Thursday 29 September 2011

சந்திரபாபு



தமிழ் சினிமாவில் கருப்புவெள்ளை காலத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வந்தவர்
இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் நல்ல நகைச்சுவை நடிப்பு மட்டும் அல்லாமல்
பாடவும் தெரிந்தவர் வெஸ்டர்ன் சம்பந்தப்பட்ட பாடல்களையும் நடனங்களையும் நமக்கு கொடுத்தவர் அன்னை,சகோதரி,சபாஷ்மீனா போன்ற படங்களில் நடித்தவர் அன்னை படத்தில்

ஒரு எலி அடிக்கும் காட்சி வரும் அந்த காட்சி நான் விழுந்து விழுந்து சிரித்த காட்சி.அதே போல்
சபாஷ்மீனா படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து
இருப்பார் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைதயாரித்து இயக்கி நடித்தார்.இவரின் சொந்த வாழ்க்கை
துயரமாக அமைந்தது கட்டிய மனைவியைதிருமணத்தன்றே காதலருடனே சேர்த்துவைத்த மகான் இவர்.

Tuesday 20 September 2011

இயக்குனர் பாலு ஆனந்த்

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் பட்டறையில் பயிற்சிபெற்றவர் இவரின் படங்களில் அசோசியேட்டாக வேலைசெய்தவர் .இவர் சொந்தமாக இயக்கிய படங்கள் விஜயகாந்தை வைத்து நானே ராஜா நானே மந்திரி என்ற அருமையான காமெடி கலந்த காதல் படமும்

அண்ணாநகர் முதல் தெரு என்ற சத்யராஜ் நடித்த படமும்தான்.இரண்டுமே வெற்றிபடங்கள்.தற்போது சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் தமிழில் திறமையான இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

Monday 19 September 2011

தமிழின் சிறந்த திகில் திரைப்படங்கள் பாகம் 3




யார்

கலைப்புலி ஜி.சேகரன்,கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் கண்ணன் அவர்கள் இயக்கத்தில்
வெளிவந்தபடம் முதல் சீனில் இருந்தே பரபரப்பு பற்றிக்கொள்ளும் படத்தில்.எல்லா கிரகங்களும்
ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது பிறக்கும் ஒருவன் அழிக்க முடியாத தீய சக்தியாக உருவெடுக்கிறான்.அவனை அழிப்பதே கதை அர்ஜூன்,நளினி,போன்றோர் நடித்து இருந்த இந்த‌
படம் திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்ற படம்

கழுகு



நரபலி கொடுப்பது,போலிச்சாமியார் என‌
எஸ்.பி முத்துராமன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் திகிலுடன் பரபரப்பாக இயக்கி இருப்பார்
ரஜினிகாந்த்,ரதி,வித்தியாசமாக வரும் அந்த பஸ்,ஹிப்னாடிஸ மனிதன்,இரும்புமனிதனுடன் சண்டை ,படத்தில் முதலில் வரும் அனிமேஷன் டைட்டில்.எல்லாமே வித்தியாசமாக இருக்கும்
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்க்கு பலம் குறிப்பாக நரபலி கொடுக்கும்போது
காட்டுவாசிகளின் பின்னணி இசை அபாரம்.



ஆயிரம் ஜென்மங்கள்

துரை அவர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்,விஜயக்குமார் ஆகியோர் நடித்த படம் சந்திரமுகி படத்திற்க்கு முன்பே ரஜினி அவர்கள் டாக்டராக நடித்த படம் நண்பரின் மனைவியிடம் புகுந்த
ஆவியை வெளியேற்றுவதுதான் கதை குறிப்பாக  ஆவிக்குரிய பாடலாக வாணிஜெயராம்
பாடும் வெண்மேகமே பாடல் மிக இனிமை+திகில்.

உருவம்


மிக மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மோகனை கொடூர மனிதனாக்கியது இந்த திரைப்படம்.அகோரமான மோகனை பார்க்கவே பயமாக இருக்கும் நடிகை பல்லவி
தயாரிப்பில்,ஜி.எம் குமார் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்தது.பில்லி,சூனியம்
செய்வினை,போன்றவற்றால் பாதிக்கபடும் மனிதனை பற்றிய கதை இது.





Sunday 18 September 2011

தமிழ் சினிமாக்களின் முன்னோடி ஸ்டுடியோக்கள



இன்று கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்சினிமாவில் சென்னையில் மட்டும் அல்லாது மற்ற ஊர்களில் ஸ்டுடியோக்களை வைத்துக்கொண்டு சிறந்த படங்களை கொடுத்து ஜெயித்த பட அதிபர்கள்
இருந்தார்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படங்கள் அதிகம் அவை வெற்றிபெற்றதும்
அதிகம்.அற்புதமான அந்த ஸ்டுடியோக்களை பற்றிதான் இந்த கட்டுரை.

ஏ.வி.எம் ஸ்டுடியோ



நவீன யுகத்தில் அயன்,முதல் இடம் என்று படங்களை கொடுத்துகொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் காரைக்குடி அருகே தேவக்கோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோஅமைத்து இவர்கள் எடுத்த நாம் இருவர்,வேதாள உலகம் போன்று கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படங்கள்தான் அதிகம்
பின்னாட்களில் ஏ.வி.எம் அசுர வளர்ச்சியடைந்து இன்றளவும் அசைக்க முடியாததாக சென்னையில் உள்ளது.

 பட்சிராஜா ஸ்டுடியோ


கோவையில் இயங்கிய இந்த ஸ்டுடியோ மிக பழமையான ஸ்டுடியோ கடைசியாக இங்கு எடுக்கப்பட்ட படம் நடிகர் திலகம் நடித்த நான் பெற்ற செல்வம் திரைப்படம்தான் ஸ்ரீவள்ளி
போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன தற்பொழுதும் பழமையோடு
கோவையில் இந்த ஸ்டுடியோ உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ்




சேலம் ஏற்காடு சாலையில் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆவார். இவர் ஏராளமான திரைப்படங்களை
தயாரித்தவர்.தமிழின் முதல் வண்ணதிரைப்படமான[ கேவாகலர்] அலிபாபாவும்40திருடர்களும் படம்தான் இன்றும் நினைவுசின்னமாக உள்ளது சேலம் சென்றால் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்

ஜெமினி ஸ்டுடியோ

எஸ்.எஸ்வாசன் அவர்களின் ஸ்டுடியோ இது சென்னையில்தான் உள்ளது இங்கு அவ்வையார்,மிகுந்த பொருட்செலவில் சந்திரலேகா [விஜய் நடித்தது அல்ல]ஆகிய படங்கள்
தயாரிக்கப்பட்டன‌

 பிரசாத் ஸ்டுடியோ

எல்.வி பிரசாத் அவர்களின் ஸ்டுடியோ இங்குதான் மனோகரா போன்ற திரைப்படங்கள்
தயாரிக்கபட்டது காலமாற்றத்தால் இன்று நாகரீகமாக இந்த ஸ்டுடியோ உள்ளது




Saturday 17 September 2011

துறை விட்டு துறை தாவியவர்கள்



எஸ்.பி பாலசுப்பிரமணியம்

பலஆயிரம் பாடல்களுக்கு மேல் தமிழ் தெலுங்கில் பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்க்கு இசை மீது
ஏற்பட்ட ஆர்வத்தால்  இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார் இவர்
பாடினால் எப்படி பாடல் வெற்றி அடைந்ததோ அதேபோல இசையமைத்தாலும் பாடல் வெற்றி அடைந்தது
இவர் இசையமத்து வெற்றியடைந்த குறிப்பிட்ட படங்கள்.துடிக்கும்கரங்கள்,சிகரம் ஆகியவை ஆகும்
குறிப்பாக துடிக்கும் கரங்களில் இடம் பெற்ற மேகம் முந்தானை,பெண்புத்தி முன் புத்தி.போன்ற பாடல்களும்
சிகரம் படத்தில் இடம்பெற்ற அகரம் இப்பொ,இதோ இதோ என் பல்லவி பாடல்களும் வெற்றி அடைந்தன‌




கங்கை அமரன்

வாழ்வே மாயம் போன்ற புகழ்பெற்ற படங்களில் எல்லாம் இசையமைத்த இவர் திடீரென இயக்குனர் அவதாரம்
எடுத்து அதிலும் மெகா வெற்றிபெற்றார் இவர் இயக்கத்தில்  ராமராஜனை வைத்து அதிக‌
படங்கள் இயக்கியவர் எங்க ஊரு பாட்டுக்காரன் ,கரகாட்டக்காரன் படங்களின் வெற்றி இவர் துறையை
மாற்றியது



எடிட்டர் லெனின்
அதிக‌ படத்திற்க்கு குறிப்பாக 80,90களில் வந்த நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு எடிட்டிங்  செய்து இருந்தாலும்
இயக்கத்தின் மீது இருந்த தாக்கத்தால் இவர் இயக்கிய படம் கார்த்திக்கை வைத்து இயக்கிய சொல்லதுடிக்குது
மனசு திரைப்படம் ஆகும் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றபோதும் பாடல்கள் இளையராஜாவின் இசையில்
மிகப்பெரிய வெற்றியைபெற்றது



கே.வி ஆனந்த்

அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருந்தாலும் அந்த துறையை விட்டு இயக்குனர் துறைக்கு
வந்தபிறகே வெற்றிஅடைந்தார் இவர் இயக்கிய கனாகண்டேன்,அயன்,கோ.என்று அனைத்துபடங்களுமே
மிகப்பெரிய வெற்றி அடைந்தன


பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன் இன்னும் சிலதுறை தாவிய‌ கலைஞர்களை பற்றி மற்றுமொரு
பதிவில் காண்போம்.


Friday 16 September 2011

கடைசி வரை கல்லூரிக்கு சென்று வந்தவர்கள்



சின்னிஜெயந்த்

இயக்குனர் மகேந்திரனின் கை கொடுக்கும் கை படத்தில் ஒடிசலான தேகத்துடன் அறிமுகமான சின்னி ஜெயந்த் சிறந்த பல குரல் கலைஞர் ஆவார் இவரும் கடைசிவரை கல்லூரி மாணவராகவே நடித்து புகழ்பெற்றவர்கள் புரியாத மொழியில் பேசுவது இவரின் ஸ்பெஷாலிட்டி



விவேக்



இயக்குனர் பாலச்சந்தரின் பட்டறையில் உருவானவர் விவேக் . மனதில் உறுதி வேண்டும் என்ற‌
படத்தில் அறிமுகமானவர்.தான் பார்த்த தலைமை செயலக அதிகாரி வேலையை உதறிவிட்டு
சினிமாவுக்கு வந்தவர் இவர் புதுபுதுஅர்த்தங்கள் படத்தில் இன்னைக்கி செத்தா நாளைக்கி பால்
என்ற புதியதத்துவத்தை சொன்னவர் இவரும் இன்று வரையில் கல்லூரி மாணவர்தான்.

சார்லி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஃபாஸில் சித்திக்,பிரியதர்சன் போன்ற மலையாள இயக்குனர்களின் படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் தமிழ் சினிமா நடிகர்களில் தோழனாக‌
இவரும் கல்லூரிக்கு சென்று வந்த நாட்கள் தான் அதிகம்

குறிப்பு; இவர்கள் கல்லூரியில் படித்தார்களோ இல்லையோ கதாநாயகனின் காதலுக்கு உதவியாக இருந்தார்கள் என்பது மட்டும் உண்மை


பூர்வ ஜென்ம பந்தங்கள


சென்ற பதிவில் பள்ளி ,கல்லூரி காலத்து நினைவுகள் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் முன் ஜென்ம நினைவுகள் பற்றிய படங்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்

நெஞ்சம் மறப்பதில்லை

கல்யாணகுமார் நடித்து    இயக்குனர்    இயக்குனர் ஸ்ரீதர்           இயக்கத்தில் வெளியான முன் ஜென்ம காதல் கதை
முன் ஜென்மத்தில் ஜமீனனான கல்யாணகுமாரின் காதலை பெரிய ஜமீனான நம்பியார் பிரித்து
விடுகிறார் .அடுத்த ஜென்மத்தில் நண்பனின் கிராமத்துக்கு விடுமுறைக்கு வரும் கல்யாணகுமார்
தான் பார்த்து பழக்கப்பட்ட இடம் போலவே நண்பனின் கிராமம் தெரிவதால் விரிகிறது ப்ளாஷ்பேக் .முன் ஜென்ம நினைவுகளை அற்புதமாக சொன்ன படம் நெஞ்சம் மறப்பதில்லை.
நெஞ்சம் மறப்பதில்லைஎன்ற இனிய பாடல் நம் மனதை என்னவோ செய்வது நிச்சயம்.


எனக்குள் ஒருவன்


நகரத்து இளைஞனான கமலுக்கு திடீரென்று பழைய நினைவுகள் வர தொடங்க முன் ஜென்மத்தில் டார்ஜிலிங்கில் வாழ்ந்த சைனா மீசைக்கார கராத்தே குங்ஃபூ வில் தேர்ச்சி பெற்ற
கமல்தான் எனத்தெரிய வர விறுவிறுப்படைகிறது படம். சொத்துக்காக முற்பிறவியில் தம்மை போட்டுதள்ளிய சத்யராஜை பழிவாங்கவே தான் இப்பிறவி எடுத்திருப்பதை உணரும் கமலஹாசன் தான் எண்ணியதை நிறைவேற்றுகிறார் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்றபடம் இது

Thursday 15 September 2011

நினைவுகளை நினைவுபடுத்திய படங்கள்



நினைவுகளை நினைவுபடுத்திய படங்கள்

நினைவுகளுக்கு எப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு நம் பள்ளியில் படித்த நாள்கள்
பழகிய நாள்கள் அவ்வளவு மறந்து விட முடியாதவை நினைவுகளை மையப்படுத்தி நிறைய‌
திரைப்படங்கள் வந்து இருந்தாலும் நம் மனதில் நிற்பவை குறிப்பிட்ட படங்களே அத்திரைப்படங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.

ரத்ததிலகம்

கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தாதா மிராசி அவர்கள் இயக்கி இருப்பார் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜிகணேசன் அவர்கள் நாட்டுக்காக போராடும் ஒரு வீரனின் காதலையும் சொன்ன படம் 1963ல் வெளிவந்த இந்த‌
படத்தில் பசுமை நிறைந்த நினைவுகளே என்ற பாடல் ஒன்றே இப்பதிவின் தலைப்பை
நினைவுபடுத்திவிடும்.


பறவைகள் பலவிதம்

ராம்கி,நிரோஷா,ஆகியோர் நடித்த படம் கல்லுரியில் படித்த தோழர்கள்,தோழிகள்,அனைவரும்
கல்லூரியை விட்டு பிரியும்போது சிலவருடங்கள் கழித்து சந்தித்து கொள்ள வேண்டும் என்று
விரும்புகின்றனர் மீண்டும் அனைவரும் சந்தித்து கொள்ளும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் திசைமாறி போயிருக்கிறது.தோழர்களின் பழைய நினைவுகள் சொல்லும்
இப்படத்தை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர்1988ல் வந்த திரைப்படம் இது.


அழகி

தங்கர்பச்சான் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வந்த திரைப்படம் இது கடலூரின் வனப்பையும் அழகையும் படம்பிடித்த திரைப்படம் தான் காதலித்த ஒரு அழகான வசதியான பெண் பிற்காலத்தில் எவ்வாறு கஷ்டப்படுகிறாள் என்பதையும் பள்ளி கல்லுரி காலத்து நினைவுகளை
கதாநாயகன் பார்த்திபனை வைத்தே சொல்லி இருப்பது அருமையிலும் அருமை இசைஞானி
இளையராஜாவின் இசை படத்திற்க்கு பலம் குறிப்பாக காலடி தடம் தெரியும் கடற்கரை மண்ணில் ஆரம்பிக்கும் படத்தின் டைட்டில் இசையே படத்தின் கதையை சொல்லிவிடும்
மிக அருமையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று நந்திதாதாஸ்,தேவயானி ஆகியோரின்
நடிப்பும் அருமை.

ஆட்டோக்ராஃப்

சேரனின் படமான இதில் தன்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்களை தனது திருமண அழைப்பிதழ் கொடுத்து நேரில் அழைப்பதற்காக செல்லும் கதாபாத்திரத்தில் சேரன்.
தான் கேரளாவில் படித்த கல்லூரிகாதல் கிராமத்து பள்ளி தோழி காதல் நகரத்து பெண்ணுடனான‌
நட்பு ஆகியவற்றை சொன்ன படம்  சேரன்,கோபிகா,மல்லிகா
சினேகா,கனிகா, ஆகியோர் நடித்து.மிகப்பெரிய வெற்றிபெற்றபடம்.பழைய பள்ளி கல்லூரி
நினைவுகளை அருமையாக சொன்ன படம்.

ஆர்.சுந்தர்ராஜன்


இவர் இயக்கிய முதல் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை படம் 400 நாட்கள் ஓடி மிகப்பெறும் வெற்றிபெற்றது.இவரும் நம்ம சத்யராஜ்,மணிவண்ணன் மாதிரி கோயமுத்தூரை சேர்ந்தவர் அதனால் இவரிடமும் கோயமுத்தூர் குசும்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.சிவக்குமாரை வைத்து இவர் இயக்கிய சுகமான ராகங்கள் போதிய‌

வெற்றியை பெறவில்லை.இருப்பினும் இவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் வெற்றி இயக்குனர் வரிசையில் இணைந்தார்.தொட‌ர்ந்து விஜ‌ய‌காந்த்தை வைத்து அம்ம‌ன் கோவில் கிழ‌க்காலே,என் ஆசைம‌ச்சான்,காந்தி பிறந்தமண் போன்ற படங்களையும் மோகனை வைத்து பயணங்கள்
முடிவதில்லை ,மெல்லதிறந்தது கதவு, நான் பாடும் பாடல் படங்களையும் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்தை வைத்து ராஜாதிராஜா படத்தையும் கார்த்திக்கை வைத்து என் ஜீவன் பாடுது


படத்தையும் பிரபுவை வைத்து சீதனம் படத்தையும் சத்யராஜை வைத்து திருமதி பழனிச்சாமி படத்தையும் 80,90களில் புகழின் உச்சத்தில் இருந்த அனைத்து நடிகர்களையும்
அடுத்த தலைமுறை நடிகரான விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தையும் இயக்கியவர்.இவரின் படங்களில் 95 சதவீதபடங்கள் வெற்றிபடங்கள் ஆகும்

Tuesday 13 September 2011

ரகுவரன்

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் இவர்
ஏழாவதுமனிதன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் பாரதியாரின் பாடல்கள்
இப்படத்தில் இடம்பெற்று இருக்கும்.குறிப்பாக காக்கைசிறகினிலே நந்தலாலா என்ற பாடலில்

ரகுவரன் வண்டியில் செல்லும்போது இப்பாடல் இடம்பெறும்.ரகுவரன் வண்டியையும் இயக்கிகொண்டு இப்பாடலையும் பாடிக்கொண்டு செல்லும் அழகே தனி.மேலும் ஒரு ஓடை
நதியாகிறது படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பார்.அதில் இடம் பெற்ற தலையைகுனியும்
தாமரையே பாடலும் யாரும் மறந்திருக்க முடியாது.இவர் கூட்டுபுழுக்கள் ,ஏழாவதுமனிதன் ,ஒரு ஓடைநதியாகிறது போன்ற படங்கள் கதாநாயகனாக நடித்த படங்கள் ஆகும்


சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கஞ்சத்தனமாக எல்லாவற்றிற்க்கும் கணக்கு பார்க்கும்
மனிதராக இவர் நடித்து இருப்பார்.அண்ணாநகர் முதல் தெரு படத்தில் அமைதியான ஆசிரியராக‌
நடித்து இருப்பார் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தைக்கு ஏங்கும் தந்தை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருப்பார் முதல்வன் படத்தில் அர்ஜூன் பேட்டி எடுக்கும்



காட்சியில் சிறப்பாக‌ நடித்து இருப்பார்.இவர் இவ்வளவு சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து
இருந்தாலும் அனைவராலும் ரகுவரன் என்று சொன்னவுடன் உடனே நினைவுக்கு வருவது
புரியாத புதிர் படத்தில் இடம்பெற்ற காட்சியான ஐ நோ ஐ நோ என்று இவர் தொடர்ந்து சொல்லும்

காட்சிதான்.பூவிழி வாசலிலே படத்தில் மாற்றுத்திறனாளியாக இவர் நடித்த
வில்லன் கதாபாத்திரமும் புகழ்பெற்றது தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்து
முடிப்பவர்.பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய ஒரு மனிதனின் கதை படத்திலும் நாடகத்திலும் நடித்து குடிப்பழக்கத்தின் கொடுமைகளை சொன்னவர்.             
இவர் கடைசியாக நடித்த‌
படம் யாரடி நீ மோகினி.சமீபத்தில் இவர் இயற்கை எய்தினார்.இவர் இருந்தாலும் இறந்தாலும்
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

Saturday 10 September 2011

இயக்குனர் மனோபாலா



பாரதிராஜாவின் திறமையான உதவி இயக்குனர்களில் இவரும் ஒருவர் புதிய வார்ப்புகள் ,அலைகள் ஓய்வதில்லை
படங்களில் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்
இவர் மோகன் ,ராதிகா ,நடிப்பில் பிள்ளை நிலா படத்தை இயக்கினார் படத்தில் பேபிஷாலினி நடித்திருப்பார்

அருமையான பாடலான ராஜா மகள் என் ஆல் டைம் பேவரைட்.பிள்ளை நிலா படத்தின் வெற்றியால் பிஸியான‌
இயக்குனரானார்.ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ஊர்க்காவலன் படமும் வெற்றி பெற்றது தொடர்ந்து ராதிகாவை
வைத்து தென்றல் சுடும்,விஜயகாந்தை வைத்து என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்,சத்யராஜை வைத்து மல்லு
வேட்டி மைனர் படங்களை இயக்கியுள்ளார் இவரின் அனைத்துபடங்களும் வெற்றிபடங்களே.இவர் சமீபமாக நைனா
என்ற ஜெயராம் நடித்த படத்தை இயக்கினார்.இவரின் நடிப்புதிறமையை வைத்து கே.எஸ் ரவிக்குமார் அவர்கள்
நட்புக்காக படத்தில் நடிப்பதற்க்கு வாய்ப்பு கொடுத்தார் அன்றிலிருந்து இவர் பிஸியான நடிகர் ஆகி விட்டார் இப்பொழுது
படம் எதுவும் இயக்குவதில்லை

Friday 9 September 2011

தமிழ் சினிமாவில் இசை படும்பாடு



ஒரு காலத்தில் மவுனபடமாக வந்த சினிமா பின்பு பேசும்படமாக வந்தது.பேசும் படம் என்றுதான் பெயர்
இருக்கும் 48 பாடல்கள் நிறைந்த உன்னத காவியம் ஹரிதாஸ் பிராட்வே திரையரங்கில் மூன்று தீபாவளிகளை
கண்டது.பாடல்களுக்காகவே படம் ஒடியது அந்தக்காலத்தில் தான்.பின்பு வந்த ராமநாதன் அய்யர்,கே.வி மகாதேவன்
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் சிறந்த ட்யூன்களை அமைத்து சிறந்த பாடகர்களை வைத்து நல்ல‌
காதல் பாடல்களையும்,தத்துவபாடல்களையும் கொடுத்தனர் இன்றளவும் கேட்க திகட்டாத மெட்டுக்கள் அவை

பின்பு இளையராஜா காலம் வந்தது இந்த பண்னைபுரத்து இசை மேதை போடாத மெட்டுக்களே இல்லை
அனைத்து ராகங்களையும் கரைத்துகுடித்து கடினமான ராகங்களுக்கு கூட மிக அனயாசமாக மெட்டு போட்ட‌
விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.தியாகராஜ பாகவதர் காலத்துக்கு பிறகு பாடல்களுக்காகவே
ஒடிய படங்கள் இவரது இசையமைப்பில் உருவான படங்கள்தான்.இவரது சமகாலத்திய இசையமைப்பாளர்களான‌
இரட்டையர்கள் மனோஜ் கியான்,சங்கர் கணேஷ்,வி.எஸ் நரசிம்மன்,தேவேந்திரன்,எஸ்.ஏ ராஜ்குமார் போன்றோர்
கூட ஆரோக்கியமான போட்டியமைத்து நல்ல இசையை கொடுத்தனர் குறிப்பாக தேவேந்திரன் இசையமைத்த‌
பாடலான கண்ணுக்குள் நூறு நிலவா ,வி.எஸ் நரசிம்மன் இசையமைத்த அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான‌
ஆவாரம்பூ பாடல் இன்னும் டி.வி.டி கடைகளில் இளையராஜா ஹிட்ஸில் தான் வந்து கொண்டு இருக்கிறது.
நன்றாக இசையமைத்தும் சரியான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.



ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ் வரும் பாடல்கள் எல்லாம்[ஒன்றிரண்டு பாடல்களை தவிர] எந்த பாடல்களும்
காதுகொடுத்துகேட்க்கும் படியாக இல்லை கேட்கவே நாரஹாசமாக இருக்கிறது. நானும் வயதானவன் கிடையாது
எனக்கும் 31 வயதாகிறது எனக்கு சமீபத்திய பாடல்களில் விருப்பமே இல்லை.ஆனால் என் வயதை ஒத்த நண்பர்கள்
சிலர் நாக்கமுக்காடைப் பாடல்களைதான் விரும்புகின்றனர்.நல்ல பாடல்கள் சிலவற்றை எடுத்துசொன்னால் என்னை ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல்பார்க்கின்றனர்.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி அவர்கள் தான் வாங்கிய விருதை
இளையராஜாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.விஜய் ஆன்டனியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்
இளையராஜா போல் ஒரு பாடலாவது இசையமைக்க முயற்சி எடுத்ததுண்டா? கேட்டால் அனைத்து இசையமைப்பளருமே எல்லோரும் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்
2000ம் ஆண்டு வரை நன்றாக போய்க்கொண்டு இருந்த நல்லிசையை உஸ்ஸமலரஸே என்றும் நாக்கமுக்கா
என்றும் மெட்டு போட்டு கெடுத்தவர்கள்  நீங்கள்தான்.மேடையில் மட்டும் ஏன் முழங்குகிறீர்கள்.இதில் கொடுமை என்னவென்றால் கேட்க சகிக்காத பாடல்களை கூட‌
நன்றாக சாஸ்திரிய சங்கீதம் பயின்ற நல்ல இசைவளமையுள்ள பாடகர்கள் கூட தொ[ல்]லைக்காட்சி நிகழ்ச்சிகளில்
நடுவராக பங்கேற்றுபங்குகொள்ளும் நபர்களை பார்த்து அவர்கள் பாடும் பாடலில் ஜதி சரியில்லை சுதி சரியில்லை என்று கூறுவது
நகைச்சுவையை தான் தருகிறது. பாடலே சரியில்லை என்று ஒரே வார்த்தையில்  கூறிவிட்டு செல்லவேண்டியதுதானே
பாடும் நபர்களை குறை சொல்லவில்லை அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களைதான் குறை சொல்கிறேன்
நான்கு வயதே ஆன குழந்தை கூட ஏய் மாமா வரியா என்று பாடுவதும் என் உச்சிமண்டையில் சுர்ருங்குது என்று
பாடுவதும் அதை பார்த்து அனைவரும் ரசிப்பதும் காணச்சகிக்காதவை.குறிப்பாக பெற்றோர்கள் மகனோ மகளோ
பாடுவதை பார்த்து மெய்மறக்கின்றனர் தமிழ் சினிமாக்களில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்க விரசமான‌
கேடுகெட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து பாடச்சொல்லும் பெற்றோர்களை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது
தன் மகன் பாடினால் மட்டும் போதுமா நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடச்சொல்வதும் பெற்றோரின் கடமை
அல்லவா?



அடுத்ததாக ரீமிக்ஸ் பாடல்களுக்கு வருகிறேன் .மடை திறந்து பாடும் நதி அலைநான் பாடலை எத்தனை முறை
கேட்டாலும் திகட்டாத பாடல் .அந்த பாடலை நான் சமீபத்தில் யோகி பி என்ற பாடகர்கள் அதை கூறு போட்டு
கொண்டாடியிருப்பார்கள் இது பரவாயில்லை எங்கேயும் எப்போதும் என்ற நினைத்தாலே இனிக்கும் பாடலை
அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது அந்த பாடலை பொல்லாதவன் படத்தில் போட்டு கெடுத்து குட்டி
சுவராக்கியிருப்பார்கள்.இதே போல தர்மதுரை படத்தில் மாசி மாசம் ஆளான பாடல் அருமையான மெல்லிசை
பாடல் ஜேசுதாஸ் உருகி பாடி இருப்பார் அந்த பாடலை கெடுத்து பாண்டி படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்
ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு முதன் முதலில்  வித்திட்டவர் திரு இளையராஜாவின் புதல்வர் யுவன்சங்கர்ராஜாதான்.
எங்கேயும் எப்போதும் பாடல் என்ன படம் என்று 10வயது சிறுவனிடம் கேட்டால் பொல்லாதவன் என்று உடனே கூறுகிறான்.அப்படியானால் பாடலுக்கு கஷ்டப்பட்டு இசையமைத்த எம்.எஸ்.வி ஏமாளியா? தயவு செய்து
இசையமைப்பாளர்களே வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்யாதீர்கள் .புலவர் புலமைப்பித்தன்ஒரு பேட்டியில் கூறியது
போல ரீமிக்ஸ் பாடல் என்பது தலை வாழை இலை போட்டு அதில் அறுசுவை உணவு பரிமாறிக்கொண்டு
இருக்கும்போது ஏதாவது ஒரு நாய் வந்து அசிங்கம் செய்துவிட்டு போவது போல கேவலமானது என்று சற்று
காட்டமாகவே கூறி இருந்தார். என்ன எழுதி என்ன செய்ய .காலம் கலிகாலம் என்பது போல என்ன வேண்டுமானாலும்
எழுதுவார்கள்  பாடல் எழுத பல இரவுகள் மூளையை கசக்கி சிந்தனையை தூண்டும் அளவிற்க்கு பாடல்
எழுதவும் இசையமக்கவும் நல்ல பாடல்களை கேட்பதற்கும் ஆட்கள் குறைந்து விட்டார்கள் வார்த்தைகளே வாயில்
வராத தாம் தூம் இசையை மட்டுமே இப்போதய தலைமுறை விரும்பும் துயரமான நிலைக்கு வந்துவிட்டோம்.

தமிழ் சினிமாவும் தெய்வீகபாடகர்களும்



கே.பி சுந்தராம்பாள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்து சினிமாவில் நுழைந்து வாசன் அவர்கள் தயாரித்த
அவ்வையார் படத்தின் மூலம் புகழை தொட்டவர் இவர் பூம்புகார்,துணைவன்,திருவிளையாடல்
என்று நிறைய படங்களில் நடித்துள்ளார் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் அதிக படங்களில்
பாடியும் உள்ளார் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படத்தில் இவர் பாடும் தகதகதகவென‌
ஆடவா என்ற பாடல்,மேலும் திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பழம் நீயப்பா போன்ற‌
பாடல்கள் தெய்வீகபுகழ்பெற்றவை.அந்தகாலத்திலேயே ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்
மிகபுகழ்பெற்ற நடிகை. இசைக்கலைஞர் கிட்டப்பாவின் மனைவி இவர் என்பது குறிப்பிடதக்கது



பெங்களூர் ஏ.ஆர் ரமணி அம்மாள்


இவர் நிறைய பிள்ளையாரை பற்றி குறிப்பாக சிறுவயதில் நாம் கேட்ட பிள்ளையார்
பிள்ளையார் பாடல்,பொம்மபொம்மதா என்ற பாடல் இவர் பாடிய பாடலே ,ஆடு மயிலே
போன்ற பாடல்கள் இவரின் தனிப்பாடல்கள் ஆகும் தமிழ் சினிமாக்களில் குறிப்பாக‌
தெய்வம் என்ற படத்தில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல்கள்
இக்கால யுவன்களும் யுவதிகளும் கூட ரசித்து கேட்கும் பாடல்.(நான் சொல்லியது ரீமிக்ஸ்
பாடலை ஒரிஜினல் பாடலை அல்ல) தெய்வ அருள் நிரம்பிய பாடகர் இவர்.

சீர்காழி கோவிந்தராஜன்


நல்ல கணீர் குரலுக்கு சொந்தக்காரர் திருமலை தென் குமரி என்ற படத்தில் இவர் பாடிய‌
குருவாயூரப்பா,மதுரை அரசாளும் மீனாட்சி,திருச்செந்துரின் கடலோரத்தில் ,திருப்பதிமலை
வாழும்,கந்தர் அலங்காரம் படத்தில் இவரும் டி.எம்.எஸ் சும் இணைந்து பாடிய சந்தனம் மணக்குது போன்ற பாடல்கள் எல்லாம் என்றேன்றும் கேட்பதற்க்கு இனிய பாடல்கள்
இவை.அகத்தியர் படத்தில் இடம்பெற்ற நடந்தாய் வாழி காவேரி,வா ராஜா வா வில்
இடம்பெற்ற கடவுள் படைத்த உலகை எல்லாம் பாடல்கள் அருமையான பாடல்கள்
பின்னணி பாடகர்களில் இவர் ஒரு தெய்வப்பிறவி.

சூலமங்களம் சகோதரிகள்[ராஜலட்சுமி,ஜெயலட்சுமி]

துதிப்போர்க்கு வல்வினையோம் என்று ஒலிக்கும் கந்த சஷ்டி கவச பாடல்களுக்கு சொந்தக்காரகள் சகோதரிகளாக இவர்கள் செய்த கச்சேரிகள் ஏராளம் அந்த காலத்தில்
இவர்கள் செய்யும் கச்சேரிகளை பார்க்க கேட்க‌ அவ்வளவு கூட்டம் வருமாம்[என்ன செய்ய‌
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பாடகர்களை  பார்ப்பது அரிதாகி விட்டது] சினிமாக்களில்
சேர்ந்தும் தனித்தனியாகவும் பாடியுள்ளனர் தெய்வம் படத்தில் திருச்செந்துரில் போர் புரிந்து
போன்ற பாடல்கள் எல்லாம் என்றும் இனிப்பவை


டி.எம்.எஸ்

இவரின் பாடல்கள் பற்றி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை
அருணகிரினாதர் படத்தில் அருணகிரிநாதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார்.முத்தைதிரு
பத்தி திரு நகை ,சந்தனம் மணக்குது அம்பிகையே ஈஸ்வரியே போன்ற பாடல்கள் எல்லாம்
இவரும் ஒரு தெய்வ பலம் பொருந்திய பாடகர் என்பதை உணர்த்தும்.

பித்துக்குளி முருகதாஸ்


முருகனை பற்றியும் கிருஷ்ணனை பற்றியும் அதிக ஆல்பங்கள் பாடியிருந்தாலும் தெய்வம்
படத்தில் நேரில் தோன்றி நடித்து பாடிய நாடறியும் முருகனை பாடல்தான் இவரை நினைவு
படுத்தும் பாடல் ஆகும்.கருப்பு கூலிங்கிளாஸ்,பாடல்களில் ஒரே வரியே திரும்ப வருமாறு
பாடுவது இவரின் அக்மார்க் அடையாளங்கள்

மதுரை சோமு


இவர் நிறைய இசைக்கச்சேரி செய்து இருந்தாலும் தெய்வம் படத்தில் இவர் பாடிய கோடி மலைகளில் கொடுக்கும் மலை எனத்தொடங்கும் மருதமலை மாமணியே பாடல் இவர்
சிறப்பை உணர்த்தும்


இளையராஜா
இவர் பாடல்களை பாடினால் தன்னை மறந்து விடுவார் தீவிர கொல்லூர் மூகாம்பிகை பக்தர்
ரமண மகரிசி ,காமட்சி அம்மன்,திருவாசகம் போன்ற பாடல்கள் பாடி இருந்தாலும் தாய் மூகாம்பிகை படத்தில் பாடிய ஜனனி ஜனனி பாடல் மிகவும் உருகி பாடி இருப்பார் மேலும்
நல்ல வெள்ளிக்கிழமையிலே,அம்மன் புகழ் பாட எனக்கு என்ற பாடல்கள் எல்லாம் தெவிட்டாத தேன் இன்பம்

Thursday 8 September 2011

நான் பார்த்து ரசித்த படங்கள் 1


கரையெல்லாம் செண்பகப்பூ


தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த புத்தகபுழுக்கள் எல்லாம் சுஜாதாவின் கதையை வாசிக்காமல்
இருக்கமுடியாது எழுத்துலகில் இவரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.இவரின் கதைகளில்
வரும் கணேஷ் வசந்த் இருவரும் நம் உடன் பிறவா சகோதரர்கள் போல மனதுக்குள்ளே நிற்பர
இவர் எழுதிய நிறைய கதைகள் திரைப்படமாகவும் ,சீரியல்களாகவும் வந்து உள்ளனர்(இவரின்
சீரியல்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பான என் இனிய இயந்திரா,கொலையுதிர்காலம் போன்றவற்றின் தீவிர ரசிகன் நான்)


கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படம் 80களில் திரைக்கு வந்தது இது சுஜாதாவின் கதைதான்
என்னையும் அறியாமல் அந்த படத்தை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்றே தெரியாது
இது ஆனந்த விகடனில் தொடராக வந்து பெறும் வரவேற்பை பெற்றதால் திரைப்படமாக வந்தது
சுஜாதா இந்த கதையை சிற்பமாக செதுக்கி இருந்தாலும்,ஜி.என் ரங்கராஜன் இந்த கதையை
மெருகு ஏற்றியிருப்பார்.படத்தில் வரும் மியுசிக் டீச்சராக வரும் பிரதாப்போத்தன்,ஏட்டாக‌
வரும் தங்கவேலு,வேலைக்காரராக‌ வரும் பாண்டு என அனைவரும் தம் பாத்திரத்தை
சிறப்பாக செய்து இருப்பர்.குறிப்பாக கிராமத்து பாடல் பாடும் கிழவியாக வரும் மனோரமா
பாடல் பாடிவிட்டு அசந்தால் பொருளை திருடிசெல்லும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து
இருப்பார் எனக்கு தெரிந்து மனோரமாவின் திரை வரலாற்றில் எத்தனையோ கதாபாத்திரத்தில்
நடித்து இருந்தாலும் மனோரமா என்று சொன்னவுடன் எனது நினைவுக்கு வருவது இந்த கதாபாத்திரம்தான்.படத்தின் மற்றொரு கதாபாத்திரமான ஸ்ரீபிரியா அப்பாவி கிராமத்து
பெண்ணாக கலக்கி இருப்பார்.தான் கோவிலில் வேண்டிகொண்டதால் தான் சுமலதா
இறந்தார் என்று நம்பும் காட்சியில் நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்
படத்தில் பயாஸ்கோப் என்று சாதாரண கதாபாத்திரத்தை க்ளைமாக்ஸில் முக்கிய கதாபாத்திரமாக மாற்றி இருப்பார் எழுத்தாளர் சுஜாதா.மாடர்ன் பெண்ணாக
சுமலதா நடித்து இருப்பார்,அந்த மர்ம பங்களாவும் அந்த மர்ம பங்களாவை சுற்றி வரும்
இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங்கும் அருமையாக வந்து இருக்கும் படத்திற்க்கு முக்கிய‌
பலமே இளையராஜாவின் இசைதான் என்றால் அது மிகையாகாது.பாடல்களும் மிக அருமை
எக்காலத்தவரும் ரசித்துப்பார்க்கும் அருமையான படம் இது.

Tuesday 6 September 2011

இயக்குனர் மணிவண்ணன்



பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து நிழல்கள் படத்தின் மூலம் கதைவசனகர்த்தாவாக உயர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக‌
உயர்ந்தவர் மோகனையும்,சத்யராஜையும் வைத்து அதிக ஹிட் படங்களை தந்தவர் இவரது
முதல் படமே மோகனுடன் தான்.தொடர்ந்து அம்பிகை நேரில் வந்தாள்,இளமைகாலங்கள்
நூறாவது நாள் போன்ற இவரின் ஆரம்ப கால படங்கள் வித்தியாசமான கதையம்சமுள்ள‌
அருமையான படங்கள்.இவரின் நூறாவதுநாள்,24மணிநேரம்,படங்களை அடித்துக்கொள்ள‌
எந்த திகில் படமும் கிடையாது இவரின் விடிஞ்சா கல்யாணம் திகில்படம்தான் இருந்தாலும்
சுமார் ரகம் இளையராஜாவின் இசையில் காலம் இளவேனிற்காலம் என்ற பாடல் மட்டும்
இன்னும் என் காதில் ஒலித்துகொண்டுள்ளது.இவரின் படங்கள் அனைத்தும் நகைச்சுவை,
சமூகபிரச்சினை,திகில்,என்று போய்க்கொண்டு இருந்த வேளையில் இவர் இயக்கிய சின்னதம்பி
பெரியதம்பி,ராசாமகன்,இளமைகாலங்கள் போன்ற படங்கள் காதலை சொன்னபடங்கள் ஆகும்


சமூக பிரச்சினைக்காக இவர் இயக்கிய கலைஞர் அவர்கள் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்
படம் சிறந்த படமாக இருந்தது.மேலும் இவரின் அமைதிப்படை படத்தை அடித்துகொள்ள‌
படமே இல்லை. அமாவாசை சத்யராஜை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.



இவரின் திகில் படங்கள் மேலே சொன்ன படங்களாக‌ இருந்தாலும் மூன்றாவது கண் என்ற படத்தை
இயக்கியிருப்பார் நிழல்கள் ரவி சீரியல் கில்லராக நடித்து இருப்பார் மறைந்த நடிகை மோனிசா
கதாநாயகியாக நடித்து இருப்பார்.சரத்குமார் தான் கதாநாயகன் படம் அவ்வளவு பிரமாதமாக‌
வந்து இருக்கும் ஆனால் படம் ஓடவில்லை அது ஏன் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை




நடிகர் திலகத்துடனும் சத்யராஜுடனும் இவர் இணைந்த ஜல்லிக்கட்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட்
படமாக அமைந்தது.காலப்போக்கில் இவர் படம் எடுப்பதை நிறுத்திகொண்டார் நடிப்பு தொழிலை முழுதாக செய்கிறார் மணிவண்ணன் சார் உங்களிடம் இருந்து இன்னும் படங்களை
எதிர்பார்க்கிறேன்.


Sunday 4 September 2011

ரங்கராஜ் என்ற சத்யராஜ்

ரங்கராஜ் என்ற சத்யராஜ்


கோவையில் படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ். படிக்கும் காலத்திலேயே அனைத்து
எம்.ஜி.ஆர் படங்களையும் பார்த்துவிடுவார்.பிறகு சினிமாவில் சேருவதற்காக குட்டிக்கரணம் எல்லாம்
அடித்துக்காட்டி அசத்தியுள்ளார்.இவர் அறிமுகமான  சட்டம் என் கையில் என்ற படத்தில் இதில்
அடியாட்களில் ஒருவராக வருவார்.தொடர்ந்து அடியாட்களில் ஒருவராக நடித்துகொண்டு இருந்த சத்யராஜை
நாயகனாக அறிமுகப்படுத்தியவர் கார்த்திக்ரகுநாத் என்ற இயக்குனர்.இவர் சாவி என்ற படத்தில் ஆன்ட்டி ஹீரோ

வாக,சத்யராஜை அறிமுகப்படுத்தினார்.இவரின் வில்லத்தனம் சினிமா உலகில் மிக பிரபலம் அதிலும்
நூறாவதுநாள்,24மணிநேரம்,காக்கிசட்டை,விக்ரம்,என்று இவரின் வில்லத்தனம் அருமையாக இருக்கும்
இவரின் தகடுதகடு,என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே,போன்ற வசனமும் இன்றும் மறக்க முடியாதவை
விக்ரம் படத்தில் ஒரு மதகுருவிடம் சொக்கலால் பீடி குடிச்சுக்கிட்டு இருந்த நீ இங்க மதகுருவா என்று பேசுவார்
இந்த மாதிரி கோயமுத்தூர் குசும்பு என்று ஒன்று சொல்வார்கள் அதை சத்யராஜிடம் நிறைய பார்க்கலாம்


வில்லனாகவும் வில்லத்தனமான நாயகனகவும் நடித்து கொண்டு இருந்த சத்யராஜை இயக்குனர் இமயம்
பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் திரைப்படம் சிறந்த நாயகனாக ஆக்கியது. இது ஒரு காதல் கதை
ஆகும்.இந்த படத்தின் வெற்றி இவரை முழு நேர கதாநாயகனாக்கியது.கார்த்திக்ரகுநாத் இயக்கத்தில் இவர்
நடித்த மக்கள் என் பக்கம் படமும் வெற்றி பெற்றது.தொடர்ந்து பூவிழி வாசலிலே ,என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஜல்லிக்கட்டு,பாலைவன ரோஜாக்கள் போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்றன,பாரதிராஜா இயக்கத்தில் இவர்
நடித்த வேதம்புதிது படத்தை பார்த்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ,பாரதிராஜாவையும்,சத்யராஜையும்
கட்டிதழுவி வாழ்த்தினார். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான படமாக இது இருந்தது சிறிது இடைவேளைக்கு பிறகு அமைதிப்படை படம் பெறும் வெற்றிபெற்றது,இதில் இவரின் அமாவாசையாக இருந்து நாகராஜ சோழனாக மாறும் கதாபாத்திரத்தை யாரும்
மறக்கமுடியாது இன்றுவரை பெரியார்,ஒன்பது ரூபாய் நோட்டு என இவரின்
வித்தியாசமான வேடங்கள் தொடர்கிறது.