Wednesday 9 November 2011

சினிமாவுக்குள் சினிமா

இப்போதும் நாம் ஒரு இடத்தில் ஷூட்டிங் ஏதாவது எடுத்துக்கொண்டிருந்தால் முதல் ஆளாக‌
சென்று ஆஜராகிவிடுவோம்,யார் நடிகர்,நடிகை என திரைக்குப்பின்னால் அரிதாரம் பூசுபவர்களை
பார்ப்பதற்க்கு நம்மில் யாருமே விதிவிலக்கு இல்லை.கிராமங்களில் மட்டுமல்லாது சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் கூட ஏதோ ஒரு இடத்தில் ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தால் ஆஜராகி விடுவதை வழக்கமாகத்தான் வைத்திருக்கின்றனர்



கல்லுக்குள் ஈரம்

இந்த படத்திலும் கிராமத்தில் படமெடுக்க வருகின்றனர் கிராமங்களில் ஷூட்டிங்கை பார்க்க
கிராமத்தில் உள்ள அப்பாவிமக்கள் கூடிவிடுகின்றனர் படத்தின் இயக்குனராகவும் திரைக்குள்
எடுக்கும் படத்தின் இயக்குனராகவும் இயக்குனர் பாரதிராஜா நடித்திருப்பார்.ஷூட்டிங் வந்த
இடத்தில் முக்கிய கதாநாயகி வெண்ணிற ஆடை நிர்மலா சொதப்ப ஷூட்டிங் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவிபெண்ணை நடிக்க கூப்பிடுகிறார் அவருக்கும் பாரதிராஜாவுக்கும் காதல் ஏற்படுகிறது.க்ளைமாக்ஸில் இருவரும் ஊரை விட்டு ஓட முயற்சி
செய்கிறார்கள்.இப்படி நீள்கிறது கதை.கதை சாதாரணமானது தான் என்றாலும் கிராமத்து மக்களின் இயல்பான நடிப்பும் அவர்கள் ஷூட்டிங் காட்சிகளை வியந்து பார்ப்பதும், படம் முழுவதும் காண்பிக்கும் ஷூட்டிங் காட்சிகளும் வியக்கும்படி இருக்கும்.இளையராஜாவின்
இசையும் குறிப்பாக சிறுபொன்மணி அசையும் பாடலும் அந்த பாடலுக்கு பாரதிராஜா நடிப்பு
சொல்லித்தரும் காட்சிகளும் அருமையாக இருக்கும்.பாரதிராஜாவுக்கு ஒரு காலத்தில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த நிவாஸின் கேமரா கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கும்.






தாவணிக்கனவுகள்

கிராமத்தில் ஏழெட்டு தங்கச்சிகளை கல்யாணம் செய்து கொடுக்கவேண்டிய கடமை பாக்யராஜுக்கு.அவருக்கோ சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம்
கிராமத்திலிருந்து சென்னைக்கு கிராமத்து ரிட்டயர்ட் மில்ட்ரி சிவாஜி உதவியுடன் வருகிறார்
அங்கு ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திற்கும் காதலி ராதிகாவுடன் சேர்ந்து சென்று வாய்ப்பு
கேட்கிறார்.ஒருமுறை ஒரு நடிகருக்கு ஒரு சென்டிமென்ட் காட்சியை இயக்குனர் பாரதிராஜா
விளக்க அந்த நடிகர் நடிக்க தெரியாமல் ஏழெட்டு டேக் வாங்குகிறார் சாப்பாட்டு இடைவேளையில் கோபத்துடன் இருக்கும் இயக்குனரிடம் தான் சென்று அந்தகாட்சியை
மிக அனயாசமாக நடித்து காண்பிக்கிறார்.இயக்குனர் பாராட்டை பெறுகிறார் ஒரு நாயகன்
உதயமாகிறான் என்ற பாடல் மூலம் ஏகப்பட்ட நடிப்புகளை காண்பிப்பார்கள்.தங்கச்சிகளின்
திருமணத்தை ஒரே மேடையில் முடிக்கிறார் படம் இனிதே முடிவடையும் பாக்யராஜின்
சிறந்த திரைக்கதை யுக்தி இப்படத்திலும் இருக்கும்.



நீங்களும் ஹீரோதான்

இயக்குனர் வி.சேகர் இயக்கத்தில் வந்த முதல் படம் இது .முன்பு சொன்னது போல இதுவும் கிராமத்து படம்தான் கிராமங்களில் படம் எடுக்க வரும் படப்பிடிப்புகுழுவினரிடம் கிராமத்து
மக்களின் குறும்புகள்.அப்பாவித்தனம் என இயக்குனர் காட்டியிருப்பார் இயக்குனர் வி.சேகர்
கிராமத்து பெரியவர்கள் சிலுக்குசுமிதாவை பார்ப்பதற்க்கு சீப்பும் கையுமாக வாயில் ஜொள்ளுடன் அழைவதை இயல்பாக இயக்கியிருப்பார்.இதேபோல படப்பிடிப்புக்காக‌
கிராமத்தில் தங்கியிருக்கும் பி.எஸ் வீரப்பா.நம்பியார் ஆகியோரைஉண்மையில் கொலைகாரர்கள் அயோக்கியர்கள் என்று படங்களை பார்த்துவிட்டு கொல்ல முயற்சி
செய்யும் ஒரு அப்பாவி கூட்டம்.கடைசியில் படத்தின் ஹீரோவே வில்லனாகி கிராமத்துபெண்ணைகிராமத்துபெண்ணை
கடத்தி செல்வார் அதை கிராம மக்கள் முறியடிப்பார்கள் .


கோடம்பாக்கம்

நந்தா நடிப்பில் ஜெகன்னாத் இயக்கத்தில் வந்த படமிது. கிராமத்தில் கஷ்ட்டப்படும் நந்தா
தாயாரின் ஆதரவுடன் கந்துவட்டிக்கு கடன் வாங்கி சென்னைக்கு வருகிறார் அங்கே சினிமா
இயக்குனராக அவர் எடுக்கும் முயற்சிகள் தான் படம் .கஷ்டப்பட்டு தான் சினிமாவில் இயக்குனராகி தான் எடுத்த படம் ரிலீசாகும் நாள் கடனை உடனை வாங்கி தன்னை அனுப்பிய‌
தாய் இறந்துபோவதாக படத்தை உருக்கமாக இயக்கியிருப்பார்.இயக்குனர் ஜெகன்னாத்

சினிமாவின் வேதனைகளையும் சோதனைகளையும் சொன்ன படம் இது.


குசேலன்

கண்ணன் குசேலனனின் நட்பு இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் சலூன் கடை நடத்தும் பசுபதிக்கும் ஏற்படும் பள்ளி நட்பு,கஷ்டப்படும் பசுபதிக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவுவது என‌
நடிப்பில் முத்திரையை பசுபதி,ரஜினி இருவருமே பதித்திருப்பார்கள்.பி.வாசுவின் இயக்கத்தில்
வந்த படம் இது

வெள்ளித்திரை

பிரகாஷ்ராஜ்,பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் தன்னுடன் சினிமா வாய்ப்புக்காக‌
போராடிய சக நண்பன் வாய்ப்புகிடைத்ததும் நண்பனுக்கு துரோகம் செய்கிறார்.அதை
முறியடிக்க போராடும் சக நண்பனாக பிரித்விராஜூம்,பிரகாஷ்ராஜ் நடிகராக நண்பனுக்கு
துரோகம் செய்பவராக நடித்தார் இதிலும் அனைத்தும் ஷூட்டிங் சம்பந்தப்பட்ட காட்சிகளே
அதிகம்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் மேற்சொன்ன படங்களில் தாவணிக்கனவுகள்
தவிர சினிமா சம்பந்தப்பட்ட அனைத்துபடங்களும் தோல்விப்படங்கள்தான் எத்தனையோ வித்தியாசமான கதைகளை கொடுத்த தமிழ் சினிமா சினிமா சம்பந்தப்பட்ட கதைகளில் தோல்விப்படங்களை மட்டும்தான் கொடுத்துள்ளது


No comments:

Post a Comment