Monday 24 October 2011

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி



கிருஷ்ணபரமாத்மா நரகாசூரனை அழித்ததன் மூலம் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.முன்பு போல் அல்லாமல்
நாட்டில் அநியாயம்,அக்கிரமம்.கொலை,கள்ளத்தொடர்பு,கொள்ளை,அரசியல்வாதிகளின் ஊழல்
போன்றவை மலிந்து விட்ட இந்தக்காலத்தில் இவற்றையெல்லாம் அழிக்க கடவுள் தான் வரவேண்டும் என்ற எண்ணமில்லாமல் நாம் ஒவ்வொருவரும் மலிந்துவிட்ட தீயவைகளை
ஒழிக்க இந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.இந்த நாளில் இந்த வலைதளத்தை பார்வையிடும் வாசக,வாசகிகள் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்



தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் புதிய திரைப்படங்களை பாருங்கள்.வேலாயுதம்,ஏழாம் அறிவு
என இரண்டு படங்கள் வரவிருக்கின்றன.இதில் ஏழாம் அறிவு அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.போதிதர்மன் என்ற தமிழர் இவர் தற்காப்பு கலையை பயிற்றுவித்தவர் .இவர்
வேடத்தில் சூர்யா தோன்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது இதே போல் விஜயின்
வேலாயுதம் படமும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது இந்தபடங்கள் வெற்றிபெற வாழ்த்துவோம்.அனைவரும் தீபாவளியை இனிமையாக கொண்டாடுவோம்.

இதோ தீபாவளிக்காக சில சிறப்பு பாடல்கள்


தமிழுக்கு வந்த மலையாள இயக்குனர்கள்



பொதுவாக மலையாள திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல  கதையம்சமுள்ள படங்களாகத்தான் இருக்கும்.மலையாளிகள் பெரும்பாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களை
அதிகம் விரும்புவர் கேரளாவில் தற்போதுதான் பில்டப் கொடுக்கும் ஆக் ஷன் படங்கள் அதிகம்
வர ஆரம்பித்திருக்கிறது.நல்ல கதைக்களம் கொண்ட படங்கள் தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தில்தான் அதிகம் அவர்கள் படங்களில் மச்சம் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில்
க்ளைமாக்ஸ் பாடலில் ஆடுவது,பெற்றவர்களை கொன்றவர்களை பழிவாங்குவது, ஹீரோ பில்டப் கொடுப்பது போன்றவை மிகவும் குறைவுதான் ஆனால் சமீபத்தில் ஏசியாநெட்டில் ஒரு
மலையாளப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு சிறுவனை ஒரு ரவுடி போட்டு அடித்து துவைக்கிறார் அடிப்பவர் தமிழ் படங்களில் ரவுடியாக நடிப்பவர்தான்.அந்த சிறுவன் மோகன்லாலை சத்தமாக கூப்பிடுகிறான் அதைகேட்டு மோகன்லாலை பில்டப் கொடுத்து
கால்,கை என்று தனித்தனியாக காண்பித்து முகத்தை காண்பிக்கிறார்கள் காலத்தின் கோலம்
தென்னிந்திய ஹீரோக்கள் முக்கியமாக தமிழ் ,தெலுங்கு ஹீரோக்கள் ஆரம்பித்து வைத்தது அவர்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது சரி விஷயத்திற்க்கு வருகிறேன் தமிழுக்கு வந்தமலையாள இயக்குனர்கள் தாய்மொழி வேறானாலும் தமிழுக்கு ஏற்றபடி நல்ல கதையம்சமுள்ள ஜீவனுள்ள படங்களை கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் யார் யார் எந்த படங்களை இயக்கினார்கள் என்பது பற்றி பார்க்கவே இந்த பதிவு


 பரதன்
மலையாளத்தில் சிறந்த இயக்குனராக இருந்தாலும் தமிழில் தேவர்மகன்,என்ற சூப்பர்ஹிட் படம்
கொடுத்தவர்.அதன்பிறகு இயக்கிய ஆவாரம்பூ படமும் பாடல்களால் வெற்றிபெற்றது.இவர் ஒரு
சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.வி சசி


தமிழில் ஜெய்சங்கரை வைத்து ஒரேவானம் ஒரே பூமி ,ரஜினி கமலை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும் ,காளி,குரு ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் பிரபல மலையாள நடிகை சீமா இவரது மனைவியாவார் இவர் இயக்கிய காளி ,குரு, ஆகிய படங்கள் மிகப்பெரும்
பெயரை இவருக்கு பெற்றுதந்தது.இவர் சிவக்குமார் அமலா நடிப்பில் இல்லம் என்றொரு இனிமையான படத்தை இயக்கினார் கலகலப்பான படமாக இது இருந்தது. சிவக்குமார் காமெடியில் பட்டையை கிளப்பிய படம் இது.

ஃபாஸில்


தமிழில் அதிக வெற்றிப்படங்களை கொடுத்த மிகத்திறமையான இயக்குனர் பூவே பூச்சுடவா
படத்தில் அறிமுகமாகி பூவிழிவாசலிலே,வருஷம்16,என்பொம்முக்குட்டி அம்மாவுக்கு,கற்பூரமுல்லை,காதலுக்குமரியாதை,அரங்கேற்றவேளை,கிளிப்பேச்சு கேட்கவா
ஹரிகிருஷ்ணன்ஸ்,கண்ணுக்குள் நிலவு,ஒருநாள் ஒரு கனவு,என இதில் கடைசி இரண்டு படத்தை தவிர அனைத்துப்படங்களும் சூப்பர்ஹிட் படங்கள் ஆகும் தமிழில் மிகச்சிறந்த இயக்குனராக இருந்த இவரின் படங்களில் ரஜினி,கமல் இருவரும் நடிக்காதது கொஞ்சம் ஏமாற்றமே.இவரின் எல்லா படங்களுக்கும் இசை இசைஞானி இளையராஜாதான்,இவரின் படங்களில் வருஷம்16,பூவிழிவாசலிலே எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படங்கள்.

கே.மது


மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து ஒரு மெகாஹிட் படம் கொடுத்தவர் மெளனம் சம்மதம்
என்றொரு படம் கொடுத்துள்ளார்.படத்தில் கோர்ட் சீன்கள் பரபரப்பாக இருக்கும் இசைஞானியின் இசையில் கல்யாண் தேனிலா,ராஜாவந்தாராம் போன்ற பாடல்கள் காதில்
ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.


பாலச்சந்திரமேனன்


மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனரான இவர் நடிகர்திலகம் சிவாஜி,பத்மினி,பாண்டியராஜன் நடிப்பில்தாய்க்கு ஒரு தாலாட்டு என்றொரு வெற்றிகரமான படத்தை கொடுத்தவர் .ஆராரிரோ
பாடியதாரோ ,இளமைக்காலம் எங்கே,காதலா காதலா,போன்ற பாடல்கள் மிக இனிக்கும் பாடல்களாக இப்படத்தில் இடம்பெற்றன.இவரும் மிகச்சிறந்த இயக்குனர்.

பிரியதர்ஷன்


தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் இவர் தமிழில் கோபுரவாசலிலே படத்தின் மூலம்
அறிமுகமானார் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கிய சிறைச்சாலை படம் சுதந்திர‌
போராட்ட காலத்தில் அந்த மான் ஜெயிலில் நம்மவர்கள் பட்ட கொடுமையான சித்ரவதையை
மிக அழுத்தமாக விளக்கியது பிரபு,மோகன்லால் நடிப்பில் உருவான படம் இது.தொடர்ந்து பெண்மையின் சிறப்புக்காக சினேகிதியே படத்தை எடுத்தார்.லேசா லேசா படத்திற்க்கு பிறகு
இவரை காணவில்லை.

வினயன்


விக்ரமிற்க்கு பெயர் சொன்ன காசி படத்தை இயக்கியவர் கண்பார்வையற்றவர் படும் கஷ்டங்களை அழகாக விளக்கிய படம் இது.தொடர்ந்து என் மன வானில் போன்ற படங்களை
கொடுத்தவர்.

ஜோஷி


தமிழில் ஏர்போர்ட் என்ற படத்தை கொடுத்தவர் பாடல்களே இந்த படத்தில் இல்லாதது இப்படத்தின் சிறப்பம்சம் சத்யராஜ், கெளதமி நடிப்பில் நல்ல கதையம்சமுள்ள படம் இது.


சித்திக்

ஃபாஸிலிடம் கதை இலாகாவிலும் உதவி இயக்குனராகவும் அதிக படங்களில் பணிபுரிந்தவர்
இவரும் இவர் நண்பர் லாலும் சேர்ந்து ஃபாஸிலின் கதை இலாகாவில் இருந்து படங்களை
மெருகேற்றியவர்கள்.லால் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வெற்றிகரமாக வலம் வருகிறார்.ஆனால் இவரோ ஃப்ரண்ட்ஸ் படத்தில் ஆரம்பித்து எங்கள்
அண்ணா,காவலன் வரை வெற்றிபடங்கள் கொடுத்தவர் இவரின் காவலன் படம் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த விஜய்க்கு ஆறுதலை கொடுத்த படம்.

கமல்

நம்ம கமல் இல்லை. இவரும் மலையாள இயக்குனர்தான் பிரசாந்த்,ஷாலினியை வைத்து
பிரியாத வரம் வேண்டும் படத்தை கொடுத்தவர் படம் சரியாகபோகாவிட்டாலும் சிறந்த கதையம்சமுள்ள காதல் படம் என்பதை மறுப்பதற்க்கு இயலாது.

ஷ‌ஃபி


மலையாள இயக்குனரான இவர் விக்ரமை வைத்து இயக்கிய மஜா சிறந்த ஜனரஞ்சகமான‌
வெற்றிப்படமாகும்.

லோகிதாதாஸ்


மலையாளத்தில் மிகப்பெரும் இயக்குனரான இவர் தமிழில் பிரசன்னா மீரா ஜாஸ்மினின்
நடிப்பில் கஸ்தூரிமான் படத்தை இயக்கினார் சமீபத்தில் இவர் மரணமடைந்தார்.

ஷாஜிகைலாஷ்


தமிழில் மலையாள இயக்குனர்கள் செய்யாத ஆக்சன் அதிரடி படங்களை இயக்கியவர்
வாஞ்சிநாதன்,ஆஞ்சனேயா இரண்டு படங்களில் வாஞ்சிநாதன் வெற்றிப்படமாகும்.



Sunday 23 October 2011

ஹைனஸ் ஜி.எம் குமார்



வெயில் படத்தில் பசுபதியின் கோபக்கார அப்பாவாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார்,அவன் இவன் ஹைனஸ் பாத்திரம் வரை
நடித்து தற்போது வந்துள்ள வேலுர் மாவட்டம் வரை பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்து பலரின்
பாராட்டை பெற்றவர் இவர்.இவர் மிகப்பெரிய இயக்குனர் என்பது அனேகம் பேர் அறிந்திராத விஷயம் சிவாஜி பிலிம்ஸ்க்காக இவர் இயக்கிய அறுவடை நாள் படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது.பிரபுவின் அண்ணன் ராம்குமார் பாதிரியார் வேடத்தில் முதன்முதலாக சினிமாவில் நடித்தது இந்தப்படத்தில்தான்.மறைந்த வில்லன் நடிகரான ஆர்.பி விஸ்வம் அவர்கள் கதை வசனம் எழுதி இசைஞானி இளையராஜா இசையில் தேவனின் கோவில் மூடிய‌
நேரம்,சின்னப்பொண்ணு,ஓலைக்குருத்தோலைகாற்றிலாடுது,மேளத்தை மெல்லத்தட்டு ஆகிய‌

அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்.படமும் பெண்கள் விரும்பி பார்க்கும் சிறந்த கதையம்சமுள்ள படமாக வெற்றிகரமாக ஓடியது அடுத்ததாக இவர் இயக்கிய சத்யராஜ் நடிப்பில்


பிக்பாக்கெட் திரைப்படம் சுமாரான ஓட்டம் ஓடியது.நடிகை பல்லவியின் தயாரிப்பில் மோகனின்
நடிப்பில் உருவம் என்ற திகில் படத்தை எடுத்தார் இதுவும் எதிர்பார்த்த அளவு

ஓடியது நீண்ட இடை வேளைக்கு பிறகு தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார் அதுவும் அவன் இவன் படத்தில்
நிர்வாணமாக நடித்திருப்பாரே அந்த காட்சிக்கெல்லாம் தைரியம் வேண்டும் இவர் இயக்குனராக‌
மட்டுமல்லாமல் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

Saturday 22 October 2011

சட்டமும் சந்திரசேகரும்

தலைப்பை பார்த்தவுடன் குழப்பமாக இருந்ததா  நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான‌

எஸ்.ஏ சந்திரசேகரைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் இவர் இயக்கிய திரைப்படங்கள் சில குடும்பதிரைப்படங்கள் குறிப்பாக  நதியா, ரகுமான் நடித்த நிலவே மலரே,விஜயகாந்த் நடித்த‌
வசந்தராகம் ஆகியவை குடும்பதிரைப்படங்கள் ஆகும் நடிகர் ரகுமானை இவர்தான் நிலவே மலரே படம் மூலம் அறிமுகப்படுத்தினார்,இவர் நண்பர்கள்,ரசிகன், தேவா,பெரியண்ணா என்று காதல் படங்களை எடுத்தவர் இவர் படங்களில் எல்லாம் நீதிமன்றக்காட்சி கட்டாயம் இடம்பெறும்
அது காதல் படமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக நீதிமன்றக்காட்சி இடம்பெறும்.கோர்ட் சீன்களுக்கென்றே பிரத்யேகமாக எடுக்கப்பட்டஇவரின் சிலபடங்கள் பெரும் வெற்றிபெற்றன.
விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை,நீதியின் மறுபக்கம் ஆகிய படங்களில் நீதிமன்றக்காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் வக்கீலின் வாதங்கள் தூள் பறக்கும்
சில காட்சிகள் சீட்டின் நுனிக்கே வரவழைக்கும்.ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் இவரின் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படங்களிலே அதிக நாட்கள் ஓடிய படம் இந்த
படத்தில் பாக்யராஜும் சேர்ந்துகொண்டு நீதிமன்றக்காட்சிகளில் பட்டையை கிளப்புவார்.



கலைஞர் வசனத்தில் நீதிக்கு தண்டனை படத்தை எடுத்தார் அதிலும் நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்திலும் நீதிமன்றக்காட்சிகள் அதிகம்.இது எங்கள் நீதி என்ற படத்தில் இவரது மகன் விஜய் 16வயது சிறுவனாக பள்ளி மாணவனாக  நடித்து இருப்பார் இதிலும் நீதிமன்றக்காட்சிகள் அதிகம்.ராம்கி கதாநாயகனாக நடித்த படம் இது. இவர் மகனை அறிமுகப்படுத்திய நாளைய தீர்ப்பு, இவர் இயக்கிய சுக்ரன்,ராஜதுரை,ராஜநடை,சட்டம் ஒரு விளையாட்டு இவர் இயக்காமல் கதை வசனம் மட்டும் எழுதிய தமிழன் ஆகிய எல்லா படத்திலுமே நீதிமன்றக்காட்சிகள் அனல் பறக்கும் வசனங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும்
தமிழ் சினிமாவில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகம் இவரின் படங்களாகத்தான் இருக்கும் கடைசி வரை சட்டத்தை கைவிடாத ஒரே தமிழ் இயக்குனர் இவர்தான்.இவர் கடைசியாக இயக்கிய சட்டப்படிகுற்றம் இதுவும் நீதிமன்றக்காட்சி நிறைந்த படம்தான்

Thursday 20 October 2011

மனதை கரைய வைத்த திரைப்படங்கள் பாகம்1



தமிழ்சினிமாவில் எத்தனையோ மனதை கரைய வைத்த படங்கள் வந்துள்ளன அதில் நான் ரசித்த பலதரப்பட்ட படங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றுதான் இதை நான்
எழுதுகிறேன். நான் ரசித்தபடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக‌
எழுதுகிறேன்

தண்ணீர் தண்ணீர்


தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தண்ணீர்பஞ்சம் அதிகம் உண்டு மழை நன்றாக பெய்யும் சிரபுஞ்சி கூட இதற்க்கு விதிவிலக்கல்ல தண்ணீர் பிரச்னையை மையமாக ஒரு சில‌
படங்களே தமிழில் வந்துள்ளன சிலவருடங்களுக்கு முன்பு கூட கே.வி ஆனந்த் இயக்கிய கனாக்கண்டேன் என்ற திரைப்படத்தில் தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இயக்கினார்
இந்தப்படம் சரியாக போகவில்லை கே.வி ஆனந்த் இயக்கிய அயன்,கோ,படங்கள் பக்கா கமர்ஷியல் படங்கள் என்பதால் நன்றாக ஓடியது .நல்ல விஷயத்தை கூறிய படங்களை தற்போது
இருக்கும் இளைஞர் சமுதாயம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பது வேதனைக்குறிய விஷயம்.சரி விஷயத்திற்க்கு வருகிறேன் தண்ணீர் பிரச்னையை கே.வி ஆனந்த்திற்க்கு முன்பே
கையாண்டவர் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கோமல்சுவாமிநாதன் அவர்கள் கதை வசனத்தில் பாலச்சந்தர் இயக்கியிருப்பார் தண்ணீர் பிரச்னையை இந்த அளவிற்க்கு அழுத்தமாக‌
வேறுபடத்தில் சொல்லியிருப்பார்களா என்றால் சந்தேகத்திற்குறியதுதான்.சரிதா,ராதாரவி போன்றோர் நடித்துஇருப்பார்கள் மழைஇல்லாமல் தண்ணீருக்கு பல மைல்தூரம் நடக்கும் கிராமத்துபெண்களின் அவலத்தையும்,மேகம் கறுக்கும்போது அந்த கிராமவாசிகள் படும் சந்தோஷத்தையும் பாலச்சந்தர் அவர்கள் அருமையாக இயக்கியிருப்பார்.இந்த படத்தை இதுவரை பார்க்காதவர்கள் அடுத்தடுத்த வீடியோக்களில் இந்தபடத்தை பார்க்கலாம்.




வீடு


சொக்கலிங்கபாகவதர் அவர்கள் நடித்து இளையராஜா இசையமைத்து பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் மனிதனாக‌ பிறந்தவனுக்கு தேவையான விஷயம் இந்த வீடு
சொந்தவீடு இருந்தால் அவன் அடையும் மகிழ்ச்சி வார்த்தையிலடங்காதது.ஆனால் அந்த‌
வீட்டை அவன் கட்ட எடுக்கும் முயற்சிகள் அங்கு இங்கு கடன் வாங்கி வீட்டை கட்டி முடிப்பதற்க்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.வீடு கட்டி குடியேறியபின்பும் வாங்கிய கடனை கட்டி அந்த வீட்டில் அவன் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.இந்தபடத்திலும் கதாநாயகன் சொக்கலிங்கபாகவதர் வீடு கட்டுவதற்க்கு
படும் கஷ்டங்களை பாலுமகேந்திரா அவர்கள் இயக்கியிருப்பார் கதாநாயகன்சொக்கலிங்கபாகவதர் படும் வேதனைகளை இளையராஜாவின் இசையால் காட்சிகளை தூக்கி நிறுத்தியிருப்பார்.கடைசியில் கட்டியவீட்டை பார்ப்பதற்காக வரும்போது

இறந்து விடும்காட்சி கல் நெஞ்சையும் கறையவைக்கும் காட்சி சொக்கலிங்கபாகவதர்,இளையராஜா,பாலுமகேந்திரா ஆகிய மூவருமே போட்டிபோட்டு
உழைத்து இந்தபடத்தை ஜீவனுள்ள படமாக உருவாக்கியிருப்பார்கள்



டி.ராஜேந்தர்




நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் இவர்.ஆரம்பத்தில் ஜேப்பியார் தயாரிப்பில் வெளிவந்த‌ படங்களில் இவரும் இவர் மனைவி உஷாவும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளனர் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.ஒரு தலை ராகம் என்ற‌
படத்தை இயக்கினார்.இந்தப்படம் யாரும் எதிர்பாராத வகையில் 100நாட்களுக்கு மேல் ஓடியது
பாடல்களுக்கு இசையமைத்ததும் இவர்தான் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின‌

தொடர்ந்து இவர் இயக்கியஉயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம்,என் தங்கை கல்யாணி,மைதிலி ,என்னை காதலி,
உறவைக் காத்த கிளி,ஒரு வசந்த கீதம்,சாந்தி எனது சாந்தி,சம்சாரசங்கீதம்,ஒரு தாயின் சபதம்,       
என்று இவரின் வெற்றிப்படங்கள் நீளும்.உறவைக்காத்தகிளி படத்தில் ஆறு மாத குழந்தையாக‌
சிலம்பரசனை அறிமுகப்படித்தினார். நடிகை அமலாவை மைதிலி ,என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.இவர் படங்களுக்கு இசை இயக்கம்.பாடல்கள்,தயாரிப்பு.என அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறந்து அஷ்டாவதானி ராஜேந்தர் என திரையுலகினரால்
அழைக்கப்பட்டார்.அப்போது புகழின் உச்சத்தில் இருந்த இளையராஜாவின் பாடல்களை எக்கோ என்ற ஆடியோ நிறுவனம் வெளியிட்டது.இளையராஜாவின் பாடல்களை தவிர்த்து மற்ற இசையமைப்பாளரின் பாடலை வெளியிட்டது என்றால் அது இவர் இசையமைக்கும் படங்களின்
பாடல்களைத்தான்.கதாநாயகியிடம் டூயட் பாடும் ராஜேந்தர் கதாநாயகியை தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்றே பாடுவார்[அதற்க்கு எதிர் இவர் மகன் சிம்பு] கடைசிக்காட்சியில் இவர் காதல் நிறைவேறாமல் அதிகபட்ச படங்களில் மரணமடைந்துவிடுவார்.இவர் படங்களுக்கு மட்டுமல்லாது விஜயகாந்த் நடித்த கூலிக்காரன்,சுரேஷ் நடித்த பூக்களை பறிக்காதீர்கள் படங்களுக்கும் இசையமைத்து அந்த பாடல்களையும் வெற்றிபெறசெய்தவர். நியூமராலஜியில்
அதிக ஆர்வம் கொண்ட ராஜேந்தர் தன் படத்தின் வெற்றி சென்டிமென்டாக ஒருதலைராகம் தவிர்த்து எல்லாப்படங்களுக்கும் ஒன்பது எழுத்தில் படத்தின் தலைப்பை வைத்தார்.ராஜேந்தர்
என்ற பெயரை விஜய.டி.ராஜேந்தர் என்றும் தனது மகன் சிலம்பரசனின் பெயரை சிம்பு என்றும்
அதுவும் பிடிக்காமல் இப்போது எஸ்.டி.ஆர் என்றும் மாற்றி வைத்துவிட்டார்.இவர் அடுக்கு மொழியில் பேசினால் அனல் தெறிக்கும்.இப்போது புதிய துறையாக பாடுவதற்க்கும் வந்து விட்டார்.

Tuesday 18 October 2011

அனைவரையும் இயக்கிய ஆர்.விஉதயகுமார்






உரிமை கீதம் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்படத்தின் சுமாரான‌
வெற்றிக்குபிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்   மனோஜ்கியான் இசையில் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் நான் என்றும் ரசிக்கும் பாடல் .80,90களில் புகழ்பெற்று

இருந்த உச்ச நடிகர்கள் அனைவரையும் இயக்கிய பெருமை இவருக்கு உண்டு இந்தப்பெருமை
இவரைத்தவிர எந்த இயக்குனருக்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.உரிமைகீதம் படத்திற்க்கு பிறகு இவர் சத்யராஜை வைத்து புதியவானம் படத்தை இயக்கினார் இதில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் நடித்தார் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து கிழக்கு வாசல் படத்தை இயக்கினார் அதன் வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை வைத்து இயக்கிய சின்னக்கவுண்டர் வரலாறுகாணாத வெற்றிபெற்றது.அதன் வெற்றி ரஜினிகாந்தின் பார்வையை
இவர் பக்கம் திருப்பியது இவருக்காக ஜில்லா கலெக்டர் என்ற கதையை உருவாக்கினார் ரஜினி
கலெக்டராக நடித்து இருக்க வேண்டிய படம் சில காரணங்களால் படத்தை எடுக்க முடியவில்லை
ரஜினியிடம் ஜில்லா கலெக்டருக்காக வாங்கிய கால்ஷீட்டில் எடுத்தபடம்தான் எஜமான் ஏவிம்
தயாரித்து இவர் இயக்கினார்.மீண்டும் கார்த்திக்குடன் பொன்னுமணி ,நந்தவனதேரு ,படங்களை
எடுத்தார்.கார்த்திக்குடன் அதிகபடங்களில் இவர் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.பிரபுவின் நூறாவது படமான ராஜகுமாரன் இவரின் படம்தான்.சிவக்குமார்.பிரபுவை வைத்து உறுதிமொழிபடத்தையும்கமலஹாசனை
வைத்து சிங்காரவேலன் படத்தையும் இயக்கினார் இதுவும் வெற்றிப்படம்தான்.அர்ஜூனை வைத்து
சுபாஷ் என்ற படத்தை இயக்கினார் நடிகை சில்க்ஸ்மிதா நடித்த கடைசிப்படம் இது அதன்பிறகு
இவர் எடுத்த படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை நடிகர் விக்ராந்தை கற்ககசடற படத்தின் மூலம் இவர்தான் அறிமுகப்படுத்தினார் ரஜினி,கமல்,விஜயகாந்த்,பிரபு,கார்த்திக்,சத்யராஜ் என அனைவருடனும் படம் செய்த ஒரே இயக்குனர் இவர் .

Sunday 16 October 2011

சினிமா துறையினரின் அபத்தங்கள்

தமிழ் நாட்டுகிராமங்கள் சிறு நகரங்களில் உள்ள‌ தாய்மார்கள் முன்பெல்லாம்விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சென்று இரண்டு
படங்கள் பார்த்துவிட்டு வருவர் முன்பு தாய்மார்களை குறிவைத்து முன்பு நிறைய படங்கள்
வந்தது கரகாட்டக்காரன்,முந்தானைமுடிச்சு,பூவேபூச்சுடவா போன்ற படங்களின் வெற்றிக்கு
தாய்மார்கள்தான் முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம்.ஆனால் தற்போது வரும் படங்கள்இளைஞர்களை மட்டுமே குறிவைத்து வருவது வருத்தத்திற்குறியது ஏதொ அங்கொன்றும்
இங்கொன்றுமாய் நாடோடிகள்,அங்காடிதெரு,என,எல்லாதரப்பும் பார்க்கும் படங்களும் ஒன்றிரண்டு வரத்தான் செய்கின்றன நல்ல குடும்பகதைகள் நகைச்சுவை படங்கள்
சம்பத்தப்பட்ட படங்கள் இனி வருமா என்றால் கேள்விக்குறியதுதான்?தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு வேலை என்னவென்றால் ஒன்றுக்கும் ஆகாத பாடலுக்கு ஹிந்தி நடிகையை
காத்திருந்து கூட்டிக்கொண்டு வந்து ஆடவைப்பர் ஒருபாடலுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுப்பர்
ஒருபாடலுக்கு ஒரு கோடி கொடுப்பதெல்லாம் கொஞ்சம் டூமச்சாகதான் தெரிகிறது .நாட்டில்
இல்லாத ஏழைகள் எவ்வளவோ இருக்கின்றனர் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி
செய்யலாமே? பொசுக்பொசுக்னு பாரினுக்கு பாட்டு எடுக்கபோய் விடுகின்றனர் தமிழ் நாட்டில் இந்தியாவில் எங்குமே லொக்கேஷன்கள் இல்லையா தமிழ் சினிமாவின் கேமராக்களில் சிக்காத‌
எத்தனையோ இடம் இன்றும் உண்டு. காட்சியமைப்புக்கு தேவைஎன்றால் அயல்நாடுகள் செல்லலாம் தவறே இல்லை. இதைவிட கொடுமை என்னவென்றால் ஒருகாலத்தில் பாகவதரும்
கே.விமகாதேவன்,எம்.எஸ்.வி,இளையராஜா போன்றோர் கட்டிக்காத்த இசைஉலகத்தில் நல்ல பாடல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை வந்து விட்டது.ஒன்றுக்கும் ஆகாத‌
பாடலை இசையமைத்து  லண்டனில் பாடல் வெளியீட்டுவிழா நடத்துகின்றனர்
 தமிழ்நாட்டில் இசையமைத்துவிட்டு எதற்க்கய்யா ஃபாரினில் பாடலை வெளியிடுகிறீர்கள்
இயல்பானவர் எளிமையானவர் எனப்பெயரெடுத்த ரஜினிகாந்தை கூட இது போன்ற ஆடம்பரங்களில் சிக்க வைத்துவிட்டனர் இது வருத்ததிற்குறிய‌
விஷயம்.
தமிழ் நாட்டில் நடிகைகளே இல்லையா?எதற்க்கு அதிக பணம் கொடுத்து மும்பையில் இருந்து நடிகைகளை கொண்டு வருகிறீர்கள்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்த நடிகைகள் கொடுக்கும் பேட்டி கூட காண சகிக்காது தலைமுடியைதான் ஆயிரம் முறை கோதி விடுவார்கள். பேட்டியில் ஒன்றுமே இருக்காது.வீண் ஆடம்பரங்கள் எதற்க்கு என சினிமாக்காரர்களிடம் கேட்டால் கதைக்கு தேவைப்படுகிறது எனக்கூறுகின்றனர்
செலவே இல்லாத இயல்பான படங்கள் ஜெயித்ததில்லையா குறைந்த செலவில் எடுத்து நல்ல‌
கதையம்சம் கொண்ட காதல் போன்ற வெற்றிபடங்கள் ஆடம்பர இயக்குனர் எனப்பெயரெடுத்த‌
சங்கரின் படம்தானே.
சமீபத்தில் தூத்துக்குடியில் வாழும் ஒரு மனிதரை பற்றிய செய்தி ஒரு வாரப்பத்திரிக்கையில்
வந்து இருந்தது அந்த மனிதர் ஒருமுறை சாலையில் செல்லும்போது ஒரு மனநோயாளி
சாலையில் உள்ள சாக்கடையில் உள்ள சாக்கடையை அள்ளிதின்று கொண்டு இருந்திருக்கிறார் அதை பார்த்த மாத்திரத்தில் அந்த நபருக்கு உணவு வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி இது போன்ற சாலையில் திரியும்
ஆதரவற்றவர்களுக்குதேடிசென்று உணவு கொடுத்துவருகிறார் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதும் இவரல்லவோ மனிதர்.மனித வாழ்க்கையில் இன்று புகழின் உச்சியில் இருப்பவர்கள்
யாருக்கும் வாழ்வு இப்படித்தான் அமையும் என்று கூற முடியாது ஒரு காலத்தில் கோடிகளில்
புரண்ட சினிமா கலைஞர்களில் இன்று தெருக்கோடிகளிலில் இருக்கின்றனர். பழம்பெறும் நடிகை
காஞ்சனா இவர் இப்பொழுது பரம ஏழை.கர்நாடாகவில் எங்கோ ஒரு மூலையில் வசிக்கிறார்



இவர் ஒரு ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் அழகான முன்னணி
கதாநாயகி இன்றோ சரியான ஆதரவு இல்லாமல் பக்கத்து கோவிலில் தரும் சாப்பாட்டை வாங்கி
சாப்பிட்டுவருகிறார்.சின்னதம்பி,கட்டபொம்மன் போன்ற படங்களில் வில்லனாக நடித்த நடிகர்
உதயப்பிரகாஷ் தான் சம்பாதித்த பணத்தை தீயவழிகளில் அழித்து மனநலம் பாதிக்கப்பட்டு

நடிகர் சங்க வாசலிலே இறந்துகிடந்தார்.பணத்திலேயே குளித்த தியாகராஜபாகவதரின் மனைவி
கூட கடைசிக்காலத்தில் கஷ்டப்பட்டுத்தான் மறைந்தார்.இதை எதற்க்கு சொல்கிறேன் என்றால்
எந்த வாழ்க்கையையும் ஆண்டவன் ஒரே மாதிரியாக வைத்திருப்பான் என்று சொல்ல முடியாது
சினிமா இயக்குனர்களே ,நடிகர்களே,கோடிகளை கொட்டி படம் எடுக்கும் படாதிபதிகளே அயல்நாடுகளில் படம்.பாடல் வெளியீடு என்று வீண் செலவு செய்யாதீர்கள் நாலூ பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சினிமாவில் மட்டும் காட்சி வைக்காதீர்கள்.அதை நிஜமாக்க முயலுங்கள்
மல்லிகா ஷெராவத்தை கூட்டி வந்து ஒஸ்தி படத்தில் ஆடவைத்து இருக்கிறிர்களெ அந்த பாடலுக்கு நம்மூரில் நடிகைகளே கிடைக்கவில்லையா?
அந்த நடிகை ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு ஒரு வெயிட்டான பணத்தை வாங்கிசென்றிருப்பார்
தேவையில்லாத இந்த பந்தா எதற்க்கு? நடிகைக்கு கொடுத்த பணத்தை ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து நாலு
ஏழைகள் ,படிக்க இயலாத குழந்தைகள் ஆகியோருக்கு உதவி செய்தீர்கள் என்றால் நாலு பேர்
மட்டுமல்ல நாலு தலைமுறையே வாழ்த்தும்.இதில் விதி விலக்காக சூர்யா போன்ற நடிகர்கள்
அகரம் பவுண்டேசன் போன்ற அமைப்புகளை நிறுவி நல்ல விஷயங்கள் செய்வதை நாம்
பாராட்டித்தான் ஆக வேண்டும்.எதற்காவது நிவாரணம் என்றால் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வரும் ஒரு பகுதியைத்தான் நிவாரணம் கொடுக்க வேண்டுமா?சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் தலைக்கு 10000 ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பெரிய நிவாரணத்தொகை சேர்ந்துவிடுமே அந்த நல்ல மனது ஏன் உங்களுக்கு வரமாட்டேன்
என்கிறது..சினிமாக்காரர்களே [ஆணவத்தில்]ஆடம்பரத்தில்ஆடாதீர்கள்
  நல்ல மனதுடன் நாலுபேருக்கு உதவி செய்யுங்கள் இறைவன் உங்களை நாலு படங்களை கொடுத்து நல்ல நிலையில் வைப்பான் ..எதையோ எழுதப்போய் எதற்க்கோ வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் சரி நாளைக்கி சந்திப்போம்
                         நன்றி

Saturday 15 October 2011

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்

ஒரு சிலர் சினிமாவை விட்டு சென்று நன்றாக தொழில் செய்துபிழைக்கின்றனர் உதாரணமாக‌
மண்ணாங்கட்டி என்ற ஒரு நடிகர் பாக்யராஜ் படங்களில் ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இவர் தற்போது திருப்பூரில் மிகப்பெரிய ஜோதிடராக‌
உள்ளார் ஒரு வெப்சைட் ஒன்றையும் நடத்துகிறார் பரிஹாரம் ஹோமம் என்று இவர் வாழ்க்கை செல்கிறது. விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் பிளஸ்2 பெயிலாகி
அடிவாங்குவாரே நடிகர் காஜா ஷெரிப் இவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் இவர் ஒரு கலைக்குழு
ஒன்று வைத்து நடத்துகிறார் ஒரு ப்ளாஸ்டிக் நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார் இது போலசினிமாவில் ஒரு காலத்தில் வெற்றிக்கொடி நாட்டிய சில சினிமா கலைஞர்கள் திடீரென காணாமல் போய் விடுகிறார்கள் சிலர் கல்யாணம் செய்து செட்டிலாகி விடுகிறார்கள் சிலர்
தொழில்களில் கவனம் செலுத்தி சினிமா உலகை மறந்து விடுகின்றனர்.அப்படி காணாமல் போன‌
சில கலைஞர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
எங்கள் ஊரில் உள்ளஒரு  பெட்டிக்கடையில் நடிகர் காஜாஷெரிப் பால் பாக்கெட் வாங்கி சென்றபோது இந்த சிந்தனை எனக்குள் இந்த எங்கே எங்கே என்ற கேள்வி வந்தது .சும்மா படித்து விட்டு மறந்து விடுங்கள் சும்மா ஜாலிக்காக போட்ட பதிவு இது.

ரஜினிகாந்த் நடித்த சிவா,கார்த்திக் நடித்த நட்பு,விஜயகாந்த் நடித்த உழைத்து வாழ வேண்டும் உட்பட முன்னணி நடிகர்களை வைத்து ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அமீர்ஜான் என்பவர் எங்கே இருக்கிறார்?

கமல் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தநடிகை மாதவி எங்கே
 இருக்கிறார்?


பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு,மற்றும் விசுவின் அனைத்துப்படங்கள்,மாப்பிள்ளை,தர்மதுரை உட்பட பல படங்களில் நடித்த நடிகர் திலீப் எங்கே
இருக்கிறார் இவரை கூகிலில் தேடினால் மலையாள நடிகர் திலீப்தான் சிக்குகிறார் அந்த அளவிற்க்கு இவரை தமிழ்நாட்டுக்காரர்கள் மறந்து விட்டார்கள் இவர் எங்கே இருக்கிறார்?

மோகன் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த முன்னாள் கதாநாயகி jeyasree எங்கே இருக்கிறார்


மோகனின் முன்னணி படங்களான பாடு நிலாவே,உன்னைநான்சந்தித்தேன்,விஜயகாந்தின் நினைவே ஒரு சங்கீதம்,தர்மம் வெல்லும்,ராமராஜனின் கிராமத்து மின்னல்,முரளியின் கீதாஞ்சலி,இன்னும் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் கே.ரங்கராஜ் எங்கே?
கடைசியாக சரத்குமாரை வைத்து எல்லைச்சாமி என்ற படத்தை எடுத்தார் இவர் எங்கே?

காதல் ஓவியம் என்ற படத்தில் நடித்து விட்டு சென்ற நடிகர் கண்ணன் எங்கே?

இளையராஜாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் தேவராஜ் மோகன் என்ற இரட்டை இயக்குனர்களின் தற்போதைய நிலை என்ன?

முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன் என்ற பாடலுக்கு ஆடிய‌
முன்னாள் நடிகை ரஞ்சனி எங்கே?

அதே பாடலிலும் மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் நடித்த நடிகர் தீபன் எங்கே?

செந்தூரப்பூவே உட்பட பல படங்களில் நடித்த நடிகர் ராம்கி எங்கே?

சத்யராஜின் சாவி,மக்கள் என் பக்கம் உட்படசூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக்ரகுநாத் எங்கே?

மீண்டும் கோகிலா ,ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களில் நடித்த நடிகை தீபா எங்கே?

கார்த்திக்கை வைத்து உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்,சத்யராஜின் தாய்மாமன் உட்பட
பல படங்களை இயக்கிய இயக்குனர் குருதனபால் எங்கே?



பாலபாரதி
அமராவதி,தலைவாசல் என பல சூப்பர் ஹிட் மியூசிக்கல் படங்களுக்கு இசையமைத்தவர் இவரின் தற்போதைய நிலை என்ன?

ஜனகராஜ்
ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் தற்போது எங்கே இருக்கிறார்

சிவச்சந்திரன்
அவள் அப்படித்தான் உட்பட பல படத்தில் நடித்தவரும் நடிகை லட்சுமியின் கணவருமான இவர்
எங்கே இருக்கிறார்?

ரவீந்தர்

ஒரு காலத்தில் கமல் ரஜினி படங்களில் சிறு வில்லனாக வந்து மிரட்டும் இவர் எங்கே 5வருடங்களுக்கு முன்பு வந்த 6.2 படத்தில் இவரை பார்த்த ஞாபகம்

சி.வி ராஜேந்திரன்

பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்தியவர் சிவாஜி குடும்பத்தின் ஆஸ்தான இயக்குனர்
இவர் எங்கே?

சுரேஷ் பீட்டர்ஸ்
தென்காசிப்பட்டணம்,கூலி போன்ற படங்களுக்கு இசையமைத்த இவர் எங்கே?

சுபாஷ்
சத்ரியன்,ப்ரம்மா போன்ற படங்களை இயக்கியவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்க்கு இரண்டு படங்கள் கொடுப்பார் இவர் எங்கே

நடிகை ரூபிணி
ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் எங்கே


இயக்குனர் ஆர்.சி சக்தி
தர்மயுத்தம் போன்ற படங்களை இயக்கியவரும் கமலின் நெருங்கிய நண்பருமான இவர் எங்கே?

டி.எஸ் ராகவேந்தர்
வைதேகி காத்திருந்தால் படத்தில் ரேவதியின் தந்தையாக வருவாரே அவர்தான் இவர் சிறந்த‌
பாடகரும் கூட சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா
பாடலை பாடி இருக்கிறார்   இவர் எங்கே?

இவர்களுக்கு உள்ள வேலைப்பளு குடும்பச்சூழ்நிலை போன்றவற்றால் சினிமாவில் பங்கேற்காமல் இருக்கலாம் ஆனால் பொது நிகழ்ச்சிகள்,திருமணம், போன்ற
எதிலுமே இவர்களை பார்க்கமுடிவதில்லையே அதுதான் ஆச்சரியம்!



Thursday 13 October 2011

சினிமா இயக்குனரான ஐ.ஏ.எஸ் அதிகாரி



1994ம் ஆண்டு வெளிவந்த மோகமுள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர்
ஞானராஜசேகரன் .இவர் இயக்கிய முதல் படம் தி.ஜானகிராமன் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டுவந்த படம் ஆகும்.இந்த படம் ஒரு பிராமணகுடும்பத்தின் பின்னணியில் கதைக்களம் கொண்ட படம் ஆகும் இந்தபடம்   சரியாக போகவில்லை நல்ல இயக்குனர்
என்ற பெயரை மட்டும் இவருக்கு வாங்கிதந்தது.படத்தின் பாடல்கள் இசைஞானியின் இசையில்
சொல்லாயோ வாய் திறந்து,கமலம் பாதகமலம்,அருண்மொழியின் குரலில் நெஞ்சே குருநாதர்,
போன்றபாடல்கள் அருமையாக வந்து இருந்தன அடுத்தாக இவர் இயக்கிய பாரதி படம் சிறந்த‌
திரைப்படமாக வந்தது பாரதியின் வரலாற்றை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பாமர மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்தவர்.இந்த படத்திற்காக பவதாரிணி மயில் போல பொண்ணு
ஒண்ணு பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது

அடுத்தாக இவர் சத்யராஜை வைத்து பெரியார் படத்தை இயக்கினார் இந்த படம் வசூலை வாரிக்குவிக்காவிட்டாலும் சத்யராஜுக்கும் இயக்குனருக்கும் நல்ல பெயரை பெற்றுதந்தது.இவ்வளவு அருமையான படங்களை கொடுத்த இயக்குனர் ஞான்ராஜசேகரன் ஒரு
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடதக்கது

விசுவின் வித்தியாசமான படங்கள்



அடிதடி படங்களாக அதிகம் வந்து கொண்டிருந்த எண்பதுகளில் தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் மக்களை கட்டிப்போட்டவர் இயக்குனர் விசு அவர்கள்.தனது படங்களான‌
வேடிக்கை என் வாடிக்கை ,சகலகலா சம்மந்தி,வரவு நல்ல உறவு,திருமதி ஒரு வெகுமதி என நல்ல‌
படங்கள் பல இயக்கி இருந்தாலும் நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் கதை வசனம் மட்டும் எழுதி இருந்தாலும்  விசுவின் வித்தியாசமானசில திரைப்படங்களை மட்டும் பற்றி பார்ப்போம்.


மணல்கயிறு
பொதுவாக விசுவின் படங்களில் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு நல்ல‌
நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்.இதுவே இவரின் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது மணல் கயிறு படத்திலும் கதாநாயகன் எட்டு வித‌
கட்டளைகள் போட்டு கதாநாயகனான எஸ்.வி சேகர் பெண் தேடுவார் திருமண தரகரான விசு
எஸ்.வி சேகரை ஏமாற்றி எட்டுவித கட்டளைகளுக்கு எதிர்மறையாக உள்ள பெண்ணை
கல்யாணம் செய்து வைத்து விடுவார் அத்ற்க்கு பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்களை
சொல்லித்தான் தெரிய வேண்டுமா அருமையான சிந்திக்கவும் சிரிக்கவும் ஏற்றபடம் இது.


சம்சாரம் அது மின்சாரம்


பெற்ற குழந்தைகளால் இன்னலுக்கு ஆளாகும் தகப்பனை பற்றிய படம் விசு,ரகுவரன்,இளவரசி,லட்சுமி,காஜாஷெரிப்,சந்திரசேகர் ஆகியோர் நடித்து மத்திய அரசின்
தங்கத்தாமரை விருது வென்ற படம் இது. இந்த படத்துக்காக போடப்பட்ட மினிமம் பட்ஜெட்
வீடு இன்றும் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ளது.ஏவிஎம்மின் புகழை தூக்கி நிறுத்திய படம்

பெண்மணி அவள் கண்மணி


நான் சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன் அங்கு விஸ்வநாதபுரம் என்ற பகுதிக்கு சென்று இருந்தேன் அங்கு என் உறவுக்காரர் ஒருவரின் முகவரியை பலரிடம் விசாரித்தேன் ஒருவருக்கும் தெரியவில்லை கடைசியில் ஒரு நபரிடம் கேட்டேன் அந்த நபர் பார்ப்பதற்க்கு
டிப்டாப்பாக  இருந்தார் நன்கு படித்தவராக இருப்பார் என நினைக்கிறேன் .ஒரே வார்த்தையில்
முகத்திலடித்தார் போல தெரியவில்லை என்று பதில் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றுவிட்டார் கடைசியில் என் உறவுக்காரரே பார்த்துவிட்டு வீட்டுக்கு அழைத்து சென்றார்
இதில் வேடிக்கை என்னவென்றால் நான் முகவரி கேட்ட டிப்டாப்பான நபரின் அடுத்த வீடுதான்
என் உறவினர் வீடு நகரங்கள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறது ஆபிஸ்,வீடு டி.வி
என்று இருக்கின்றனர் இதனால்தான் பக்கத்து வீட்டில் கொலை நடந்தால் கூட தெரியமாட்டேன்
என்கிறது.ஆனால் இருபது வருடங்களுக்கு முன் என் தாத்தா பாட்டி வீட்டிற்க்கு பள்ளி விடுமுறைக்காக சென்று இருந்தபோது தேவகோட்டை அருணா திரையரங்கில் பார்த்த இந்த‌
படம் உன் வீட்டை மட்டும் பார்க்காதே அக்கம் பக்கம் வீட்டிலும்[பிரச்னைக்குறிய விஷயம்மட்டும்] என்ன நடக்கிறது எனப்பார்
என்ற உயரிய பண்பை எனக்கு சொல்லிதந்தது.அதில் வாழ்ந்த விசுவின் கதாபாத்திரம் பக்கத்து
வீடுகளில் என்ன பிரச்சினை நடந்தாலும் நமக்கென்ன என்று இராமல் அதை தீர்த்து வைக்க முயற்சி செய்வார் இந்த படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் என்பது
குறிப்பிடதக்கது.விசுவின் படங்களில் மிக மிக பிடித்த படம்
விசுவின் திரைக்கதை வசனத்தில் தியாகராஜன் இயக்கிய படம் இது .


சிதம்பர ரகசியம்
ஒரு அப்பாவி இளைஞன் தன் முறைப்பெண்ணை திருமணம்செய்ய வேலை தேடி செல்லும்போது ஒரே இரவில் கடத்தல்,கொள்ளை,கொலை ஆகியவற்றில் மாட்டிக்கொள்கிறான்
அவனை சி ஐ டியாக வரும் விசுவும் அருண்பாண்டியனும் காப்பாற்றுவது கதை நல்ல நகைச்சுவையும் தற்ப்போது வெற்றி சென்டிமென்டாக காரைக்குடியில் படம் எடுத்து வரும் கோடம்பாக்கத்தினருக்கு முன்னோடியாக நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் காரைக்குடி,தேவகோட்டை என 20 வருடங்களுக்கு முன்பே படம் இயக்கியவர் விசு நல்ல‌
நகரத்தார் குடும்பத்தின் அருமையாக சொல்லப்பட்ட படம் இது

Wednesday 12 October 2011

தமிழ் சினிமா மறந்துவிட்ட இயக்குனர் ராஜசேகர்



தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கமலையும்,ரஜினியையும் வைத்து அதிக வெற்றிப்படங்களை
கொடுத்தவர்.கமலை வைத்து விக்ரம்,காக்கிசட்டை,ரஜினியை வைத்து படிக்காதவன்,மாப்பிள்ளை,தம்பிக்கு எந்த ஊரு,தர்மதுரை,விஜயகாந்தை வைத்து ஈட்டி,உண்மைகதையான மலையூர் மம்பட்டியான் ஆகியவை இவர் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் தமிழ் சினிமாவில் இவர் இன்று

இருந்திருந்தால் அசைக்கமுடியாத இயக்குனராக‌
இருந்திருப்பார் 1990ம் ஆண்டு தர்மதுரை படம்தான் இவர் இயக்கிய கடைசிப்படமாக இருந்தது
அந்த ஆண்டே இவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் நாம் நினைத்துப்பார்க்க வேண்டிய இயக்குனர்களில் இவர் முக்கியமானவர்
இவரின் புகைப்படத்தை பார்க்காதவர்கள் கீழுள்ள வீடியோவின் முடிவில் இயக்கம் ராஜசேகர்
என்று இவரின் புகைப்படத்தோடு பெயர் வரும் அதை பார்த்துக்கொள்ளுங்கள்



Tuesday 11 October 2011

கமலஹாசனின் பல்வேறு முகங்கள்



கமலஹாசனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது இவர் ஒர் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் வித்தியாசமான நடிப்பை ராஜபார்வை படத்திலேயே ஆரம்பித்தவர்.இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது
நடன இயக்குனராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்தவர் நன்றாக ஆட தெரிந்த கமலுக்கு பாடவும் தெரியும்.அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற பன்னீர் புஷ்பங்களே என்று பாடிய கமல்
அம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி என்று பாடி மன்மதன் அம்பு வரை நிறைய பாடிவிட்டார்.இது மட்டுமல்லாது
நடிகர் மோகனுக்கு ஓ மானே ஓ மானே என்ற படத்தில் பொன்மானே தேடுதே என்ற பாடலையும்,அஜீத்திற்க்காக‌


உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா என்ற பாடலையும்,தனுஷிற்காக புதுப்பேட்டை படத்தில் நெருப்பு வானில்
என்ற பாடலையும் பாடியுள்ளார் தனக்கு மட்டுமல்லாது பிற நடிகர்களுக்கும் பாடக்கூடியவர்.இவரின் ராஜ்கமல்
பிலிம்ஸ் சார்பாக அதிக படங்களை தயாரித்துள்ளார்.இவர் மட்டும் இந்நிறுவன படங்களுக்கு கதாநாயகனாக‌
நடிக்காமல் சத்யராஜை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கதாநாயகனாக‌
நடிக்கவைத்து அழகு பார்த்தவர் இவர் ஒரு நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர் மட்டுமல்லாது விருமாண்டி படத்தின் மூலம்
இயக்குனராகவும் ஆனவர் இப்போது சொல்லுங்கள் கமல் பல்வேறு முகம் கொண்டவர்தானே

Tuesday 4 October 2011

கலைஞரின் வசனத்தில் உண்மையிலேயே ஹிட் அடித்த படங்கள்



தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சமீபத்தில் உளியின் ஓசை,பாசக்கிளிகள்,இளைஞன்,பெண்சிங்கம் என்று வசனமாக எழுதினார் இந்த படங்களுக்கு
அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டது இந்த படங்கள் அதிக நாட்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது
உண்மையில் இந்தபடங்கள் தியேட்டரை விட்டே ஒரு வாரத்தில் ஓடியது உண்மை காலமாற்றத்தால் கலைஞரின் வசனங்கள் யாருக்கும் பிடிக்காமல் போயிருக்கலாம் ஆனால்
ஒருகாலத்தில் கலைஞரின் வசனத்திற்காகவே நன்றாக ஓடிய படங்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.

பராசக்தி



நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல்படமான இத்திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார் கலைஞர் இத்திரைப்படத்திற்க்கு வசனம் எழுதினார் அதிலும் க்ளைமாக்ஸ்
வசனம் அனல் பறக்கும் விதத்தில் இருந்தது.கலைஞரின் வசனமும் சிவாஜி அதை பேசிய‌
விதமும் நன்றாக படத்தை வெற்றிபெறச்செய்தது.

மந்திரிகுமாரி


இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து இருந்தார் வாராய் நீ வாராய் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
இது இந்தபடமும் கலைஞரின் வசனத்திற்காக நன்றாக ஓடிய படமாகும்.



மனோகரா
கண்ணே மனோகரா பொறுத்ததுபோதும் பொங்கியெழு என்ற வசனத்தை கண்ணாம்பாள் பேசும்போது சிவாஜி கணேசன் தூணை உடைத்துக்கொண்டு வருவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் படம் பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க செய்யும் காட்சியாக‌
இது அமைந்தது.






பாலைவன ரோஜாக்கள்
 பேனாமுனையால் அரசியல்வாதிகளிடம் மோதும் நிருபராக சத்யராஜ் நடித்து இருப்பார்
பிரபுவும் இணைந்து நடித்து இருப்பார் மணிவண்ணன் இயக்கி இருப்பார் கலைஞரின் வசனம்
சிறப்பாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று



பாசப்பறவைகள்‍


கலைஞரின் வசனத்தில் பராசக்தி படத்திற்க்கு பிறகு மிகச்சிறப்பானதொரு வெற்றிப்படமாக‌
அமைந்தது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்ட படமாக விளங்கியது
இசைஞானியின் இசையும் சிவக்குமார்,ராதிகா,மோகனின் நடிப்பும்கலைஞரின் வசனமும் பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான கொச்சின் ஹனிபா என்று அழைக்கப்படும் வி.எம்.சி ஹனிபாவால் இயக்கி
மிகப்பெரும் வெற்றிகண்ட படம்.



பாடாத தேனிக்கள்
 பாசப்பறவைகள் வெற்றிக்கு பிறகு அதே இசை இயக்கம் வசன ம் என அதே கூட்டணியில்
உருவான திரைப்படம் இது நன்றாக சென்று கொண்டு இருக்கும் குடும்ப வாழ்க்கையில்
திடீர் என ஏற்படும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட படம் இது.


இது எங்கள் நீதி ,நீதிக்குதண்டனை,புதிய பராசக்தி போன்ற படங்களும் ஓரளவிற்க்கு கலைஞரின்
வசனத்தில் வெற்றி அடைந்த படங்களாகும்.