Wednesday 4 January 2012

சினிமாவில் பெண் இயக்குனர்கள்

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி என்று பாரதி பாடினார் அதற்கேற்ப பல துறைகளில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது.சினிமா இயக்குனர் பொறுப்பை ஆண்களே பார்த்துகொண்டிருந்த காலம் மாறி பெண்கள் சில வருடங்களாக இயக்குனராக மாறி சில ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் அவர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு.

பி.ஆர் விஜயலட்சுமி


பழம்பெரும் இயக்குனரும் ஆயிரத்தில் ஒருவன்,கப்பலோட்டிய தமிழன் முதலிய படங்களை எடுத்த பி.ஆர் பந்துலுவின் புதல்வி இவர்.ஆரம்பத்தில் டி.வி விளம்பரம்,டி.வி சீரியல்கள் முதலியவற்றிற்க்கு ஒளிப்பதிவு செய்த இவர்.முதன் முதலில் இயக்கிய படம் அரவிந்த்சாமி அவர்கள் நடிப்பில் தாலாட்டு என்ற படம் ஆகும்.இவர் ஒளிப்பதிவில் வல்லவர் இவரின் படங்கள் மட்டுமல்லாது அடுத்த இயக்குனர் படங்களிலும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.இவரின் முதல் படம் ஓடிய அளவுக்கு இரண்டாவது படமான பாட்டு பாடவா நல்ல கதை இருந்தும் ரகுமான்,லாவண்யா,எஸ்.பி.பி யின் நல்ல நடிப்பு இருந்தும்  எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஜானகி செளந்தர்


முதன் முதலில் விஜயையும் அஜீத்தையும் இணைத்தவர் இவர் .இவர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் சிறந்த படமாக விளங்கியது.


ஜானகி விஸ்வநாதன்


இவர் இயக்கிய குட்டி என்ற திரைப்படம் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடும் வீட்டு வேலை செய்யும் குழந்தைபடும் துன்பங்களை அழகாக படமாக்கியிருப்பார்.குழந்தையின் நடிப்பும் மளிகைகடை அண்ணாச்சியாக வரும் விவேக்கின் நடிப்பும் அருமையாக இருக்கும்.

பிரியா.வி


மணிரத்னத்தின் அசிஸ்டெண்டான இவர் இயக்கிய கண்டநாள் முதல் சிறந்த திரைப்படம் ஆகும்.இவர் நகைச்சுவை கலந்து எடுத்த சத்யராஜ் ,பிரித்விராஜ் நடித்த கண்ணாமூச்சி ஏனடா
சுமாரான நகைச்சுவை படமாகும்.

மதுமிதா



இவர் ஒரு தொழிலதிபர் எனக்கேள்விப்பட்டேன் இவர் இயக்கிய வல்லமை தாராயோ சிறந்த‌
கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்.பார்த்திபன்,சாயாசிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை

பெண்களே தொடரட்டும் உங்கள் பணி என்றாவது ஒருநாள் சில்வர் ஜூப்ளி படம் கொடுக்க எனது வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment