Sunday 31 July 2011

ஏ.பி நாகராஜன்

சிவனை யாராவது நேரில் பார்த்து இருக்கிறீர்களா நான் பார்த்து இருக்கிறேன் நடிகர்திலகம் சிவாஜி மூலமாக‌
இன்றும் கூட சிவன் படம் என்றவுடன் நினைவுக்கு வருவது திருவிளையாடல் படம்தான் இந்த படத்தின்
இயக்குனர் ஏ.பி நாகராஜன் பற்றிதான் இந்தபதிவு பேரன்பு கொண்ட ரசிகபெருமக்களே என்று இவர் சொல்ல‌
ஆரம்பிக்கும்போதே படத்தில்  என்ன சொல்கிறார் என்று கேட்க ஆர்வமாகி விடுவேன்
இவர் நிறைய பக்தி படங்கள் எடுத்துள்ளார் திருவிளையாடல் ,திருவருட்செல்வர்,கந்தன்கருணை.போன்ற‌
பக்திபடங்கள் ஆகும் சிவாஜிகணேசனை வைத்து இயக்கிய நவராத்திரி படம் நடிகர்திலகத்தை ஒன்பது வேடங்களில்
நடிக்கவைத்து அழகு பார்த்தவர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் யை வைத்து இயக்கிய நவரத்தினம். சீர்காழிகோவிந்தரா
ஜன் நடித்த திருமலைதென்குமரி,மற்றும் ஒரு சிறுவனை அடிப்படையாக கொண்ட வா ராஜா வா,மற்றும்
குமாஸ்தாவின்மகள்,குலமகள்ராதை,போன்றபடங்கள் தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் இவரின்
ராஜராஜசோழன் படம்தான்.கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கதையில் இவர் இயக்கிய தில்லானா மோகனாம்பாள் அந்த காலத்திலேயே
சூப்பர் டூப்பர் ஹிட் இன்று இவர் நம்முடன் இல்லை என்றாலும் இவரின் படங்கள் இன்றும் இவர் இருக்கி
றார், என்றே உணர்த்துகின்றன.

எம்.கே.டி தியாகராஜபாகவதர்



சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன் என்ற பாடலை சிறுவயதில் என் தாத்தா முனுமுனுக்கும்போது எனக்கு அந்த
பாடலின் தரம் தெரியாமல் எரிச்சல் அடைந்திருக்கிறேன் ஆனால் காலங்கள் செல்ல செல்ல பெரிய மேதைகள்
பற்றி அறிந்து வியப்படைந்திருக்கிறேன் அப்படி வியப்படைந்த ஒருவர்தான் எம்.கே.டி என்றும் ஏழிசை மன்னர்
என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதர் விவரம் தெரிந்த நாளிலுருந்து
 எந்த பாடலை வெறுத்தேனோ அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கொண்டுதான் உள்ளேன் இதில் இருந்தே
பாகவதரின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஹரிதாஸ் என்ற திரைப்படம் சென்னை ப்ராட்வே
திரைஅரங்கில் மூன்று தீபாவளி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி இருக்கிறது எல்லாம் பாடலுக்காக மட்டுமே
பாகவதரின் பாடலான பூமியில் மானிட ஜென்மம் எடுத்து என்ற பாடல் இன்றளவும் இனிக்கும் பாடல் இன்று
கோடிகளில் நிறைய நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் அந்த காலத்திலேயே நிறைய சம்பளம்
வாங்கியவர் தங்கதட்டில் சாப்பிட்டு வெள்ளி டம்ளரில் கை கழுவுவார் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு
அப்படி இருந்த பாகவதர் லட்சுமிகாந்தன் என்ற மஞ்சள் பத்திரிக்கையாளர் கொலை மூலம் அதில் சிக்கி கொண்டார்
விடுதலையான பிறகு இவரது திரை வாழ்க்கை நன்றாக இல்லை இவர் நடித்த அசோகுமார் ,சிந்தாமணி போன்ற‌
படங்களும் பிரசித்தி பெற்றவை இவரது மனைவி கடைசிகாலத்தில் கஷ்டப்பட்டுதான் மறைந்தார்.இப்போது
பாகவதரின் மகத்துவம் புரிந்து இருக்குமே