Monday, 14 November 2011

பாம்பு எடுத்த படமும் நம்மவர்கள் எடுத்த படமும்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் .பல்லாயிரம் பேரைகொன்ற பெரிய போர் வீரனுக்கு கூட பாம்பை கண்டு பயந்து நடுங்குவார்கள் .பல வருடங்களுக்கு முன் தேவர் பிலிம்ஸ்

தயாரித்த வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் பாம்பு நல்லது செய்வதாக நடித்திருக்கும்.தொடர்ந்து ராமநாராயணன் தைப்பூசம்,ஆடிவெள்ளி,போன்ற படங்களில் பேபி
ஷாமிலிக்கு ப்ரண்டாக வந்து தமிழக மக்களை ரசிக்க வைத்தது.ஆனால் நம் சினிமாக்காரர்கள்
கற்பனை வளத்திற்கு பஞ்சமிருக்காதே அவர்கள் எடுத்த சில திகில் பாம்பு படங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்

நீயா


ஒரு பழிவாங்கும் இச்சாதாரி நாகத்தின் கதை என எஸ்.பி.பி யின் குரலில் படம் ஆரம்பிக்கும்போதே விறுவிறுப்பு கூடிவிடும் துரை அவர்கள் இயக்கி கமலஹாசன்,முத்துராமன்.சுருளிராஜன்,விஜயகுமார் ஆகியோர் நடித்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய படம் ஆண் பாம்பை கொன்று விட்டதால் பழிவாங்கும் பெண் இச்சாதாரி நாகத்தின் கதை இச்சாதாரி நாகமாக ஸ்ரீபிரியா அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பாம்பை சுட்டுகொன்ற 5 நண்பர்களை ஒவ்வொருவராக போட்டுதள்ளுவதும் கடைசியில் படத்தின் ஹீரோ கமல் மட்டுமே தப்பிக்கிறார்.சாமியாராக நம்பியார் அவரின்
டுபாக்கூர் சிஷ்யனாக சுருளிராஜனும் நடித்திருந்த படம் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல்
இன்றும் பிரபலமான பாடல்.


பவுர்ணமி அலைகள்

பல வருடங்களுக்கு முன் உதிரிப்பூக்கள் விஜயன் அவர்கள் நடித்து வெற்றிபெற்ற படம் பாம்பு
பிடித்து தொழில் செய்யும் ஒருவன் பாம்பாக மாறுவதுதான் கதை திகிலூட்டும் படம் இது.


மனைவி ஒரு மாணிக்கம்

பாம்பை கொலை செய்து விடும் ஒருவரை பாம்பின் ஆன்மா  கொலை செய்யும் நபரின் மனைவி உடலில் புகுந்து பாடாய் படுத்தி எடுப்பதுதான் கதை .பாம்பின் ஆன்மா  புகுந்திருப்பதால்நண்பன் மனைவியுடன் உறவுவைத்துக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதை
அறிந்த அர்ஜூன் பாம்பிடமிருந்து நண்பனை காப்பாற்றுவதுதான் கதை பாம்பான ராதாவுக்கும்
அர்ஜூனுக்கும் நடிப்பதில் பலத்த போட்டி இந்தபடத்தில்.க்ளைமாக்ஸில்  நினைத்தபடியே பாம்பிடமிருந்து நண்பரை காப்பாற்றி விடுவார் ஹீரோ அர்ஜூன்

நல்லபாம்பு




கார்த்திக் அம்பிகா நடிப்பில் வந்த படம் வில்லனின் மூலம் சிறுவயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கலந்தபாம்பின் நஞ்சு ஒருவரை என்ன பாடுபடுத்துகிறது என்பது கதை ராமநாராயணன் இயக்கிய படம் இது

No comments:

Post a Comment