Friday 27 April 2012

சினிமாவை கலக்கிய தென்னகத்து நாட்டுப்புற‌ பாட்டிகள்

கொல்லங்குடி கருப்பாயி

இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச்சேர்ந்தவர்.நாட்டுப்புற பாடல்களில்
கைதேர்ந்தவர்.நன்றாக நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில் பாட்டிக்கு நல்லதொரு நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்.தொடர்ந்து இவரின் ஏட்டிக்கு போட்டி,கோபாலா கோபாலா உட்பட பாண்டியராஜனின் பல படங்களில் நடித்து நடிப்புக்கு பெருமைசேர்த்தவர் இவ்வளவு புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர் திரையுலகத்தினராலும் பலராலும் புறக்கணிக்கப்பட்டு இவரது சொந்த கிராமமான கொல்லங்குடியிலேயே வசித்து வருகிறார் மிகவும் வறுமையில் வாடுவது குறிப்பிடத்தக்கது.




பறவை முனியம்மா

இவரது பல பாடல்களை நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இவரது கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன்.2003ம் ஆண்டு வந்த தரணி இயக்கிய தூள் படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு வந்தார் படம் முழுக்க இவர் இருந்தாலும்.க்ளைமாக்ஸில் இவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லபேராண்டி என்ற பாடலே படத்திற்க்கு மிக மிக வலு சேர்த்தது.அந்த பாடலில் விக்ரமின் ஆக் ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன‌
தொடர்ந்து விவேக் நடித்த காதல் சடுகுடு,சரத்குமார் நடித்த ஏய் உட்பட பல படங்களில் நடித்து
இன்றுவரை வெற்றிகரமான சினிமா பாட்டியாக வலம் வருகிறார்.இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பறவை எனும் கிராமமாகும்.


தேனி குஞ்சரம்மா
 இவர் தேனியை சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம் சமீபத்தில் மறைந்துவிட்டார்.சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த கொக்கு சைவ கொக்கு
என்ற பாடலையும் காதலன் படத்தின் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடலையும் பாடியுள்ளார்.குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள்ளிப்பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்

Thursday 19 April 2012

அனைவரையும் கவர்ந்த ஆக்சன் கிங் அர்ஜூன்






இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் இவரின் தந்தை கன்னட நடிகர் சக்திபிரசாத் என்பவராவார்.
கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு வந்து புகழ்பெற்றவ ரஜினிகாந்த்,முரளி,மோகன் ஆகியவர்கள் வரிசையில் இவரும் புகழ்பெற்றவர்.இவர் இராமநாராயணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த நன்றி படத்தில் அறிமுகமானார்.இந்தப்படத்தில் கராத்தே வீரராக நடித்திருப்பார்
இவர் ஆக்சன் கிங் அர்ஜூன் என பலரால் அன்போடு அழைக்கப்பட்டார்
ஆரம்பகாலங்களில் இவர் படம் அதிகம் பேசப்படாவிட்டாலும் ஓரளவிற்க்கு ரசித்து பார்க்கும்படி
இருக்கும் கவுண்டமணியுடன் இவர் ஆரம்பத்தில் நடித்த வேஷம் என்ற படத்தை நான் பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன் நல்ல நகைச்சுவை அந்தப்படத்தில் இருக்கும்.இவருக்கு முதலில் ஹிட் ஆன படம் சங்கர் குரு என்றுதான் நினைக்கிறேன் ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜா இயக்கிய படம் தொடர்ந்து தாய்மேல் ஆணை ,சொந்தக்காரன் என‌
ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக சில படங்களில் நடித்தார்.இந்த படங்கள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.திரும்பவும் ராஜாவின் இயக்கத்தில் பல பெண்களை காதலிக்கும் தாயம் ஒண்ணு என்ற படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்
படமும் ஓரளவிற்க்கு ஹிட் படமாகும்.தொடர்ந்து இசைஞானியின் இசையில் இவர் நடித்த அண்ணனுக்கு ஜே,துருவநட்சத்திரம் படங்களில் பாடல்கள் மட்டும் ஹிட் ஆனது.இப்படியே போய்க்கொண்டிருந்த அர்ஜீனின் வாழ்க்கையில் மைல்கல்லாக வந்தபடம்தான் சங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் ரஹ்மானின் இசையில் அறிமுக இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.இதே சங்கருடம் இவர் மீண்டும் இணைந்த முதல்வன் படமும் வெற்றிப்படமானது.இவருக்கு நடிக்க மட்டுமின்றி இயக்கத்திலும் கில்லாடி இவர் இயக்கிய ஜெய்ஹிந்த் படம் அதிக நாட்கள் ஓடிய படமாகும்.ஆகஸ்ட் 15 அன்று இவர் பிறந்ததாலோ என்னவோ இவர் படங்களில் நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும்
இவர் சேவகன்,தாயின் மணிக்கொடி முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.நடுவில் ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ள படத்தில் தொடர்ந்து நடித்ததால் இவர் படங்களுக்கு கொஞ்சம் வரவேற்பு
இல்லாமல் போனது உண்மை.இழந்த வரவேற்பை அஜீத்துடம் நடித்த மங்காத்தா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து திரும்பவும் பெற்றார்.

Tuesday 10 April 2012

கண்ணதாசன் ஒரு வரலாற்று நாயகன்

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவர் பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமம்எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஐந்து நிமிடத்தில் பாடல் எழுதிவிடக்கூடிய வல்லமை பெற்றவர்.இவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்கு உள்ளது.இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற மயக்கமா கலக்கமா என்ற பாடல் இந்த பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் வரி மிகவும் என்னை கவர்ந்தது.எத்தனையோ சிறப்பான பாடல்களை   எழுதிய மகான் இவர்.இவர் இயேசு காவியம்,அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதியவர்.இவரின் மருமகன் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் ஆவார் கண்ணதாசன் சொல்ல சொல்ல கேட்டு எழுதியவி இவர். இவர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் சிவகங்கை சீமை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் ஆவார். கொஞ்சம் மதுப்பழக்கம் உள்ளவர்.இவர் மதுப்பழக்கவழக்கத்தை உள்ளடக்கிய வசந்தமாளிகை படத்தில் இடம்பெற்ற மதுக்கிண்ணத்தை ஏந்துகிறேன்.இரண்டு மனம் வேண்டும் உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள்.ரத்ததிலகம் படத்தின் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பரமசிவன் கழுத்திலிருந்து பாம்புகேட்டது போன்ற‌
பாடல்களில் நடிக்கவும் செய்துள்ளார் இவரின் மகள்கள்
விசாலி,மதுபாலா ஆகியோர் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர்கள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி,கேவி மகாதேவன் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் இவர் இசைஞானி இளையராஜா இசையில் எழுதிய மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் இன்றுவரை இரவு நேரத்தை இனிமையாக்கும் பாடலாக உலா வருகிறது.இதுவே சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும் .இத்தோடு உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 1981 ஜூலை மாதம் மரணமடைந்தார் இறந்தாலும் பிறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்னும் மக்கள் மனதில்
வாழ்ந்துகொண்டிருப்பவர் இவர் .