Wednesday, 30 November 2011

அயல்நாட்டில் எடுக்கப்பட்ட வெற்றிப்படங்கள்








தற்போது உள்ள சினிமாவில் கதாநாயகன் கதாநாயகிக்கு காதல் டூயட் ஆரம்பிப்பதே வெளிநாட்டில்தான் ஒன்றுக்கும் உதவாத பாடலுக்கு பலகோடி செலவழித்து பாடல்
ஷூட் செய்வார்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கதாநாயகனும் டைரக்டரும் கொடுக்கும்
பேட்டி ஆக்சுவலி அந்த பாடலுக்கு என்று ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் பேட்டியை
தாங்கமுடியாது.படம் வந்தால் படத்தில் ஒன்றும் இருக்காதுஇதையும் தாண்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சிறப்பான படங்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

நாடுகள் வாரியாக படங்கள்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படியொரு தொடர்பு அதிகபட்ச படங்கள் சிங்கப்பூரை
சுற்றி எடுத்த படங்களாகவே உள்ளன‌

முதலில் எம்.ஜி.ஆர் சிங்கப்பூரை சுற்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தார் படம்
மிகப்பெரியவெற்றி அடைந்தது இதில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு விஞ்ஞானியாக நடித்து
பெரும்புகழ்பெற்றது சிங்கப்பூர் மட்டுமல்லாது ஹாங்காங்,மலேசியா சைனா போன்ற நாடுகளில்
எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தபடம் இது.இதுவரை இதன் டி,வி ரைட்ஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது

அடுத்தாக முருகனின் பெருமைகளை கூறும் வருவான் வடிவேலன் படம் இங்கு எடுக்கப்பட்டது
இந்த படமும் மகத்தான வெற்றிபெற்ற பக்தி படமாகும்.


ரஜினி கமலும் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் பாலச்சந்தரின் கைவரிசையில்
எம்.எஸ்.வி இசையில் இங்கு எடுக்கப்பட்ட படமாகும் 15 பாடல்களுக்கும் மேல் உள்ள இந்த படத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் சிங்கப்பூரை நன்றாக சுற்றி காண்பித்து
இருப்பார்கள்

ப்ரியா

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்த படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி
நடித்து பட்டையை கிளப்பிய படம் இது.அக்கறை சீமை அழகினிலே பாடல் மூலம் சிங்கப்பூரை
நன்கு சுற்றிகாண்பித்து இருப்பார்கள்


பூமழை பொழியுது

ரஜினியும் கமலும் சிங்கப்பூர் சென்றால் நானும் செல்வேனென்று விஜயகாந்தும் சென்ற இடம் [சாரி]
படம் பூமழை பொழியுது அழகப்பன் இயக்கத்தில் சுரேஷ் ,நதியா ,விஜயகாந்த் நடிப்பில் இது
ஒரு காதல் படம்.

தமிழ் நாட்டில் வந்த சிங்கப்பூர் பேயாக கெளதமி,அவரது கணவராக ராமராஜன் நடித்து கங்கை
அமரன் இயக்கத்தில் வந்த கலகலப்பான் பரபரப்பான படம்தான் ஊரு விட்டு ஊரு வந்து. பேயை
விரட்டுவதற்க்கு ராமராஜனுடன் கவுண்டமணி செந்திலும் சிங்கப்பூர் சென்றால் கலகலப்பிற்க்கு
கேட்கவா வேண்டும்



அமெரிக்கா



இங்கு அதிகப்படங்கள் எடுக்கப்படவில்லை ஜீன்ஸ் படம் மூலம் ஷங்கர் அழகிய அமெரிக்காவை
காண்பித்திருப்பார் அதற்க்கு பிறகு கெளதம் மேனன் வேட்டையாடு விளையாடு படம் மூலம்
கமல்ஹாசனை போலீஸ் அதிகாரியாக உலவ விட்டிருப்பார்.

கனடா

அரசாங்கம் படம் மூலம் விஜயகாந்த் சென்று வந்த நாடு இது ஒரு வழக்கு விசயமாக கனடா சென்று குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை இது

லண்டன்


லண்டன் இந்த பெயரிலேயே சுந்தர் சி ஒரு படம் எடுத்தார் படம் சரியாகபோகவில்லை



அதற்க்கு முன்பே பி.வாசுவின் இயக்கத்தில் வந்த லவ்பேர்ட்ஸ் படம் லண்டனில் முழுக்க எடுத்த‌
படமாக வந்தது.


ஜப்பான்


ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாணராமன் படம் வந்தது கமல் ஆவியாகவும் மனிதனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த‌
படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த படம் ஜப்பானை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் காண்பித்தாக எனக்கு தெரியவில்லை குறிப்பாக எக்ஸ்போ 85 என்ற ஜப்பானின்
பொருட்காட்சி 5 நிமிடம் வந்து போகும் அருமையான ஓளிப்பதிவு


ஜெர்மனி


ஜெர்மனியில் எடுக்கப்பட்ட சிறப்பான படம் உல்லாசபறவைகள் ஆகும்.கமலின் மனநோயாளியான கமல் ட்ரீட்மென்டுக்காக  ஜெர்மன் செல்வது போல‌
காட்சிகள் அமைக்கப்பட்டு அங்கே ஒரு காதலும் சொல்லப்பட்டிருக்கும் இளையராஜாவின்
இசையில் ஜெர்மனியின் செந்தேன்மலரே .அழகு ஆயிரம் பாடல்கள்மூலம் ஜெர்மனியை நன்கு
சுற்றிகாண்பித்திருக்கும் படத்தின் கேமரா.


துபாய்


துபாயில் எடுக்கப்பட்ட படம் நாசர் அவர்கள் இயக்கிய தேவதை படம். வினித்,கீர்த்தி சாவ்லா
நடிப்பில் சிறந்ததொரு காதல்படம் நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பவுர்ணமி பாடல் மூலம்
துபாயின் அழகை அள்ளிவந்திருக்கும் படம் இது



மலேசியாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் மலேசியாவை அழகாக காண்பித்தது
பில்லா படத்தில்தான் நீரவ்ஷா வின் கேமரா மலேசிய பத்துமலை முருகன் கோவிலின் அழகை
அள்ளிவந்திருக்கும் விஷ்னுவர்த்தன் இயக்கிய படம் இது

Monday, 28 November 2011

இயக்குனர் கே.ரங்கராஜ் ஒரு வரலாற்று பிழை






80களில் பாரதிராஜா,பாலச்சந்தர்,பாசில்,மணிரத்னம்,பாக்யராஜ் போன்ற இயக்குனர்களின் கை ஓங்கி இருந்த நேரம் அந்த நேரத்தில் பல வெற்றிப்படங்களை சத்தமில்லாமல் கொடுத்தவர்தான்
இயக்குனர் கே .ரங்கராஜ் அவர்கள்.இவர் இயக்கிய அனைத்துபடங்களுமே வெற்றிப்படங்கள் என்று சொன்னால் மிகையாகாது ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இவரது பெயரும்
புகழும் அந்தளவிற்க்கு வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டது.தற்போது இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.பத்திரிக்கைகள் மீடியாக்கள் என‌
எங்குமே இவர் பற்றி வாய்திறப்பதில்லை.எது தேடினாலும் கிடைக்கும் என்ற கூகிளில் கூட‌
இவரைப்பற்றி செய்திகளோ இவரது புகைப்படமோ கிடைக்கவில்லை இயக்குனருக்கும்
இசையமைப்பாளருக்கும் உள்ள கெமிஸ்ட்ரியில் இவருக்கும் இளையராஜாவுக்கும் உள்ள‌
கெமிஸ்ட்ரி அளவிடமுடியாதது இவர்களது இயக்கம் மற்றும் இசையில் வந்த பாடல்கள்
அனைத்தும் மியூசிக்கல் ஹிட்.வெள்ளிவிழா நாயகன் என்று கருதப்பட்ட மோகனுக்கு அதிக‌
படங்கள் கொடுத்து வெற்றிப்படங்களாக மாற்றியவர் குறிப்பாக இவர் மோகனை வைத்து
இயக்கிய நெஞ்சமெல்லாம் நீயே ,உதயகீதம்.உன்னை நான் சந்தித்தேன்,பாடுநிலாவே ஆகிய‌
படங்கள்  வெற்றிப்படங்கள் ஆகும் குறிப்பாக உதயகீதம் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆகும்
தொடர்ந்து இளையராஜாவின் நட்பால் அவரின் சொந்தப்படமான கீதாஞ்சலி படம் இயக்கும்
வாய்ப்பை பெற்றார் .அதில் இடம்பெற்ற ஒருஜீவன் அழைத்தது போன்ற ஜீவனுள்ள பாடல்கள்
எல்லாம் இன்றும் கிராமத்து டீக்கடையில் இருந்து நகரத்து காபி ஷாப் வரை ஒலித்து கொண்டிருக்கிறது.பாடல்கள் இளையராஜாவிடம் கேட்டுவாங்குவதுமட்டுமின்றி நல்ல திரைக்கதை அமைப்பதிலும் வல்லவர் பாடுநிலாவே,நினைவே ஒரு சங்கீதம் போன்றவை
சிறந்த திரைக்கதைகளுக்கு உதாரணம்.இவர் விஜயகாந்தை வைத்து தர்மம் வெல்லும்
நினைவே ஒரு சங்கீதம் படங்களையும்  ராமராஜனுக்காக கிராமத்து மின்னல் போன்ற‌
படங்களையும்சிவக்குமாரை வைத்து மனிதனின் மறுபக்கம் ,உன்னை நான் சந்தித்தேன் ,நிலவு சுடுவதில்லை

உனக்காகவே வாழ்கிறேன் என வெற்றிப்படங்களாக கொடுத்தவர் இவர் கடைசியாக சரத்குமாரை வைத்து எல்லைச்சாமி என்ற படத்தை கொடுத்தார்.இப்படம் மிகப்பெரும்
தோல்விப்படம் .பிரபலமான இயக்குனராக திகழ்ந்த இவரை மீடியாக்களும் சினிமாஉலகமும்
மறந்தது ஏனோ? இது ஒரு வரலாற்றுப்பிழையாகத்தான் தோன்றுகிறது.

Sunday, 20 November 2011

அதிர்ஷ்டம் அழைத்தும் துரதிருஷ்டம் துரத்திய கலைஞர்கள்

சினிமாவில் வாய்ப்பு என்பது சாதாரண மனிதருக்கு குதிரைக்கொம்பான விஷயம் வாய்ப்புகள்
கிடைப்பதே அரிதான சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் துரதிருஷ்டத்தால் அதை இழந்தவர்களும் உண்டு அப்படிப்பட்டவர்கள் பற்றி பார்க்கவே இந்த பதிவு.

விஜயன்

80களில் வந்த படங்களில் இவர்தான் அப்போதைய படங்களின் ஹீரோ அப்போது உச்சத்தில்
இருந்த நடிகர் இவர் பின்பு ரஜினி,கமல் எழுச்சிக்குபிறகு இவர் கொஞ்சம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டார்.படவரவுகள் இன்றி 25வருடங்களுக்கும் மேல் கஷ்டப்பட்டார்
உதிரிப்பூக்கள் உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருக்கே இந்த நிலைமை பார்த்துக்கொள்ளுங்கள்.சில தீயபழக்கங்களால் உடல்நிலை மோசமானது.கண்ணீர்மல்க சில‌
பத்திரிக்கைகளில் இவர் பேட்டி வெளியானது சாப்பட்டிற்க்கு கூட கஷ்டம் என்ற ரீதியில் இருந்தது இவர் பேட்டி.இதைப்பார்த்து இரக்கப்பட்ட ஏ.ஆர் முருகதாஸ் ,செல்வராகவன்
உட்பட சில இயக்குனர்கள் தங்களின் ரமணா,7ஜி ரெயின்பொகாலனி உட்பட பல படங்களில்
இவரை குணச்சித்திரவேடத்தில் நடிக்கவைத்தனர்.இவரின் குணச்சித்திரநடிப்புக்காக மீண்டும்
இவரைபடவாய்ப்பு துரத்தியது.துரதிருஷ்டம் காரணமாக மாரடைப்பால் இவர் காலமானார்.


பாண்டியன்

அண்ணே வணக்கணே என்று மதுரைத்தமிழில் கொஞ்சும் பாண்டியனை அவ்வளவு சீக்கிரம்
மறந்துவிடமுடியாது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் கடை வைத்து இருந்தவர்
நடிகர் பாண்டியன் .மண்வாசனை படத்திற்க்கு கதாநாயகனுக்கு புதுமுகநடிகர் தேடிக்கொண்டு
இருந்தபோது இயக்குனர் பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்டவர்.நல்ல நடிப்புதிறமையுள்ளவர்
ஆண்பாவம்,மண்வாசனை,ஆண்களை நம்பாதே படங்களைத்தவிர துண்டு துக்கடா வேடங்களில்தான் அதிகம் நடித்தவர்.நல்ல நடிகராக வந்துஇருக்கவேண்டியவர் சில தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு கிட்னிபெய்லியரில் மரணமடைந்தார்.

லூஸ்மோகன்

பல படங்களில் காமெடியில் கலக்கியவர் லூஸ்மோகன் அவர்கள் மெட்ராஸ் பாஷை தெரியாதவர்கள் இவர் படங்களை பார்த்தால் போதும்.இவர் கடைசியாக நடித்த படம்
அழகி.பலபடங்களில் காசுபணம் சம்பாதித்த இந்த நடிகர் மகன் மருமகளின் புறக்கணிப்பால்
ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்.86வயதாகி தள்ளாடும் லூஸ்மோகன்
மகன் மீது புகார் செய்ய கமிஷனர் ஆபிசுக்கு வந்தபோதுதான் இந்த விஷயம் தெரிந்தது.

என் உயிர் தோழன் பாபு

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு  என் உயிர்தோழன் படத்தில் அறிமுகமான பாபு
அடுத்ததாக விக்ரமனின் பெரும்புள்ளி படத்தில் நடித்தார்.தொடர்ந்து தாயம்மா உட்பட‌
சில படங்களில் நடித்தவர்.ஒரு படத்தின் படப்பிடிப்பில் டூப் போடாமல் இவரே ஒரு சண்டைக்காட்சியில் மேலிருந்து குதித்தவர் குதித்தவர்தான்.படுத்த படுக்கையாக 20 வருடங்களுக்கு மேல் படுக்கையிலே எல்லாமுமாக இருந்தார் தற்போதுதான் பாபுவின்
உடல்நிலை ஓரளவிற்க்கு சீராகியுள்ளதாக கேள்வி.இவர் நடிக்க முடியாததால் தற்போது
கதைவசனம் எழுதமுயற்சி செய்கிறார் இவரின் வாழ்க்கையை  நடிகர் இயக்குனர் பொன்வண்ணன் படமாக எடுக்கபோவதாக வந்த தகவல் என்னாயிற்று எனத்தெரியவில்லை
பாபு இப்போது



உதயப்பிரகாஷ்

சின்னத்தம்பி,கட்டபொம்மன்.சின்னஜமீன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்த இவர்
சில தீயபழக்கவழக்கங்களால்மனநிலை பாதிக்கப்பட்டு சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் சுற்றி கொண்டு
இருந்ததாக ஆரம்பத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பபட்டது. திடீரென‌
ஒருநாள் நடிகர் சங்கவாசலில் இறந்து கிடந்தது பார்ப்பவர்களை அதிர்ச்சிகொள்ளசெய்தது.


மோனிஷா

மலையாள நடிகையான இவர் தமிழில் அறிமுகமான உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மூன்றாவது கண் என மளமளவென படங்களிலநடித்தார்  தமிழில் தொடர்ந்து பல வாய்ப்புகள்
தேடிவந்த நிலையில் கேரளாவில் நடந்த ஒரு சாலைவிபத்தில் மரணமடைந்தார்.



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இன்றைக்கும் பழையபாடல்களில் தத்துவப்பாடல்கள் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியபாடல்கள்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இவர்
எழுதியபாடல்கள் குறைவு அதற்க்கு காரணம் இவரின் வாழ்க்கை 30வயதிற்க்குள்ளேயே
முடிந்துபோனதுதான்.குறைந்த பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அவரின் மகிமையை தற்போது குத்துப்பாட்டு
ஆபாசப்பாட்டு எழுதும் இளையதலைமுறை கவிஞர்கள் உணரவேண்டும்


நடிகர் குட்டி

தீயவன் ஒருவன் செய்த செயலால் கால்களை இழந்த குட்டி ஒற்றைக்காலிலே நடனமாட பயிற்சி
எடுத்து டான்ஸ் ஆடி தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.இயக்குனர் கேயாரின் ஒத்துழைப்பால் டான்ஸர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவரின் துரதிருஷ்டம் படம்
வந்து சில நாட்களிலே பரமகுடிக்கு ஒரு டான்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

ராமராஜன்
ஒரு காலத்தில் பலபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராமராஜன் .கடுமையான குடும்பபிரச்னை மனைவியுடன்
விவாகரத்து என பல சம்பவங்கள் நடந்து .சொந்த ஊரான மேலூரில் 500ரூபாய்க்கு கூட கஷ்டப்படுகிறேன் எனப்பேட்டி
கொடுத்தவர்.நீண்ட இடைவேளைக்கு பிறகு மேதை என்ற படம் நடித்தார் அதுவும் வராத அளவுக்கு சமீபத்தில் பயங்கர‌
கார் விபத்தில் மாட்டி பிழைத்ததே பெரியவிஷயமாக போய்விட்டது.இவர் சார்ந்திருக்கும் கட்சிதான் அனைத்து மருத்துவ செலவுகளை செய்கிறது துரதிருஷ்டமும் அதிர்ஷ்டமும் மனிதர்களை எப்படியெல்லாம் துரத்துகிறது என்று
பாருங்கள்



பாரிவெங்கட்

எஸ்.வி சேகரின் நாடகங்களில் நடித்துவந்த இவர் இயக்குனர் எழிலால் துள்ளாதமனமும் துள்ளும் படத்தில் நடித்தார்
அந்த படத்தில் இவரின் காமெடி பட்டையை கிளப்ப ஓவர் நைட்டில் பாப்புலரானார்.தொடர்ந்து பல படங்களில் காமெடி
வேடத்தில் நடிக்க அடுத்தடுத்து படங்களில் புக் ஆனார்.விதிவசத்தால் திருநெல்வேலி படத்தின் ஷூட்டிங் நடித்து
முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது.இவர் வந்த பஸ் விபத்துக்குள்ளாகி இறந்தார்.

இந்த வீடியோவில் உள்ளவரே பாரிவெங்கட்


 

Friday, 18 November 2011

சூறாவளி சூர்யா

சிறந்த இலக்கியவாதியான நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா.தந்தையை போலவே சிறப்புடையவர்.ஆரம்பத்தில் தமிழ் மலர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை மனப்பாடம்
செய்து ஒரு நிமிடத்தில் அதை அனைத்தையும் சொல்லி கைதட்டல் வாங்கியவர் தான் பார்த்த‌
கார்மெண்ட்ஸ் கம்பெனி வேலையை விட்டு நடிக்கவந்தார்.சிவக்குமாரின் வாரிசு என்ற அறிமுகத்துடன் நேருக்கு நேர் படத்தில் நடித்தார் ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று நடித்த‌
சூர்யாவை தமிழ் முன்னணி பத்திரிக்கையான விகடன் கூட சூர்யா ஆரம்ப படங்களில் ஆடிய‌
டான்ஸைப்பார்த்துவிட்டு சூர்யா டான்ஸ் ஆடாமல் இருப்பது டான்ஸுக்கு நல்லது என விமர்சனம் எழுதப்பட்டது தொடர்ந்து 
ப்ரண்ட்ஸ்,பெரியண்ணா,உயிரிலே கலந்தது என இவருக்கு
முக்கியத்துவம் இல்லாத பாத்திரமாக நடித்த இவரை பாலாவின் நந்தா படம் சிறந்த நடிகராக‌
உருவாக்கியது .இந்த வெற்றியோடு உட்கார்ந்து விடாமல் உடல் வருத்தி பல கடும் முயற்சிகள்
எடுத்து இவர் நடித்த காக்க காக்க,பிதாமகன்  போன்ற படங்களின் வெற்றி இவரை தமிழின் சிறந்த‌
நடிகராக்கியது மனந்தளராமல் தொடர்ந்து ஏழாம் அறிவு வரை சிறந்த படங்களில் நடித்துவிட்டார்
எந்த கேரக்டர் என்றாலும் அனயாசமாக செய்யும் இவரின் பாங்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.தற்போது நடிகர்களில் உச்ச நடிகராகி யாரும் தொடமுடியாத எல்லையை நெருங்கிகொண்டிருக்கிறார்.

Wednesday, 16 November 2011

சினிமாவில் ஏழைபங்காளர்கள்




ஏழை பங்காளர்கள் என்பவர் இல்லாத ஏழைகளுக்குகொள்ளையடித்த பணத்தில் நிறைய அள்ளிகொடுப்பவர் .மக்களுக்காக கொலை கொள்ளைகள் செய்பவர் என்று காலம் காலமாக‌
தமிழ் சினிமா சித்தரித்து வருகிறது அப்படிப்பட்ட படங்கள்பற்றி ஒரு சின்ன பார்வை.

இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் படங்கள் அதிகம் உள்ளன எம்.ஜி.ஆர் யை பற்றி ஏற்கனவே
ஒரு பதிவு போடப்பட்டதாலும் அடுத்து ஒரு விரிவான பதிவு போட இருப்பதாலும் அந்த பதிவில்
அவர் ஏழைபங்காளனாக நடித்த படங்களை பற்றி காண்போம் இப்பொது மற்ற நடிகர்கள் பற்றி
காண்போம்.


குரோதம்



கிட்டத்தட்ட 80களில் வந்து பட்டிதொட்டியெங்கும் வெற்றிமுரசு கொட்டியது இந்தபடம் இந்த படத்தின் மூலம் பிரேம் என்ற நடிகர் அறிமுகமானார் பின்னாளில் இவர் குரோதம் பிரேம் என்று
அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.சமூக குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையில்
துப்பாக்கி எடுக்கும் கதை அநியாயம் செய்பவர்களை அடுத்த நிமிடமே போட்டுத்தள்ளுகிறார்
இவரை பிடிக்கமுடியாமல் வழக்கம் போல் போலீஸ் திணறுகிறது.இவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் அசோகன் நிறைய முயற்சி செய்கிறார் இப்படியாக கதை நீளும் பின்னாளில் பிரேம்வெற்றிகரங்கள் உட்பட‌ சில படங்களில் நடித்தார் ஆமா பிரேம் இப்ப எங்கப்பா இருக்கார்?
அடுத்ததாக பிரேம் நடித்த குரோதம் 2 எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.


மலையூர் மம்பட்டியான்

ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்தபடம் இது தியாகராஜன் மலையூர் மம்பட்டியானாக நடித்திருப்பார் தானியங்கள் உட்படசில பொருட்களை பல பெரிய மனிதர்களின் குடோனில்
இருந்து எடுத்து இல்லாத ஏழைமக்களுக்கு கொடுத்து வருவார் அவரைபிடிக்க ஜெய்சங்கர்
தலைமையில் போலீஸ் டீம் கடைசியில் மம்பட்டியான் போலீசாரால் சுடப்பட்டு இறந்து விடுவார்

நான்சிகப்பு மனிதன்

மேலை நாட்டு ஏழைபங்காளன் ராபின்ஹூட் வேடத்தில் ரஜினிகாந்த் .தன் குடும்பத்துக்காக‌
துப்பாக்கி தூக்கி கடைசியில் அனைத்து அயோக்கியர்களையும் போட்டுத்தள்ளுகிறார் மக்களும்
அவரை தலையில் தூக்கிகொண்டாடுகிறார்கள் குரோதம் படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய‌
வித்தியாசம் எதுவும் இல்லை இந்த படத்தில் கோர்ட் சீன்கள் இருக்கும் குரோதம் படத்தில் கோர்ட் சீன்கள் எதுவும் இருக்காது வித்தியாசம் அவ்வளவே.
சீவலப்பேரிப்பாண்டி

ஊர்பெரியவர் கொலைவழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மலைக்காடுகளில் பதுங்கி தன்னை கொலைப்பழியில் சிக்கவைத்தவர்களை போட்டுதள்ளுவதுதான் கதை இடையில் இல்லாத மக்களுக்கு அவ்வபோது உதவியும் செய்கிறார் இது திருநெல்வேலியில்
நடந்த உண்மைசம்பவம் ஆகும்

 ஜென்டில்மேன்

நாட்டில் கல்வித்துறையில் நடக்கும் ஊழழை வெளிச்சத்திற்க்கு கொண்டுவந்த பிரமாண்ட இயக்குனர் சங்கரின் முதல்படம் இல்லாத ஏழைகள் கல்வி பயில்வதற்காக பகலில் அப்பளம்
போட்டுகொண்டு இரவில் கொள்ளையடித்து இல்லாத ஏழைகளுக்காக கல்லுரி கட்டும் கதாநாயகனின் கதை இது அர்ஜூன்,மதுபாலா நடிப்பில் வெற்றிப்படம் இது


அதர்மம்

சந்தன வீரப்பனின் கதையை கிட்டத்தட்ட டச் பண்ணும் கதை.ஊரில் சந்தன மரம் கடத்தும் நாசரும் அவர் தம்பி முரளியும் போலீசிடம் பகைத்துகொள்ள நாசரைகொன்றுவிடுகிறார்கள்
முரளி கொதிப்படைந்து அண்ணன் விட்டுசென்ற தொழிலை தம்பி செய்கிறார் அவ்வப்போது
சந்தன மரத்தில் கிடைத்த வருவாயை கஷ்ட்டபடும் மக்களுக்கும் பங்கிட்டுகொடுக்கிறார்.


இந்தியன்

சங்கரின் 3வது படம் இது கமலஹாசன் தந்தை மகன் என இருவேடங்களில் நடித்த படம் கஷ்டப்படும் அப்பாவி பொதுமக்களுக்குஅரசு அலுவலகங்களில் இழைக்கப்படும் அநீதியை
அதாவது லஞ்சத்தை எதிர்த்துபோராடுகிறார்,கடைசியில் பெற்றமகனையே லஞ்சம்வாங்கியதற்காக கொலைசெய்கிறார்.

குரு

கமலஹாசன் நடிப்பில் வந்தபடம் கொள்ளையடித்த பணத்தில் கஷ்டப்படும் அனாதைகுழந்தைகளுக்கு ஒரு அனாதைவிடுதி கட்டுகிறார்.ஐ.வி சசி இயக்கத்தில்
வந்த படம் இது


ரமணா

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த படம் இது விஜயகாந்த் கதாநாயகன் அரசுஅலுவலகம் அனைத்திலும் நடக்கும் ஊழல்கள் அனைத்தையும் தட்டிகேட்கிறார் வழக்கம்போல் தனது அதிரடியால்மனம் கவர்ந்தார்  ஆஸ்பத்திரியில் ஒரு ஏழையின் உடலைகொடுப்பதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம்
பணம் கட்ட சொல்வதும் அதற்க்கு விஜயகாந்தின் ட்ரீட்மென்டும் நான் ரசித்துப்பார்த்த காட்சி
ஆகும்.
சிட்டிசன்

ஒரு கிராமமே அழிந்துபோன காரணத்திற்காக சில அரசு அதிகாரிகளை கடத்துகிறார் .அத்திப்பட்டி என்ற கடற்கரைகிராமம் அழிந்துபோனதற்காக அதிகாரிகளை மீனவமக்களின்
துணையோடு கடத்தி கோர்ட்டில் வாதமும் செய்கிறார் சரவணசுப்பையா இயக்கத்தில் வந்தபடம் இது






Tuesday, 15 November 2011

தமிழ்சினிமா கலைஞர்களின் முக்கியமான படங்கள்



நடிகர்   எம்.ஜி.ஆர்

முதல் படம் சதிலீலாவதி

100வது படம் ஒளிவிளக்கு



நடிகர் சிவாஜி


முதல் படம் பராசக்தி

100வது படம் நவராத்திரி
200வது படம் திரிசூலம்


நடிகர் ரஜினிகாந்த்


முதல் படம் அபூர்வராகங்கள்

100வது படம்ஸ்ரீ ராகவேந்திரா


நடிகர் கமலஹாசன்

முதல் படம் களத்தூர் கண்ணம்மா

100வது படம் ராஜபார்வை



நடிகர் விஜயகாந்த்

முதல் படம் இனிக்கும் இளமை

100வது படம் கேப்டன் பிரபாகரன்



நடிகர் பிரபு

முதல் படம் சங்கிலி

100வது படம் ராஜகுமாரன்




நடிகர் கார்த்திக்

முதல் படம் அலைகள் ஓய்வதில்லை
100வது படம் உள்ளத்தை அள்ளித்தா



நடிகர் சத்யராஜ்

முதல் படம் சட்டம் என் கையில்[வில்லன்] கதாநாயகனாக சாவி

100‍வது படம் வாத்தியார் வீட்டு பிள்ளை



நடிகர் அஜீத்

முதல் படம் அமராவதி
50வது படம் மங்காத்தா



நடிகர் விஜய்

முதல் படம் நாளைய தீர்ப்பு
50வது படம் வேட்டைக்காரன்


நடிகர் சூர்யா

முதல் படம் நேருக்கு நேர்
25வது படம் சிங்கம்

நடிகர் பார்த்திபன்

முதல் படம் புதியபாதை[கதாநாயகனாக]

50வது படம் வித்தகன்


நடிகர் பாக்யராஜ்

முதல் படம் புதியவார்ப்புகள்
100வது படம் என் ரத்தத்தின் ரத்தமே



இசைஞானி இளையராஜா
முதல் படம் அன்னக்கிளி
100வது படம் மூடுபனி

Monday, 14 November 2011

பாம்பு எடுத்த படமும் நம்மவர்கள் எடுத்த படமும்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் .பல்லாயிரம் பேரைகொன்ற பெரிய போர் வீரனுக்கு கூட பாம்பை கண்டு பயந்து நடுங்குவார்கள் .பல வருடங்களுக்கு முன் தேவர் பிலிம்ஸ்

தயாரித்த வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் பாம்பு நல்லது செய்வதாக நடித்திருக்கும்.தொடர்ந்து ராமநாராயணன் தைப்பூசம்,ஆடிவெள்ளி,போன்ற படங்களில் பேபி
ஷாமிலிக்கு ப்ரண்டாக வந்து தமிழக மக்களை ரசிக்க வைத்தது.ஆனால் நம் சினிமாக்காரர்கள்
கற்பனை வளத்திற்கு பஞ்சமிருக்காதே அவர்கள் எடுத்த சில திகில் பாம்பு படங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்

நீயா


ஒரு பழிவாங்கும் இச்சாதாரி நாகத்தின் கதை என எஸ்.பி.பி யின் குரலில் படம் ஆரம்பிக்கும்போதே விறுவிறுப்பு கூடிவிடும் துரை அவர்கள் இயக்கி கமலஹாசன்,முத்துராமன்.சுருளிராஜன்,விஜயகுமார் ஆகியோர் நடித்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய படம் ஆண் பாம்பை கொன்று விட்டதால் பழிவாங்கும் பெண் இச்சாதாரி நாகத்தின் கதை இச்சாதாரி நாகமாக ஸ்ரீபிரியா அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பாம்பை சுட்டுகொன்ற 5 நண்பர்களை ஒவ்வொருவராக போட்டுதள்ளுவதும் கடைசியில் படத்தின் ஹீரோ கமல் மட்டுமே தப்பிக்கிறார்.சாமியாராக நம்பியார் அவரின்
டுபாக்கூர் சிஷ்யனாக சுருளிராஜனும் நடித்திருந்த படம் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல்
இன்றும் பிரபலமான பாடல்.


பவுர்ணமி அலைகள்

பல வருடங்களுக்கு முன் உதிரிப்பூக்கள் விஜயன் அவர்கள் நடித்து வெற்றிபெற்ற படம் பாம்பு
பிடித்து தொழில் செய்யும் ஒருவன் பாம்பாக மாறுவதுதான் கதை திகிலூட்டும் படம் இது.


மனைவி ஒரு மாணிக்கம்

பாம்பை கொலை செய்து விடும் ஒருவரை பாம்பின் ஆன்மா  கொலை செய்யும் நபரின் மனைவி உடலில் புகுந்து பாடாய் படுத்தி எடுப்பதுதான் கதை .பாம்பின் ஆன்மா  புகுந்திருப்பதால்நண்பன் மனைவியுடன் உறவுவைத்துக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதை
அறிந்த அர்ஜூன் பாம்பிடமிருந்து நண்பனை காப்பாற்றுவதுதான் கதை பாம்பான ராதாவுக்கும்
அர்ஜூனுக்கும் நடிப்பதில் பலத்த போட்டி இந்தபடத்தில்.க்ளைமாக்ஸில்  நினைத்தபடியே பாம்பிடமிருந்து நண்பரை காப்பாற்றி விடுவார் ஹீரோ அர்ஜூன்

நல்லபாம்பு




கார்த்திக் அம்பிகா நடிப்பில் வந்த படம் வில்லனின் மூலம் சிறுவயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கலந்தபாம்பின் நஞ்சு ஒருவரை என்ன பாடுபடுத்துகிறது என்பது கதை ராமநாராயணன் இயக்கிய படம் இது

Saturday, 12 November 2011

சூப்பர் ஹிட் சுரேஷ் கிருஷ்ணா



ஏக் துஜே கேலியே படத்தை பாலச்சந்தர் அவர்கள் ஹிந்தியில் இயக்கியபோது அந்த யூனிட்டில்
அக்கவுண்டன்ட் ஆக வேலைசெய்தவர் இவர் .படத்தின் கதாநாயகி சில காட்சிகளில் தமிழ் பேச‌
வேண்டும் ரதிக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் மொழிபெயர்ப்பாளர் வரவில்லை.படத்தின்
ஷூட்டிங் தாமதமாவதை உணர்ந்த பாலச்சந்தர் அவர்கள் யாராவது மொழிபெயர்ப்பாளர்
கிடைப்பாரா எனத்தேடியபோது தமிழும் ஹிந்தியும் தெரிந்ததமிழரான‌அக்கவுண்டன்ட் சுரேஷ்கிருஷ்ணா சிக்கினார் அவரை வைத்தே ரதிக்கு முழுவதும் தமிழ் சொல்லி தரப்பட்டது

.
இவரது திறமையை உணர்ந்து பாலச்சந்தர் இவரை அசோசியேட்டாக சேர்த்துக்கொண்டார்
சிந்துபைரவி உள்ளிட்ட பல படங்களில் அசோசியேட்டாக இருந்த இவரை கமலஹாசனின்
நட்பால் சத்யா படத்தின் இயக்குனரானார் தொடர்ந்து கமலை வைத்து இந்திரன் சந்திரன்
படத்தை இயக்கினார்.பிரபு நடிப்பில் ராஜா கைய வெச்சா படத்தை இயக்கினார்.சரத்குமாரை வைத்து வேடன் படத்தை
இயக்கினார். இவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்கள் தயாரித்த அண்ணாமலை
படம் இயக்கினார் படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது தொடர்ந்து இவர் இயக்கிய வீரா
சற்று சுமார் ரகம்தான் அடுத்து இவர் இயக்கிய பாட்ஷா திரைப்படம் வரலாறு காணாத வெற்றி
பெற்றது.அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ஆஹா படத்தை இயக்கினார் இந்தபடம் சிறந்த‌
குடும்பசித்திரமாக வெற்றிபெற்றது.சத்யராஜ்,பிரபு வை வைத்து சிவசக்தி படமும் தோல்விப்படம் ஆகும்.இவர் இயக்கிய சங்கமம் படத்தில் ரஹ்மான் இசையில் பாடல்கள் வெற்றிபெற்றாலும் படம்
தோல்விப்படமாகும் தொடர்ந்து ஆளவந்தான்,பாபா,கஜேந்திரா,ஆறுமுகம் தொடர்ந்து
தோல்விப்படமாக  கொடுப்பது சற்றுவருத்தமளிக்கிறது.

Thursday, 10 November 2011

தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்



இதைப்பார்த்தவுடன் ஏதொ சைக்யாட்ரிக்ட் டாக்டர் நடத்தும் வலைதளத்திற்கு வந்து விட்டோமா
என்று நினைக்காதீர்கள் சரியான வலைதளத்திற்க்குத்தான் வந்திருக்கிறீர்கள்.அடுத்தப்பதிவு என்ன பதியலாம் என்று நினைத்து பார்த்து மூளையை கசக்கியபோது பைத்தியம் பிடித்து விடுவது போல் இருந்தது.கண நேரத்தில் காரியங்களை கச்சிதமாக கவ்விக்கொண்ட இம்சை
அரசன் மந்திரி மங்குனிப்பாண்டியன் போல் பதிவை கச்சிதமாக கவ்விக்கொண்டேன் அதன் தலைப்புதான் மேலே கண்டது.இதில் எனக்கு தெரிந்தவரை படங்களை குறிப்பிட்டுவிட்டேன் எனக்கு தெரியாத படங்கள் பற்றி கமெண்ட்ஸில் தெரிவியுங்கள்.

எச்சரிக்கை: இந்த பதிவை படித்துவிட்டு உங்களுக்கும் பைத்தியம் பிடித்தால்
உங்களுக்குண்டான மருத்துவச்செலவுக்காக ஒரு லட்சம் வழங்கப்படும்.இந்த அறிவிப்பை பார்த்த‌ உடனே ஆ என வாயை பிளந்து எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது
என என்னிடம் தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக எங்கள் ஊரிலிருந்து 8கிமீ தூரத்தில்
இருக்கும் ஏர்வாடியிலோ அல்லது என் செலவிலே திருச்சிக்கு சென்று அதன் அருகில்
இருக்கும் குணசீலத்திலோ தங்கி சங்கிலியால் உங்களை பிணைத்து மரத்தில் கட்டி
ஒரு மாதம் தர்ஹாவிலோ ,கோவிலிலோ தங்கி உங்களை ஒரு வழியாக்கிய பின்புதான்
உங்களுக்குண்டான ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை மிகத்தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். இதையும் மீறிகம்பெனி நிர்வாகத்தை தொந்தரவு செய்பவர்கள் நோக்கு வர்மத்தால் நோக்கப்படுவார்கள் என்பதையும்தெரிவித்து கொள்கிறேன்.
 

சரி இனி பதிவுக்கு போவோமா[ஒண்ணும் அவசரமில்ல மெதுவா போவோம் என நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது]



எங்கிருந்தோ வந்தாள்

நடிகர் திலகத்துக்கு நடிப்பு என்றால் சொல்லிகொடுக்கவா வேண்டும் தனது வழக்கமான‌
சிறந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தி இருப்பார் பைத்தியம் போல் நடித்து அனைவர்
மனதையும் கொள்ளை கொள்வார் கூடவே ஜெயலலிதாவின் சிறந்த நடிப்பும் அவரை
திருத்துவதற்க்கு அவர் தாயைப்போல் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் படத்தில் சிறப்பான‌
காட்சிகள்.

மூன்றாம்பிறை

தன்னிடம் வரும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு சிறு குழந்தையாக‌
பாவித்து அவளுக்கு தன்னிடமே அடைக்கலம் கொடுக்கும் பாத்திரத்தில்kamal   மனநிலை
பாதிக்கப்பட்டவராக sridevi  {என்ன திடீரென்று ஆங்கிலத்தில் டைப்பிங் என்கிறீர்களா பைத்தியம்
இந்த மாதிரிதான் சம்பந்தமில்லாமல் ஏதாவது செய்யும்} கடைசியில்பைத்தியம் தெளிந்த‌ அவரை பெற்றோர்
வந்து அழைத்து செல்வதும் அவ்வளவு நாள் அன்பாக பழகிய கமலை யாரென்றே தெரியாமல்
முழிப்பதும் பரிதாபகரமான காட்சிகள்.பாலுமகேந்திராவுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்த படம்,கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசிப்பாடலான கண்ணே கலைமானே பாடல் இன்று
இருக்கும் பண்பலைகளில் இரவு நேர இனிமைப்பாடல்களில் முதல் பாடலாக வலம் வருகிறது

தர்மயுத்தம்

இயக்குனர் ஆர்.சி சக்தி இயக்கத்தில் வந்த  படமிது. சிறு வயதில் தன் தாய் தந்தையரை தன் கண்
முன்னே கொடுமைப்படுத்தி கொள்ளும் வில்லன்களை எதிர்த்து போராட முடியாமல் அந்த நினைவுகளே அவனை தொலைப்பதாலும்,தாய் தந்தையரை கொன்ற நாள் அமாவாசை நாள்
என்பதாலும்.ஓவ்வொரு அமாவாசை அன்றும் வில்லன்களை கொல்லுவதற்க்கு கட்டுக்கடங்காமல் வெறி வருகிறதுஅந்த இளைஞனுக்குஒவ்வொருவராக பழி வாங்குகிறார்.
இதுவும் ஒரு மனநோய் சார்ந்த விஷயமே .இப்படி ஒரு வேடத்தில் ரஜினிகாந்த் சிறப்பான‌
நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


சிகப்பு ரோஜாக்கள்

இது 60களில் அப்போது இருந்த பாம்பேயில் நடந்த உண்மைக்கதையின் கருவிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த படம் சிறுவயதில் பெண்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால்
அவன் ஓவ்வொரு பெண்களாக கொள்கிறான் இதுவும் ஒரு மனநோய் சம்பந்தப்பட்ட விசயமே.கதாநாயகியையும் கொள்வதற்க்கு முயற்சி
செய்கிறான்.இது திகிலின் உச்சிக்கே கொண்டு சென்ற படம் குறிப்பாக அந்த பூமியில் புதைத்த‌
கை மேலே எழுவதையும் அதற்க்கு இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையும்
அருமையாக இருக்கும் கடைசிக்காட்சி திக் திக் ரகம்.
மிஸ்டர் பிரசாத்

இந்த படத்தை அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பில்லை ஆண்மைக்குறைவால் பெண்களால் வெறுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நாசர் சில பெண்களை கொலை
செய்வதும் கதாநாயகி கீதாவை கடைசியில் கொலை செய்ய முயற்சிப்பதும் பகீர் ரகம்
இதுவும் ஒரு மனநோய் சார்ந்தபடம்தான். 
92ல் வந்து வந்த இடம் தெரியாமல் போன படமிது.

மூடுபனி
இதுவும் பெண்களால் பாதிப்படைந்த ஒருவன் அனைத்து பெண்களையும் ஏமாற்றி கொள்வதுதான் கதை இதுவும் சிகப்பு ரோஜாக்கள் டைப் கதை என்றாலும் இதில்
பெற்ற அம்மாவையும் கொன்று பாசத்தையும் கைவிட முடியாமல் இறந்த அம்மாவின்
உடலை பத்திரமாக வைத்திருப்பதுதான் கதை.இசைஞானி இளையராஜாவின் 100வது படம்
இது.



குணா

சிவாஜிக்கு எப்படி நடிப்பு சொல்லிகொடுக்க முடியாதோ அதே போல் கமலுக்கும் சொல்லி
கொடுக்கவேண்டியதில்லை.மன நிலைபாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞன் ஒருவன் அபிராமி
என்ற பெயருடைய காதலியை தேடி கடைசியில் வேறு ஒருவரை கடத்தி சென்று அன்பாக ஒரு
கடினமான மலையில் உள்ள பாறையில் அடைத்து வைப்பதும் கடத்தப்பட்ட கதாநாயகியை
மீட்க போலீஸ் விரைவதும் கதை.கமல் மனநோயாளியாக அருமையாக நடித்திருப்பார்.இந்தபடத்திற்காக இவர் கண்டுபிடித்த பாறை இன்றும் குணா பாறை
என்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குதூகலிக்க செய்கிறது.



மீண்டும் ஒரு காதல் கதை

பிரதாப்போத்தன் ராதிகா நடிப்பில் வந்த படம் இது. ஒரு மனநல விடுதியில் இருக்கும் இருவரும்
தன்னையறியாமல் அன்பை பகிர்ந்துகொள்கிறார்கள்.மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குள்
காதலை சொன்ன படம் இது.அதிகாலை நேரமே பாடல் மிக இனிமையான பாடலாக இப்படத்தில்
இருந்தது

அம்மன் கோவில் கிழக்காலே

தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தான் செய்த கொலைக்காக ஜெயிலுக்கு
சென்றுவிட்டு திரும்பும் காதலி வேடத்தில் ராதா.காதலனாக விஜயகாந்த் காதலி ஜெயிலில்
இருக்கும் வரை பைத்தியமாக இருக்கிறார் காதலி ஜெயிலில் இருந்து வந்து அவர் கடைக்கண்
பார்வை பட்டதும் பழைய நினைவுகள் வந்து அவருக்கு பைத்தியம் தெளிகிறது.

ஆராரோ ஆரிரரோ

லூசாக பானுப்பிரியாவும் அவர்களை கண்காணிக்கும் வார்டனாக பாக்யராஜூம் நடித்த படம்
ப்ளாஷ்பேக்கில்பானுப்பிரியாவின் கதை கண்கலங்க வைப்பதாக இருக்கும்.பாக்யராஜின் இசை
இயக்கத்தில் என் கண்ணுக்கொரு நிலவா ஒன்ன படைச்சான் பாடல் நிறைவான பாடல்.

கல்யாணகலாட்டா

ராஜ்கபூர் இயக்கத்தில் குஷ்பூ மனநோயாளியாக‌ நடித்த படமிது நகைச்சுவை கலந்து எடுத்த படமாதலால் நன்றாக இருக்கும் .எஸ்.வி சேகர் ,சத்யராஜ்,கூட்டணியில் அருமையான‌
படம் இது .இதில் கர்ப்பிணிபெண்ணாகவும் லூசாகவும் நடித்திருப்பது சிறப்பு.


என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் குழந்தையை இழந்து தத்தெடுத்து வளர்க்கும்
தம்பதிக்கும் பாசத்திற்காக நடக்கும் போராட்டமே படம் .தம்பதியர்களாக சத்யராஜ்,சுகாசினியும்
மனநலம் பாதித்த பெண்ணாக ரேகாவும் அவர் கணவராக மறைந்த திரு.ரகுவரனும் நடித்த படம்
பாசில் இயக்கிய படம் இது.
தெய்வத்திருமகள்

சமீபத்தில் வந்த படங்களில் சிறந்த படமிது லேசாக மனநலம் பாதிக்கப்பட்ட விக்ரமும் அவரின்
செல்லமகளாக பேபி சாராவும் நடித்த படம் இது.பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் இது
இயக்கம்:விஜய்








மனசுக்குள் மத்தாப்பூ

பிரபு மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் அவரது காதலியாக சரண்யாவும் நடித்த படம்
ராபர்ட்‍‍‍‍‍‍ ராஜசேகரன் இயக்கிய படமிது எஸ்.ஏ ராஜ்குமாரின் இன்னிசையில் பொன்மாங்குயில்
சிங்காரமாய் பாடல் இன்னும் என் காதில் எதிரொலிக்கிறது


நந்தலாலா

ஜப்பானிய மொழி படமாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் வந்த படம் மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் மனநோயாளி மிஷ்கினுக்கும்  தன் தாயை
தேடி பள்ளியை விட்டு ஓடி வரும் சிறுவனுக்கும் இடையிலான கதை சிறுவனுக்கு
உள்ள தாய்ப்பாசத்தையும் மனநோயாளிக்கு உள்ள தாய்ப்பாசத்தையும் சொன்ன படம்
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்க்கு பலம்

கண்ணுக்குள் நிலவு/வில்லன்

இவ்வளவு எழுதிவிட்டு தல தளபதியை எழுதாவிட்டால் எப்படி தல அஜீத் வில்லன் படத்தில்
மனநோயாளியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் தளபதி விஜய் பாசில் இயக்கத்தில்
கண்ணுக்குள் நிலவு படத்தில் மனநோயாளியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.
கஜினி

சார்ட் டெம்பர் மெமரி லாஸ் எனும் விசித்திர மனநோயால் பாதிக்கப்பட்ட சூர்யா நடந்த எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.5 நிமிடத்திற்க்கு ஒரு முறை ஞாபகம் வரும் நோயாதாலால் பார்ப்பவர்கள் அனைவரையும் போட்டோ எடுத்து வைத்துகொள்கிறார்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த படமிது
சந்திரமுகி

மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரதாழ் படத்தின் மூலக்கதையான இந்தப்படத்தில்
ரஜினிகாந்த்,பிரபு,ஜோதிகா,நயந்தாரா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது.தான்
ரசித்து கேட்ட கதைகளில் மனதை பறிகொடுத்து அந்த கதையின் பாத்திரமாகவே தன்னை
உருவகப்படுத்திகொண்டு வாழும் பாத்திரத்தில் ஜோதிகா நிறைவாக செய்த படம் பி.வாசு
இயக்கியிருப்பார்

சேது

பாலா என்ற புதுமுக இயக்குனருக்கு சிறந்த படமாக முக்கிய இயக்குனர்கள் படத்தில் நடித்தும்
கூட பட வாய்ப்பு இல்லாமல் அப்பாஸ் போன்றோருக்கு டப்பிங் பேசிக்கொண்டு இருந்த விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது இந்த படம் விக்ரம் இந்த படத்தில் மனநோயாளியாக‌
நடித்து மனதை ரணமாக்கி விடுவார்.க்ளைமாக்ஸ் காட்சியில் வார்த்தை தவறி விட்டாய் பாடலில் இளையராஜாவின் குரலும் விக்ரமின் நடையும் நம்மை என்னவோ செய்யும் கொஞ்சம்
லேட் பிக் அப் தான் இந்த படம் என்றாலும் படத்தை தியேட்டரை விட்டே தூக்கிய சிலர் படத்தின்
பிரமாண்ட வெற்றியை வைத்து மீண்டும் இந்த படத்தை எடுத்து அரங்கு நிறைந்த காட்சிகளாக‌
ஒளிபரப்பினர்.சினிமா இண்டஸ்ட்ரியையே மாற்றிப்போட்ட திரைப்படம் இது

மனநோயாளிகளும் மனிதர்களே சொல்லபோனால் அவர்கள் குழந்தைகள் என்று சொல்வதுதான் சிறப்பாக இருக்கும் ரோட்டில் பார்க்கும் மனநோயாளிகளை கல் கொண்டு
எறிவது,கேலி பேசுவது போன்ற அநாகரீக செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள்