Thursday 3 November 2011

தமிழ்சினிமாவும்தமிழ்நாடுபோலீசும்

தமிழ் சினிமா நாயகர்களில் எல்லோருமே போலீஸ் வேடத்தை மிகவும் விரும்புவர் போலீஸ்
கதாபாத்திரம் ஆண்மகனின் வீரத்தையும் ஆண்மையையும் போற்றும் விதமாகவே இருக்கும்






இதனால் இந்த பாத்திரத்தை விரும்பாத நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது சாதாரண‌
கான்ஸ்டபிளில் இருந்து உயரதிகாரிகள் வரை போலீஸ் வேடத்தில் அனைத்து நாயகர்களும் நடித்து பெருமை சேர்த்துள்ளனர் அந்தபடங்கள் என்னென்ன என நடிகர் வாரியாக அலசவே இந்த‌
பதிவு.

எம்.ஜி.ஆர்

இவர் என் கடமை,முகராசி ,ரகசியபோலீஸ்115,போன்ற படங்களில் நடித்து தன் நடிப்பால்
ரசிகர்களை ஈர்த்தவர் இந்த படங்கள் அனைத்தும் வெற்றிபடங்களாகும்

சிவாஜி
தங்கப்பதக்கம்,வெள்ளை ரோஜா போன்ற படங்களில் நடித்து பெருமை சேர்த்துள்ளார்
தங்கப்பதக்கம் சென்டிமென்ட் கலந்த போலிஸ் படம் ஆகும்,ஆனால் வெள்ளை ரோஜா
திரில்லர் கலந்த போலீஸ்படமாகும்

ஜெமினிகணேசன்

இவர் நடித்து சிறுவயதில் பத்தாம் பசலி என்ற போலீஸ் படத்தை பொதிகையில் பார்த்ததுண்டு
வேறு சில போலீஸ் படங்களிலும் இவர் நடித்துள்ளார் அதைப்பற்றி சரியான தகவல் தெரியவில்லை.

ஏ.வி.எம் ராஜன்,பாலாஜி

இவர் பில்லா [ரஜினி நடித்தது] உட்பட சில படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்
பாலாஜி 80களின் ஆரம்பத்தில் வந்த சில படங்களில் போலீஸ் உயரதிகாரியாக நடித்துள்ளார்
அதில் குறிப்பிடத்தக்கபடம் ஜானி.

ரஜினிகாந்த்
அன்புக்கு நான் அடிமை,மூன்றுமுகம்,உன்கண்ணில் நீர் வழிந்தால்,கொடிபறக்குது போன்ற‌
படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் அதிலும் ஜெகனாதன் இயக்கத்தில் வந்த மூன்று முகம் படத்தில் அதிரடி போலீசாக நடித்துஇருப்பார்.ரஜினியின் அதிரடி நடிப்புக்காக‌
வசூலை வாரிக்குவித்தபடம் இது.பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த உன்கண்ணில் நீர் வழிந்தால் காவல்துறையின் சிறப்புகளை விளக்கிய அருமையான படம்.

கமல்

காக்கிசட்டையில் யூனிபார்ம் இல்லாத போலீசாக வந்து இருப்பார் கடைசிவரை இவர் போலீஸ் என்பதே யாருக்கும் தெரியாமல் காட்சியை இயக்குனர் ராஜசேகர் இயக்கி இருப்பார்
விக்ரம் படத்திலும் இது போல யூனிபார்ம் இல்லாமல்தான் வருவார்.
அதற்க்கு பிறகு இவர் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக‌
நடித்து இருப்பார்.

விஜயகாந்த்

இவர் பற்றி சொல்லவே வேண்டாம் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு. ஊமை விழிகள் தீனதயாளனாக வந்து மிரட்டியவர்,தொடர்ந்து வல்லரசு,புலன்விசாரனை,உளவுத்துறை
தர்மம் வெல்லும்,உள்ளத்தில் நல்ல உள்ளம்,விருதகிரி,என்று பல படங்களில் நடித்தவர்
இவர் டாக்டர் கதாபாத்திரத்திலோ.வக்கீலாகவோ,நடித்திருந்தாலும் அவருக்குரிய போலீஸ்
வேலையைத்தான் பார்ப்பார் போலீசுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம்.

சத்யராஜ்
புதியவானம்,ராமச்சந்திரா,வீரப்பதக்கம்,வால்டர்வெற்றிவேல்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அய்யர் ஐபிஎஸ் ஆகிய படங்களில் போலிசாக நடித்துள்ளார் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக‌
இவர்தான் அதிக படங்களில் போலீசாக நடித்திருப்பார் என நினைக்கிறேன்.அதற்கு இவரின் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடம்பும் இவர் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கின்றன‌
இவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய போலீஸ் படம் வால்டர் வெற்றிவேல் ஆகும்.

பிரபு
அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்திக்குடன் மோதும் போலீஸ் அதிகாரியாக வருவார் கலைஞரின் வசனத்தில் வந்த காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் தலைவெட்டியான் பட்டி
என்ற ஊருக்கு வரும் பயந்தாங்கொள்ளி எஸ்.ஐ யாக வருவார் பின்பு வீரனாக மாறுவார்.

கார்த்திக்
தர்மபத்தினி என்ற படத்தில் நான் தேடும் செவ்வந்தி பூவிது என்ற பாடலில் போலிசாக வந்து டூயட் பாடிவிட்டு செல்வார் தற்போது வந்துள்ள புலிவேஷம்,மாஞ்சாவேலு போன்ற படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இவர் இத்தனைநாள் இவ்வளவு அருமையான போலீஸ் வேடத்தில் நடிக்கவில்லையே என்ற குறையை போக்கியது மாஞ்சாவேலு திரைப்படம்.

சரத்குமார்

அறிமுகமான முதல் திரைப்படம் கண்சிமிட்டும் நேரம் படத்திலேயே போலீசாக நடித்திருப்பார்
அதில் கொலை செய்த கார்த்திக்கை கண்டுபிடிக்கும் வேடத்தில் நடித்திருப்பார் இவர் தாய்மொழி,ராஜஸ்தான்,கம்பீரம்,மூன்றாவது கண் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் கம்பீரம் என்னைகவர்ந்தது.

விக்ரம்

நடிக்க வந்த புதிதில் காவல் கீதம் என்ற படத்தில் நடித்திருப்பார் எஸ்.பி முத்துராமன் அவர்கள் இயக்கிய படம் இது சாமியில் இவர் பண்ணிய அதிரடி அதகளம் தமிழ் ரசிகர்கள் யாரும் அறியாததல்ல.

சூர்யா

காக்க காக்க,சிங்கம் படங்களில் இவர் செய்த கேரக்டர்கள் இவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது

அஜித்,விஜய்,விஷால்,சிம்பு,கார்த்தி

அஜித் ஆஞ்சனேயா படத்தில் போலீசாக நடித்துள்ளார்,விஜய் போக்கிரி படத்தில் சிறிய காட்சியில் போலீசாக தோன்றுவார் தற்போது நடித்து வரும் யோஹன் அத்தியாயம்2ல்
போலீஸ் உயரதிகாரியாக நடிக்கிறார்.விஷால் சத்யம் படத்தில் நடித்தார் தொடர்ந்து வெடி படத்திலும் நடித்தார் படமிரண்டும் தோல்விப்படங்கள் சதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
விஷால் நல்ல கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.சிம்பு ஒஸ்தி
படத்தில் போலீசாக நடிக்கிறார் படம் வரட்டும் பார்ப்போம்.கார்த்தி சிறுத்தையில் நடித்த ரத்தினவேல்பாண்டியனும் அருமையான கதாபாத்திரம்

மொழிமாற்றுபடங்கள்

மொழிமாற்றுப்படங்களில் விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் ராஜசேகர் நடித்த இதுதாண்டா போலீசும் தமிழ் நாட்டில் வசூலை வாரிக்குவித்த படங்கள் இவை .நான் அடிக்கடி சிறுவயதில் பார்த்து ரசித்தபடங்கள் இவை

ராமராஜன்.அர்ஜூன்

ராமராஜன் அன்புக்கட்டளை,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற படங்களிலும் அர்ஜூன்
சங்கர்குரு,மருதமலை மேலும் சில படங்களிலும் போலீசாக நடித்தனர்







வேறு ஏதெனும் படங்களையோ நடிகர்களையோ பதிவில் விடுப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிக்கவும் எனக்கு தெரிந்தவரை நடிகர்களையும் படங்களையும் குறிப்பிட்டுவிட்டேன்.

No comments:

Post a Comment