரது கணவராக ராமராஜன் நடித்து கங்கை
அமரன் இயக்கத்தில் வந்த கலகலப்பான் பரபரப்பான படம்தான் ஊரு விட்டு ஊரு வந்து. பேயை
விரட்டுவதற்க்கு ராமராஜனுடன் கவுண்டமணி செந்திலும் சிங்கப்பூர் சென்றால் கலகலப்பிற்க்கு
கேட்கவா வேண்டும்அமெரிக்காஇங்கு அதிகப்படங்கள் எடுக்கப்படவில்லை ஜீன்ஸ் படம் மூலம் ஷங்கர் அழகிய அமெரிக்காவை
காண்பித்திருப்பார் அதற்க்கு பிறகு கெளதம் மேனன் வேட்டையாடு விளையாடு படம் மூலம்
கமல்ஹாசனை போலீஸ் அதிகாரியாக உலவ விட்டிருப்பார்.

கனடா

அரசாங்கம் படம் மூலம் விஜயகாந்த் சென்று வந்த நாடு இது ஒரு வழக்கு விசயமாக கனடா சென்று குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை இது

லண்டன்


லண்டன் இந்த பெயரிலேயே சுந்தர் சி ஒரு படம் எடுத்தார் படம் சரியாகபோகவில்லைஅதற்க்கு முன்பே பி.வாசுவின் இயக்கத்தில் வந்த லவ்பேர்ட்ஸ் படம் லண்டனில் முழுக்க எடுத்த‌
படமாக வந்தது.


ஜப்பான்


ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாணராமன் படம் வந்தது கமல் ஆவியாகவும் மனிதனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த‌
படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த படம் ஜப்பானை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் காண்பித்தாக எனக்கு தெரியவில்லை குறிப்பாக எக்ஸ்போ 85 என்ற ஜப்பானின்
பொருட்காட்சி 5 நிமிடம் வந்து போகும் அருமையான ஓளிப்பதிவு


ஜெர்மனி


ஜெர்மனியில் எடுக்கப்பட்ட சிறப்பான படம் உல்லாசபறவைகள் ஆகும்.கமலின் மனநோயாளியான கமல் ட்ரீட்மென்டுக்காக  ஜெர்மன் செல்வது போல‌
காட்சிகள் அமைக்கப்பட்டு அங்கே ஒரு காதலும் சொல்லப்பட்டிருக்கும் இளையராஜாவின்
இசையில் ஜெர்மனியின் செந்தேன்மலரே .அழகு ஆயிரம் பாடல்கள்மூலம் ஜெர்மனியை நன்கு
சுற்றிகாண்பித்திருக்கும் படத்தின் கேமரா.


துபாய்


துபாயில் எடுக்கப்பட்ட படம் நாசர் அவர்கள் இயக்கிய தேவதை படம். வினித்,கீர்த்தி சாவ்லா
நடிப்பில் சிறந்ததொரு காதல்படம் நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பவுர்ணமி பாடல் மூலம்
துபாயின் அழகை அள்ளிவந்திருக்கும் படம் இதுமலேசியாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் மலேசியாவை அழகாக காண்பித்தது
பில்லா படத்தில்தான் நீரவ்ஷா வின் கேமரா மலேசிய பத்துமலை முருகன் கோவிலின் அழகை
அள்ளிவந்திருக்கும் விஷ்னுவர்த்தன் இயக்கிய படம் இது

No comments:

Post a Comment