Thursday, 10 November 2011

தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்இதைப்பார்த்தவுடன் ஏதொ சைக்யாட்ரிக்ட் டாக்டர் நடத்தும் வலைதளத்திற்கு வந்து விட்டோமா
என்று நினைக்காதீர்கள் சரியான வலைதளத்திற்க்குத்தான் வந்திருக்கிறீர்கள்.அடுத்தப்பதிவு என்ன பதியலாம் என்று நினைத்து பார்த்து மூளையை கசக்கியபோது பைத்தியம் பிடித்து விடுவது போல் இருந்தது.கண நேரத்தில் காரியங்களை கச்சிதமாக கவ்விக்கொண்ட இம்சை
அரசன் மந்திரி மங்குனிப்பாண்டியன் போல் பதிவை கச்சிதமாக கவ்விக்கொண்டேன் அதன் தலைப்புதான் மேலே கண்டது.இதில் எனக்கு தெரிந்தவரை படங்களை குறிப்பிட்டுவிட்டேன் எனக்கு தெரியாத படங்கள் பற்றி கமெண்ட்ஸில் தெரிவியுங்கள்.

எச்சரிக்கை: இந்த பதிவை படித்துவிட்டு உங்களுக்கும் பைத்தியம் பிடித்தால்
உங்களுக்குண்டான மருத்துவச்செலவுக்காக ஒரு லட்சம் வழங்கப்படும்.இந்த அறிவிப்பை பார்த்த‌ உடனே ஆ என வாயை பிளந்து எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது
என என்னிடம் தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக எங்கள் ஊரிலிருந்து 8கிமீ தூரத்தில்
இருக்கும் ஏர்வாடியிலோ அல்லது என் செலவிலே திருச்சிக்கு சென்று அதன் அருகில்
இருக்கும் குணசீலத்திலோ தங்கி சங்கிலியால் உங்களை பிணைத்து மரத்தில் கட்டி
ஒரு மாதம் தர்ஹாவிலோ ,கோவிலிலோ தங்கி உங்களை ஒரு வழியாக்கிய பின்புதான்
உங்களுக்குண்டான ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை மிகத்தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். இதையும் மீறிகம்பெனி நிர்வாகத்தை தொந்தரவு செய்பவர்கள் நோக்கு வர்மத்தால் நோக்கப்படுவார்கள் என்பதையும்தெரிவித்து கொள்கிறேன்.
 

சரி இனி பதிவுக்கு போவோமா[ஒண்ணும் அவசரமில்ல மெதுவா போவோம் என நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது]எங்கிருந்தோ வந்தாள்

நடிகர் திலகத்துக்கு நடிப்பு என்றால் சொல்லிகொடுக்கவா வேண்டும் தனது வழக்கமான‌
சிறந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தி இருப்பார் பைத்தியம் போல் நடித்து அனைவர்
மனதையும் கொள்ளை கொள்வார் கூடவே ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பும் அவரை
திருத்துவதற்க்கு அவர் தாயைப்போல் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் படத்தில் சிறப்பான‌
காட்சிகள்.

மூன்றாம்பிறை

தன்னிடம் வரும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு சிறு குழந்தையாக‌
பாவித்து அவளுக்கு தன்னிடமே அடைக்கலம் கொடுக்கும் பாத்திரத்தில்kamal   மனநிலை
பாதிக்கப்பட்டவராக sridevi  {என்ன திடீரென்று ஆங்கிலத்தில் டைப்பிங் என்கிறீர்களா பைத்தியம்
இந்த மாதிரிதான் சம்பந்தமில்லாமல் ஏதாவது செய்யும்} கடைசியில்பைத்தியம் தெளிந்த‌ அவரை பெற்றோர்
வந்து அழைத்து செல்வதும் அவ்வளவு நாள் அன்பாக பழகிய கமலை யாரென்றே தெரியாமல்
முழிப்பதும் பரிதாபகரமான காட்சிகள்.பாலுமகேந்திராவுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்த படம்,கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசிப்பாடலான கண்ணே கலைமானே பாடல் இன்று
இருக்கும் பண்பலைகளில் இரவு நேர இனிமைப்பாடல்களில் முதல் பாடலாக வலம் வருகிறது

தர்மயுத்தம்

இயக்குனர் ஆர்.சி சக்தி இயக்கத்தில் வந்த  படமிது. சிறு வயதில் தன் தாய் தந்தையரை தன் கண்
முன்னே கொடுமைப்படுத்தி கொள்ளும் வில்லன்களை எதிர்த்து போராட முடியாமல் அந்த நினைவுகளே அவனை தொலைப்பதாலும்,தாய் தந்தையரை கொன்ற நாள் அமாவாசை நாள்
என்பதாலும்.ஓவ்வொரு அமாவாசை அன்றும் வில்லன்களை கொல்லுவதற்க்கு கட்டுக்கடங்காமல் வெறி வருகிறதுஅந்த இளைஞனுக்குஒவ்வொருவராக பழி வாங்குகிறார்.
இதுவும் ஒரு மனநோய் சார்ந்த விஷயமே .இப்படி ஒரு வேடத்தில் ரஜினிகாந்த் சிறப்பான‌
நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


சிகப்பு ரோஜாக்கள்

இது 60களில் அப்போது இருந்த பாம்பேயில் நடந்த உண்மைக்கதையின் கருவிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த படம் சிறுவயதில் பெண்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால்
அவன் ஓவ்வொரு பெண்களாக கொள்கிறான் இதுவும் ஒரு மனநோய் சம்பந்தப்பட்ட விசயமே.கதாநாயகியையும் கொள்வதற்க்கு முயற்சி
செய்கிறான்.இது திகிலின் உச்சிக்கே கொண்டு சென்ற படம் குறிப்பாக அந்த பூமியில் புதைத்த‌
கை மேலே எழுவதையும் அதற்க்கு இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையும்
அருமையாக இருக்கும் கடைசிக்காட்சி திக் திக் ரகம்.
மிஸ்டர் பிரசாத்

இந்த படத்தை அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பில்லை ஆண்மைக்குறைவால் பெண்களால் வெறுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நாசர் சில பெண்களை கொலை
செய்வதும் கதாநாயகி கீதாவை கடைசியில் கொலை செய்ய முயற்சிப்பதும் பகீர் ரகம்
இதுவும் ஒரு மனநோய் சார்ந்தபடம்தான். 
92ல் வந்து வந்த இடம் தெரியாமல் போன படமிது.

மூடுபனி
இதுவும் பெண்களால் பாதிப்படைந்த ஒருவன் அனைத்து பெண்களையும் ஏமாற்றி கொள்வதுதான் கதை இதுவும் சிகப்பு ரோஜாக்கள் டைப் கதை என்றாலும் இதில்
பெற்ற அம்மாவையும் கொன்று பாசத்தையும் கைவிட முடியாமல் இறந்த அம்மாவின்
உடலை பத்திரமாக வைத்திருப்பதுதான் கதை.இசைஞானி இளையராஜாவின் 100வது படம்
இது.குணா

சிவாஜிக்கு எப்படி நடிப்பு சொல்லிகொடுக்க முடியாதோ அதே போல் கமலுக்கும் சொல்லி
கொடுக்கவேண்டியதில்லை.மன நிலைபாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞன் ஒருவன் அபிராமி
என்ற பெயருடைய காதலியை தேடி கடைசியில் வேறு ஒருவரை கடத்தி சென்று அன்பாக ஒரு
கடினமான மலையில் உள்ள பாறையில் அடைத்து வைப்பதும் கடத்தப்பட்ட கதாநாயகியை
மீட்க போலீஸ் விரைவதும் கதை.கமல் மனநோயாளியாக அருமையாக நடித்திருப்பார்.இந்தபடத்திற்காக இவர் கண்டுபிடித்த பாறை இன்றும் குணா பாறை
என்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குதூகலிக்க செய்கிறது.மீண்டும் ஒரு காதல் கதை

பிரதாப்போத்தன் ராதிகா நடிப்பில் வந்த படம் இது. ஒரு மனநல விடுதியில் இருக்கும் இருவரும்
தன்னையறியாமல் அன்பை பகிர்ந்துகொள்கிறார்கள்.மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குள்
காதலை சொன்ன படம் இது.அதிகாலை நேரமே பாடல் மிக இனிமையான பாடலாக இப்படத்தில்
இருந்தது

அம்மன் கோவில் கிழக்காலே

தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தான் செய்த கொலைக்காக ஜெயிலுக்கு
சென்றுவிட்டு திரும்பும் காதலி வேடத்தில் ராதா.காதலனாக விஜயகாந்த் காதலி ஜெயிலில்
இருக்கும் வரை பைத்தியமாக இருக்கிறார் காதலி ஜெயிலில் இருந்து வந்து அவர் கடைக்கண்
பார்வை பட்டதும் பழைய நினைவுகள் வந்து அவருக்கு பைத்தியம் தெளிகிறது.

ஆராரோ ஆரிரரோ

லூசாக பானுப்பிரியாவும் அவர்களை கண்காணிக்கும் வார்டனாக பாக்யராஜூம் நடித்த படம்
ப்ளாஷ்பேக்கில்பானுப்பிரியாவின் கதை கண்கலங்க வைப்பதாக இருக்கும்.பாக்யராஜின் இசை
இயக்கத்தில் என் கண்ணுக்கொரு நிலவா ஒன்ன படைச்சான் பாடல் நிறைவான பாடல்.

கல்யாணகலாட்டா

ராஜ்கபூர் இயக்கத்தில் குஷ்பூ மனநோயாளியாக‌ நடித்த படமிது நகைச்சுவை கலந்து எடுத்த படமாதலால் நன்றாக இருக்கும் .எஸ்.வி சேகர் ,சத்யராஜ்,கூட்டணியில் அருமையான‌
படம் இது .இதில் கர்ப்பிணிபெண்ணாகவும் லூசாகவும் நடித்திருப்பது சிறப்பு.


என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் குழந்தையை இழந்து தத்தெடுத்து வளர்க்கும்
தம்பதிக்கும் பாசத்திற்காக நடக்கும் போராட்டமே படம் .தம்பதியர்களாக சத்யராஜ்,சுகாசினியும்
மனநலம் பாதித்த பெண்ணாக ரேகாவும் அவர் கணவராக மறைந்த திரு.ரகுவரனும் நடித்த படம்
பாசில் இயக்கிய படம் இது.
தெய்வத்திருமகள்

சமீபத்தில் வந்த படங்களில் சிறந்த படமிது லேசாக மனநலம் பாதிக்கப்பட்ட விக்ரமும் அவரின்
செல்லமகளாக பேபி சாராவும் நடித்த படம் இது.பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் இது
இயக்கம்:விஜய்
மனசுக்குள் மத்தாப்பூ

பிரபு மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் அவரது காதலியாக சரண்யாவும் நடித்த படம்
ராபர்ட்‍‍‍‍‍‍ ராஜசேகரன் இயக்கிய படமிது எஸ்.ஏ ராஜ்குமாரின் இன்னிசையில் பொன்மாங்குயில்
சிங்காரமாய் பாடல் இன்னும் என் காதில் எதிரொலிக்கிறது


நந்தலாலா

ஜப்பானிய மொழி படமாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் வந்த படம் மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் மனநோயாளி மிஷ்கினுக்கும்  தன் தாயை
தேடி பள்ளியை விட்டு ஓடி வரும் சிறுவனுக்கும் இடையிலான கதை சிறுவனுக்கு
உள்ள தாய்ப்பாசத்தையும் மனநோயாளிக்கு உள்ள தாய்ப்பாசத்தையும் சொன்ன படம்
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்க்கு பலம்

கண்ணுக்குள் நிலவு/வில்லன்

இவ்வளவு எழுதிவிட்டு தல தளபதியை எழுதாவிட்டால் எப்படி தல அஜீத் வில்லன் படத்தில்
மனநோயாளியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் தளபதி விஜய் பாசில் இயக்கத்தில்
கண்ணுக்குள் நிலவு படத்தில் மனநோயாளியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.
கஜினி

சார்ட் டெம்பர் மெமரி லாஸ் எனும் விசித்திர மனநோயால் பாதிக்கப்பட்ட சூர்யா நடந்த எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.5 நிமிடத்திற்க்கு ஒரு முறை ஞாபகம் வரும் நோயாதாலால் பார்ப்பவர்கள் அனைவரையும் போட்டோ எடுத்து வைத்துகொள்கிறார்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த படமிது
சந்திரமுகி

மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரதாழ் படத்தின் மூலக்கதையான இந்தப்படத்தில்
ரஜினிகாந்த்,பிரபு,ஜோதிகா,நயந்தாரா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது.தான்
ரசித்து கேட்ட கதைகளில் மனதை பறிகொடுத்து அந்த கதையின் பாத்திரமாகவே தன்னை
உருவகப்படுத்திகொண்டு வாழும் பாத்திரத்தில் ஜோதிகா நிறைவாக செய்த படம் பி.வாசு
இயக்கியிருப்பார்

சேது

பாலா என்ற புதுமுக இயக்குனருக்கு சிறந்த படமாக முக்கிய இயக்குனர்கள் படத்தில் நடித்தும்
கூட பட வாய்ப்பு இல்லாமல் அப்பாஸ் போன்றோருக்கு டப்பிங் பேசிக்கொண்டு இருந்த விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது இந்த படம் விக்ரம் இந்த படத்தில் மனநோயாளியாக‌
நடித்து மனதை ரணமாக்கி விடுவார்.க்ளைமாக்ஸ் காட்சியில் வார்த்தை தவறி விட்டாய் பாடலில் இளையராஜாவின் குரலும் விக்ரமின் நடையும் நம்மை என்னவோ செய்யும் கொஞ்சம்
லேட் பிக் அப் தான் இந்த படம் என்றாலும் படத்தை தியேட்டரை விட்டே தூக்கிய சிலர் படத்தின்
பிரமாண்ட வெற்றியை வைத்து மீண்டும் இந்த படத்தை எடுத்து அரங்கு நிறைந்த காட்சிகளாக‌
ஒளிபரப்பினர்.சினிமா இண்டஸ்ட்ரியையே மாற்றிப்போட்ட திரைப்படம் இது

மனநோயாளிகளும் மனிதர்களே சொல்லபோனால் அவர்கள் குழந்தைகள் என்று சொல்வதுதான் சிறப்பாக இருக்கும் ரோட்டில் பார்க்கும் மனநோயாளிகளை கல் கொண்டு
எறிவது,கேலி பேசுவது போன்ற அநாகரீக செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள்

No comments:

Post a Comment