Tuesday, 28 February 2012

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சரத்குமார்



கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய கண் சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகமாகியவர் இவர்.இன்று தன்னுடைய நூறாவது படத்தை தாண்டி சென்றுவிட்டார்.இவர் அறிமுகமாகிய முதல் படத்தில் ஓல்லியான உடல்வாகுடன் கார்த்திக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருவார்.இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவரே.தொடர்ந்து புதுப்பாடகன்,புது மனிதன் ,மெளனம் சம்மதம் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார்.இவரின் வில்லத்தனத்திற்க்கு கைகொடுத்த படம் ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம்தான்.முறுக்கேற்றும் உடம்புடன் வில்லனாக இவர் நடித்த புலன் விசாரணை படமே யார் இவர் என எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.தொடர்ந்து வில்லத்தனம் போரடிக்க கேப்டன் பிரபாகரன் அப்பாவி காட்டிலாகா அதிகாரியாக நடித்து பெயர் வாங்கினார்
கே.எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் இவர் புகழை உயர்த்தியது என்றால் .இயக்குனர்
பவித்ரனின் சூரியன் சூப்பர்ஹிட் படமாகி இவருக்கு ஒரு அசைக்க முடியாத கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது.தொடர்ந்து ரவிக்குமாரின் நாட்டாமை,விக்ரமனின் சூரிய வம்சம் போன்ற படங்கள் இவர் புகழை உயர்த்தியது.தற்போதும் பிஸியாக நடித்துக்கொண்டும்
சமத்துவமக்கள் கட்சி என்ற அமைப்பையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்

Sunday, 26 February 2012

இணையற்ற கமர்ஷியல் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்



நடிகர் இயக்குனர் ராமராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர்.காலப்போக்கில் விக்ரமன் உட்பட சில இயக்குனர்களிடம் புது வசந்தம் உட்பட சில படங்களில் பணியாற்றியவர்
புதுவசந்தம் உட்பட பல சூப்ப்ர்ஹிட் படங்களை தயாரித்த ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாகவே இவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .இவரின் முதல் படம் புரியாத புதிர்
படம் க்ரைம் சப்ஜெக்ட் படமாகும்.இதில் நடிகர் ரகுவரன் பேசிய‌ ஐ நோ வசனம் உலகப்புகழ்பெற்றது.இவரின் முதல் படம் போதிய வெற்றி அடையாவிட்டாலும் இரண்டாவது படமான சேரன் பாண்டியன் மாபெரும் வெற்றிப்படமானது.இதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம்தான்.தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ்க்காகவே ஊர் மரியாதை என்றொரு படம் எடுத்தார்
இது இவருக்கு பெரும் தோல்வியை கொடுத்த படம்.அவ்வப்பொழுது வெற்றிப்படமும் தோல்விப்படமும் கொடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இவருக்கு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து இவர் இயக்கிய நாட்டாமை படம் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது இந்த  கதையின் தெலுங்கு பதிப்பில் ரஜினிகாந்த் பெத்தராயுடு என்ற பெயரில்நடித்து ஆந்திராவிலும் பெரும் வெற்றிப்படமானது.இந்த நாட்டாமை படம் இவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தது என்றால் மிகையாகாது.தொடர்ந்து ஜனரஞ்சகமான படங்களாக எடுத்தார்.அடுத்ததாக ஏ.வி.எம்மின் சக்திவேல் என்ற படமும் இவருக்கு ஒரளவிற்க்கு நற்பெயரை வாங்கிகொடுத்தது.வெற்றிப்படங்களாக கொடுத்தவுடன் ரஜினிகாந்தின் பார்வை இவர் மேல் பட்டது.ரஜினிக்காக இவர் இயக்கிய படம் முத்து.இதற்கு அடுத்து இவர் ரஜினியுடன் மீண்டும் இணைந்த படம் படையப்பா.மகத்தான வெற்றிப்படமானது.கமலின் பார்வையும் இவர் மேல் பட அவருடன் இணைந்து அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம்,தெனாலி,தசாவாதாரம் வரை வெற்றிப்படங்களை கொடுத்தார்.இவர் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது இவர் தலையை காட்டிவிட்டு செல்வார்.தற்போதுள்ள விஜய்,அஜீத்,சிம்பு என இளைய தலைமுறை நடிகர்களுடன் மின்சாரகண்ணா,வில்லன்.சரவணா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்,விஜயகாந்திற்காக தர்மச்சக்கரம் படத்தையும்,பிரபுவுக்காக பரம்பரை,பெரியகுடும்பம் படங்களையும் கார்த்திக் நடிப்பில் பிஸ்தா படத்தையும் சூர்யாவிற்காக ஆதவன் படத்தையும் இயக்கியுள்ளார்.முதிய நடிகர்களில் சத்யராஜையும் இளைய நடிகர்களில் தனுஷையும் மட்டும் இவர் இயக்கவில்லை.இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,சிற்பி,எஸ்.ஏ ராஜ்குமார்,செளந்தர்யன்,வித்யாசாகர்,தேவா,ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து காலத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.இவரின் தனிச்சிறப்பு
எந்த ஒரு படத்தையும் 45 நாட்களுக்குள் எடுத்து முடித்து தயாரிப்பாளருக்கு செலவு வைக்க மாட்டார்.

Saturday, 25 February 2012

தமிழில் நான் ரசித்த நகைச்சுவை திரைப்படங்கள்

பயப்படாதீர்கள் ஜே.கே ரித்திஷையோ பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றியோ எழுத மாட்டேன்
வழக்கம்போல இதற்க்குஒரு மொக்கை முன்னுரை கொடுத்து மின்வெட்டால் பேன் ஓடாமல்,பல்ப் எரியாமல்,வீட்டில் சட்னி அரைக்க மாவு அரைக்க கரண்ட் இல்லாமல் கஷ்டப்படும் உங்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஓவ்வொரு நடிகரும் நடித்த நகைச்சுவைப்படங்களை நடிகர் வாரியாக பார்ப்போம்

எம்.ஜி.ஆர்


இவர் காமெடிப்படங்களில் நடிப்பதை இவர் விரும்பினாலும் மக்கள் விரும்பவில்லை.ஆலமரத்தின் ஒரு விழுதை பிடித்து அடுத்தடுத்த மரம் தாவி நம்பியாரை அடிப்பதையே விரும்பினர்.நம்பியாரை தங்களின் பரம எதிரியாகவே தமிழ்மக்கள் கருதியகாலம் அது.தொடர்ந்து ஏழைமக்களை காப்பாற்றுவதற்கு எம்.ஜி.ஆருக்கு ஒரு தடை போட்ட படம்தான்
அன்பே வா. மாறுபட்ட கதையில் எம்.ஜி.ஆரை ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கியிருப்பார்.இதில் எம்.ஜி.ஆர் தான் ஒளித்து வைத்து இருந்த நகைச்சுவை திறமையெல்லாம் வெளியே கொண்டு வந்திருப்பார்.குறிப்பாக மழைபெய்யும்போது சரோஜாதேவியிடம் அவர்காட்டும் ரொமான்ஸ் நகைச்சுவை காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.ஏ.வி.எம் தயாரித்த‌ அருமையான பொழுதுபோக்கு படமிது.

சிவாஜிகணேசன்


இவர் நடிப்பில் கலாட்டாகல்யாணம்,பலே பாண்டியா என இருபடங்கள் நான் பார்த்து இருந்தாலும் என்னைக்கவர்ந்த படம் பலே பாண்டியா தான்.அப்பாவி இளைஞராக நடித்திருக்கும் சிவாஜி தன் தேர்ந்த நடிப்பால் வயிறுகுலுங்க சிரிக்கவைப்பார்.குறிப்பாக எம்.ஆர் ராதாவுடன் அவர் நடித்திருக்கும் மாமா மாப்ளே பாடல் காட்சியும் திரும்ப திரும்ப பார்க்கவைப்பவை.

சந்திரபாபு



சபாஷ் மீனா சிவாஜிகணேசன் இப்படத்தில் இருந்தாலும் தன் சிறப்பான நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார் இவர்.இரண்டு ரோல்களில் இந்தப்படத்தில் நடித்திருப்பார் ஒன்று குப்பத்து மனிதராகவும் மற்றொன்று கதாநாயகனின் நண்பனாகவுமாக நல்ல நகைச்சுவைக்கு புல் கியாரண்டி கொடுத்திருப்பார்.


ஜெமினி கணேசன்


தமிழில் யார்பையன், தேன்நிலவு இந்த இரண்டு படங்களும் இவரின் நகைச்சுவைப்படங்களில் எனக்கு பிடித்தது. தேன்நிலவில் காஷ்மீர் சென்று வைஜெயந்திமாலாவுடனும் தங்கவேல் சரோஜாவுடனும் வரும் காமெடி காட்சிகள் ரசிக்கவைக்கும் காட்சிகள்.இவரின் யார்பையன் படத்தில் பேபி டெய்சிராணியிடம் மாட்டிக்கொண்டும் தந்தை கலைவாணர் என்.எஸ்.கே யிடமும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் நம்மை வயிற்றைபதம் பார்ப்பவை.

முத்துராமன்


இவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம்தான் என்னுடைய ஆல்டைம் பேவரிட் இயக்குனர் sridhar அருமையாக இயக்கியிருப்பார் கூடவே கதை சொல்லும் நாகேஷ்,பாலையா என அனைத்து அன்றைய முன்னணி நட்சத்திரங்களையும் அள்ளித்தெளித்திருப்பார் இயக்குனர்.

தேங்காய்சீனிவாசன்


இவர் காசேதான் கடவுளடா படம்தான் எனக்கு பிடித்தது கதைப்படி அத்தையிடம் பணம் கறப்பதற்காக முத்துராமனும் நண்பர்களும் சேர்ந்து குப்பத்து பாஷை பேசும் தேங்காய்சீனிவாசனை சாமியாராக நடிக்கவைத்து காமெடி சரவெடியை கொளுத்திபோடுவார்கள்.

நாகேஷ்


நாகேஷ் ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்தாலும் இவரின் காதலிக்கநேரமில்லை கதை சொல்லும் காட்சிதான்  எனக்கு பிடித்தது.அடுத்தாதாக இவரின் படத்தில் என்னைகவர்ந்தது சர்வர் சுந்தரம்.மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்ற படம் நாகேஷ் கண்டக்டராகவும் நடிகர் கருணாநிதி
டிரைவராகவும் நடித்த படம் பஸ் உள்ளேயே எல்லா காட்சியையும் அருமையாக இயக்கியிருப்பார்கள்.குறிப்பாக பக்கோடா கேட்கும் அந்த சிறுவனிடம் நாகேஷ் படும் அவஸ்தை நான் ஸ்டாப் காமெடி இந்த காட்சியினால் அந்த சிறுவன் பின்னாளில் பக்கோடா காதர் என புகழ்பெற்றார்


ரஜினிகாந்த்



இவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த தில்லுமுல்லு
திரைப்படம்தான்.அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்,சந்திரன் என இரட்டை வேடமிட்டு நாடகம் ஆடும் காட்சிகளை இப்படத்தை  பார்த்த யாராலும் மறக்கமுடியாது
அதிலும் தேங்காய்சீனிவாசன் இவர் சொல்வதை எல்லாம் நம்பும் காட்சிகள் குபீர் சிரிப்பை வரவைப்பவை


கமலஹாசன்


இவர் நாகேஷ் போல ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்திருந்தாலும் அதையெல்லாம் பார்ப்பதற்க்கு ஒரு தனி பதிவே போடவேண்டும்.இருந்தாலும் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் இவர் பேசாமலே நகைச்சுவை கலந்து மெளனப்படமாக வந்த பேசும்படம்தான் என் மனம் கவர்ந்த படம்.

பிரபு


இவர் ராஜா கைய வெச்சா ,அரங்கேற்ற வேளை முதலிய படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் எல்லாம் சீரியசாக ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும்.இவர் நடித்த தேடினேன் வந்தது படத்தில் எந்த லாஜிக்கும் இல்லாமல் அழகான காமெடி காட்சிகளோடு செல்லும்.கூடவே கவுண்டமணியும் இருப்பார் காமெடிக்கு கேட்கவா வேண்டும்

சத்யராஜ்


சத்யராஜுக்கு மற்ற நடிகர் போல் அல்லாமல் கிண்டல்,லொள்ளு எல்லாம் சாதாரண சீரியஸ் படங்களில் கூட அழகாக வரும்.இப்படிப்பட்ட நடிகர் காமெடி படத்தில் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா இவரின் காமெடி கலைதாகத்தை புரிந்து இப்படியொரு நகைச்சுவை சித்திரத்தை வழங்கியவர் இயக்குனர் பி.வாசு அவர்கள். பிழைப்புக்காக இளைஞனாகவும் வயதானவராகவும் வேஷம்போடும் சத்யராஜ்,அதைப்பார்த்து விடும் கவுண்டமணி,யார் என்றே தெரியாமல் புரபஸர் சத்யராஜை லவ்ஸ் விடும் மனோராமா என அனைத்து கேரக்டர்களும் மிக அருமையாக இருக்கும்


கார்த்திக்


பெரும்பாலான நடிகர்களின் 100வது படம் வெற்றிபெறுவதில்லை.கேப்டன் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்திற்க்கு பிறகு கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடி  இயக்குனர் சுந்தர்.சி யை வெளியுலகத்திற்க்கு
அறிமுகப்படுத்திய படம் கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி,கசன்கான்,மணிவண்ணன்,பாண்டு,செந்தில் பெரிய காமெடி டீமெ இந்த படம் வெற்றிபெற உதவியது.சபாஷ்மீனா படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து ஆங்காங்கே தூவியிருந்தாலும் படம் இன்று வரை பார்த்துகொண்டேயிருப்பது நிஜம்.

அரவிந்த்சாமி










ரிச்லுக் கொண்ட அரவிந்த்சாமியை கலெக்டராகவும் ,இஞ்சினியராகவும் எத்தனை படங்களில் பார்ப்பது என்று இயக்குனர் செல்வா வரிந்துகட்டி காமெடி கோதாவில் அரவிந்த்சாமியை தூக்கிப்போட்ட படம் புதையல்.கொரியர் பையனாக அரவிந்த்சாமி கலகல வென குறும்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.புதையல் எடுப்பதற்காக இவர் கவுண்டமணியுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்க வைப்பவை.

விஜய்/அஜீத்/தனுஷ்/மாதவன்


இளையதலைமுறை நடிகர்கள் இதுபோன்ற நகைச்சுவைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒன்று போலீசாக நடிப்பார்கள் இல்லையென்றால் பொறுக்கியாக நடிப்பார்கள்
அதையும் மீறி விஜய் நடித்த ப்ரண்ட்ஸ்,வசீகரா படமும்,அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும்
தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படமும் மாதவன் நடித்த நள தமயந்தி படமும் வெற்றிபடங்களாக வந்தன.


வடிவேல்



இவர் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் சாயல் இருந்தாலும் விகடனிலும்,குமுதத்திலும் மற்ற வார இதழ்களிலும் வந்த நகைச்சுவை துணுக்குகளையும் மொத்தமாக சேர்த்து ஒரு படமெடுத்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது இந்தப்படம் .சிறந்த நகைச்சுவை நடிப்பால் நம் மனம் கவர்ந்தார் வடிவேல் சிறப்பானதொரு இயக்குனர் சிம்புதேவன் கொடுத்திருப்பார்


Monday, 13 February 2012

இயக்குனர் தேவராஜ் மோகன்=காணக்கிடைக்காத படம்

இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தியது இவர்கள்தான்.இவர்கள் இருவரும் இரட்டை இயக்குனர்கள்.யார் பெத்த பிள்ளைகளோ ஒரு காலத்தில் இவர்கள் இயக்கிய ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக ஜொலித்தது அண்ணன் தங்கை பாசத்தை சொல்லிய‌
கவிக்குயில்,கிராமத்து அப்பாவி பெண்ணை பற்றிய அன்னக்கிளி,சில வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் பேபிஸ் டே அவுட் என்ற படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.அந்த படத்தை அப்படியே தமிழில் சுட்டிக்குழந்தை என எடுத்து நன்றாக ஓடியது.இந்த படங்களுக்கெல்லாம் முன்பே இவர்கள் இயக்கிய பூந்தளிர் என்ற திரைப்படம் தாயை விட்டு பிரிந்த குழந்தை தந்தையை தேடி கார்,பஸ்,ரயில்வே ஸ்டேஷன் ,ட்ராபிக்கான சாலைகளில் அலைவதையும் குழந்தை தாய் தந்தை பாசத்தையும் மிக அழகாக சொல்லியிருப்பார்கள் இயக்குனர்கள் தேவராஜ்
மோகன்,இவர்கள் இயக்கிய கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்து சாதனை படைத்தார்கள்.இவர்கள் இயக்கிய ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்தில்

ரவிக்கை அணியாத கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மிக அழகான கோணத்தில் படமாக்கியிருப்பார்.மேலும் இவர் இயக்கிய பத்ரகாளி கணவன் மனைவி உறவை பற்றிய அழகான படம்.இவர் இயக்கிய படங்கள் புல்லாங்குழல் அடுப்பூதுகிறது,இசைபாடும் தென்றல்
சிட்டுக்குருவி,ஆகிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள்தான். இவர்களின் அனைத்து படங்களிலும் சிவக்குமார் கண்டிப்பாக இருப்பார்.இவர்களின் தற்போதைய‌
நிலை என்னவென்று தெரியவில்லை.மிகச்சிறப்பு வாய்ந்த இயக்குனர்கள் இவர்கள். இவர்களின்
புகைப்படம் கூட இணையத்தில் தேடி கிடைக்காமல் அலைந்தேன்.என் எண்ணத்தை போக்கும்
வகையில் நண்பர் டேனியல் ராஜையா சமீபத்தில் இந்த இயக்குனர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்