Monday, 29 August 2011

பா வரிசை இயக்குனர்கள் பாகம் 2


பாரதி வாசு

பாரதி வாசு என்றால் யார் என்று அனேகம் பேருக்கு தெரியாது.பி.வாசுவும்,சந்தானபாரதியும்தான் இவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து இரட்டை இயக்குனர்களாக படங்களை இயக்கினர்.இவர்கள் இயக்கியதில்
குறிப்பிடத்தக்க படங்கள் என்றால், பன்னீர் புஷ்பங்கள் ,மெல்லபேசுங்கள் போன்ற படத்தை இருவரும்
இணைந்து இயக்கினர்.இதில் பன்னீர் புஷ்பங்கள் படமும் பாடல்களும் வெற்றி அடைந்தன.குறிப்பாக‌
மலேசியா வாசுதேவன் குரலில் கோடை கால காற்றே மற்ற பாடல்களான ஆனந்த ராகம்,மற்றும்பூந்தளிர் ஆட‌
பாடல்கள் மறக்கமுடியாத பாடல்கள் ஆகும் .தொடர்ந்து மெல்ல பேசுங்கள் என்ற படத்தை இயக்கினர்.இதில்
பானுப்பிரியா.டி.வி நடிகர் வசந்த் ஆகியோர் நடித்து இருந்தனர் படத்தின் கதை நன்றாக இருந்தும் மக்களிடம்
சரியாக சென்று படம் எடுபடவில்லை.படத்தின் பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை குறிப்பாக தீபன்
சக்ரவர்த்தி குரலில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் நல்ல பாடலாக அனைவரும் முணுமுணுக்கும்
பாடலாக அமைந்தது


பார்த்திபன்

ஆரம்பத்தில் தாவணிக்கனவுகள்  போன்ற படங்களில் பாக்யராஜ் போன்றோரிடம் உதவி இயக்குனராக‌


பணியாற்றி புதியபாதை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் இவர் இயக்கிய புதிய‌
பாதை படம் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆண்பாவம் படத்திற்க்கு பிறகு சீதாவிற்க்கு திருப்புமுனை கொடுத்த‌
படம் எல்லா படத்திலும் வித்தியாசம் காட்ட நினைப்பவர்.சிறந்த முறையில் கவிதைகள் எழுதுபவர்
இவர் இயக்கிய பொண்டாட்டி தேவை,.குடைக்குள்மழை,உள்ளே வெளியே,போன்ற படங்கள் சிறந்த‌
திரைப்படங்கள் ஆகும்

தமிழ் சினிமாவும் உண்மை சம்பவங்களும்

தமிழ் சினிமாவும் உண்மை சம்பவங்களும்

பொய்யை விட எப்பொழுதும் உண்மைக்கு மதிப்பு அதிகம் பெரும்பாலும் சினிமாவில்
கற்பனை கதைகளே அதிகம்.உண்மை சம்பவங்களை வைத்து வெற்றி பெற்ற படங்கள்
குறைவு.சில படங்களில் உண்மைகதைகளை மிகைப்படுத்தி இருப்பார்கள் அப்படி உண்மை சம்பவங்களை பற்றி எடுத்த படங்களை பற்றி இந்த பதிவில்
பார்ப்போம்.



மலையூர்மம்பட்டியான்

தியாகராஜன் நடித்து பெறும் வெற்றிபெற்ற படம் 60களில் சேலம்,மற்றும் தர்மபுரி மாவட்டத்தை
கலக்கிய குற்றவாளீயின் கதை இது மறைந்த இயக்குனர் ராஜசேகரின் கைவண்ணத்தில் உருவான திரைப்படம் இது இளையராஜா இசையில் காட்டுவழி போற புள்ள கவலைப்படாத‌
என்ற பாடலே கதையில் மம்பட்டியான் கதையை சொல்லி விடும் பெறும் வெற்றி பெற்ற படம்
இது மம்பட்டியான் காதலியாக சரிதா நடித்து இருப்பார்.சில காட்சிகள் நான் மேலே சொன்னது
போல மிகைப்படித்தி எடுத்திருப்பார்கள்.

கரிமேடு கருவாயன்







இதுவும் மதுரையில் வாழ்ந்த ஒரு குற்றவாளியை பற்றிய கதைதான் இதிலும் இளையராஜா
தன் அறிமுக பாடலால் கதையை சொல்லி விடுவார் இராம.நாராயணன் இயக்கி இருப்பார்
இதில் விஜயகாந்த் கருவாயனாக நடித்து கலக்கி இருப்பார்.ஜோடியாக நளினி நடித்து இருப்பார்



கேப்டன் பிரபாகரன்

ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார் கதை கற்பனை கதைதான்
என்றாலும் அதில் வரும் வீரபத்ரன் பாத்திரம் நம்ம வீரப்பனை நினைவுப்படுத்தியது.உண்மை
விஜயகாந்தின்100வது படமான இது மிக பெரிய‌ வெற்றியை பெற்றது.



குற்றபத்திரிக்கை

ஏறத்தாழ நான் 7ம் வகுப்பு படிக்கும்போது வெளியான படம் இது அதாவது 1992ம் ஆண்டு
சில காரணங்களால் படத்தை வெளியிட முடியாமல் சென்சார் போர்டின் எதிர்ப்பால்
முடங்கி போனது நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2008ம் ஆண்டுதான் வெளியானது
அப்போது கதாநாயகனாக நடித்த ராம்கி,ரகுமான் போன்றவர்கள் நடிப்பு படம் அதிக தாமதமாக‌
வெளியானதால் இவர்களின் பாத்திரங்கள் எடுபடாமல் போனது படத்தின் கதை முன்னாள்
பிரதமர் மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டதை சொல்ல வந்ததால் தான் இத்தனை தடங்கள்.

மற்ற படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, 24 August 2011

பா வரிசை இயக்குனர்கள்

பா வரிசை இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பா வரிசை இயக்குனர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு இவர்கள் இயக்கிய படங்கள்
அனைத்திற்க்கும் தனி வரலாறு உண்டு.அப்படிப்பட்ட பா வரிசை இயக்குனர்களை பற்றி பார்ப்போம்

பாலச்சந்தர்

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால்
சினிமாவில் இணைந்தார் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை சொல்லும்
நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி ,எதிர்நீச்சல் போன்ற படங்கள் போல் தற்போது யாராலும்
எடுக்க முடியாது ஜெமினியை வைத்து இவர் இயக்கிய புன்னகை படத்தில் இடம் பெற்ற காதோடுதான்
நான் பாடுவேன் பாடலையும் படத்தையும் மறக்க முடியாது.அரங்கேற்றம்,அவள் ஒர் தொடர்கதை
சொல்லத்தான் நினைக்கிறேன்,சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்திய அபூர்வ ராகங்கள்,மன்மதலீலை
படங்களை பற்றி எல்லாம் ஒரு கட்டுரையில் எழுதி விட முடியாது .இவர் இயக்கிய தில்லுமுல்லு
சிறந்த நகைச்சுவை படம் ஆகும்.
இவர் இயக்கிய சிந்து பைரவி சிறந்த கர்னாடக இசை சம்பந்தமான படமாகவும் படத்தில் சித்ரா சிறந்த‌
பின்னணி பாடகிக்கான தேசிய விருது வாங்கிய படமாக அமைந்தது மேலும் உன்னால் முடியும்
தம்பி, வானமே எல்லை, போன்ற படங்கள்சிறந்த சமூக சீர்திருத்த படமாகவும் அமைந்தது. புதுபுது
அர்த்தங்கள், டூயட் என வெற்றி அடைந்த படங்கள் நிறைய இருந்தாலும் இவர் இயக்கிய தண்ணீர்
தண்ணீர் படம் தண்ணீர் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்திய அருமையான படம் ஆகும் இதில்
சரிதா நடித்திருப்பார் மேலும் இவர் சரிதாவை வைத்து இயக்கிய அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை
போன்ற படங்களும் சிறந்த படங்கள் ஆகும். நடிகர் விவேக்கை அறிமுகபடுத்திய மனதில் உறுதி வேண்டும்
போன்ற படமும் அதில் பெண்களுக்காக போராடும் சுகாசினியின் நடிப்பும் மறக்க கூடிய ஒன்றா. தமிழ் சினிமா
இருக்கும் வரை பாலச்சந்தர் பெயர் இருக்கும் .



பாரதிராஜா
 தேனியில் சுகாதார ஆய்வாளராக் வேலைபார்த்த பாரதிராஜா .சினிமாவில் சேர்ந்து புட்டண்ணா போன்றவர்களிடம்
உதவி இயக்குனராக பணியாற்றினார்.16 வயதினிலே படத்தில் அறிமுகமாகி செட்டுக்குள்ளே முடங்கி கிடந்த தமிழ்
சினிமாவை கிராமப்பகுதிகளுக்குள் கொண்டு வந்தவர்.கல்லுக்குள் ஈரம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும்
நடித்துள்ளார்.இவர் இயக்கிய சிகப்பு ரோஜாக்கள்,ஒரு கைதியின் டைரி, கேப்டன் மகள்,ரஜினியை வைத்து இயக்கிய‌
கொடிபறக்குதுபோன்றவை இவரது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட படங்கள் ஆகும்.
முதல் மரியாதை,கிழக்கு சீமையிலே,புதுநெல்லு புதுநாத்து,நாடோடிதென்றல், தமிழ்செல்வன்,கடலோர‌
கவிதைகள்,அலைகள் ஓய்வதில்லை,பசும்பொன் ,பொம்மலாட்டம் என எல்லாமே அருமையான படங்கள்
ஆகும் கருத்தம்மா போன்ற படங்கள் சிசுக்கொலை சம்பந்தமான சிறந்த படமாக விளங்கியது.



பாக்யராஜ்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி முன்னணி இயக்குனராக வந்தவர்.இவர் இயக்கிய முந்தானை
முடிச்சு படம் மூலம் முருங்கைகாயின் புகழை உலகுக்கு உணர்த்தியவர்.இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர்
என்று அமிதாப்பச்சனால் பாராட்டுபெற்றவர்,தாவணிகனவுகள்,முந்தானைமுடிச்சு,சின்ன வீடு போன்ற படங்கள்
இவரது சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய படங்கள் ஆகும்.நல்ல நடிப்புதிறமையும்,நகைச்சுவை
உணர்வும் இவரது படத்தில் தூக்கலாக இருக்கும்.

பாலுமகேந்திரா

இவர் இயக்குனர் மகேந்திரனின் படங்களுக்கு ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் கமலை
வைத்து இவர் இயக்கிய மூன்றாம் பிறை படம் தேசிய விருது பெற்றது.தொடர்ந்து இவர் இயக்கிய அழியாத‌
கோலங்கள்,நீங்கள் கேட்டவை போன்ற படங்கள் சிறந்த படமாக விளங்கியது.தாயின் மீது பாசம் வைத்த‌
ஒரு சைக்கோ வாலிபன் பற்றி மூடுபனி என்றபடம் இயக்கி இருப்பார் இது இசை அமைப்பாளர் இளையராஜாவின்
100வது படமாகும்.மேலும் இவ்ர் இயக்கிய வீடு திரைப்படம் ஒரு வீடு கட்டுவதற்க்கு பாமரன் எவ்வளவு கஷ்டப்ப‌
டுகிறான்,என்பதை விளக்கிய படமாகும்.இவர் இயக்கிய மாறுபட்ட திரைப்படம்தான் உன் கண்ணில் நீர் வழிந்தால்
ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார்.மேலும் இவர் இயக்கிய வண்ண வண்ண பூக்கள்,
கமலை வைத்து இயக்கிய சதிலீலாவதி ராமன் அப்துல்லா போன்ற படங்கள் சிறந்த நகைச்சுவை படங்கள்
ஆகும் இவரின் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது இளையராஜாவின் இசை என்றால் அது மிகையாகாது


பாசில்
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மிகச்சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் பூவே பூச்சூடவா
என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நாகரீகமான குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும்படியான்
மிருதுவான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கிய பூவிழி வாசலிலே படத்தில் சிறு குழந்தையை
நடிக்க வைத்த விதத்திற்க்கு எத்தனை விருது வேண்டுமானாலும் கொடுக்கலாம் புத்திர சோகத்தை
விளக்கிய சிறந்த படமாக என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்கள் விளங்கின.

குடும்ப உறவுகள் பற்றி இவர் இயக்கிய வருசம்16 படமும் அதில் வரும் பாடல்களும் என் ஆல் டைம்
பேவரிட்.மேலும் கற்பூரமுல்லை, அரங்கேற்றவேளை,விஜயை வைத்து இயக்கிய காதலுக்கு மரியாதை
சிறந்த திரைப்படமாக 200 நாட்களுக்கும் மேல் ஒடிய படம் பாலுமகேந்திரா போல் இளையராஜாவை
ஒருபடத்திற்க்கும் மாற்றாதவர்.













பாண்டியராஜன்


தமிழில் மிக குறுகிய வயதில் இயக்குனரானவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்21வயதில் இயக்குனராக
கன்னிராசி என்ற படத்தை இயக்கியவர்.இவர் அடுத்து இயக்கிய ஆண்பாவம் படம்தான் இவரை வெளி
உலகுக்கு தெரியவைத்தபடங்கள்.சமீபத்தில் ஆண்பாவம் படத்தின் வெள்ளி விழா நடந்தது .குறும்புதனமான‌
படங்களை இயக்கியவர்.கோபாலா கோபாலா படம்தான் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய‌
வெற்றிபடம் திருட்டு முழி இவரின் ஸ்பெஷல்.இவர் பாக்யராஜிடம் டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற‌
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவரும் ஒரு சிறந்த பா வரிசை இயக்குனர்தான்

வெள்ளி விழா நாயகன் மோகன் வெற்றிவிழா நாயகன் ராமராஜன்





மைக் மோகன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் அறிமுகமானது நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படம்
மூலம். இதை இயக்கியது இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.தொடர்ந்து சில படங்களில் நடித்த மோகனுக்கு
இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கத்தில் வந்த பயணங்கள் முடிவதில்லை என்ற படம் பெரும் புகழை
பெற்றுத்தந்தது இவர் மணிரத்னத்தின் இதயகோயில் ,மெளனராகம் படங்கள் வெள்ளிவிழா கண்டன. இயக்குனர்
கே.ரங்கராஜ் இயக்கிய பாடுநிலாவே,உதயகீதம் போன்ற படங்களும் இயக்குனர் சுந்தர்ராஜனின் இயக்கத்தில்
வந்த நான்பாடும் பாடல்,மெல்லதிறந்தது கதவு,,குங்குமச்சிமிழ், போன்ற படங்களின் வெற்றி மற்ற நடிகர்களை கொஞ்சம்
அசைத்து பார்த்தன.மணிவண்ணணின் இளமைகாலங்கள்,கோபுரங்கள் சாய்வதில்லை,நூறாவது நாள்,
வி.எம்.சி ஹனிபா இயக்கத்தில் வந்த பாசப்பறவைகள்,ஜி.எம்.குமாரின்(அதுதான் நம்ம அவன் இவன் ஹைனஸ்) இயக்கத்தில் வந்த உருவம் போன்ற படங்கள் இவரின் குறிப்பிடதக்க படங்கள் ஆகும் தொடர்ந்து தென்றலே என்னை தொடு,கிருஷ்ணன்

வந்தான்,விதிபடத்தின் வெற்றி இவரை தரம்உயர்த்தின.மோகன் இப்படியே தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துகொண்டிருந்தால் நான் பெங்களுருக்கு பஸ் ஏற வேண்டியதான் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே விளையாட்டாக கூறியிருந்தாக நான் படித்திருக்கிறேன்  தற்போது மார்க்கெட்
இழந்த நிலையில் சொந்த தொழிலை கவனித்து வருகிறார் இவரின் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் வெற்றிக்கும்
காரணம் ராகதேவன் இளையராஜாதான்.



ராமராஜன்

ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த ராமராஜன் மருதாணி,மண்ணுக்கேத்தபொண்ணு,போன்ற படங்களையும்
இயக்கியுள்ளார்.கங்கை அமரன் இயக்கத்தில் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றி இவரை நல்ல‌
நடிகராக உயர்த்தியது தொடர்ந்து என்னை விட்டு போகாதே,ரயிலுக்கு நேரமாச்சு,ராசாவே உன்னைநம்பி,
என்னெபெத்தராசா,பொங்கிவரும் காவேரி,ஊரு விட்டு ஊரு வந்து,எங்க ஊரு காவல்காரன், போன்ற படங்களஇவரை தரம் உயர்த்தின.கரகாட்டகாரன் படத்தின் வெற்றி   யாரும் காணாத வெற்றி ஆகும்இவரின் அதிக படங்களைஇயக்கியவர்கள்
கங்கைஅமரனும்,டிகே.போஸ் போன்றவர்கள். இவரின் படத்திற்க்கும் கைகொடுத்தவர் அண்ணன் இளையராஜாதான்

Tuesday, 23 August 2011

கமலஹாசன்



பரமக்குடி எனும் சிறு நகரத்தில் இருந்து கிளம்பி இன்று உலக நாயகனாக உருவெடுத்திருக்கும் கமல் ஆரம்பத்தில்
களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து முடித்தபோதும் முதல் படத்திலே சிறந்த குழந்தை நட்சத்திர விருதுகள்
பெற்றபோதும் இவர் கதாநாயகன் நிலையை அடைய மிகுந்த சிரமம் அடைய வேண்டி இருந்தது.ஆரம்பத்தில்
குறத்திமகன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருப்பார்.இயக்குனர் பாலச்சந்தரின் இயக்கத்தில்
இவர் அரங்கேற்றம்,மன்மதலீலை,அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் பாரதிராஜா
இயக்கத்தில் வந்த 16 வயதினிலே படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.தொடர்ந்து சிங்கிதம் சீனிவாச்
ராவ் இயக்கத்தில் வெளிவந்த இவரின் 100வது படமான ராஜபார்வை படத்தில் இருந்து இவர் தனது ஒவ்வொரு
படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் ராஜ பார்வை படத்தில் கண்தெரியாதவராக‌
நடித்து இருப்பார் பேசும்படம் என்ற படத்தில் வசனமே இருக்காது .புன்னகைமன்னன்,அபூர்வ சகோதரர்கள்
இந்தியன்,அவ்வைசண்முகி, தசாவாதாரம் என்று இவரின் திரைதாகம் இன்றும் தொடர்கிறது.

ரஜினிகாந்த்



தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை இன்று வைத்திருக்கும் நடிகர் சாதாரண நடத்துனராக‌
இருந்த இவர் இயக்குனர் பாலச்சந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் ஆனார் சிவாஜிராவ் என்ற‌
பெயர் ரஜினிகாந்த் என மாறியது சாதாரண ஸ்டாராக இருந்த இவர் 16 வயதினிலே புவனா ஒரு கேள்விக்குறி
போன்ற படங்களின் மூலம் இவர் புகழ் பரவியது.பிரியா படத்தின் மூலம் இவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்
தொடர்ந்து எஸ்,பி முத்துராமன்,ராஜசேகர் போன்றோர் இவரை தத்து எடுத்து கொண்டனர் இவர்களது
இயக்கத்தில் உருவான பிரியா,மாப்பிள்ளை,ம்னிதன் ,படிக்காதவன்,மாவீரன்,தர்மதுரை போன்ற படங்கள்
இவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.இன்று எந்திரன் வரை இவர் உயர்ந்து விட்டார்.

Monday, 22 August 2011

தமிழ் சினிமாவை கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பற்றி ஒரு பார்வை

பேபி டெய்சிராணி

யார் பையன் என்ற படம் பார்க்காதவர்கள் தயவு செய்து ஒருமுறை பாருங்கள் ஜெமினி கணேசனும் கலைவாணர்
என்.எஸ்.கேயும் இணைந்து நடித்த படம் இது படத்தில் பேபி டெய்சிராணியின் நடிப்பை சொல்ல வார்த்தையே
இல்லை.என் பெயர் பூரி என்று டெய்சி ராணி சொல்லும் போது படம் பார்ப்பவர்களுக்கு பயங்கர சிரிப்பை
வரவைக்கும்.படத்தில் கலைவாணர் ,ஜெமினி,டெய்சிராணி,மதுரம், என்று போட்டி போட்டு சிரிப்பை
வரவழைப்பார்கள்.இவர் நடித்த மற்றொரு படம் கைதிகண்ணாயிரம் இதிலும் இவரின் நடிப்பு அருமையாக‌
இருக்கும் கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் என்ற பாடல் மிக சிறப்பான பாடலாக இப்படத்தில் இடம்
பெற்றது

கமலஹாச
தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கமலஹாசன் ஏ.வி மெய்யப்ப‌
செட்டியார் அவர்கள் அப்போது புகழின் உச்சியில் இருந்த பேபி டெய்சிராணியை இந்த படத்துக்காக புக் பண்ணி
வைத்திருந்தார்.கமலஹாசனை திடீரென்று பார்த்ததும் .கமலின் துறு துறு தன்மை பிடித்து போக வாய்ப்பு
இவருக்கு வந்து விட்டது கமலின் நடிப்பை அந்த படத்தில் பார்க்கும்போது சிறு வயதிலேயே இவ்வளவு
அபாரமான நடிப்பா எல்லோரையும் வியக்க வைப்பார் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை
சிறு வயதிலேயே வாங்கியவர்.

குட்டி பத்மினி
குட்டி பத்மினி இவர் நடித்த குழந்தையும் தெய்வமும் படம் புகழ்பெற்ற திரைப்படம் ஆகும் கணவன் மனைவி
பிரச்சினையில் பாதிக்கப்படும் குழந்தையாக நடித்து இருப்பார்.கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
என்ற பாடல் இவரை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.

காஜா ஷெரிப்

தமிழ் சினிமாவின் அதிகபடங்களில் சிறுவயது கதாநாயகனாக நடித்தவர்.உதிரிபூக்கள்,கரையெல்லாம்
செண்பகப்பூ,அந்த ஏழு நாட்கள்,நான் சிகப்பு மனிதன், சம்சாரம் அது மின்சாரம் என்று நிறைய படங்களில்
நடித்தவர்.அந்த ஏழு நாட்கள்,படத்தில் ஆசானே ஆசானே என்று பாக்யராஜ் கூடவே வருவதும் சம்சாரம்
அது மின்சாரம் படத்தில் 12ம் வகுப்பு பெயிலாவதும் இவரது நடிப்பில் சிறப்பான காட்சிகள்.


ரோஜா ரமணி
பிரபல தெலுங்கு நடிகையான இவர் சிறுவயதில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தமிழில் நடித்த படம்
பக்த பிரகலாதா இவர் இவர் பிரபல நடிகரும் அஞ்சலி உள்ளிட்ட படங்களில் குழந்தையாக நடித்த தருணின்
அம்மா ஆவார்
மாஸ்டர் டிங்கு

இவர் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர் நடித்த வைதேகி காத்திருந்தாள்
படத்தில் போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும் என்று வசனம் பேசுவாரே அவர்தான் டிங்கு. தொடர்ந்து மெளன
கீதங்கள்,வருஷம்16 ,ஜப்பானில் கல்யாணராமன்,என்று அதிக படங்களில் நடித்தவர்
மாஸ்டர் பிரபாகர்
தமிழில் ஏ.பி நாகராஜன் அவர்கள் இயக்கிய வா ராஜா வா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நிறைய கருப்பு
வெள்ளை படங்களில் நடித்துள்ளார்
சிம்பு
தற்போது நிறைய படங்களில் நடித்தாலும் சிறுவயதிலேயே நடனம் நடிப்பு என்று அனைத்திலும் தன் திறமையை
வெளிப்படுத்தியவர் இவரின் தந்தை அஷ்டாவாதனி டி.ராஜேந்தர் அவர்கள் இவருக்கு பக்கபலமாக இருந்தவர்
உறவை காத்த கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்பு தொடர்ந்து என் தங்கை கல்யாணி,சம்சார சங்கீதம்
எங்க வீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்
பேபி ஷாலினி
தல அஜீத்தின் மனைவியான இவர் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த பந்தம் படம் இவருக்கு புகழை
பெற்றுதந்தது.மனோபாலாவின் இயக்கத்தில் வந்த பிள்ளை நிலா மற்றும் ஓசை போன்ற படங்கள் இவருக்கு
பெரும் புகழை பெற்றுதந்தன‌
பேபி ஷாமிலி
அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் தொடர்ந்து துர்கா தைப்பூசம் போன்ற படங்களில் நாய், குரங்கு
போன்றவற்றுடன் நடித்து குழந்தை நட்சத்திரங்களிலே அதிக புகழ்பெற்றவர்
மாஸ்டர் கணேஷ்
சிறுவயதிலேயே ஒருதாயின் சபதம் பாலச்சந்தரின் புதுபுது அர்த்தங்கள் என்று சில படங்களில் நடித்து
புகழ்பெற்றவர் நல்ல திறமையான நகைச்சுவை நடிகராக தற்போது விளங்குகிறார்
பேபி சுஜிதா
குழந்தை நட்சத்திரத்திலேயே சிறுவயதில் அபார திறமையை வெளிப்படுத்தியவர் வாய் பேச முடியாத காது
கேட்க முடியாத குழந்தையாக இவர் நடித்த பூவிழி வாசலிலே படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து
விட முடியாது தொடர்ந்து காதல் பரிசு போன்ற படங்களில் நடித்தார்.இவர் அறிமுகமான படம் முந்தானை
முடிச்சு ஆகும்.படத்தில் குழந்தையை போட்டு ஊர்வசி தாண்டுவாரே அந்த குழந்தை இவர்தான் ஒருவயது
குழந்தையாக அறிமுகமானார்
பேபி சாராசமீபத்தில் வந்த தெய்வத்திருமகள் படத்தில் நடித்தவர் இவரை பற்றி சொல்வதை விட படம் பார்த்தாலேதெரியும் இவரது நடிப்புதிறமை.விஜய் அபாரமாக இயக்கி இருப்பார்

தமிழின் சிறந்த திகில் திரைப்படங்கள் பாகம் இரண்டு

தமிழ் சினிமாக்களில் நான் பார்த்து வியந்த மற்றொரு படம் பாடும் பறவைகள் என்ற படம் பிரபல தெலுங்கு
இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கிய திரைப்படம் திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்ற படம் படத்தின்
பின்னணி இசையில் இளையராஜா மிரட்டி இருப்பார்.குறிப்பாக கார்த்திக்கும் பானுப்பிரியாவும் பிணங்களை
கிணற்றுக்குள் இருந்து இழுக்கும் காட்சி நம்மை பதட்டப்படுத்திவிடும்.புலியை அடிப்படையாக கொண்ட‌
கதை இது குறிப்பாக முதல் காட்சியிலேயே வண்டிக்காரன் புலியை பற்றி சொல்லும் காட்சியே படம் பார்ப்பவர்களை
ஈர்க்கும் பிரமாதமான திகில் படம் இது

நாளைய மனிதன்
இது வேலுபிரபாகரன் அவர்கள் இயக்கத்தில் வந்த இந்த திரைப்படம் சாவே இல்லாத மனிதன் பற்றிய‌
கதை இது இறந்து போன ஒரு மனிதன் அவனை பிழைக்க வைத்தால் என்னாகும் என்பதே கதை இறந்து போன
மனிதனை பிழைக்கவைக்கும் கதாபாத்திரத்தில் ஜெய்சங்கரும் இறந்து போன மனிதனாக அஜய்ரத்னமும்
கலக்கி இருப்பார்கள்.

அதிசயமனிதன்

நாளைய மனிதனின் தொடர்ச்சியாக வந்த படம்தான் அதிசய மனிதன் இதுவும் அதே போல ஒரு திகில் படம்தான்
அதில் நடித்த அஜய்ரத்னமே எரிந்த மனிதனாக நடித்து இருப்பார். இந்த படத்தின் தொடர்ச்சியாக எழும்பு மனிதன்
என்ற படம் வரும் என்று 90லியே வேலுபிரபாகரன் அறிவித்து இருப்பார்.என்னாச்சு சார் எழும்புமனிதன்.?

நீயா
பாம்புகள் பலி வாங்குமா என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு துரை அவர்களின் இயக்கத்தில் வந்த‌
இந்த படம் கமலஹாசன் நடிப்பில் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது ஸ்ரீபிரியா பாம்பாக‌
வந்து ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று ஆடிப்பாடுவார் பலிவாங்கும் இச்சாதாரி நாகம் பற்றிய‌
கதை இது துரை அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது இந்த திரைப்படம்

ஜெமினிகணேசன்

ஜெமினிகணேசன் படங்களை தமிழ்சினிமா உள்ளவரை யாரும் மறக்க மாட்டார்கள் அந்த அளவிற்க்கு
இவரின் படங்கள் இவர் பெயர் சொல்லும் தென்னகத்திலே புதுக்கோட்டையில் பிறந்த கணேசன் அவர்கள்
ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததால் இந்த பெயர் வந்தது காதல்மன்னன் என்ற பெயர்
இவருக்கு உண்டு இவர் நடித்த வஞ்சிகோட்டை வாலிபன்,வீரபாண்டியகட்டபொம்மன்,கப்பலோட்டிய‌
தமிழன்,கல்யாணபரிசு,பாசமலர்,ராமு,களத்துர்கண்ணம்மா,யார்பையன், தேன்நிலவு,கணவணே கண்கண்ட‌
தெய்வம் என்று இவரின் படங்கள் நீண்டு கொண்டே செல்லும் இவரின் வாரிசுகளும் சினிமாவில்
நடித்தனர் பிரபல இந்தி நடிகை ரேகா,மற்றும் நினைவெல்லாம் நித்யா படத்தில் நடித்த ஜிஜி ஆகியோர்
இவரின் கலையுலக வாரிசுகள் இவர் நடிகையர் திலகம் சாவித்திரியை மணந்தார்.1964தனுஷ்கோடி
புயலில் இருவரும் சென்று மாட்டிகொண்டனர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு உயிர் தப்பினர்
இவரின் மகள் பிரபல மகப்பேறு மருத்துவர் கமலாசெல்வராஜ் ஆவார் இவர் அண்மையில் மறைந்தார்.

Sunday, 14 August 2011

தமிழின் சிறந்த திகில் திரைப்படங்கள்


திகில் படம் எடுப்பது மிக கஷ்டமான விஷயம் ஒருவரை பயம் கொள்ள வைப்பது என்பது மிகவும் கடினமான‌
காரியம் தமிழின் சிறந்த திகில் திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

யார் நீ
தமிழில் கருப்பு வெள்ளை காலத்திலேயே வந்த சிறந்த திகில் திரைப்படம் பேய் பிசாசு என்று இல்லாமலே
படத்தில் சாதாரண விஷயத்தை வைத்து மிரட்டியிருப்பார்கள் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த
இந்த திரைப்படத்தில் வரும் நானே வருவேன் என்ற பாடல் இன்றும் மிரளவைக்கும் பாடல்.

அதே கண்கள்
சாதாரண ஒரு கொலைகாரனை பற்றி கூறும் மிகசிறந்த திரைப்படம் படத்தின் பின்னனி இசையும் கொலைகாரன்
யார் என்ற எதிர்பார்ப்பும் இறுதியில் கொலைகாரனை வரிசையாக நிற்கவைத்து ரவிச்சந்திரன் கண்டுபிடிப்பதும்
திகிலூட்டும் தருணங்கள் ஏ.வி.எம் மின் தயாரிப்பில் ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் ,காஞ்சனா
நடிப்பில் டி.ஆர் பாப்பா இசையில் வெற்றிபெற்ற திரைப்படம் இது.

சிகப்பு ரோஜாக்கள்
சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் பெண்களை வெறுத்து அவர்களை கொலை செய்யும்
பாத்திரத்தில் கமலஹாசன் மிக சிறப்பாக நடித்து பெறும் வரவேற்பை பெற்ற படம் இது.பாரதிராஜா இயக்கத்தில்
பட்டி தொட்டி எல்லாம் மிக சிறப்பாக ஓடிய படம் இது குறிப்பாக கதாநாயகி sridevikku  விஷயம் தெரியவரும்போது
பூமியில் இருந்து ஒரு கை வெளியே தெரியும்படி செய்து இருப்பார் இயக்குனர் அப்போது இளையராஜாவின் இசை
யில்,ஒளிக்கும் பின்னணி இசை மிரள வைக்கும்.
நூறாவது நாள்
மிகப்பெரிய கொலைக்குற்றவாளியான ஆட்டோ சங்கர் இத்திரைப்படத்தை பார்த்துதான் கொலை செய்து
சுவற்றில் புதைத்தாக சொல்வதுண்டு அந்த அளவிற்க்கு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இது கனவு
பலிக்குமா என்பதை இப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் .கனவில் தனக்கு நடப்பவை
எல்லாம் நிஜமாகும் பாத்திரத்தில் நளினி சிறப்பான நடிப்பை வெளிப்படித்தி இருப்பார் மோகனின்
அமைதியான வில்லத்தனமும்.சத்யராஜின் மொட்டை கெட் அப்பும் விஜயகாந்தின் நடிப்பும் படத்திற்கு பலம். இளையராஜா
தான் படத்தின் உண்மையான நாயகன் பின்னணி இசையில் மிரட்டி இருப்பார்.1984ம் ஆண்டு மணிவண்ணன்
இயக்கத்தில் வெளிவந்த படம் இது.

Wednesday, 10 August 2011

இயக்குனர் ஸ்ரீதரும் இளையராஜாவும்


தமிழில் தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி கொண்ட பழம்பெரும் இயக்குனர் இவர் இயக்கிய கல்யாணபரிசு,
நெஞ்சில் ஒரு ஆலயம்,காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் இவர் இயக்கி புகழ்பெற்ற படங்கள்.பிரபல
இயக்குனர் சந்தானபாரதி,பி.வாசு போன்றவர்கள் இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்கள்.இருந்தாலும்
தலைவரும் இவரும் இணைந்த படங்கள் புகழ் மிகப்பெரிய வெற்றியை பெற்றபடங்கள் ரஜினி,கமல்,இருவரும்
இணைந்து நடித்து இவர் இயக்கி தலைவர் இசை அமைத்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் பாடல்கள் அனைத்துக்
ஹிட் குறிப்பாக வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா,கிண்ணத்தில் தேன் வடித்து ,பாடல்கள் புகழ்பெற்றவை
தொடர்ந்து கமலை வைத்து தலைவர் இசையில் இவர் உருவாக்கிய நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம் பெற்ற‌
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலையரங்கம் ,ஒரு பூவெடுத்து வைக்கணும் தன்னாலே பாடல்களும் புகழ்பெ
ற்றவை.மேலும் நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து இவர் இயக்கிய நினைவெல்லாம் நித்யா,வெள்ளி விழா நாயகன்
மோகன் நடித்த தென்றலே என்னை தொடு,விக்ரமின் இரண்டாவது படமான தந்துவிட்டேன் என்னை போன்ற படமும்
படத்தில் இடம்பெற்ற பாடல்களும் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும்.

Monday, 1 August 2011

கவுண்டமணி செந்தில்




தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர்கள் என்றால் அது கவுண்டமணி செந்திலும்தான் இரண்டு நாட்களுக்கு
முன் ஒரு நாளிதழில் கவுண்டமணி செந்தில் காமெடி போல் அவர்களே நினைத்தாலும் நடிக்கமுடியாதுஎன்று வந்திருந்தது அந்த‌
அளவுக்கு காலச்சூழ்நிலைகள் மாறிவிட்டன இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் நடித்து சூப்பர் ஹிட்ஆன காமெடி என்றால் அது வைதேகி காத்திருந்தால் படம்தான். இதில் இடம் பெற்ற பெட்ரோமாக்ஸ் காமெடி
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி ஆகும்.இவர்கள் இருவரும் உதயகீதம் படத்தின்வெற்றியின் மூலம்
நகைச்சுவை எழுத்தாளர் வீரப்பன்  தொடர்ந்து இவர்களை வைத்து காமெடி எழுதினார்.தொடர்ந்து இவர் எழுதிய‌
கரகாட்டகாரன் காமெடி மூலம் புகழின் எல்லையை தொட்டனர் இருவரும்.தொடர்ந்துசின்னகவுண்டர்,ஜென்டில்மேன்
போன்ற படங்களில் இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர்.கவுண்டமணி, ராஜா எங்க ராஜா போன்ற படங்களில்
கதாநாயாகனாகவும் நடித்துள்ளார். இவர்களின் காலம் போல் திரும்ப வருமா என்பது கேள்விகுறியான விஷயம்தான்.

சாண்டோ சின்னப்ப தேவர்


மனிதர்களை வைத்து ஒரு படம் எடுப்பதற்குள் கால்ஷீட் பிரச்சினை ,சம்பளம் என்று பல பிரச்சினைகள்
ஒரு தயாரிப்பாளருக்கு வருகிறது ஆனால் அந்தகாலத்திலேயே விலங்குகளை வைத்து சிறந்த படங்களை
எடுத்தவர் இவர் எம்.ஜி ஆர் யை வைத்து தனிப்பிறவி, நல்ல நேரம் படங்களும் ரஜினி,கமலை வைத்து
அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம்,ராம்லட்சுமண்,தர்மத்தின் தலைவன் போன்ற படங்களையும்
மருதமலை முருகன் மீது கொண்ட பக்தியால்,தெய்வம்,துணைவன்,திருவருள், போன்ற படங்களையும்
எடுத்துள்ளார் இதில் தெய்வம் படத்தின் பாடல்கள் இன்று வரை சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும்.மருதமலை
முருகன் மீது கொண்ட பக்தியால் அங்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளார்,இவரது நிறுவனம் கடைசியாக‌
தயாரித்த படம் 1989ம் வருடம் வெளிவந்த தர்மத்தின்தலைவன்திரைப்படம்தான்

ஆச்சி மனோரமா


ஆரம்பத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு
வேலை காரணமாக குடிபெயர்ந்தது ஆச்சி மனோரமாவின் குடும்பம் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டது இவரின்
குடும்பம். மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஆரம்பத்தில் நகைச்சுவை
வேடங்களை ஏற்று தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் 1000 படங்களுக்கு மேல் நடித்து புகழ்
பெற்றவர் இரண்டாம் தலைமுறை நடிகர்கள் நிறைய பேருக்கு அம்மாவாக நடித்தவர் தற்போது உள்ள மூன்றாம்
தலைமுறை நடிகர்களுக்கு பாட்டியாகவும் நடித்தவர்.சொந்தகுரலில் பாடும் திறமை கொண்டவர் இவர் மத்திய‌
மாநில அரசு விருதுகள் நிறைய வாங்கியுள்ளார்.அன்பான குணம் கொண்டவர் இவர் சம்சாரம் அது மின்சாரம்,
பாட்டிசொல்லை தட்டாதே, ஜெய்ஹிந்த், சின்னகவுண்டர், ஜென்டில்மேன், போன்ற படங்கள் இவருக்கு
புகழை பெற்று தந்தன.

சரித்திரம் படைத்த படங்கள்


தமிழ் சினிமாவில் பயணங்கள் முடிவதில்லை என்ற படம் 80களில் வந்தது நடிகர் மோகன் இதில் பாடகராக‌
நடித்து இருப்பார் புற்றுநோயாளியாக இவர் நடித்து புகழ்பெற்றபடம் அருமையான காதல் கதை பூர்ணிமா
கதாநாயகியாக நடித்து இருப்பார் இந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள்
இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய இளையநிலா பொழிகிறது பாடல் அசத்தலான பாடல்
இது மட்டும் அல்லாமல் மணி ஓசை கேட்டு எழுந்து,ராகதீபம்,வைகரையில்,போன்ற பாடல்கள் இனிக்கும் பாடல்கள்
இந்தபடம் தமிழக திரைஅரங்குகளில் 400 நாட்கள் ஓடியது.இதே போல் மற்றொரு சாதனை படம்தான் கரகாட்டகாரன்
கரகாட்டகாரன் என்று சொன்னவுடனே நினைவுக்கு வருவது  வாழைப்பழம் காமெடிதான் படத்தின் பாடல் இயக்கம்
திரைக்கதை, நகைச்சுவை என்று அனைத்தும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்ததால் இந்த படம் ராமராஜன்
நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 486 நாட்கள் ஒடியது மதுரையில் நாட்டியா திரை
அரங்கில் மட்டும் இரண்டு வருடம் ஓடிய திரைப்படம் இது இதை அடுத்து ரஜினிகாந்த் நடித்த2005ம் ஆண்டு வெளிவந்த  சந்திரமுகி திரை
ப்படம் 800 நாட்கள் ஓடியது வேட்டையராஜாவாக ரஜினியின் நடிப்பும் ஜோதிகாவின் லகலக நடிப்பும் பி.வாசுவின்
திரைக்கதையும் இந்த படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தன‌


 படத்தின் முலக்கதை மணிச்சித்திரதாழ் என்ற மலையாள படத்தின் கதையாகும்.

சிவாஜி கணேசன்

பராசக்தி படம் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கி இருநூறுக்கும் மேற்ப்பட்ட சினிமாக்களில் நடித்து நடிகர்
திலகம் என பெயர் பெற்றவர் இன்று வரை நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி
மட்டும்தான் இவரின் ஒவ்வொரு உடல் உறுப்பும் நடிக்கும் அவ்வளவு சிறப்பு மிகுந்த நடிகர் இவர். இவர் நடித்த‌தெய்வமகன்,புதியபறவை,வசந்த மாளிகை,முதல் மரியாதை,தில்லானாமோகனாம்பாள்,பாசமலர்,என்று
இவரின் படங்களை சொல்லிகொண்டே போகலாம் பாசமலர் படத்தில் இவர் நடித்த அண்ணன் வேடம் போல்
இன்று வரை யாராலும் நடிக்க முடியவில்லை.புதிய பறவை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் பேசும்
வசனம் அப்பப்பா சொல்ல வார்த்தைளே இல்லை இவரின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் வீரபாண்டிய‌
கட்டபொம்மன் படத்தில் இவர் பேசிய வானம் பொழிகிறது வசனம் இன்று வரைக்கும் மறக்கமுடியாத வசனம்
ஆகும்.இந்த அற்புதமான நடிப்பு சுடர் 2001ல் அணைந்தது
சதி லீலாவதி படத்தின்மூலம் அறிமுகமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  பின்பு சினிமாவில் மெல்ல மெல்ல‌
தனது இடத்தை பிடித்தார் .எங்கள் வீட்டு பிள்ளை,தர்மம்தலைகாக்கும், பல்லாண்டு வாழ்க,குடியிருந்தகோயில்,
நம்நாடு,உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், அன்பே வா , போன்ற படங்களில் நடித்து தனக்கென ஏராளமான‌
ரசிகர்களை இன்றளவும் வைத்திருக்கும் நடிகர் இவர்,சினிமாவில் இவரை தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு
பிள்ளையாகவே பார்த்தனர் அநியாயங்களை தட்டி கேட்கும் காட்சிகளில் நேரிலே அநியாயம் நடந்தால் எப்படி
ஒரு மனிதனுக்கு  உணர்ச்சிகள் ஏற்படுமோ அதை சினிமா என்பதை மறந்து எம்.ஜி.ஆர் யை அநியாயத்தை
தட்டி கேட்கும் ஒரு மனிதானகவே பார்த்தனர்இவர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்த்ரபாண்டியன்.திமுக வில் இருந்த எம்.ஜி.ஆர். மனக்கசப்பு காரணமாக அதில்
இருந்து விலகி அதிமுக என்ற கட்சியை ஆரம்ம்பித்து தமிழ்நாட்டின் முதல்வரானார் இவர் 1987ம் ஆண்டு டிசம்பர்
24 நாள் மறைந்தார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்ற பாடல் வரிக்கு ஏற்ப இன்றும் மக்கள் மனதில் நின்று
கொண்டு இருக்கிறார்.