Sunday, 31 July 2011

எம்.கே.டி தியாகராஜபாகவதர்



சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன் என்ற பாடலை சிறுவயதில் என் தாத்தா முனுமுனுக்கும்போது எனக்கு அந்த
பாடலின் தரம் தெரியாமல் எரிச்சல் அடைந்திருக்கிறேன் ஆனால் காலங்கள் செல்ல செல்ல பெரிய மேதைகள்
பற்றி அறிந்து வியப்படைந்திருக்கிறேன் அப்படி வியப்படைந்த ஒருவர்தான் எம்.கே.டி என்றும் ஏழிசை மன்னர்
என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதர் விவரம் தெரிந்த நாளிலுருந்து
 எந்த பாடலை வெறுத்தேனோ அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கொண்டுதான் உள்ளேன் இதில் இருந்தே
பாகவதரின் மகத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஹரிதாஸ் என்ற திரைப்படம் சென்னை ப்ராட்வே
திரைஅரங்கில் மூன்று தீபாவளி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி இருக்கிறது எல்லாம் பாடலுக்காக மட்டுமே
பாகவதரின் பாடலான பூமியில் மானிட ஜென்மம் எடுத்து என்ற பாடல் இன்றளவும் இனிக்கும் பாடல் இன்று
கோடிகளில் நிறைய நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் அந்த காலத்திலேயே நிறைய சம்பளம்
வாங்கியவர் தங்கதட்டில் சாப்பிட்டு வெள்ளி டம்ளரில் கை கழுவுவார் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு
அப்படி இருந்த பாகவதர் லட்சுமிகாந்தன் என்ற மஞ்சள் பத்திரிக்கையாளர் கொலை மூலம் அதில் சிக்கி கொண்டார்
விடுதலையான பிறகு இவரது திரை வாழ்க்கை நன்றாக இல்லை இவர் நடித்த அசோகுமார் ,சிந்தாமணி போன்ற‌
படங்களும் பிரசித்தி பெற்றவை இவரது மனைவி கடைசிகாலத்தில் கஷ்டப்பட்டுதான் மறைந்தார்.இப்போது
பாகவதரின் மகத்துவம் புரிந்து இருக்குமே

No comments:

Post a Comment