Monday, 13 February 2012

இயக்குனர் தேவராஜ் மோகன்=காணக்கிடைக்காத படம்

இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தியது இவர்கள்தான்.இவர்கள் இருவரும் இரட்டை இயக்குனர்கள்.யார் பெத்த பிள்ளைகளோ ஒரு காலத்தில் இவர்கள் இயக்கிய ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக ஜொலித்தது அண்ணன் தங்கை பாசத்தை சொல்லிய‌
கவிக்குயில்,கிராமத்து அப்பாவி பெண்ணை பற்றிய அன்னக்கிளி,சில வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் பேபிஸ் டே அவுட் என்ற படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.அந்த படத்தை அப்படியே தமிழில் சுட்டிக்குழந்தை என எடுத்து நன்றாக ஓடியது.இந்த படங்களுக்கெல்லாம் முன்பே இவர்கள் இயக்கிய பூந்தளிர் என்ற திரைப்படம் தாயை விட்டு பிரிந்த குழந்தை தந்தையை தேடி கார்,பஸ்,ரயில்வே ஸ்டேஷன் ,ட்ராபிக்கான சாலைகளில் அலைவதையும் குழந்தை தாய் தந்தை பாசத்தையும் மிக அழகாக சொல்லியிருப்பார்கள் இயக்குனர்கள் தேவராஜ்
மோகன்,இவர்கள் இயக்கிய கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்து சாதனை படைத்தார்கள்.இவர்கள் இயக்கிய ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்தில்

ரவிக்கை அணியாத கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மிக அழகான கோணத்தில் படமாக்கியிருப்பார்.மேலும் இவர் இயக்கிய பத்ரகாளி கணவன் மனைவி உறவை பற்றிய அழகான படம்.இவர் இயக்கிய படங்கள் புல்லாங்குழல் அடுப்பூதுகிறது,இசைபாடும் தென்றல்
சிட்டுக்குருவி,ஆகிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள்தான். இவர்களின் அனைத்து படங்களிலும் சிவக்குமார் கண்டிப்பாக இருப்பார்.இவர்களின் தற்போதைய‌
நிலை என்னவென்று தெரியவில்லை.மிகச்சிறப்பு வாய்ந்த இயக்குனர்கள் இவர்கள். இவர்களின்
புகைப்படம் கூட இணையத்தில் தேடி கிடைக்காமல் அலைந்தேன்.என் எண்ணத்தை போக்கும்
வகையில் நண்பர் டேனியல் ராஜையா சமீபத்தில் இந்த இயக்குனர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்

1 comment:

  1. உங்கள் தளத்தை இன்று தான் பார்த்தேன் நறுக்கென்று நல்ல அரிய செய்திகளோடு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete