Monday 7 November 2011

தமிழ் சினிமாவின் ஹிட் அடித்த கலக்கல் வார்த்தைகள்

தமிழ் சினிமாவில் நாம் பாடல்களையும் நகைச்சுவையையும் சண்டைக்காட்சியையும்

பார்த்துவிட்டு மறந்துவிடுவதில்லை நல்ல காட்சிகளை மட்டுமல்லாமல் நல்ல டயலாக்குகளையும் நாம் மறப்பதில்லை அப்படி சிறப்பான ஹிட் அடித்த கலக்கல் வார்த்தைகளை பற்றி நாம் பார்க்கவிருக்கிறோம்




நான் 1,2ம் வகுப்பு படிக்கும்போது வந்த நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஒரு காட்சி வரும்

அப்பாவி கிராமத்தான் விஜயகாந்திடம் அவரது நண்பர்கள் குளித்துவிட்டு வரும் முறைப்பெண்

ஜீவிதாவை கரெக்ட் செய்வதற்க்கு அவரது நண்பர்கள் இந்த வார்த்தையை சொல்லி கட்டிப்பிடித்தால் சீக்கிரம் உன்னை காதலிப்பாள் என ஐடியா கொடுப்பார்கள் ஆனால் அந்த மந்திரத்தை சொல்லிகட்டிப்பிடித்து ஜீவிதாவின் வெறுப்புக்கு ஆளாவார் அது என்ன மந்திர வார்த்தை என்றால் இஷ்டலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பர கொய்யா என்ற வார்த்தைதான்

அது.இந்த வார்த்தைகளை அப்பொது உச்சரித்து பேசாதவர்கள் கிடையாது.அதேபோல அந்த நேரத்தில் வந்திருந்த அண்ணாநகர் முதல்தெரு படத்தில் ஜனகராஜ் அவர்கள் தான் ஒவ்வொரு

முடிவும் எடுக்கும்போது புத்திசாலித்தனமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு தனது மனசாட்சியிடம் பெருமையாக அவரது பெயரை சொல்லி மாதவா பின்ரடா என்பார் அவரது ஐடியா சொதப்பலாகும்போது என்னடா மாதவா என்று தன்னை பார்த்து பரிதாபமாக கேட்பார்.

இதே போல பள்ளிப்பருவத்தில் நாங்களும் பேசிப்பார்ப்பதுண்டு.


அதேபோல அபூர்வ ச்கோதரர்கள் படத்தில்ஜனகராஜ் கீழேவிழும் ஒவ்வொரு முறையும்

வித்தியாசமாக யோசிக்கும்போது ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் சார் நீங்க எங்கேயோ போயிட்டிங்க‌

என்பார்.அந்த வார்த்தைகளும்89,90களில் அதிகம் பேர் பேசி ஹிட் அடித்த வார்த்தை.


91ல்வந்த குணா படத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என வித்தியாசமான காதல் டயலாக் அனைவரையும் கவர்ந்த வார்த்தை நான் 6ம்வ்குப்பு படிக்கும்போது வந்த படமாதலால் என்னுடைய பெயரும் அபிராமு என்பதாலும்  பள்ளி

நண்பர்கள் குணா பட கமல் போல் அபிராமி அபிராமி என்று என்னை கிண்டலடிப்பதுண்டு.



அதே நேரத்தில் வந்த ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் ரஜினி பேசும் கண்ணா கூட்டிகழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும் டயலாக்கும் மலேடா அண்ணாமலை என்றுபேசி தலையை

ரஜினி ஸ்டைலில் சிலுப்பிவிட்டு திரிந்த் காலங்களும் உண்டு


இதே போல 94ல்வந்த வீரா படத்தில் ஒவ்வொரு வார்த்தை பேசிவிட்டு ஹவ் இஸ் இட் என்பார்

அந்த வார்த்தையும் அப்போது ரஜினி ரசிகர்களின் மந்திரமாக இருந்தது .இதே ஆண்டு வந்த நாட்டாமை படத்தில் விஜய்க்குமார் கிராமபஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும்போது எதிரி கோஷ்டியினர் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்பார் அந்த வார்த்தையை தற்போது

வந்து இருக்கும் வேலாயுதம் படம் வரை அவ்வளவு சீக்கிரம் கைவிடமுடியாத வார்த்தையாக‌

இருந்துவருகிறது.


95ல்வந்த பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி என்று ரஜினிகாந்த் பேசும் டயலாக்தான் இன்றுவரை ரஜினி ரசிகர்களின் பேமஸ் டயலாக்

சிவாஜி படத்தில் ரஜினி ஒரு வசனம் பேசுவார் கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று பேசுவார்.என்னைப்போன்ற ரஜினியின் ஸ்பெசல்

டயலாக் இந்தப்படத்தில் என்ன என்று படம் பார்க்க வரும் ரசிகர்கள் அதிகம்.அதிக பொருட்செலவில் படம் எடுக்கிறார் இயக்குனர் சங்கர் வித்தியாசமாக சிந்திக்கிறார்

ஆனால் இந்த டயலாக் உண்மையில் நடிகர் அர்ஜூனை போய் சேர்ந்திருக்க வேண்டிய படம்

இது.ஆம்அதற்க்குமுன்பே வந்த கிரி படத்தில் அர்ஜூன் பேசிய டயலாக் இது.இதை ரஜினியும்,சங்கரும் காப்பியடித்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது.அனுபவமுள்ள ரஜினியாவது இதை யோசித்திருக்கவேண்டும் .

அது இருக்கட்டும் விஷயத்திற்க்கு வருகிறேன் 98ம் ஆண்டு வந்த விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தில் மிக நீளமான கல்யாண க்ளைமாக்ஸ் வரும். அதில் கல்யாண பந்தியில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமாக அய்யா காப்பி சாப்டிங்களா டிபன் சாப்டிங்களா என்று தொடர்ந்து

கேட்டுக்கொண்டே இருப்பர் இதுவும் அந்நாட்களில் பிரசித்தம்.


அதற்க்குப்பிறகு ஒரு இடைவேளைக்கு பிறகு வந்த ஜெமினி படத்தில் வந்த ஓ போடு பாடலும்

அதில் வந்த ஓ போடு வார்த்தையும் தமிழ் சினிமாக்களில் அதிகம் பேருக்கு தெரிந்து ஹிட் அடித்த வார்த்தையாக இருக்கமுடியும் அந்நாட்களில் கல்லுரிகள்,பள்ளிகள் என அனைத்திலும்

மிக மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை இது.


அதற்க்கு பிறகு சென்ற வருடம் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானமும் ,ஆர்யாவும்

பேசும் நண்பேண்டா வார்த்தைதான் இன்று வரை பேமஸ் டயலாக்


அது சரி நண்பர்களே பதிவு மொக்கையா இருக்கா நல்லா இருக்கா?





No comments:

Post a Comment