நடிகர் இயக்குனர் ராமராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர்.காலப்போக்கில் விக்ரமன் உட்பட சில இயக்குனர்களிடம் புது வசந்தம் உட்பட சில படங்களில் பணியாற்றியவர்
புதுவசந்தம் உட்பட பல சூப்ப்ர்ஹிட் படங்களை தயாரித்த ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாகவே இவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .இவரின் முதல் படம் புரியாத புதிர்
படம் க்ரைம் சப்ஜெக்ட் படமாகும்.இதில் நடிகர் ரகுவரன் பேசிய ஐ நோ வசனம் உலகப்புகழ்பெற்றது.இவரின் முதல் படம் போதிய வெற்றி அடையாவிட்டாலும் இரண்டாவது படமான சேரன் பாண்டியன் மாபெரும் வெற்றிப்படமானது.இதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம்தான்.தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ்க்காகவே ஊர் மரியாதை என்றொரு படம் எடுத்தார்
இது இவருக்கு பெரும் தோல்வியை கொடுத்த படம்.அவ்வப்பொழுது வெற்றிப்படமும் தோல்விப்படமும் கொடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இவருக்கு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து இவர் இயக்கிய நாட்டாமை படம் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது இந்த கதையின் தெலுங்கு பதிப்பில் ரஜினிகாந்த் பெத்தராயுடு என்ற பெயரில்நடித்து ஆந்திராவிலும் பெரும் வெற்றிப்படமானது.இந்த நாட்டாமை படம் இவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தது என்றால் மிகையாகாது.தொடர்ந்து ஜனரஞ்சகமான படங்களாக எடுத்தார்.அடுத்ததாக ஏ.வி.எம்மின் சக்திவேல் என்ற படமும் இவருக்கு ஒரளவிற்க்கு நற்பெயரை வாங்கிகொடுத்தது.வெற்றிப்படங்களாக கொடுத்தவுடன் ரஜினிகாந்தின் பார்வை இவர் மேல் பட்டது.ரஜினிக்காக இவர் இயக்கிய படம் முத்து.இதற்கு அடுத்து இவர் ரஜினியுடன் மீண்டும் இணைந்த படம் படையப்பா.மகத்தான வெற்றிப்படமானது.கமலின் பார்வையும் இவர் மேல் பட அவருடன் இணைந்து அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம்,தெனாலி,தசாவாதாரம் வரை வெற்றிப்படங்களை கொடுத்தார்.இவர் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது இவர் தலையை காட்டிவிட்டு செல்வார்.தற்போதுள்ள விஜய்,அஜீத்,சிம்பு என இளைய தலைமுறை நடிகர்களுடன் மின்சாரகண்ணா,வில்லன்.சரவணா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்,விஜயகாந்திற்காக தர்மச்சக்கரம் படத்தையும்,பிரபுவுக்காக பரம்பரை,பெரியகுடும்பம் படங்களையும் கார்த்திக் நடிப்பில் பிஸ்தா படத்தையும் சூர்யாவிற்காக ஆதவன் படத்தையும் இயக்கியுள்ளார்.முதிய நடிகர்களில் சத்யராஜையும் இளைய நடிகர்களில் தனுஷையும் மட்டும் இவர் இயக்கவில்லை.இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,சிற்பி,எஸ்.ஏ ராஜ்குமார்,செளந்தர்யன்,வித்யாசாகர்,தேவா,ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து காலத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.இவரின் தனிச்சிறப்பு
எந்த ஒரு படத்தையும் 45 நாட்களுக்குள் எடுத்து முடித்து தயாரிப்பாளருக்கு செலவு வைக்க மாட்டார்.
No comments:
Post a Comment