இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் இவரின் தந்தை கன்னட நடிகர் சக்திபிரசாத் என்பவராவார்.
கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு வந்து புகழ்பெற்றவ ரஜினிகாந்த்,முரளி,மோகன் ஆகியவர்கள் வரிசையில் இவரும் புகழ்பெற்றவர்.இவர் இராமநாராயணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த நன்றி படத்தில் அறிமுகமானார்.இந்தப்படத்தில் கராத்தே வீரராக நடித்திருப்பார்
இவர் ஆக்சன் கிங் அர்ஜூன் என பலரால் அன்போடு அழைக்கப்பட்டார்
ஆரம்பகாலங்களில் இவர் படம் அதிகம் பேசப்படாவிட்டாலும் ஓரளவிற்க்கு ரசித்து பார்க்கும்படி
இருக்கும் கவுண்டமணியுடன் இவர் ஆரம்பத்தில் நடித்த வேஷம் என்ற படத்தை நான் பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன் நல்ல நகைச்சுவை அந்தப்படத்தில் இருக்கும்.இவருக்கு முதலில் ஹிட் ஆன படம் சங்கர் குரு என்றுதான் நினைக்கிறேன் ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜா இயக்கிய படம் தொடர்ந்து தாய்மேல் ஆணை ,சொந்தக்காரன் என
ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக சில படங்களில் நடித்தார்.இந்த படங்கள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.திரும்பவும் ராஜாவின் இயக்கத்தில் பல பெண்களை காதலிக்கும் தாயம் ஒண்ணு என்ற படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்
படமும் ஓரளவிற்க்கு ஹிட் படமாகும்.தொடர்ந்து இசைஞானியின் இசையில் இவர் நடித்த அண்ணனுக்கு ஜே,துருவநட்சத்திரம் படங்களில் பாடல்கள் மட்டும் ஹிட் ஆனது.இப்படியே போய்க்கொண்டிருந்த அர்ஜீனின் வாழ்க்கையில் மைல்கல்லாக வந்தபடம்தான் சங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் ரஹ்மானின் இசையில் அறிமுக இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.இதே சங்கருடம் இவர் மீண்டும் இணைந்த முதல்வன் படமும் வெற்றிப்படமானது.இவருக்கு நடிக்க மட்டுமின்றி இயக்கத்திலும் கில்லாடி இவர் இயக்கிய ஜெய்ஹிந்த் படம் அதிக நாட்கள் ஓடிய படமாகும்.ஆகஸ்ட் 15 அன்று இவர் பிறந்ததாலோ என்னவோ இவர் படங்களில் நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும்
இவர் சேவகன்,தாயின் மணிக்கொடி முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.நடுவில் ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ள படத்தில் தொடர்ந்து நடித்ததால் இவர் படங்களுக்கு கொஞ்சம் வரவேற்பு
இல்லாமல் போனது உண்மை.இழந்த வரவேற்பை அஜீத்துடம் நடித்த மங்காத்தா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து திரும்பவும் பெற்றார்.
No comments:
Post a Comment