Saturday, 5 November 2011

தமிழ் சினிமாசிறந்த நகைச்சுவை கலைஞர்கள்



தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை கலைஞர்கள் யார் யார் அவர்களின் பங்கு தமிழ்சினிமாவில் என்ன என்பதை பற்றிப்பார்க்கவே இந்த பதிவு

கலைவாணர்.என்.எஸ்.கிருஷ்ணன்

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரே காமெடியன் இவர்தான் நல்லதம்பி,யார்பையன் உட்பட‌
பல படங்களில் இவரும் இவர் மனைவியும் சேர்ந்தே நகைச்சுவை செய்த்தது சிறப்பு.இவரின் போதாத காலம் பாகவதருடன் சேர்ந்து லட்சுமிகாந்தன் என்ற மஞ்சள் பத்திரிக்கையாளரின்
கொலையில் மாட்டி பின்பு விடுதலை செய்யப்பட்டவர்.இல்லையென்றால் அதிகபடங்களில்
இவரை நாம் ரசித்து இருக்கலாம்






காளி என் ரத்தினம்/டி.ஆர்.ராமச்சந்திரன்

தமிழ் சினிமாவில் 40களில் வந்த பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தலையில் முண்டாசு கட்டி படத்தில் இடமிருந்து வலமாக ஒருவர் நிற்கிறாரே அவர்தான் இவர்
குறிப்பாக சபாபதி என்ற படத்தில் தொட்டதெற்க்கெல்லாம் காமெடியில் பின்னி எடுப்பார் இதில்
ஒரு முட்டாள் வேலைக்காரனாக நடித்திருப்பார் உதாரணமாகடி.ஆர்.ராமச்சந்திரன் ஒரு சோடாஉடைத்து கொண்டு வா என்பார் சோடா பாட்டிலை உடைத்துக்கொண்டு வருவார் நம்மாளு அதே போல ஒரு கல்யாணத்தில் கோபத்தில் இந்தப்பாலை அய்யர் தலையில் போய்
ஊத்து என்பார் விறுவிறுவென பாலை கொண்டு போய் அய்யர் தலையில் ஊற்றிவிடுவார் அதே போல டி,ஆர் ராமச்சந்திரன் அவர்களும் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் கலக்கி இருப்பார்
இதுமட்டுமல்லாமல் முயலுக்கு மூணு கால்.அடுத்த வீட்டு பெண் உட்பட பல படங்களில் தன்
நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருப்பார் இவர்கள் இருவரும் தலைசிறந்த நகைச்சுவை நாயகர்கள்.













நாகேஷ்/தங்கவேலு/கருணாநிதி

கன்னடரான நாகேஷ் தமிழ்நாட்டில் ஈரோடு அருகில் தாரபுரத்தில் வளர்ந்தவர் ஆரம்பத்தில் ரயில்வேயில் வேலை செய்த நாகேஷ் சினிமாவில்சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர்
இவரின் சர்வர் சுந்தரம் படம் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்புக்காக ஓடிய இவரின் முக்கியமான படம் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ் கண்டக்டராக நடித்திருப்பார் பஸ்ஸில் தான் கதை முழுவதும் நகரும் காமெடிக்கு கேட்க வேண்டுமா காதலிக்க‌
நேரமில்லை படத்தில் பாலையாவிடம் இவர் கதை சொல்லும் காட்சி நான் விழுந்து விழுந்து சிரித்த காட்சிகள்.அதேபோல தங்கவேலுவும் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் பார்த்தால் பசி தீரும் படத்தில் ஒரு சாமியார் காமெடி வரும் அது நான் ரசித்து சிரித்த காட்சி,அதே போல் கல்யாணப்பரிசு படமும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படமாகும் இவர் கடைசியாக நடித்த படம் விஜயகாந்த் நடித்த பெரியமருது படமாகும் பொதுவாக போலி ஆசாமிகளை
மன்னார்&கம்பெனி என்று சொல்வோம் கல்யாணப்பரிசு படத்தில் இவர் மனைவியிடம்
வேலை செய்வதாக பொய் சொல்வார் எங்கு வேலை செய்கிறிர்கள் என கேட்கும் போது
மன்னார்&அண்ட் கம்பெனி என வாய்க்கு வந்த பேரை சொல்வார் அதுவே இவ்வாறு ஆயிற்று.
நடிகர் கருணாநிதியும் இவர்களுக்கு சளைத்தவரல்ல மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில்
நாகேஷ் நடத்துனர் என்றால் இவர் ஓட்டுனர்.நகைச்சுவைக்கு கேட்கவா வேண்டும் அதே கண்கள் படத்தில் கேரளா சமையல்காரராகவும் மஹாகவி காளிதாஸ் படத்தில் சிவாஜியின்
நண்பணாக வந்து கிச்சு கிச்சு மூட்டியவர்.தொடர்ந்து பல படங்களில் தன் திறமையை நிரூபித்தார்.

வி.கே ராமசாமி/தேங்காய் சீனிவாசன்

வி.கே ராமசாமி ஆரம்பத்தில் நாம் இருவர்,பராசக்தி முதலான படங்களில் வில்லன் மற்றும்
குணச்சித்திர வேடம் ஏற்று நடித்துள்ளார் இருந்தாலும் இவருக்கு நன்றாக வருவது நகைச்சுவை நடிப்புத்தான் குறிப்பாக 80,90களில் வந்த ஆண்பாவம்,அதிசயப்பிறவி,அரங்கேற்றவேளை போன்ற படங்கள் இவரின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு நற்சான்று. அதிசயப்பிறவியில் எமலோகத்தில் சித்திரகுப்தனாகவும்
இறந்து போன மனிதனாக ரஜினிகாந்தும் அடிக்கும் லூட்டியும் பிரபு இவன் என்ன நம்மையே
சபிக்கிறான் என வினுச்சக்கரவர்த்தியை பார்த்து பரிதாபமாக கேட்பதும் அரங்கேற்ற வேளை
படத்தில் சக்தி நாடகசபா எனும் நாடக கம்பெனி நடத்தி பிரபுவுடனும் ரேவதியுடனும் அடிக்கும்
லூட்டியும் ஏ கிளாஸ் நகைச்சுவை.தேங்காய் சீனிவாசனை எடுத்துக்கொண்டால் உடனே ஞாபகம் வருவது காசேதான் கடவுளடா படம்தான் முத்துராமனுடன் இவர் சாமியார் கெட்டப்பில் அடிக்கும் லூட்டிகள் அருமையானவை அதே அதே என இவர் ஒவ்வொரு காட்சிக்கு சொல்வதும் அதிரடி சிரிப்பு .தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்திடம் ஏமாறும்
ஏமாளி மேனேஜராக நடித்து அப்ளாஸ் அள்ளியிருப்பார்.

சோ,எஸ்.எஸ் சந்திரன்,வெண்ணிற ஆடை மூர்த்தி
சோ தேன்மழை,நம்நாடு,அதிசயப்பிறவி,ரிக் ஷாக்காரன் என பல படத்தில் இருந்தாலும் அரசியல் கலந்து நகைச்சுவை செய்வதில் வல்லவர் குறிப்பாக அதிசயப்பிறவியில் ரஜினியை
தவறாக மரணமடைய செய்த சித்திரகுப்தனுக்கு விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடுவார் எமன் .டைமிங்காக சோ சொல்வார் பூலோகத்திலேயே இது வரை எத்தனை
விசாரனை கமிஷனுக்கு முடிவு தெரிந்திருக்கிறது என நகைச்சுவையாக சொல்வார்

எஸ்.எஸ் சந்திரனும் இவரைப்போல அரசியல் காமெடி செய்தவர்தான் இவரின் பாடாத தேனீக்கள் படத்தில் கலைஞர் வசனம் என்பதால் அரசியல் காமெடி தூக்க்லாக இருக்கும்
இந்த படத்தில் ஒரு காட்சியில் சந்திரன் அவர்கள் காலை நொண்டி வருவார்.ஒருவர் கேட்பார்
ஏண்ணே நொண்டுறீங்க அதற்க்கு இவர் சொல்வார் வீட்டு மாடிப்படியில் இருந்து விழுந்துட்டேன் எனச்சொல்வார் அதற்க்கு அவர் உங்க வீட்டுல மாடியில்லையே என சொல்வார் இருக்குன்னு நெனச்சு விழுந்துட்டேன் என சொல்வார்.பாசப்பறவைகள் படத்தில்
ரேடியோவைஉசிலமணி வயிற்றுக்குள்  வைத்து தைத்துவிடும் டாக்டராக நடித்திருப்பார்
உசிலமணி வயிற்றை சுற்றி அனைவரும் ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்கள் இவற்றையெல்லாம் நான் சொல்வதை விட பார்த்தால் குபீர் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.


வெண்ணிற ஆடை மூர்த்தி அதிக படங்களில் நகைச்சுவை செய்து இருந்தாலும் இவரின் இரட்டைஅர்த்த காமெடியால் சற்று பின்னாடியே நிற்கிறார் இவர் கதைகதையாம் காரணமாம்
என்ற படத்தில் வாயை வைத்து புர்புர் என நகைச்சுவை செய்வார் அதையே இவர் நிறைய படங்களில் செய்து விட்டார் இருந்தாலும் முத்துராமனுடன் இவர் நடித்த அனுபவம் புதுமை
மேலே சொன்ன‌ கதைகதையாம் காரணமாம் ஆகிய இரண்டுபடங்களும் எனக்கு பிடித்த படங்கள்.

சந்திரபாபு/சார்லி/சின்னிஜெயந்த்/விவேக்

சந்திரபாபுவின் அன்னை படத்தில் எலி அடிக்கும் காமெடியும் ,சார்லியின் புதுவசந்தம்,பூவே உனக்காக ,வருஷம்16காமெடியும் சின்னிஜெயந்தின் பலகுரலும் இதயம் உட்பட பல கல்லூரி
படங்களின் காமெடியும் மறக்க கூடியதல்ல இவர்களை பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்து விட்டோம் பார்க்காதவர்கள்  இந்த லிங்கை பார்க்க‌
http://reversetamilcinema.blogspot.com/2011/09/blog-post_29.html
http://reversetamilcinema.blogspot.com/2011/09/blog-post_7027.html
விவேக்

இன்றும் முன்னணி நகைச்சுவைகலைஞராக ஜொலிக்கிறார் ஆரம்பத்தில் நற்கருத்துக்களை
திருநெல்வேலி உட்பட பல படங்களில் கூறினார் சின்னகலைவாணர் என்ற பட்டத்தையும் வாங்கி கொண்டார் தற்போது இவர் மச்சான் செல்முருகனோடு[அதான் சாமி படத்தில் ட்ராபிக் காண்ஸ்டபிள் அவர்தான்]
இவர் அடிக்கும் இரட்டை அர்த்த லூட்டிகள் முகம் சுழிப்பவையாக உள்ளது.ஆரம்பத்தில்
ஒடிசலான தேகத்துடன் இவரின் புதுபுது அர்த்தங்கள் படத்தில் ரகுமானின் பீ.ஏ வாக வந்து
அண்ணே அண்ணே சொல்லுஅண்ணே அண்ணே சொல்லு எனசேரை சுற்ற சொல்வார் சேர் சுற்றிகொண்டே இருக்கும்.இன்னைக்கி செத்தா நாளைக்கிபால் என்ற தத்துவத்தை இப்படத்தின் மூலம் சொன்னவரும் இவர்தான். விவேக் சார் உங்களின் நல்ல நகைச்சுவையை
பார்த்து நீண்ட நாட்களாயிற்று.

ஜனகராஜ்

தங்கச்சிய நாய் கட்சிட்சுபா என படிக்காதவன் படத்தில் தண்ணி அடித்துவிட்டு திரும்ப திரும்ப‌
சொல்வதும் கனவு பலிக்கும் அடைக்கலராஜாக கேளடி கண்மணி படத்தில் அவஸ்தைபடுவதும் ராஜாதி ராஜாவில் ரஜினியின் நண்பராக நடித்த காட்சியும் ஆண்பாவம்
படத்தில் போணியாகாத ஓட்டல் வைத்து ஏமாறும் காட்சிகளும் இவர் நடிப்பில் நச் நகைச்சுவை காட்சிகள். பாரதிராஜாவால் புதியவார்ப்புகள் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர.
இவர்.

கவுண்டமணி/செந்தில்

தமிழகத்தின் லாரல் ஹார்டி இவர்கள்தான் உதயகீதம் படத்தில் நகைச்சுவை எழுத்தாளர்
வீரப்பனால் ஜோடியாக அறிமுகமாகி வைதேகிகாத்திருந்தால்,சின்னக்கவுண்டர்,ஜென்டில்மேன்.கரகாட்டக்காரன்,இந்தியன் என பல‌
படங்களில் பட்டையை கிளப்பியிருப்பார்கள் இவர்கள் பற்றிய முந்தைய பதிவுக்கான லிங்க் இதோ

http://reversetamilcinema.blogspot.com/2011/08/blog-post_3347.html

சுருளிராஜன்/வடிவேலு

ஹிஹி என ஆரம்பிக்கும் இவர் பேச்சும் நகைச்சுவையும் அற்புதமான ஒரு நகைச்சுவை கலைஞனை சீக்கிரம் இழந்துவிட்டோமே என வருத்தத்தை ஏற்படுத்தும் இவர் 80,81ம் ஆண்டுகளில் வந்த அதிக படங்களில் நடித்துள்ளார்,முயலுக்குமூணுகால்,தாய்மீது,சத்தியம்,
ஜானி,உட்பட பல படங்களில் நடித்த நல்ல நகைச்சுவை கலைஞர் இவரும் ஓரு படத்தில்
குதிரை வண்டிக்காராக நடித்திருப்பார் பிணம் ஏற்றும் குதிரை வண்டியை வாங்கி இருப்பார்
ரோட்டில் ஏதாவது அனாதை பிணம் கிடந்தால் அந்த குதிரை நின்றுவிடும் இதை சாக்காக வைத்து கஸ்டமர்களுடம் செல்லும் சுருளியை ஓமக்குச்சி பிணம் போல சாலையில் படுத்துக்கொண்டு குதிரை நகழவிடாமல் சுருளியிடம் பேரம் பேசி பணம் வாங்கிசெல்வார்
மிக அற்புதமான நகைச்சுவை காட்சி அது.

வடிவேலுவை இன்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் அந்த அளவிற்க்கு இவரின் நகைச்சுவை அருமையாக இருக்கும் எழும்பும் தோலுமாக கீப் வீட்டில் இருந்து வரும்
கவுண்டமணியிடம் அடிவாங்கும் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணால் ராசாவின் மனசிலே
படத்தில் அறிமுகமானவர்.இவரின் இப்பொதைய நகைச்சுவை மிக அருமையாக இருக்கும்
ஆரம்ப காலத்தில் கிழக்குசீமையிலே,பாஞ்சாலங்குறிச்சி,போன்ற படங்களில் காமெடி அருமையாக இருக்கும் தொடர்ந்து இம்சை அரசன்23ம்புலிகேசி,வின்னர்,தலைநகரம்
என காமெடி சாம்ராஜ்யம் நீளுகிறது.

சந்தானம்

இன்றைய இளையதலைமுறை காமெடியன் இவர்தான் ஆரம்பத்தில் இவர் செய்த லொள்ளுசபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம் அப்பொழுதே இவருக்கு நல்ல‌
எதிர்காலம் இருப்பதாக எனக்குப்பட்டது நான் நினைத்தபடியே இன்று இமயம் தொடப்போகும்
காமெடியானாக வந்துவிட்டார் இன்று சந்தானத்தை புக் செய்துவிட்டுத்தான் ஹீரோவையே
புக் செய்கிறார்கள் இயக்குனர்கள்.










No comments:

Post a Comment