எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வெற்றிஅடைந்துள்ளன வெற்றிஅடைந்த படங்களையும் தமிழ்சினிமாவின்
இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,வசனகர்த்தாக்கள்,பின்னணி பாடகர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்,நடிகைகள்
தயாரிப்பாளர்கள் ,எடிட்டிங்,அனைவரைபற்றி அலசுவதுதான் இந்த தளத்தின் நோக்கம்
நக்கத் என்ற இயற்பெயருடைய குஷ்பூ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து எஸ்.பி முத்துராமன் இயக்கிய தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.முதல் படத்திலேயே யார் இந்த நடிகை என எல்லோரையும் விழிகள் வியக்கவைத்தார்.துரு துரு குஷ்பூவை எல்லா மக்களுக்கும் பிடித்த காலம் அது.இரண்டாவது படமான வருஷம் 16 மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூவுக்கு தமிழக பெண்கள் ,ஆண்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.கொழுகொழுவென்று இருந்த குஷ்பூவை
அனைவருமே இந்தப்படத்தில் விரும்பினர்.அதன் பின் வந்த சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூ அசைக்க முடியாத அளவிற்க்கு சென்று தமிழ்நாட்டில் திருச்சியில் கோவில் கட்டுமளவிற்க்கு சென்றார் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது
தமிழ்நாட்டில்தான்.சின்னதம்பி படத்திற்க்கு பிறகு பிரபுவுடனே உத்தமராசா,பாண்டித்துரை என தொடர்ந்து நடித்ததால் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் காதல் என்று பரபரப்பு நிலவியது அந்நாட்களில். ஒரு கட்டத்தில் பிரபுவும் குஷ்புவூம் ரகசியதிருமணம் என்றுதினத்தந்தி நாளிதல் செய்தி வெளியிட்டது மீடியாக்களில் பரபரப்பு நடிகையாகவே குஷ்பூ வலம் வந்தார்.மீடியாக்களில் மட்டுமல்லாது குஷ்பூ பெயர் ஹோட்டல்களில் கூட சாருக்கு ரெண்டு குஷ்பூ இட்லி பார்சல் என்று சொல்லுமளவிற்க்கு எல்லா ஹோட்டல்களிலும் குஷ்பூவின் பெயரில் இட்லி கூட பரபரப்பாக இருந்தது.பின்பு முறைமாமன் படம் மூலம் சுந்தர்.சி யை லவ்விய குஷ்பூ அவரையே மணந்து தமிழ்நாட்டின் மருமகளாகி விட்டார்.தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்
இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச்சேர்ந்தவர்.நாட்டுப்புற பாடல்களில்
கைதேர்ந்தவர்.நன்றாக நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில் பாட்டிக்கு நல்லதொரு நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்.தொடர்ந்து இவரின் ஏட்டிக்கு போட்டி,கோபாலா கோபாலா உட்பட பாண்டியராஜனின் பல படங்களில் நடித்து நடிப்புக்கு பெருமைசேர்த்தவர் இவ்வளவு புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர் திரையுலகத்தினராலும் பலராலும் புறக்கணிக்கப்பட்டு இவரது சொந்த கிராமமான கொல்லங்குடியிலேயே வசித்து வருகிறார் மிகவும் வறுமையில் வாடுவது குறிப்பிடத்தக்கது.
பறவை முனியம்மா
இவரது பல பாடல்களை நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இவரது கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன்.2003ம் ஆண்டு வந்த தரணி இயக்கிய தூள் படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு வந்தார் படம் முழுக்க இவர் இருந்தாலும்.க்ளைமாக்ஸில் இவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லபேராண்டி என்ற பாடலே படத்திற்க்கு மிக மிக வலு சேர்த்தது.அந்த பாடலில் விக்ரமின் ஆக் ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன
தொடர்ந்து விவேக் நடித்த காதல் சடுகுடு,சரத்குமார் நடித்த ஏய் உட்பட பல படங்களில் நடித்து
இன்றுவரை வெற்றிகரமான சினிமா பாட்டியாக வலம் வருகிறார்.இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பறவை எனும் கிராமமாகும்.
தேனி குஞ்சரம்மா
இவர் தேனியை சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம் சமீபத்தில் மறைந்துவிட்டார்.சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த கொக்கு சைவ கொக்கு
என்ற பாடலையும் காதலன் படத்தின் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடலையும் பாடியுள்ளார்.குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள்ளிப்பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்
இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் இவரின் தந்தை கன்னட நடிகர் சக்திபிரசாத் என்பவராவார்.
கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு வந்து புகழ்பெற்றவ ரஜினிகாந்த்,முரளி,மோகன் ஆகியவர்கள் வரிசையில் இவரும் புகழ்பெற்றவர்.இவர் இராமநாராயணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த நன்றி படத்தில் அறிமுகமானார்.இந்தப்படத்தில் கராத்தே வீரராக நடித்திருப்பார்
இவர் ஆக்சன் கிங் அர்ஜூன் என பலரால் அன்போடு அழைக்கப்பட்டார்
ஆரம்பகாலங்களில் இவர் படம் அதிகம் பேசப்படாவிட்டாலும் ஓரளவிற்க்கு ரசித்து பார்க்கும்படி
இருக்கும் கவுண்டமணியுடன் இவர் ஆரம்பத்தில் நடித்த வேஷம் என்ற படத்தை நான் பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன் நல்ல நகைச்சுவை அந்தப்படத்தில் இருக்கும்.இவருக்கு முதலில் ஹிட் ஆன படம் சங்கர் குரு என்றுதான் நினைக்கிறேன் ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜா இயக்கிய படம் தொடர்ந்து தாய்மேல் ஆணை ,சொந்தக்காரன் என
ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக சில படங்களில் நடித்தார்.இந்த படங்கள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.திரும்பவும் ராஜாவின் இயக்கத்தில் பல பெண்களை காதலிக்கும் தாயம் ஒண்ணு என்ற படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்
படமும் ஓரளவிற்க்கு ஹிட் படமாகும்.தொடர்ந்து இசைஞானியின் இசையில் இவர் நடித்த அண்ணனுக்கு ஜே,துருவநட்சத்திரம் படங்களில் பாடல்கள் மட்டும் ஹிட் ஆனது.இப்படியே போய்க்கொண்டிருந்த அர்ஜீனின் வாழ்க்கையில் மைல்கல்லாக வந்தபடம்தான் சங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் ரஹ்மானின் இசையில் அறிமுக இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.இதே சங்கருடம் இவர் மீண்டும் இணைந்த முதல்வன் படமும் வெற்றிப்படமானது.இவருக்கு நடிக்க மட்டுமின்றி இயக்கத்திலும் கில்லாடி இவர் இயக்கிய ஜெய்ஹிந்த் படம் அதிக நாட்கள் ஓடிய படமாகும்.ஆகஸ்ட் 15 அன்று இவர் பிறந்ததாலோ என்னவோ இவர் படங்களில் நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும்
இவர் சேவகன்,தாயின் மணிக்கொடி முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.நடுவில் ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ள படத்தில் தொடர்ந்து நடித்ததால் இவர் படங்களுக்கு கொஞ்சம் வரவேற்பு
இல்லாமல் போனது உண்மை.இழந்த வரவேற்பை அஜீத்துடம் நடித்த மங்காத்தா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து திரும்பவும் பெற்றார்.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவர் பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமம்எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஐந்து நிமிடத்தில் பாடல் எழுதிவிடக்கூடிய வல்லமை பெற்றவர்.இவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்கு உள்ளது.இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற மயக்கமா கலக்கமா என்ற பாடல் இந்த பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் வரி மிகவும் என்னை கவர்ந்தது.எத்தனையோ சிறப்பான பாடல்களை எழுதிய மகான் இவர்.இவர் இயேசு காவியம்,அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதியவர்.இவரின் மருமகன் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் ஆவார் கண்ணதாசன் சொல்ல சொல்ல கேட்டு எழுதியவி இவர். இவர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் சிவகங்கை சீமை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் ஆவார். கொஞ்சம் மதுப்பழக்கம் உள்ளவர்.இவர் மதுப்பழக்கவழக்கத்தை உள்ளடக்கிய வசந்தமாளிகை படத்தில் இடம்பெற்ற மதுக்கிண்ணத்தை ஏந்துகிறேன்.இரண்டு மனம் வேண்டும் உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள்.ரத்ததிலகம் படத்தின் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பரமசிவன் கழுத்திலிருந்து பாம்புகேட்டது போன்ற
பாடல்களில் நடிக்கவும் செய்துள்ளார் இவரின் மகள்கள்
விசாலி,மதுபாலா ஆகியோர் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர்கள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி,கேவி மகாதேவன் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் இவர் இசைஞானி இளையராஜா இசையில் எழுதிய மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் இன்றுவரை இரவு நேரத்தை இனிமையாக்கும் பாடலாக உலா வருகிறது.இதுவே சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும் .இத்தோடு உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 1981 ஜூலை மாதம் மரணமடைந்தார் இறந்தாலும் பிறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்னும் மக்கள் மனதில்
வாழ்ந்துகொண்டிருப்பவர் இவர் .
இதைப்படித்து விட்டு யாரும் தப்பாக நினைத்து விடாதீர்கள் சினிமா எடுக்க நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை சினிமா வாய்ப்புக்காக அலையவில்லை கம்பெனி கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்கவில்லை.சிறு வயதில் இருந்து எப்படியெல்லாம் அப்பா அம்மாவிடமும் வாத்தியாரிடமும் பள்ளிக்கு கட் அடித்தும் சினிமா பார்த்து இன்று உருப்படாமல்
இருப்பதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு[அவசியம் இந்த கேவலமான வரலாற எல்லாரும் படிச்சுதான் ஆகணுமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது]
காட்சி 1
அது 1982ம் ஆண்டு மதுரை மிட்லண்ட் திரையரங்கில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களை அது எரிச்சலில் ஆழ்த்துகிறது.ஏம்மா சின்னப்பையனெல்லாம் தூக்கிட்டு சினிமா பார்க்க வரீங்க என்று பலர் கேட்டு உறவினர் வீட்டுக்கு சென்று உறவினர்களோடு படம் பார்க்க சென்ற என் அம்மாவுக்கு எரிச்சலை கொடுத்தது என் அம்மாவின் படம் பார்க்க வேண்டும் என்ற கனவில் ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டேன். என் கத்தல் கதறல் தாங்கமுடியாமல் அம்மாவும் வெளியே வந்தார் என்னை தூக்கி கொண்டு கோபத்தில் இரண்டு அடி அடித்தார் சினிமா பார்க்க கூடாது என்று அழுததற்காகநான் வாங்கிய
முதல் அடி அது.பின்னாட்களில் சினிமாவாக அதிகம் பார்த்து கெட்டுப்போகப்போகிறான் என்பதை அறியாமல் அடித்த அம்மாவின் முதல் சினிமா அடி அது.பின்னாளில் மிட்லண்ட் தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்காமல் அழுதிருக்கிறோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்
அது அப்படி என்னதான் படம் என்று நீங்கள் கேட்பது காதில் கேட்கிறது.மோகன் நடித்து இசைஞானியின் இசையில் ஆர்.சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வந்த பயணங்கள் முடிவதில்லை என்ற வெற்றிப்படத்தைத்தான் நான் யாரையும் பார்க்க விடாமல் செய்திருக்கிறேன்.அறியாத பையன் தெரியாம செஞ்சிட்டேன் அப்ப எனக்கு ஒரு வயதுதான் ஆனது.
காட்சி 2
இப்ப வருஷம் 1988 .எனது ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி என்ற சிறிய கிராமம்
மாலையில் பள்ளி விட்டு வந்து ஹோம் வொர்க்கை செய்யாமல் பாக்யராஜ் நடித்த தூறல் நின்னுப்போச்சு படத்தை எங்கள் ஊரில் மிகப்பழமையான டெண்டுகொட்டகை என்று சொல்லக்கூடிய தங்கவேல் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்தேன்
கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து நாலைந்து அடிவைத்தார்கள் வீட்டில்.அதையும் மீறி அந்த படத்தை பார்த்து விட்டு வந்தவுடன் தான் என் மனம் நிம்மதி அடைந்தது.படம் பார்ப்பதற்க்கு பைத்தியம் பிடித்து அலைந்தகாலம் அது.
காட்சி 3 வருடம் 1989
இந்தமுறை தியேட்டரெல்லாம் கிடையாது.அந்நாட்களில் பக்கத்து வீடுகளில் ஒரு விசிஆர் ஐ வாடகைக்கு எடுத்துவந்து நாலைந்துபடம் போடுவார்கள்.அன்று விடுமுறை நாள் சரி இன்னைக்கு புள்ள படம் பார்த்துட்டுபோகட்டும்னு விட்டாங்க பக்கத்து வீட்டில் காலையில் ஆரம்பித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு 11 மணிக்கு முடிந்தது.அது முடிந்தவுடன் கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது.அதுவும் 1.30க்கு முடிஞ்சது.சிறிது உணவு இடைவேளை மீண்டும் இரண்டு மணிக்கு கலைஞரின் பாசப்பறவைகள் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமியும் ராதிகாவும் அனல்பறக்க வாதாடிகொண்டிருக்கிறார்கள் சிவக்குமார் நான் நான் நானே கொன்னேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகொண்டிருக்கிறார்.இந்த நேரத்தில் வீட்டிலிருந்து அம்மா டேய் டியூசனுக்கு நேரமாச்சு ஓடிவா என்கிறார்கள்.நான் வழக்கம்போல முடியாது என்கிறேன் இந்தமுறை எனக்கு துணைக்கு
என் தம்பியும் சேர்ந்துகொள்கிறான்.பாசப்பறவைகள் படமும் முடிந்துவிட்டது.அடுத்ததாக ராமராஜன் நடித்த என்னப்பெத்த ராசா காத்துக்கொண்டிருக்கிறது.படம் பார்க்கவேண்டும் என்ற நினைப்பை அம்மா இப்படி வந்துகெடுக்கலாமா என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு அழுது அடம்பிடித்தேன் என் அம்மா வீட்டு வாசலில் வைத்து அடி வெளுக்கிறார்கள்.என் தம்பியும் என்னுடன் சேர்ந்து அடி வாங்குகிறான்.ஒரு வழியாக டியூசனுக்குத்தான் சென்றோம்.
காட்சி 4 1990 லிருந்து 91 வரை
அது 1990ம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறேன்.அந்த நேரத்தில் தினத்தந்தி வெள்ளிமலரில் பிரசாந்த் என்ற புதுமுகம் நடிக்கும் வைகாசிபொறந்தாச்சு என்ற படத்தின் ஸ்டில்கள் அதில் வந்திருந்தன.சில நாட்களில் படமும் ரிலீசானது படம் மகத்தான வெற்றிபெற்றது என்னுடன் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் எல்லாம் ஒரு ஞாயிற்றுகிழமை விடுமுறையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டுவந்து பீற்றிக்கொண்டிருந்தனர்.என்னை எங்கள் வீட்டில் கூட்டிச்செல்லவில்லை இந்த வருத்தம் எனக்குள் இருந்தது.சரியாக இரண்டு மாதம் கழித்து 1991 மே மாதம் ஆண்டுத்தேர்வு விடுமுறை வந்தது .நான் வழக்கம்போல விடுமுறைக்கு என் பாட்டி வீட்டுக்குசென்றேன் என் பாட்டியின் வீடு காரைக்குடி அருகில் தேவக்கோட்டையில் உள்ளது .அங்கு சரஸ்வதி என்ற திரையரங்கில் வைகாசிபொறந்தாச்சு படத்தை படம் வந்து இரண்டு மாதங்கள் கழித்து செகண்ட் ரிலீசாக அங்கு திரையிட்டு இருந்தனர்.இந்த முறை படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அம்மாவிடம் அடம்பிடித்தேன்
இந்த படத்திற்காக சாப்பிடாமல் கிடந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினேன்.வேறு வழியில்லாமல் என்னுடைய அம்மாவும் ஒரு நல்ல நாளை பார்த்து ஒரு காலை ஷோவிற்க்கு பவுடர் போட்டுகூட்டிசென்றார்கள்சென்றேன் .நான் சென்ற அந்த நாள் தேவக்கோட்டை நகரம் முழுவதும் ஒரு கும்பல் கடையை அடைக்கசொல்லி கட்டாயப்படுத்தியது.என்ன ஏதுனு கூட கேட்காம தியேட்டருக்கு போனா தியேட்டரிலும் இன்று காட்சி இல்லை என சொன்னார்கள்.ஏன் என்று கேட்டதற்க்கு பிரதமர் ராஜிவ்காந்தியை குண்டுவைத்து கொன்றுவிட்டார்களாம் என்றார்கள்
அடப்பாவிகளா கஷ்டப்பட்டு அம்மாவிடம் அடி வாங்கி உதை வாங்கி படத்துக்கு சென்றால் இப்படி பண்ணிவிட்டார்களே என்று சோனியா,ராகுல்.பிரியங்காவை விட எனக்கு கோபம் தலைக்கேறியது.நான் படம் பார்க்க வரும்ம்போதுதானா ராஜிவை கொல்லணும் என்று மனசு சற்று கோபப்பட்டது.சிறிது நாட்கள் கழித்து பிரச்சினை சற்று தணிந்த பிறகு அந்த வைகாசி பொறந்தாச்சு படத்தை பார்த்து என் பிறவிப்பயனை அடைந்தேன்.
காட்சி 5
இப்பொது நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் வருடம் 1993 ம் வருடம் அது.என் மாமா ஒருவர் எங்கள் வீட்டில் தங்கிவேலை பார்த்துவந்தார்.அன்று அவருக்கு விடுமுறை நாள் எனக்கோ பள்ளி நாள் மதியம் சாப்பாடு இடைவேளைக்காக அருகில் உள்ள பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு வருகிறேன் சாப்பிட்டு பள்ளிசெல்லாமல் என் மாமாவிடம் எங்க போறிங்கன்னு கேட்டேன் அவர் சொன்னார் எஜமான் படம் ராம்நாதபுரத்துல ரிலீசாகி இருக்கு அங்கபோறேன் என்கிறார்.நானும் வருவேன் என வழக்கம்போல என்னுடைய வேலையை காண்பித்தேன்.அம்மாவும் அவர்கள் வேலையை காண்பித்தார்கள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அழுதுகொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் போய் உட்கார்ந்துகொண்டேன் என் பிடிவாதம் தாங்காமல்
எஜமான் படத்திற்கு என் மாமாவுடன் என் அம்மாவால் அனுப்பிவைக்கப்பட்டேன்
காட்சி6
இது 1996ம் வருடம் 10ம் வகுப்பு படிக்கிறேன் சரியாக படிப்பு வரவில்லை என்று அப்பாவால்
கொஞ்சம் தூரமாக உள்ள கிறிஸ்தவ பள்ளியில் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன்.எங்கு சென்றாலும் என் சினிமா தாகம் அடங்காதல்லவா.எல்லோரும் பப்ளிக் எக்ஸாம் வருகிறது என்று சீரியஸாக படித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஹாஸ்டலில் வாரம் ஒரு படம் விசிஆர்ல் போடுவார்கள் தொடர்ந்து படித்துக்கொண்டேயிராமல் கொஞ்சம் ரிலாக்ஸ்க்காக படம் போடுவார்கள் அன்று அப்படித்தான் நாசர் நடித்த அவதாரம் படத்தை எடுத்து வருகிறார்கள்
படம் ஆரம்பித்து கொஞ்சநேரத்தில் கரண்ட் கட்டாகிறது.படத்தை அடுத்த வாரத்திற்க்கு ஒத்திவைத்து விடுகிறார்கள்.இரண்டு நாட்கள் கழித்து பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் கண்ணை போட்டு கசக்கி பிழிந்து கண் வழி என்று லீவ் லெட்டர் எழுதி ஹாஸ்டல் வார்டனிடம்
கையெழுத்து வாங்கி மேலே ஹாஸ்டல் பெட்ரூமில் படுத்துவிட்டேன் என்னோடு சேர்ந்து இன்னொரு பையனும் காய்ச்சல் என்று படுத்து இருந்தான்.அவனிடம் நைசாக பேச்சுக்கொடுத்தேன் பெட் ரூமில்தான் டிவியை வைத்து பூட்டி இருப்பார்கள்
நாம் சாவியை எடுத்து டிவியை திறந்து படம் பார்க்கலாம் என்று சொன்னேன் அதற்க்கு அவன் சொன்னான் படம் 12.30க்கு பார்ப்போம் அதற்க்கு முன் 12மணிக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் சீரியல் வரும் அதைப்பார்ப்போம் என்கிறான் சரியாக கொலையுதிர்காலம் முடிந்தது விசி ஆர் யை ஆன் செய்து அவதாரம் படத்தை போடமுயற்சி செய்கிறேன் சிறிது தூரத்தில் பள்ளியின் ஹெட்மாஸ்டர் ஹாஸ்டலில் பொய் சொல்லி விடுமுறை எடுப்பவர்களை
கண்காணிக்க திடீரென்று ரவுண்ட்ஸ் வருவார்.அப்படி அவதாரம் படத்தை நான் போட முயற்சி செய்தபோது நரசிம்ம அவதாரத்தில் ஹெட்மாஸ்டர் நின்றார்.ரெண்டு பேரையும் அவரால் எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்தார் ஏண்டா நாய்களா பள்ளிக்கு காய்ச்சல்னு பொய்யா லீவ் லெட்டர் கொடுத்துட்டு படமா பாக்குறிங்கன்னு அடித்தார் பாருங்க யப்பா இன்னும் வலிக்கிறது.
அத்தோடு நான் விடவில்லை பின்பு தொழிற்கல்லுரியில் சேர்ந்துபடித்தேன் அங்கும் இதே போல கிளாசுக்கு கட் அடித்து படம் பார்த்து அவ்வளவாக எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துள்ளேன்.இன்று வரை திரையரங்குக்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறென். மொக்கைப்படமாக இருந்தாலும் ஏதாவது ஒரு படத்துக்கு சென்றுவிடும் சினிமா பைத்தியம் நான்.
இவர் தந்தை சிறுவயதில் இயக்கிய படங்களில் சிறுவயது விஜயகாந்தாக இவர்தான் நடித்திருப்பார்.பின்பு ஒரளவு 15,16 வயதுகளில் ராம்கி நடித்து இவர் தந்தை இயக்கிய
இது எங்கள் நீதி என்ற படத்தில்.பள்ளியில் படிக்கும் மாணவனாக நடித்து பாதியில் இறந்துவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற விஜய்க்கு படிப்பு ஏறவில்லை இவ்வளவிற்க்கும் தற்போதைய டி.வி அறிவிப்பாளரும் ராஜ்யசபா எம்.பி ரபிபெர்னார்ட்தான் விஜய்க்கு வகுப்பாசிரியர்.கல்லூரிக்கு செல்லாமல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை சென்னை உதயம் தியேட்டரில் பலமுறை பார்த்ததாக சொல்வதுண்டு
இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதை புரிந்துகொண்ட இவரது தந்தை இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினால்தான் சரியாகவரும் என்று இவரை தன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்றபடத்தில் அறிமுகப்படுத்தினார் படத்தின் ஹீரோயின் ஈஸ்வரிராவ்.
படத்தில் கோர்ட் சீன்களை வைத்து இவரது தந்தை தன் வழக்கத்தை மாற்றாமல் எடுத்திருப்பார்
படம் சுமாராகத்தான் போனது.அடுத்ததாக விஜய் தன் தந்தை இயக்கத்தில் செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்தார் எஸ்.ஏ சந்திரசேகர் மீது உள்ள மரியாதைக்காகவும் விஜய் மீது உள்ள நட்புக்காகவும் விஜயகாந்த் கெளரவவேடத்தில் இப்படத்தில் நடித்தார்.இப்படம் சற்று வெற்றிபெற்றது.அடுத்ததாக தந்தை இயக்கத்தில் ரசிகன் படத்தில் நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் ஓடியதற்க்கு சங்கவியின்
திகட்டலான கவர்ச்சியும் ஒரு காரணம் அடுத்தடுத்து வந்த விஷ்ணு,ரங்கநாதன் இயக்கத்தில் வந்த கோயமுத்தூர் மாப்ளே உட்பட சில படங்களில் சங்கவியின் கவர்ச்சியே பிரதானமாக இருந்து படம் வெற்றிபெற உதவியது.இதற்க்கு மேல் இப்படிப்பட்ட படங்களில் நடித்து கொண்டிருந்தால் நன்றாக இருக்காது
என்பதை உணர்ந்த விஜய் ,பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் பூவே உனக்காக என்ற படம் 200 நாட்களை கடந்து குடும்பத்தோடு அனைவரும்
பார்க்கும் சிறந்தபடமாக இருந்தது.அடுத்ததாக பாசில் இயக்கத்தில் நடித்த காதலுக்கு மரியாதை
இவருக்கு டேர்னிங் பாய்ண்ட்டாக இருந்தது இந்தப்படம் சிறந்த இசைஞானியின் இசையாலும்
பாசிலின் சிறந்த இயக்கத்தாலும் விஜய் ஷாலினியின் சிறப்பான நடிப்பாலும் 300 நாட்களை கடந்து ஓடியது.இதோடு விஜய் மார்க்கெட் சூடுபிடித்து இதுபோன்ற காதல் கதைகளில் நடிக்க
ஆரம்பித்தார் அதில் துள்ளாதமனமும் துள்ளும் படம் சிறப்பாக ஓடியது படத்தை இயக்கியவர்
எழில்.இதற்க்குபிறகு இவரின் படங்கள் சொல்லிகொள்ளும்படியாக இல்லை நடுவில் செல்வபாரதி இயக்கத்தில் நடித்த வசீகரா நல்ல படமாக இருந்தும் என்ன காரணத்தினாலோ படம் சரியாகபோகவில்லை.இந்த நேரத்தில் இவருக்கு வந்து சேர்ந்த இயக்குனர் ரமணா அவர்கள்.இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த திருமலை என்ற படம் மசாலா படமாக இருந்தது.இந்த படத்தின் சுமாரான வெற்றி
இவருக்கு கொஞ்சம் தெம்பைகொடுத்தது.அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடித்த கில்லி படம்
மிகப்பெரும் வெற்றிபெற்றது.தொடர்ந்து மதுர,பகவதி,திருப்பாச்சி,சிவகாசி என்று கரம்மசாலா
படங்களாக நடிக்க ஆரம்பித்தார்.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது.இந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் இயக்குனர் சங்கரின் நண்பன் படத்தி நடித்தார்.படத்தின் வெற்றியால்.இப்போது பழைய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும்,' துப்பாக்கி' படம் சிறக்க வாழ்த்துவோம்
கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய கண் சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகமாகியவர் இவர்.இன்று தன்னுடைய நூறாவது படத்தை தாண்டி சென்றுவிட்டார்.இவர் அறிமுகமாகிய முதல் படத்தில் ஓல்லியான உடல்வாகுடன் கார்த்திக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருவார்.இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவரே.தொடர்ந்து புதுப்பாடகன்,புது மனிதன் ,மெளனம் சம்மதம் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார்.இவரின் வில்லத்தனத்திற்க்கு கைகொடுத்த படம் ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம்தான்.முறுக்கேற்றும் உடம்புடன் வில்லனாக இவர் நடித்த புலன் விசாரணை படமே யார் இவர் என எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.தொடர்ந்து வில்லத்தனம் போரடிக்க கேப்டன் பிரபாகரன் அப்பாவி காட்டிலாகா அதிகாரியாக நடித்து பெயர் வாங்கினார்
கே.எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் இவர் புகழை உயர்த்தியது என்றால் .இயக்குனர்
பவித்ரனின் சூரியன் சூப்பர்ஹிட் படமாகி இவருக்கு ஒரு அசைக்க முடியாத கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது.தொடர்ந்து ரவிக்குமாரின் நாட்டாமை,விக்ரமனின் சூரிய வம்சம் போன்ற படங்கள் இவர் புகழை உயர்த்தியது.தற்போதும் பிஸியாக நடித்துக்கொண்டும்
சமத்துவமக்கள் கட்சி என்ற அமைப்பையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்
நடிகர் இயக்குனர் ராமராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர்.காலப்போக்கில் விக்ரமன் உட்பட சில இயக்குனர்களிடம் புது வசந்தம் உட்பட சில படங்களில் பணியாற்றியவர் புதுவசந்தம் உட்பட பல சூப்ப்ர்ஹிட் படங்களை தயாரித்த ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாகவே இவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .இவரின் முதல் படம் புரியாத புதிர் படம் க்ரைம் சப்ஜெக்ட் படமாகும்.இதில் நடிகர் ரகுவரன் பேசிய ஐ நோ வசனம் உலகப்புகழ்பெற்றது.இவரின் முதல் படம் போதிய வெற்றி அடையாவிட்டாலும் இரண்டாவது படமான சேரன் பாண்டியன் மாபெரும் வெற்றிப்படமானது.இதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம்தான்.தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ்க்காகவே ஊர் மரியாதை என்றொரு படம் எடுத்தார் இது இவருக்கு பெரும் தோல்வியை கொடுத்த படம்.அவ்வப்பொழுது வெற்றிப்படமும் தோல்விப்படமும் கொடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இவருக்கு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து இவர் இயக்கிய நாட்டாமை படம் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது இந்த கதையின் தெலுங்கு பதிப்பில் ரஜினிகாந்த் பெத்தராயுடு என்ற பெயரில்நடித்து ஆந்திராவிலும் பெரும் வெற்றிப்படமானது.இந்த நாட்டாமை படம் இவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தது என்றால் மிகையாகாது.தொடர்ந்து ஜனரஞ்சகமான படங்களாக எடுத்தார்.அடுத்ததாக ஏ.வி.எம்மின் சக்திவேல் என்ற படமும் இவருக்கு ஒரளவிற்க்கு நற்பெயரை வாங்கிகொடுத்தது.வெற்றிப்படங்களாக கொடுத்தவுடன் ரஜினிகாந்தின் பார்வை இவர் மேல் பட்டது.ரஜினிக்காக இவர் இயக்கிய படம் முத்து.இதற்கு அடுத்து இவர் ரஜினியுடன் மீண்டும் இணைந்த படம் படையப்பா.மகத்தான வெற்றிப்படமானது.கமலின் பார்வையும் இவர் மேல் பட அவருடன் இணைந்து அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம்,தெனாலி,தசாவாதாரம் வரை வெற்றிப்படங்களை கொடுத்தார்.இவர் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது இவர் தலையை காட்டிவிட்டு செல்வார்.தற்போதுள்ள விஜய்,அஜீத்,சிம்பு என இளைய தலைமுறை நடிகர்களுடன் மின்சாரகண்ணா,வில்லன்.சரவணா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்,விஜயகாந்திற்காக தர்மச்சக்கரம் படத்தையும்,பிரபுவுக்காக பரம்பரை,பெரியகுடும்பம் படங்களையும் கார்த்திக் நடிப்பில் பிஸ்தா படத்தையும் சூர்யாவிற்காக ஆதவன் படத்தையும் இயக்கியுள்ளார்.முதிய நடிகர்களில் சத்யராஜையும் இளைய நடிகர்களில் தனுஷையும் மட்டும் இவர் இயக்கவில்லை.இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,சிற்பி,எஸ்.ஏ ராஜ்குமார்,செளந்தர்யன்,வித்யாசாகர்,தேவா,ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து காலத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.இவரின் தனிச்சிறப்பு எந்த ஒரு படத்தையும் 45 நாட்களுக்குள் எடுத்து முடித்து தயாரிப்பாளருக்கு செலவு வைக்க மாட்டார்.
பயப்படாதீர்கள் ஜே.கே ரித்திஷையோ பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றியோ எழுத மாட்டேன்
வழக்கம்போல இதற்க்குஒரு மொக்கை முன்னுரை கொடுத்து மின்வெட்டால் பேன் ஓடாமல்,பல்ப் எரியாமல்,வீட்டில் சட்னி அரைக்க மாவு அரைக்க கரண்ட் இல்லாமல் கஷ்டப்படும் உங்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஓவ்வொரு நடிகரும் நடித்த நகைச்சுவைப்படங்களை நடிகர் வாரியாக பார்ப்போம்
எம்.ஜி.ஆர்
இவர் காமெடிப்படங்களில் நடிப்பதை இவர் விரும்பினாலும் மக்கள் விரும்பவில்லை.ஆலமரத்தின் ஒரு விழுதை பிடித்து அடுத்தடுத்த மரம் தாவி நம்பியாரை அடிப்பதையே விரும்பினர்.நம்பியாரை தங்களின் பரம எதிரியாகவே தமிழ்மக்கள் கருதியகாலம் அது.தொடர்ந்து ஏழைமக்களை காப்பாற்றுவதற்கு எம்.ஜி.ஆருக்கு ஒரு தடை போட்ட படம்தான்
அன்பே வா. மாறுபட்ட கதையில் எம்.ஜி.ஆரை ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கியிருப்பார்.இதில் எம்.ஜி.ஆர் தான் ஒளித்து வைத்து இருந்த நகைச்சுவை திறமையெல்லாம் வெளியே கொண்டு வந்திருப்பார்.குறிப்பாக மழைபெய்யும்போது சரோஜாதேவியிடம் அவர்காட்டும் ரொமான்ஸ் நகைச்சுவை காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.ஏ.வி.எம் தயாரித்த அருமையான பொழுதுபோக்கு படமிது.
சிவாஜிகணேசன்
இவர் நடிப்பில் கலாட்டாகல்யாணம்,பலே பாண்டியா என இருபடங்கள் நான் பார்த்து இருந்தாலும் என்னைக்கவர்ந்த படம் பலே பாண்டியா தான்.அப்பாவி இளைஞராக நடித்திருக்கும் சிவாஜி தன் தேர்ந்த நடிப்பால் வயிறுகுலுங்க சிரிக்கவைப்பார்.குறிப்பாக எம்.ஆர் ராதாவுடன் அவர் நடித்திருக்கும் மாமா மாப்ளே பாடல் காட்சியும் திரும்ப திரும்ப பார்க்கவைப்பவை.
சந்திரபாபு
சபாஷ் மீனா சிவாஜிகணேசன் இப்படத்தில் இருந்தாலும் தன் சிறப்பான நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார் இவர்.இரண்டு ரோல்களில் இந்தப்படத்தில் நடித்திருப்பார் ஒன்று குப்பத்து மனிதராகவும் மற்றொன்று கதாநாயகனின் நண்பனாகவுமாக நல்ல நகைச்சுவைக்கு புல் கியாரண்டி கொடுத்திருப்பார்.
ஜெமினி கணேசன்
தமிழில் யார்பையன், தேன்நிலவு இந்த இரண்டு படங்களும் இவரின் நகைச்சுவைப்படங்களில் எனக்கு பிடித்தது. தேன்நிலவில் காஷ்மீர் சென்று வைஜெயந்திமாலாவுடனும் தங்கவேல் சரோஜாவுடனும் வரும் காமெடி காட்சிகள் ரசிக்கவைக்கும் காட்சிகள்.இவரின் யார்பையன் படத்தில் பேபி டெய்சிராணியிடம் மாட்டிக்கொண்டும் தந்தை கலைவாணர் என்.எஸ்.கே யிடமும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் நம்மை வயிற்றைபதம் பார்ப்பவை.
முத்துராமன்
இவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம்தான் என்னுடைய ஆல்டைம் பேவரிட் இயக்குனர் sridhar அருமையாக இயக்கியிருப்பார் கூடவே கதை சொல்லும் நாகேஷ்,பாலையா என அனைத்து அன்றைய முன்னணி நட்சத்திரங்களையும் அள்ளித்தெளித்திருப்பார் இயக்குனர்.
தேங்காய்சீனிவாசன்
இவர் காசேதான் கடவுளடா படம்தான் எனக்கு பிடித்தது கதைப்படி அத்தையிடம் பணம் கறப்பதற்காக முத்துராமனும் நண்பர்களும் சேர்ந்து குப்பத்து பாஷை பேசும் தேங்காய்சீனிவாசனை சாமியாராக நடிக்கவைத்து காமெடி சரவெடியை கொளுத்திபோடுவார்கள்.
நாகேஷ்
நாகேஷ் ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்தாலும் இவரின் காதலிக்கநேரமில்லை கதை சொல்லும் காட்சிதான் எனக்கு பிடித்தது.அடுத்தாதாக இவரின் படத்தில் என்னைகவர்ந்தது சர்வர் சுந்தரம்.மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்ற படம் நாகேஷ் கண்டக்டராகவும் நடிகர் கருணாநிதி
டிரைவராகவும் நடித்த படம் பஸ் உள்ளேயே எல்லா காட்சியையும் அருமையாக இயக்கியிருப்பார்கள்.குறிப்பாக பக்கோடா கேட்கும் அந்த சிறுவனிடம் நாகேஷ் படும் அவஸ்தை நான் ஸ்டாப் காமெடி இந்த காட்சியினால் அந்த சிறுவன் பின்னாளில் பக்கோடா காதர் என புகழ்பெற்றார்
ரஜினிகாந்த்
இவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த தில்லுமுல்லு
திரைப்படம்தான்.அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்,சந்திரன் என இரட்டை வேடமிட்டு நாடகம் ஆடும் காட்சிகளை இப்படத்தை பார்த்த யாராலும் மறக்கமுடியாது
அதிலும் தேங்காய்சீனிவாசன் இவர் சொல்வதை எல்லாம் நம்பும் காட்சிகள் குபீர் சிரிப்பை வரவைப்பவை
கமலஹாசன்
இவர் நாகேஷ் போல ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்திருந்தாலும் அதையெல்லாம் பார்ப்பதற்க்கு ஒரு தனி பதிவே போடவேண்டும்.இருந்தாலும் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் இவர் பேசாமலே நகைச்சுவை கலந்து மெளனப்படமாக வந்த பேசும்படம்தான் என் மனம் கவர்ந்த படம்.
பிரபு
இவர் ராஜா கைய வெச்சா ,அரங்கேற்ற வேளை முதலிய படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் எல்லாம் சீரியசாக ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும்.இவர் நடித்த தேடினேன் வந்தது படத்தில் எந்த லாஜிக்கும் இல்லாமல் அழகான காமெடி காட்சிகளோடு செல்லும்.கூடவே கவுண்டமணியும் இருப்பார் காமெடிக்கு கேட்கவா வேண்டும்
சத்யராஜ்
சத்யராஜுக்கு மற்ற நடிகர் போல் அல்லாமல் கிண்டல்,லொள்ளு எல்லாம் சாதாரண சீரியஸ் படங்களில் கூட அழகாக வரும்.இப்படிப்பட்ட நடிகர் காமெடி படத்தில் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா இவரின் காமெடி கலைதாகத்தை புரிந்து இப்படியொரு நகைச்சுவை சித்திரத்தை வழங்கியவர் இயக்குனர் பி.வாசு அவர்கள். பிழைப்புக்காக இளைஞனாகவும் வயதானவராகவும் வேஷம்போடும் சத்யராஜ்,அதைப்பார்த்து விடும் கவுண்டமணி,யார் என்றே தெரியாமல் புரபஸர் சத்யராஜை லவ்ஸ் விடும் மனோராமா என அனைத்து கேரக்டர்களும் மிக அருமையாக இருக்கும்
கார்த்திக்
பெரும்பாலான நடிகர்களின் 100வது படம் வெற்றிபெறுவதில்லை.கேப்டன் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்திற்க்கு பிறகு கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடி இயக்குனர் சுந்தர்.சி யை வெளியுலகத்திற்க்கு
அறிமுகப்படுத்திய படம் கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி,கசன்கான்,மணிவண்ணன்,பாண்டு,செந்தில் பெரிய காமெடி டீமெ இந்த படம் வெற்றிபெற உதவியது.சபாஷ்மீனா படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து ஆங்காங்கே தூவியிருந்தாலும் படம் இன்று வரை பார்த்துகொண்டேயிருப்பது நிஜம்.
அரவிந்த்சாமி
ரிச்லுக் கொண்ட அரவிந்த்சாமியை கலெக்டராகவும் ,இஞ்சினியராகவும் எத்தனை படங்களில் பார்ப்பது என்று இயக்குனர் செல்வா வரிந்துகட்டி காமெடி கோதாவில் அரவிந்த்சாமியை தூக்கிப்போட்ட படம் புதையல்.கொரியர் பையனாக அரவிந்த்சாமி கலகல வென குறும்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.புதையல் எடுப்பதற்காக இவர் கவுண்டமணியுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்க வைப்பவை.
விஜய்/அஜீத்/தனுஷ்/மாதவன்
இளையதலைமுறை நடிகர்கள் இதுபோன்ற நகைச்சுவைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒன்று போலீசாக நடிப்பார்கள் இல்லையென்றால் பொறுக்கியாக நடிப்பார்கள்
அதையும் மீறி விஜய் நடித்த ப்ரண்ட்ஸ்,வசீகரா படமும்,அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும்
தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படமும் மாதவன் நடித்த நள தமயந்தி படமும் வெற்றிபடங்களாக வந்தன.
வடிவேல்
இவர் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் சாயல் இருந்தாலும் விகடனிலும்,குமுதத்திலும் மற்ற வார இதழ்களிலும் வந்த நகைச்சுவை துணுக்குகளையும் மொத்தமாக சேர்த்து ஒரு படமெடுத்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது இந்தப்படம் .சிறந்த நகைச்சுவை நடிப்பால் நம் மனம் கவர்ந்தார் வடிவேல் சிறப்பானதொரு இயக்குனர் சிம்புதேவன் கொடுத்திருப்பார்
இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தியது இவர்கள்தான்.இவர்கள் இருவரும் இரட்டை இயக்குனர்கள்.யார் பெத்த பிள்ளைகளோ ஒரு காலத்தில் இவர்கள் இயக்கிய ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக ஜொலித்தது அண்ணன் தங்கை பாசத்தை சொல்லிய
கவிக்குயில்,கிராமத்து அப்பாவி பெண்ணை பற்றிய அன்னக்கிளி,சில வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் பேபிஸ் டே அவுட் என்ற படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.அந்த படத்தை அப்படியே தமிழில் சுட்டிக்குழந்தை என எடுத்து நன்றாக ஓடியது.இந்த படங்களுக்கெல்லாம் முன்பே இவர்கள் இயக்கிய பூந்தளிர் என்ற திரைப்படம் தாயை விட்டு பிரிந்த குழந்தை தந்தையை தேடி கார்,பஸ்,ரயில்வே ஸ்டேஷன் ,ட்ராபிக்கான சாலைகளில் அலைவதையும் குழந்தை தாய் தந்தை பாசத்தையும் மிக அழகாக சொல்லியிருப்பார்கள் இயக்குனர்கள் தேவராஜ்
மோகன்,இவர்கள் இயக்கிய கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்து சாதனை படைத்தார்கள்.இவர்கள் இயக்கிய ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்தில்
ரவிக்கை அணியாத கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மிக அழகான கோணத்தில் படமாக்கியிருப்பார்.மேலும் இவர் இயக்கிய பத்ரகாளி கணவன் மனைவி உறவை பற்றிய அழகான படம்.இவர் இயக்கிய படங்கள் புல்லாங்குழல் அடுப்பூதுகிறது,இசைபாடும் தென்றல் சிட்டுக்குருவி,ஆகிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள்தான். இவர்களின் அனைத்து படங்களிலும் சிவக்குமார் கண்டிப்பாக இருப்பார்.இவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.மிகச்சிறப்பு வாய்ந்த இயக்குனர்கள் இவர்கள். இவர்களின் புகைப்படம் கூட இணையத்தில் தேடி கிடைக்காமல் அலைந்தேன்.என் எண்ணத்தை போக்கும் வகையில் நண்பர் டேனியல் ராஜையா சமீபத்தில் இந்த இயக்குனர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்
இளையராஜா உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சில இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் இசையமைத்து சாதனை புரிந்தனர் அந்த இசையமைப்பாளர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு
சிறுவயதில் இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலையெல்லாம் இளையராஜாவின் இசையென்றே நினைத்திருக்கிறேன்.குறிப்பாக இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடல்கள் புகழ்பெற்றவை. ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த போன்ற பாடல்களை கேட்டுகொண்டே இருக்கலாம் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சில படங்களில் விளங்கினார்.இவர் இசையமைத்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தில் இடம்பெற்ற பூமேடையோ பொன்வீணையோ பாடலும் மேகம் ஒரு மேகம் போன்ற பாடல்களால் நம் உள்ளத்தை மீட்டியவர்.பாலச்சந்தர் இயக்கி முரளி இரட்டை வேடத்தில் நடித்த புதியவன் படத்தில் வந்தது வசந்த காலம்,நானோ கண் பார்த்தேன்,தேன்மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே என்று பல சூப்பர்ஹிட் பாடல்களை
கொடுத்தவர் கடைசியாக ரேவதி சுரேஷ்மேனன் படமான பாசமலர்கள் படத்தில் இசையமைத்த பிறகு இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை
சங்கர் கணேஷ்
இரட்டையர்களான இவர்கள் ப்ளாக் அண்ட்ஒயிட் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகின்றனர்.ஆரம்பத்தில் தேவர் பிலிம்ஸின் பல படங்களுக்கு இசையமைத்து
வந்துள்ளனர் இவர்களின் சம்சாரம் அது மின்சாரம் பாடல்களான ஜானகிதேவி,அழகிய அண்ணி
போன்றபாடல்களும்.இதயத்தாமரை,ஊர்க்காவலன் படத்தின் பாடல்களும்,இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும்
வாணிஜெயராம் குரலும் நம்மை கிறங்கடிப்பவை
சந்திரபோஸ்
அய்யப்பன் படத்தின் பாடலான பொய்யன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் என்ற இவரின் அய்யப்ப பக்தி பாடலில் ஜேசுதாஸ் நடித்திருப்பார்.அய்யப்ப பக்தர்களை விட்டு
பிரிக்கமுடியாத பாடலாக அது தற்போது வரை விளங்கி வருகிறது.ரஜினிகாந்திற்க்கு இளையராஜாவை தவிர்த்து இவர் மனிதன்,ராஜா சின்ன ரோஜா,விடுதலை உட்பட சில படங்களில் இசையமைத்து இருக்கிறார்,நல்ல குரல் வளமும் உடையவர் இவர் சமீபத்தில்தான் இவர் மரணமடைந்தார் இவர் பாடல்களில் மிகவும் என்னை கவர்ந்த பாடல்
விடுதலை படத்தில் இடம்பெற்ற நீலக்குயில்கள் ரெண்டு என்ற பாடல் .
மனோஜ் கியான்
இரட்டையர்களான இவர்கள் ஆபாவாணனின் அறிமுகங்கள். ஊமைவிழிகள் படத்தில் இவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் குறிப்பாக பி.பி சீனிவாஸ் அவர்கள் பாடிய
தோல்வி நிலையென நினைத்தால் ,மாமரத்து பூவெடுத்து மிட்நைட் மசாலா பாடலான ராத்திரி
நேரத்து பூஜையில் பாடல்கள் இன்றுவரை காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் பாடல்கள்
இணைந்த கைகள் படத்தில் இடம்பெற்ற அந்திநேர தென்றல் காற்று,மழையோரம் குயில் கூவக்கேட்டேன் போன்ற பாடல்களும் இவரின் செந்தூரப்பூவே பாடல்களும் புகழ்பெற்றவை
கங்கை அமரன்
இளையராஜாவின் தம்பியாக இருந்தாலும் இவர் இசையமைத்த ஜீவா,வாழ்வே மாயம்,சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற படங்களில் இவரின் தனித்துவத்தை காட்டினார் இவரின் சின்னத்தம்பி பெரியதம்பி,வாழ்வே மாயம் படங்களின் பாடல்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டவை
ஆர்.டி பர்மன்
இவர் இசையமைத்த உயிரே உனக்காக படத்தில் இடம்பெற்ற பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல
சிரிக்க போன்ற பாடல்கள் பூமழை பொழியுது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.இவர் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
தேவேந்திரன்
வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் இசையமைத்த வேதம்புதிது படத்தின் பாடல்களை இளையராஜா தான் இசையமைத்தார் என்று அதிகம் பேர் நினைப்பதுதான் சமீபத்தில் கூட அ.மார்க்ஸ் என்ற அறிவுஜீவி எழுத்தாளர் இளையராஜாவை திட்டுகிறென் என்று வேதம்புதிது படத்தின் பாடல்கள் ப்ராமணியத்தை வளர்ப்பதாக உள்ளது என்று இளையராஜாவை சாடியிருந்தார்.இவரின் வேதம் புதிது படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா,
மந்திரம் சொன்னேன் வந்து விடு போன்ற பாடல்களும் மண்ணுக்குள் வைரம் படத்தின் பொங்கியதோ காதல் வெள்ளம்,முத்து சிரித்தது முல்லை வெடித்தது போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.
பாலபாரதி
இவர் இசையமைத்த அமராவதி படத்தின் பாடல்கள் அஜீத் என்ற புதிய நடிகருக்கு சரியான முகவரி கொடுத்தது.இந்த படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் இவர் இசையமைத்த மற்றொரு படமான தலைவாசல் படத்திலும் எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட் இவரை போன்ற
சிறந்த இசையமைப்பாளர்களையெல்லாம் விட்டுவிட்டு கொலவெறி யில் மூழ்கி கிடப்பது நாம்
இசைக்கு செய்யும் துரோகம்
தேவா
மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமான தேவா அதற்கு பின் வந்த வைகாசி பொறந்தாச்சு
படத்தில் தனது பாடல்கள் மூலம் பாப்புலரானார்.பொதுவாக கானா மன்னன் எனப்பெயரெடுத்த தேவா இனிமையான் மெலடி பாடல்கள் மூலமும் மனதை கவர்ந்துள்ளார் காதல் கோட்டை,வாலி,புருஷலட்சணம்,ஆசை போன்ற படங்களின் பாடல்கள் இவரின் நல்ல பாடல்களுக்கு உதாரணமாக சொல்லாம்
சங்கீதராஜன்/ரவீந்தர்
இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமிழில் 13ம் நம்பர் வீடு உட்பட சில திகில்
படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.இவரின் பூவுக்குள் பூகம்பம் படத்தில் இடம்பெற்ற அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்காதோ என்ற பாடல் என் மனம் கவர்ந்தது
ரவீந்தரும் ஒரு மலையாள இசையமைப்பாளர்தான் இவரின் ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடி அழைத்தேன் ,ஏழிசை கீதமே போன்ற பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்கள் ஆகும்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி என்று பாரதி பாடினார் அதற்கேற்ப பல துறைகளில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது.சினிமா இயக்குனர் பொறுப்பை ஆண்களே பார்த்துகொண்டிருந்த காலம் மாறி பெண்கள் சில வருடங்களாக இயக்குனராக மாறி சில ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் அவர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு.
பி.ஆர் விஜயலட்சுமி
பழம்பெரும் இயக்குனரும் ஆயிரத்தில் ஒருவன்,கப்பலோட்டிய தமிழன் முதலிய படங்களை எடுத்த பி.ஆர் பந்துலுவின் புதல்வி இவர்.ஆரம்பத்தில் டி.வி விளம்பரம்,டி.வி சீரியல்கள் முதலியவற்றிற்க்கு ஒளிப்பதிவு செய்த இவர்.முதன் முதலில் இயக்கிய படம் அரவிந்த்சாமி அவர்கள் நடிப்பில் தாலாட்டு என்ற படம் ஆகும்.இவர் ஒளிப்பதிவில் வல்லவர் இவரின் படங்கள் மட்டுமல்லாது அடுத்த இயக்குனர் படங்களிலும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.இவரின் முதல் படம் ஓடிய அளவுக்கு இரண்டாவது படமான பாட்டு பாடவா நல்ல கதை இருந்தும் ரகுமான்,லாவண்யா,எஸ்.பி.பி யின் நல்ல நடிப்பு இருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
ஜானகி செளந்தர்
முதன் முதலில் விஜயையும் அஜீத்தையும் இணைத்தவர் இவர் .இவர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் சிறந்த படமாக விளங்கியது.
ஜானகி விஸ்வநாதன்
இவர் இயக்கிய குட்டி என்ற திரைப்படம் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடும் வீட்டு வேலை செய்யும் குழந்தைபடும் துன்பங்களை அழகாக படமாக்கியிருப்பார்.குழந்தையின் நடிப்பும் மளிகைகடை அண்ணாச்சியாக வரும் விவேக்கின் நடிப்பும் அருமையாக இருக்கும்.
பிரியா.வி
மணிரத்னத்தின் அசிஸ்டெண்டான இவர் இயக்கிய கண்டநாள் முதல் சிறந்த திரைப்படம் ஆகும்.இவர் நகைச்சுவை கலந்து எடுத்த சத்யராஜ் ,பிரித்விராஜ் நடித்த கண்ணாமூச்சி ஏனடா
சுமாரான நகைச்சுவை படமாகும்.
மதுமிதா
இவர் ஒரு தொழிலதிபர் எனக்கேள்விப்பட்டேன் இவர் இயக்கிய வல்லமை தாராயோ சிறந்த
கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்.பார்த்திபன்,சாயாசிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை
பெண்களே தொடரட்டும் உங்கள் பணி என்றாவது ஒருநாள் சில்வர் ஜூப்ளி படம் கொடுக்க எனது வாழ்த்துக்கள்