Wednesday 16 November 2011

சினிமாவில் ஏழைபங்காளர்கள்




ஏழை பங்காளர்கள் என்பவர் இல்லாத ஏழைகளுக்குகொள்ளையடித்த பணத்தில் நிறைய அள்ளிகொடுப்பவர் .மக்களுக்காக கொலை கொள்ளைகள் செய்பவர் என்று காலம் காலமாக‌
தமிழ் சினிமா சித்தரித்து வருகிறது அப்படிப்பட்ட படங்கள்பற்றி ஒரு சின்ன பார்வை.

இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் அதிகம் உள்ளன எம்.ஜி.ஆர் யை பற்றி ஏற்கனவே
ஒரு பதிவு போடப்பட்டதாலும் அடுத்து ஒரு விரிவான பதிவு போட இருப்பதாலும் அந்த பதிவில்
அவர் ஏழைபங்காளனாக நடித்த படங்களை பற்றி காண்போம் இப்பொது மற்ற நடிகர்கள் பற்றி
காண்போம்.


குரோதம்



கிட்டத்தட்ட 80களில் வந்து பட்டிதொட்டியெங்கும் வெற்றிமுரசு கொட்டியது இந்தபடம் இந்த படத்தின் மூலம் பிரேம் என்ற நடிகர் அறிமுகமானார் பின்னாளில் இவர் குரோதம் பிரேம் என்று
அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.சமூக குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையில்
துப்பாக்கி எடுக்கும் கதை அநியாயம் செய்பவர்களை அடுத்த நிமிடமே போட்டுத்தள்ளுகிறார்
இவரை பிடிக்கமுடியாமல் வழக்கம் போல் போலீஸ் திணறுகிறது.இவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் அசோகன் நிறைய முயற்சி செய்கிறார் இப்படியாக கதை நீளும் பின்னாளில் பிரேம்வெற்றிகரங்கள் உட்பட‌ சில படங்களில் நடித்தார் ஆமா பிரேம் இப்ப எங்கப்பா இருக்கார்?
அடுத்ததாக பிரேம் நடித்த குரோதம் 2 எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.


மலையூர் மம்பட்டியான்

ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்தபடம் இது தியாகராஜன் மலையூர் மம்பட்டியானாக நடித்திருப்பார் தானியங்கள் உட்படசில பொருட்களை பல பெரிய மனிதர்களின் குடோனில்
இருந்து எடுத்து இல்லாத ஏழைமக்களுக்கு கொடுத்து வருவார் அவரைபிடிக்க ஜெய்சங்கர்
தலைமையில் போலீஸ் டீம் கடைசியில் மம்பட்டியான் போலீசாரால் சுடப்பட்டு இறந்து விடுவார்

நான்சிகப்பு மனிதன்

மேலை நாட்டு ஏழைபங்காளன் ராபின்ஹூட் வேடத்தில் ரஜினிகாந்த் .தன் குடும்பத்துக்காக‌
துப்பாக்கி தூக்கி கடைசியில் அனைத்து அயோக்கியர்களையும் போட்டுத்தள்ளுகிறார் மக்களும்
அவரை தலையில் தூக்கிகொண்டாடுகிறார்கள் குரோதம் படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய‌
வித்தியாசம் எதுவும் இல்லை இந்த படத்தில் கோர்ட் சீன்கள் இருக்கும் குரோதம் படத்தில் கோர்ட் சீன்கள் எதுவும் இருக்காது வித்தியாசம் அவ்வளவே.
சீவலப்பேரிப்பாண்டி

ஊர்பெரியவர் கொலைவழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மலைக்காடுகளில் பதுங்கி தன்னை கொலைப்பழியில் சிக்கவைத்தவர்களை போட்டுதள்ளுவதுதான் கதை இடையில் இல்லாத மக்களுக்கு அவ்வபோது உதவியும் செய்கிறார் இது திருநெல்வேலியில்
நடந்த உண்மைசம்பவம் ஆகும்

 ஜென்டில்மேன்

நாட்டில் கல்வித்துறையில் நடக்கும் ஊழழை வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்த பிரமாண்ட இயக்குனர் சங்கரின் முதல்படம் இல்லாத ஏழைகள் கல்வி பயில்வதற்காக பகலில் அப்பளம்
போட்டுகொண்டு இரவில் கொள்ளையடித்து இல்லாத ஏழைகளுக்காக கல்லுரி கட்டும் கதாநாயகனின் கதை இது அர்ஜூன்,மதுபாலா நடிப்பில் வெற்றிப்படம் இது


அதர்மம்

சந்தன வீரப்பனின் கதையை கிட்டத்தட்ட டச் பண்ணும் கதை.ஊரில் சந்தன மரம் கடத்தும் நாசரும் அவர் தம்பி முரளியும் போலீசிடம் பகைத்துகொள்ள நாசரைகொன்றுவிடுகிறார்கள்
முரளி கொதிப்படைந்து அண்ணன் விட்டுசென்ற தொழிலை தம்பி செய்கிறார் அவ்வப்போது
சந்தன மரத்தில் கிடைத்த வருவாயை கஷ்ட்டபடும் மக்களுக்கும் பங்கிட்டுகொடுக்கிறார்.


இந்தியன்

சங்கரின் 3வது படம் இது கமலஹாசன் தந்தை மகன் என இருவேடங்களில் நடித்த படம் கஷ்டப்படும் அப்பாவி பொதுமக்களுக்குஅரசு அலுவலகங்களில் இழைக்கப்படும் அநீதியை
அதாவது லஞ்சத்தை எதிர்த்துபோராடுகிறார்,கடைசியில் பெற்றமகனையே லஞ்சம்வாங்கியதற்காக கொலைசெய்கிறார்.

குரு

கமலஹாசன் நடிப்பில் வந்தபடம் கொள்ளையடித்த பணத்தில் கஷ்டப்படும் அனாதைகுழந்தைகளுக்கு ஒரு அனாதைவிடுதி கட்டுகிறார்.ஐ.வி சசி இயக்கத்தில்
வந்த படம் இது


ரமணா

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த படம் இது விஜயகாந்த் கதாநாயகன் அரசுஅலுவலகம் அனைத்திலும் நடக்கும் ஊழல்கள் அனைத்தையும் தட்டிகேட்கிறார் வழக்கம்போல் தனது அதிரடியால்மனம் கவர்ந்தார்  ஆஸ்பத்திரியில் ஒரு ஏழையின் உடலைகொடுப்பதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம்
பணம் கட்ட சொல்வதும் அதற்க்கு விஜயகாந்தின் ட்ரீட்மென்டும் நான் ரசித்துப்பார்த்த காட்சி
ஆகும்.
சிட்டிசன்

ஒரு கிராமமே அழிந்துபோன காரணத்திற்காக சில அரசு அதிகாரிகளை கடத்துகிறார் .அத்திப்பட்டி என்ற கடற்கரைகிராமம் அழிந்துபோனதற்காக அதிகாரிகளை மீனவமக்களின்
துணையோடு கடத்தி கோர்ட்டில் வாதமும் செய்கிறார் சரவணசுப்பையா இயக்கத்தில் வந்தபடம் இது






No comments:

Post a Comment